காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று ஒரே நாளில் 3வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலையில் 38,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் பிற்பகலில் 45,000 கனஅடியாகவும், மாலையில் 50,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் விரைவில் மேட்டூர் அணை திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
சேர்த்து வச்சா அணையை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் வந்து விடும்... அணையின் பாதுகாப்பும் கேள்வி குறியாகி விடும்... எனவே வேறு வழி இல்லாமல் திறந்து விடுகிறார்கள்..