Advertisement

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீர மரணம்

ஜம்மு : காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், படி பிகாஹ் மற்றும் சங்கல் பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வருகின்றனர். இப்பகுதியில் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது மோதல் துவங்கியது. இதில் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.

முன்னதாக காலையில் சோபியான் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement