Advertisement

ஜூனியர் கபடி போட்டி 14ம் தேதி வீரர்கள் தேர்வு

கடலுார்:தமிழ்நாடு ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட வீரர்கள் தேர்வு 14ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை திருவாரூரில் நடக்கிறது. இதில், பங்கேற்பதற்கான கடலுார் மாவட்ட ஜூனியர் ஆண்கள், பெண்கள் தேர்வு அண்ணா விளையாட்டரங்கில் வரும் 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது.தேர்வில் பங்கேற்கும் ஆண்கள் 70 கிலோ பிரிவிற்குள்ளும், பெண்கள் 65 கிலோ எடை பிரிவிற்குள்ளும் இருக்க வேண்டும்.
வயது 20க்குள் இருக்க வேண்டும். அதாவது 1998ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் போது, ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.இத்தகவலை மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement