Advertisement

தவறுகிறார் குமாரசாமி!

மக்கள் எதிர்பார்ப்புகளை, இப்போது புதிதாக உருவான கர்நாடக அரசு நிறைவேற்றி விடும் என்பது, சரியான எதிர்பார்ப்பல்ல. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பட்ஜெட் தாக்கல் செய்த போதும், நிதிஅமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல்வர் குமாரசாமி, இத்தடவை தன் விருப்பப்படி இரண்டாவது பட்ஜெட்டை நிறைவேற்றி விட்டார்.இன்றுள்ள சூழ்நிலையில், உ.பி.,யின் முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிராவின் முதல்வர் பட்னாவிஸ், தமிழக முதல்வர் பழனிசாமி ஆகிய அனைவரும் விவசாயிகள் கடனை ரத்து செய்வதில் அக்கறை காட்டினர்.விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை ரத்து செய்வதில் கர்நாடக பட்ஜெட் முனைப்பு காட்டுகிறது. 'மொத்தம், 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்து, தன் கட்சி வலுவாக உள்ள பகுதி மக்களுக்கு உதவினார்' என்ற புகார் எழுந்து, அது விவாதமாகிவிட்டது.குடகு, சிக்மகளூர் உட்பட தட்சிண கர்நாடக பகுதியில் இயல்பை விட, சில இடங்களில், இரு மடங்கு பருவமழை அதிகம் பெய்திருக்கிறது. அதனால், காவிரி ஆறு தானாகப் பெருகி, அத்தனை நீர் தமிழகத்திற்கு நடப்பாண்டில் வரும்.ஒவ்வொரு விவசாயியும் வாங்கிய கடன் முழுவதையும் ரத்து செய்வது எளிதல்ல. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் விவசாயப் பொருட்களுக்கு, அதிகபட்ச ஆதரவு விலை என்ற வாதம் மட்டும் பொருந்தாது.அதற்கு மாங்காய் போன்றவற்றை உற்பத்தி செய்த விவசாயிகள், அதை மிகக்குறைந்த விலைக்கு விற்பதால், அதிருப்தி அடைந்துள்ளனர்.ஏற்கனவே மலைப்பகுதிகளில் விளையும் மிளகு விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தென்னை தரும் விளைச்சலும் அந்த மாதிரிதான்.இப்போது, தங்கள் பொருட்களை மதிப்புகூட்டாக்கும் வழிக்கான அறிவிப்பு ஏன் இல்லை என்பது, அரசுக்கு ஏற்பட்ட புதிய பிரச்னையாகும். பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை, தலா, 2 சதவீதம் உயர்த்தியதை ஓரளவு குறைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்.ஆனாலும், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகிற யோசனைப்படி, லிட்டருக்கு, 25 ரூபாய் வரை இல்லாவிட்டாலும், ஐந்து ரூபாய் வரை குறைக்கலாம். ஆனால், இந்த அரசுக்கு எவ்வித இடர்பாடும், இப்போது வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை.மே.வங்கத்தில் காங்கிரஸ் உட்கட்சி மோதல், பீஹாரில் பின்னடைவு, மகாராஷ்டிராவில் பவார் அணி முந்துவதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் இருக்கிறார். அது, முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதாயமாகும். இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பரமேஸ்வர், குமாரசாமியுடன் சந்திக்க வேண்டிய விஷயங்கள் இவை என்ற நிலை உருவாகி விட்டது.நடப்பு கூட்டத்தொடரில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் முழுநேரமும் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.பெங்களூரு, மைசூரு போன்ற நகர்ப் பகுதி மக்களுக்கு மின்கட்டன உயர்வும், மதுபான விலை உயர்வும், அதிருப்தி தரும் செய்தியாகும். இவற்றை வாபஸ் பெற குமாரசாமி முயலுவது சந்தேகம். மாறாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வை காங்கிரஸ் மேலிட நெருக்கடி வரும் பட்சத்தில், அதுவும் நகர்புற மக்களை மகிழ்விக்காது.ஏனெனில், பெங்களூரில் அதிக மழை காரணமாக, வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள், தங்கள் மாநகர வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் குறிப்பு இல்லை என்கின்றனர். தவிரவும், நல்ல வசதியுள்ள கர்நாடக போக்குவரத்துக்கழக பஸ்கள் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்படும் வகையில், தனியார் பஸ்கள் செயல்படும் விதங்களில், பல ஊக்குவிப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, நகர்ப்புற அரசு பஸ்களில் உள்ள பெரிய விளம்பரம், பயணியர் தங்கள் பகுதியை அறிய முடியாமல் தடை என்றதும், அவற்றை அகற்றி இருக்கிறது அரசு. பல வழிகளில் போக்குவரத்து துறை வருவாய் ஈட்ட வேண்டிய நிலையில், இம்மாதிரியான செயல்கள் அதன் வருவாயைக் குறைக்கும்.சித்தராமையா அறிவித்த, 'அன்னபாக்யா' ரேஷன் அரிசி வழங்குவதில், 2 கிலோ வரை குறைத்த குமாரசாமி, தன், 'சினிமாப்பாணி' அரசியல் மூலம் காய்களை நகர்த்தி வெற்றிபெற நினைக்கிறார்.இன்றுள்ள காங்கிரஸ் மேலிடம் பல்வேறு சிக்கல்களில் இருப்பதால், பா.ஜ.,விடம் ஆட்சி போகக் கூடாது என்பதற்காக, குமாரசாமிக்கு முதலிடம் தந்தது. வாய்ப்பு வரும்போது, அவருக்கு நெருக்கடியை தரும் பட்சத்தில், குமாரசாமி மட்டுமல்ல, அவர் தந்தை தேவகவுடாவும், பல அரசியல் புகார்களை அள்ளி வீசுவர்.ஆக மொத்தத்தில், ஜனநாயகம் தழைக்க இக்கூட்டணி அரசு, புதிய வழி காட்டத் தவறி விட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement