Advertisement

கிரைம் செய்திகள்

தகராறில் தாக்கியவர் கைதுதிருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் மகன் சற்குணன்‚ 46; பக்கத்து கிராமமான பரடாப்பட்டிற்கு சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக பைக்கில் வந்த அதே ஊரைச் சேர்ந்த லிங்கதுரை மகன் சிவராமனிடம்‚ 21; லிப்ட் கேட்டார். அவரை ஏற்றிக்கொண்டு வந்த சிவராமன்‚ வீட்டின் அருகே வந்து நிறுத்தியபோது‚ 'ஏன் இவ்வளவு வேகமாக வருகிறாய்' என சற்குணன் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சிவராமன், ரீப்பர் கட்டையால் சற்குணத்தை தாக்கியுள்ளார்.இது குறித்த புகாரின்பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்கு பதிந்து சிவராமனை கைது செய்தனர்.

மாட்டு வண்டிகள் பறிமுதல்திருக்கோவிலுார் அடுத்த கீழக்கொண்டூர் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில், அரகண்டநல்லுார் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த, அதே ஊரைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் சந்திரசேகரன்‚ 27; உள்ளிட்ட ஐந்து பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து, ஐந்து மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இளம்பெண் கடத்தல் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு காந்தி நகரில் வசிப்பவர் ராஜா இவரது மகள் தேன் மொழி பெரம்பலுாரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் 4 ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார்.மயிலம் அடுத்த ரெட்டணையைச் சேர்ந்த தேவஆசீர்வாதம் என்பவர் மகன் சிலுவை ராஜா 24; இருவரும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரும், மேல்நிலை கல்வி படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி மாலை, பெரம்பலுாரில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் 4 ஆண்டு படித்து வரும், அந்த மாணவியை, சிலுவை ராஜா கடத்திச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன் பேரில், மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பைக் விபத்தில் ஏட்டு காயம் விழுப்புரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பொன்னியின் செல்வன்,45; இவர் திண்டிவனம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, மோட்டார் சைக்கிளில் செஞ்சி சாலையில் சென்ற போது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னியின் செல்வன், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய, மேல்சிறுபாக்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஏழுமலை,42; என்பவரை கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement