Advertisement

நாயகனும் நாயகியும் நானே

மலையாளத்தில் அவ்வப்போது சில புதுமையான திரைப்படங்கள் வெளியாகி மொழி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் பார்க்க வைக்கும். அங்கு விருது படங்களும் கமர்ஷியலாக 'ஹிட்' தரும். அந்த வரிசையில் இப்போது வெளியாகி கேரளக்கரையை கலக்கி கொண்டிருக்கும் படம்- 'ஞான் மேரிக்குட்டி' (நான் மேரிக்குட்டி). மூன்றாம் பாலினத்தவர் பற்றிய கதை. இதில் மேரிக்குட்டியாக வாழ்ந்திருப்பவர் மலையாள திரை உலகின் முன்னணி ஹீரோ ஜெயசூர்யா. தமிழில் 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.,' படத்தில் கேன்சர் நோயாளி வேடத்தில் நடித்தவர். 'என் மன வானில்' படத்தில் ஹீரோ. எண்பதிற்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கும் இவரது, சமீபத்திய ரிலீஸ் படங்கள் நான்குமே இமாலய வெற்றி பெற்றன. பதினைந்து ஆண்டுகளாக மலையாள திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் ஜெயசூர்யா, 'நாயகியாக' நடித்த படம் 'ஞான் மேரிக்குட்டி'. அவருடன் ஒரு நேர்காணல்...

* எப்படி மேரிக்குட்டி ஆனீர்கள்?சமூகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கு அங்கீகாரம் தரும் படம் இது. டிரான்ஸ்ஜெண்டர் கதை அல்ல; டிரான்செக்ஸ்வல் கதை. மேரிக்குட்டி ஒரு திருநங்கை அல்ல. உடலால் ஆணாகவும், மனதால் பெண்ணாகவும் வாழும் மாத்துக்குட்டியின் கதை. ஆணாக திரிந்தாலும், அவனது மனம் பெண்ணாக வாழ்கிறது. அப்படி மாறவே விரும்புகிறது. ஆணுக்குள் இருக்கும் பெண்ணை அடையாளம் கண்டு, அறுவை சிகிச்சை செய்து 'டிரான்செக்ஸ்வல்' (பாலின மாற்றம்) ஆகிறான். பின்னர் உறவுகளால் அவன் கைவிடப்படுவதும், அந்த வலிகளை வென்றெடுக்க அவன் நடத்தும் போராட்டமே கதை.

* இதற்கு முன்பு இது போன்ற கதாபாத்திரங்களில் திரைப்படங்கள் வந்துள்ளனவே...இருக்கலாம். இது குழந்தைகளையும் அழைத்து சென்று பார்க்க வேண்டிய மாறுபட்ட படம். திருநங்கைகள் பற்றிய திரைப்படங்கள் அவர்களை கிண்டல் செய்தும், ஆபாசம் காட்டியும் வெளிவந்துள்ளன. மலையாளத்தில் திருநங்கைகள் பற்றி காமெடி படங்கள் வந்துள்ளன. ஆனால் இது அவர்களின் வெற்றிக்கதை. அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இந்த படம் மூலம், அவர்களை பார்க்கும் நம் பார்வையில் மாற்றம் வரும். பெண்ணாக மாறிய ஒருவரை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது, மூன்றாம் பாலினத்தவரின் சங்கடங்களும், சந்தோஷங்களும் என்ன, அவர்களை சமூகம் என்ன மன நிலையில் பார்க்க வேண்டும் என்பதை வலிமையாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்சங்கர்.
* இந்த வேடத்திற்கு உங்கள் ரோல் மாடல் யார்; திருநங்கை யாரையாவது பார்த்து பழகி வேடம் ஏற்றீர்களா?இது இமிட்டேஷன் அல்ல; ஆக்டிங்! ஒரிஜினலை பார்த்து, படித்து நடிக்க முடியாது. நான் நானாக நடித்திருக்கிறேன். மேரிக்குட்டி என்ற பெண்ணாக வாழ்ந்திருக்கிறேன்.

* இதில் நாயகன் யார்?நாயகனும் நாயகியும் நானே. மேரிக்குட்டியாக மாறும் முன்பு, இளம் வயது சிறுவனாக மாத்துகுட்டி கேரக்டரில் ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகன் அத்வைத் நடித்துள்ளான். நானும் ரஞ்சித் சங்கரும் இணைந்து தயாரித்துள்ளோம். என்னை பெண்ணாகவே காட்டிய பெருமை மேக்கப் மேன் ரோனக்சிற்கு சேரும்.

* நீங்கள் அணிந்துள்ள சேலை டிசைன்கள், அதற்குள் 'வைரலாகி' உள்ளதே...என் மனைவி சரிதா, காஸ்டியூம் டிசைனர். அவரது சிந்தனையில் 64 டிசைனில் சேலைகள் தயார் செய்தோம். அதில் 56 சேலைகளை படத்தில் நான் உடுத்தியிருக்கிறேன்.

* பெண் வேடத்தில் உங்களை பார்த்த மனைவி 'ரியாக் ஷன்' எப்படிமனைவி பிரமிப்பு அடைந்தார். திருநங்கைகள், மேரிக்குட்டியை அவர்களில் ஒருவராக பார்ப்பதே என் வெற்றி.

* தமிழில் இந்த திரைப்படம் 'ரீமேக்' செய்யப்பட்டால் நடிப்பீர்களா?நிச்சயமாக. தமிழில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்கள் வந்து கொண்டுள்ளன. என்னை பிரமிக்க வைத்த படங்கள் பல. அண்மையில் 'விக்ரம் வேதா' பார்த்து விட்டு விஜய்சேதுபதி, மாதவனிடம் பாராட்டு தெரிவித்தேன். எனது 'பியூட்டிபுல்' படம் பார்த்து விட்டு சூர்யா பாராட்டினார். அண்மையில் எனது 'பிரேதம்' படம் பார்த்து அர்ஜூன் நெகிழ்ந்தார். மேரிக்குட்டியையும் தமிழ் திரையுலகம் வரவேற்கும்.


* கேரள ரசிகர்கள் தமிழ்ப்படங்களை எப்படி விமர்சிக்கிறார்கள்?கேரள ரசிகர்கள் பார்வை வித்தியாசமானது. தமிழ்ப்படங்களில் 'சினிமாத்தனம்', 'நாடகத்தன்மை' இருந்தால் ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவே மலையாளப்படம் என்றால் எல்லாம் 'ரியலாக', எல்லாம் இயல்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். என்றாலும் தரமான படத்திற்கு எப்போதும் வரவேற்பு உண்டு!வாழ்த்த actorjayasurya1122gmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement