Advertisement

டீ கடை பெஞ்ச்

பன்னீர் செல்வத்தை பார்த்து பதுங்கிய விஜய்!
''பாராட்டு விழாவே, பாதகமா போயிட்டு வே...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யாருக்கு, யார் பாராட்டு விழா நடத்தினாங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.''மதுரை, காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் செல்லாதுன்னு, ஐகோர்ட் சொல்லிட்டுல்லா...''பல்கலைக்கு யார் துணைவேந்தரா வந்தாலும், அவருக்கு, 'ஜால்ரா' போட்டு, காரியம் சாதிக்குற கும்பல் ஒண்ணு இருக்கு... இந்த கும்பல், செல்லதுரை பொறுப்புக்கு வந்த, ஓராண்டு நிறைவு விழாவை, சமீபத்துல, தடபுடலா கொண்டாடுச்சு வே...''செல்லதுரைக்கு வெள்ளி செங்கோல், மலர் கிரீடம் எல்லாம் குடுத்து, அமர்க்களப்படுத்துனாவ... இது பத்தி நாமளும் பேசினோமுல்லா...''அப்பவே, 'ஓராண்டு நிறைவை கொண்டாட, நீங்க என்ன அரசியல்வாதியா'ன்னு செல்லதுரையை, உயர்கல்வி துறை அதிகாரிகள் கண்டிச்சிருக்காவ வே...''அந்த கோபத்துல தான், துணைவேந்தர் பதவி பறிக்கப்பட்டதும், யாரும் ஏன்னு கூட ஒரு வார்த்தை கேட்கலையாம்...'' என்றார் அண்ணாச்சி.''என்கிட்டயும் மதுரை தகவல் ஒண்ணு இருக்கு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''தி.மு.க., 'மாஜி' மத்திய அமைச்சர் அழகிரியின் விசுவாசியான, 'மாஜி' துணை மேயர் மன்னனின் மகள் திருமணம், சமீபத்துல, பிரமாண்டமா நடந்துச்சு... இதுக்கு, ஸ்டாலின் ஆதரவாளர்களான முக்கிய புள்ளிகளுக்கும் மன்னன் அழைப்பிதழ் குடுத்திருந்தாரு பா...''திருமணத்தை அழகிரி நடத்தி வச்சுட்டு போற வரைக்கும், ஸ்டாலின் ஆதரவு புள்ளிகள் காத்துட்டு இருந்தாங்க... அழகிரி கிளம்பினதும், மண்டபத்துக்குள்ள போய், மணமக்களை வாழ்த்திட்டு, விருந்தும் சாப்பிட்டுட்டு போயிருக்காங்க... இதையும் சிலர் படம் எடுத்து, ஸ்டாலின் தரப்புக்கு அனுப்பிட்டாங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.''இதே மாதிரி, திருமண விழாவுக்கு ஒரு நடிகர் பதுங்கி பதுங்கி போன தகவலை கேளும் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''அ.தி.மு.க., மீனவரணி மாநில செயலர் நீலாங்கரை முனுசாமி... இவரது மகன் திருமணம், சமீபத்துல, சென்னை, ஈஞ்சம்பாக்கத்துல நடந்தது... நீலாங்கரையில குடியிருக்கற நடிகர் விஜய்க்கும் முனுசாமி பத்திரிகை குடுத்திருந்தார்...''திருமணத்துக்கு விஜய் வந்த நேரம், துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயகுமார் எல்லாம் வந்திருக்கா ஓய்... அவா, மணமக்களை வாழ்த்திட்டு போற வரைக்கும், காரை விட்டு இறங்காத விஜய், அப்பறமா போய், மணமக்களை வாழ்த்தியிருக்கார்...''அ.தி.மு.க.,வினர் கூட சேர்ந்து, போட்டோவுக்கு போஸ் தரதை தவிர்க்க தான், பதுங்கிட்டார்னு அவரோட ரசிகர்கள் சொல்றா ஓய்...'' என்றார் குப்பண்ணா.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்சில் வேறு சிலர் இடம் பிடித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • A R J U N - ,இந்தியா

    துணை வேந்தர் என்பது ஒரு பொறுப்பான பதவி.அதையும் அசிங்கபடுதிவிட்டார்கள்... இந்த அளவு "இரங்கி" வந்தவர்கள்-"மேடம்/நிர்மலா சொல்வதிலும் அர்த்தமிருக்கோ என தோன்றுகிறது-என்கிற நிலைக்கு வரவேண்டியுள்ளது..அவர்சொன்னதும் அந்த அர்த்தத்தில் தானே..'

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பங்காளிச்சண்டையால் கட்சி பலவீனப்பட்டு விடும் என்பதை அறியாமல் 'அவர் வீட்டு விசேஷத்துக்கு இவர் போனார், இவரைப்பார்த்து அவர்சிரித்தார்' என்று எலிமெண்டரி ஸ்கூல் பிள்ளைகளைப்போல் சில்லறை சண்டையிடுவதையும் , வெகு காரியமாக படம்பிடித்து போட்டுக் கொடுப்பதையும் விடாதவரை இந்தக் கட்சிக்கும் விடிவே கிடையாது

Advertisement