Advertisement

காஷ்மீரில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அவுரங்கசிப், சோபியான் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்; இவர், விடுமுறையில், புல்வாமா மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அவரை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கடத்தப்பட்ட அவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.


ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தி வைக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இந்த சமயத்தில், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இருந்த போதிலும், அதற்கு நம் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


கடந்த ஆண்டு மே மாதம், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற, உமர் பயாஸ் என்ற இளம் ராணுவ அதிகாரி, பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டதும், மறுநாள், துப்பாக்கிக் குண்டுகள் காயத்துடன், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  எழ முடியாதபடி மரண அடி கொடுத்தாலொழிய , நமது வீரர்கள் மரணம் அடைவதை தடுக்க முடியாது , உலகத்தில் மூன்றாவது பிரம்மாண்டமான பாதுகாப்பு படையை வைத்து கொண்டு நாம் சமாதானம் பேசுகிறோம் . கொசுவுக்கு சமானமான ஒருவன் நம் படைகளை தாக்கி கொலை செய்கிறான் என்றால் அது நமது அரசாங்கத்துக்கு அவமானம் . பாவ புண்ணியம் பார்த்தால் நாம் தான் அழியவேண்டும்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஒவ்வொரு வருடமும் இதுபோல சமாதான பேச்சு நடத்துவது, பின் அதை பாகிஸ்தானியர்கள் மீறுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இனி இதுபோன்ற சமாதான பேச்சுக்களில் இந்தியா கலந்துகொள்ள மறுப்பதுடன், தாக்குதலை அதிகப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வாலை சற்று சுருட்டி வைப்பார்கள்.

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  எதற்கெடுத்தாலும் மோடி மீது பழியா என்று ketpavargalukku- இந்த வீரரின் சாவுக்கும் மோடியே kaaranam. karanam- யாருடைய அனுமதி பெற்று போர் நிறுத்தம் கொண்டு வந்தீர்? காங்கிரஸ் செய்ததின் ஈயடிச்சான் காப்பி thane? ராணுவத்தின் தலைவர் ஜனாதிபதி அல்லவா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வேறு ஏதாவது காரணம் இருக்குமா...?

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  கொலை செய்யப்பட்ட ராணுவ படவீரர் அவுரங்கசிப் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பன்றிகளை முழுவதுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  பயங்கரவாதிங்க என்ற பன்றிகளை இங்கிருப்பவர்கள் வேண்டுமானால் ஆதரிக்கலாம், அவர்களின் கொலை என்றும் நியாயப்படுத்தாது

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  மதத்தை மதியாதவர்களுடன் எதுக்கு மதப்பெயரால் பாதுகாப்பு நடவடிக்கை நிறுத்தப்படணும். மாரியா? கொக்கா? என்று பார்க்காமல் போட்டுத்தள்ளனும், தினம் இப்படி ஒவ்வொரு வீரர்களாக சாவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது.

 • San - Madurai ,இந்தியா

  Very sad and enough is enough and tit for tat

 • HSR - Chennai,இந்தியா

  என்ன ஒரு வெறிச்செயல் ... ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ராணுவ அதிகாரி உமர் பயாஸ் அவர்களுக்கு வீர வணக்கங்கள் மற்றும் கண்ணீர் அஞ்சலி......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement