Advertisement

சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் முதல்வர் பரீக்கர்

பனாஜி : இரண்டரை மாதம் சிகிச்சை முடிந்து கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் இன்று நாடு திரும்பினார். கோவா விமான நிலையம் வந்தடைந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.


கோவாவில், பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, கூட்டணி ஆட்சி நடக்கிறது. உடல்நலக் கோளாறு காரணமாக, மேல் சிகிச்சை பெற, மனோகர் பரீக்கர் மார்ச்சில், அமெரிக்கா சென்றார். மருத்துவ சிகிச்சைக்கு பின், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.


இந்நிலையில், பரீக்கரின் உடல் நிலையில் பூரண முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, இன்று அவர் கோவா திரும்பினார். இரண்டரை மாதத்திற்கு பின் கோவா திரும்பிய அவரை, விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றனர். பரீக்கர் நாடு திரும்பும் வரை, மாநில நிர்வாகத்தை கவனிக்க, மூவர் குழு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அரசியல் வாதிகளுக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் அரசே அயல்நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி சிகிச்சை அளிக்கிறது...ஏழைகளுக்கு வந்தால்... மருத்துவமனை ஆயா கூட ஆயிரம் கேப்பாள்..

  • ஆப்பு -

    இவருக்கெல்லாம் அமெரிக்க மருத்துவம். மக்களுக்கு மோடி கேர். திருந்தவே மாட்டாங்க....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பாரிக்கர் ஜீக்கு வாழ்த்துக்கள்...

  • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

    Best wishes for his wellness.

  • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    சிகிச்சைக்கு மாத்திரம் அமெரிக்கா வேண்டும்........பின்னர் இங்கு வந்து கிறிஸ்டியன்ஸ் எல்லோரையும் வைவது

  • San - Madurai ,இந்தியா

    God bless you

  • சிற்பி - Ahmadabad,இந்தியா

    நல்ல மாமனிதர் அரசியல்வாதி. வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement