Advertisement

எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு: தலைவர்கள் கருத்து

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், சென்னை ஐகோர்ட் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது தொடர்பாக, தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது:


ஸ்டாலின் டுவீட்தீர்ப்பு தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை
அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன்: ஐகோர்ட் தீர்ப்பு, தினகரன் அணிக்கு, யானையின் காதுக்குள் புகுந்த கட்டெறும்பு போல் உள்ளது.ஊசிவெடியாய் தீர்ப்பு:தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: தீர்ப்பு ஒரு தீர்வில்லாமல் வந்துள்ளது. தீர்வு வரும் என எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. யாருக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் இல்லாமல் தீர்ப்பு வந்துள்ளது. யாருக்கும் முன்னடைவு பின்னடைவு கிடையது. 18 எம்எல்ஏக்கள் நிலை தான் திரிசங்கு நிலையில் உள்ளனர். நிச்சயமன்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.முன்னுதாரணம்திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தீர்ப்பின் தன்மை என்ன என்பதை பார்க்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு, மற்ற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதில் அரசியல் கட்சிகள் குறுகிய கால பலன்கள் அடைவதை பற்றி கருத்து சொல்ல முடியாது.மக்கள் தோல்விதினகரன் கூறியதாவது: தீர்ப்பு யாரும் எதிர்பார்த்தது போல் இல்லை. எங்களுக்கு 50 சதவீத வெற்றி கிடைத்துள்ளது/ ஐகோர்ட் தீர்ப்பால் பின்னடைவு இல்லை. தீர்ப்பால் மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வரியே பதிலாக இருக்கிறது.

புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் எப்படி இருக்க முடியும். 21 பேரும் ஒன்றாக தான் உள்ளோம். அவர்கள், பணத்துக்காக சொத்துக்காக எங்களிடம் இல்லை . கட்சியை காப்பாற்ற ஒன்றாக உள்ளோம். நானே போக சொன்னால் கூட அவர்கள்போக மாட்டார்கள். தீர்ப்பால், அரசின் ஆயுள் 2 , 3 மாதம் நீடிக்கிறது. தீர்ப்பில் மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மக்கள் தோல்வியடைந்துள்ளனர்.விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: பொதுமக்கள் சற்றும் எதிர்பாராத ஒரு தீர்ப்பாக அமைந்துள்ளது. 3வது நீதிபதியின் பார்வைக்கு எடுத்து செல்லப்படுகிறது. உடனடியாக, குறுகிய கால அவகாசத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன்: 8 மாதம் நடந்த இந்த வழக்கில், தீர்ப்பு இப்படி வந்துள்ளது.18 தொகுதி மக்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். இதனால், இந்த வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க ஐகோர்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • M Ragh - Kanchi,இந்தியா

  18 MLA's ed by Public, Simply Speaker dismissed.because of internal discussion. For Re Election who will bear the expenses. Again our speaker dismiss if they from Other than ADMK. Again election. Court not entering speaker judgement

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீதி என்றாலே காலம் கடந்து தரப்படுவதுதான்... யராலும் பயனடைய முடியாது...

 • Usuf Ali - Chennai,இந்தியா

  Judgement on 18 MLAs.... Since two judges have given different judgements, this matter will drag for period of 3 to 6 months or more. In future, for such sensitive cases, straightaway 3-bench judiciary committee may study, analyse and give their judgements this way, the case will come for a sttlement. The aggrieved party may go for appeal. Now, in todays case, the third judge may give his views after few months again the affected party would go to supreme court. In a nutshell, the minority government will complete its terms. Till such times, the 18 assembly constituences will suffer without their elected representatives. Democracry Zindabad.

 • Girija - Chennai,இந்தியா

  நீதிபதிகளுக்கே வித்தை காட்டுபவர்களிடம் மக்கள் ஓட்டுக்கு துட்டு வாங்குகின்றனர் இதை ஒரு அவசர வழக்காக உடனே விசாரித்து இருந்தால் தூத்துக்குடி தப்பித்திருக்கும் எப்படி என்கின்றீர்களா? கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு யாரவது கல் வீசுவார்களா ? என்ன புரிதா ? சுள்ளுன்னு அடிக்கிற வெயில்ல ஜில்லுன்னு.... மாதிரி .. யாரவது செய்யணும் இல்ல

 • அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா

  மக்கள் விரோத ஆட்சி நீடிக்க கூடாதுனு தினகரன் சொல்றார்,அப்போ 18 பேர் கூட்டு சேர்ந்து என்ன பிளான் போட்டேன் சொல்லாம சொல்றார் அப்போ அவுங்கள தகுதி நீக்கம் பண்ணது சரிதான் போல,அப்புறம் என்ன குழப்பம் நீதிபதிக்கு,மக்கள் விரோத ஆட்சினு சொல்றார் அப்டின்னா 18 பேர் இப்போ MLA இல்லை, தேர்தல் வர வச்சு சுயேட்சை இல்லைனா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பா ஜெயிக்க வச்சு ஆட்சியை கவுக்க வேண்டியதுதானே,எதுக்கு வழக்கு போட்டார்...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////ஜெயந்தன் - Chennai,இந்தியா 14-ஜூன்-2018 20:15 சட்டம் ஒண்ணுதான்..ஆனால் தீர்ப்பு எப்படி இரண்டு விதமாக இருக்கிறது ........... சொல்லுங்கண்ணே...சொல்லுங்க..//// - அதாவதுங்க, பொதுவாக, மிக ரொம்ப எளிமையாக கூறனும்னா?, நடந்த ஒரு சம்பவம், சூழல், அது அஃபென்ஷிவ்வா? அல்லது அது டிஃபென்ஷிவ்வா?, என்று நீதிமன்றம் கணித்து, அதற்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவதால்தாங்க, இப்படி மாறுபட்ட தீர்ப்புக்களும் வருது எனலாம்தானேங்க?.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  " The Cauvery dispute started in the year 1892, between the Madras Presidency (under the British Raj) and the Princely state of Mysore when they had to come to terms with dividing the river water between the two states. ........ ". - அதாவதுங்க, காவிரி பிரச்சனை, 1892-ஆம் ஆண்டில் ஆரம்பித்து, பிறகு, அரசுகளாலும், நீதிமன்றங்களாலும் கையாளப்பட்டு வருதுங்க. ஆகவே, சில வழக்குகள், நீண்ட நெடிய வருடங்களுக்கு நடைபெற்று வருகிறது என்று புரியுதுங்களா?. அதே நேரத்தில், சமீபத்திய கர்நாடக முதலமைச்சராக இருந்த, எடியூரப்பா அவர்களின் வழக்கு, ஓவர் நைட்டில், தீர்ப்பு வழங்கப்பட்டதுங்க. எனவே, வழக்கின் சாரத்தை(எசன்ஸ்சை) மற்றும் கிரிட்டிகல் சுச்சுவேஷன்(மிக அவசர தேவையால்) வைத்துதாங்க, நீதிமன்றங்கள் சில வழக்குகளை, அவசரமாக நடத்துதோ?, என்னவோ.

 • Sivasubramanian Chandramouli - Tiruppur,இந்தியா

  அரசியல் தீர்ப்பு லேட்டா வந்தா ஒரு மாறுதலும் இல்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஏழை எளிய மக்களுக்கு சம்பந்தமான தீர்ப்பு உடனடியா வந்தா நல்லது. சில நாட்களுக்கு முன் கார்திக் சிதம்பரம் தீர்ப்பு ஜாமின் இரவு 11 மணிக்கு கொடுத்தார்கள். அந்தாளு சிறையில் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன . நீதிபதி நள்ளிரவில் எதுக்கு வேலை செய்ய வேண்டும் ?

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஒரு வழக்கு, இரு நீதிபதிகள். இரு தீர்ப்புகள். மக்களின் நிலை ? இரண்டு நீதிபதிகள் ,இரண்டு முடிவுகள் எடுக்க முடியம் என்றால், சாதாரண மனிதன் எப்படி சரியான முடிவுகளை எடுக்கமுடியும், குற்றவாளியை தண்டிக்க இவர்களுக்கு இரண்டு தீர்ப்பு கிடைக்குமே.

 • gk -

  Why do you ask opinion about court judgements to the politions. why cant ask to any legal experts.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மாநிலங்களுக்கிடையில பிரச்சினைகள், கவர்னர், சட்டமன்றம் போன்றவைகளின் செயல் பாடுகளில் வரும் நீதி சார்ந்த விஷயங்களுக்கு நடுவர் நீதிமன்றத்துடன் இணைந்த ஒரு மேலாண்மை வாரியத்தை ஒரு ஸ்கீம் ஆக வைத்து விட்டால் என்ன?

 • A.Navarajan - Coimbatore ,இந்தியா

  நீதிபதிகள் அளவில்லாமல் செய்யும் காலதாமத்த்தை கட்டுப்படுத்த சட்டம் அல்லது விதிமுறைகள் இல்லையா. அசுரவேக சேவை எதிர்பார்க்கும் இன்றைய உலகில் இவர்கள் மட்டும் விதிவிலக்கா ?

 • MATHI,L.K. - Lalgudy,இந்தியா

  நீதித்துறையின் செயல்பாடுதொகுதி மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.பதவியி இருந்தாலும் எந்த உறுப்பினரும் தொகுதி பக்கம் செல்வதில்லை. இவர்கள் பதவி இழந்தாலும் மக்களுக்கு பயனும் இல்லை. அரசுக்கு கஜானா பணம் மிச்சம்..ஆனால் வேறு வழியில் ஆளுங்கட்சி வேட்டையாடிவிடுமே? கேட்கத்தான் எந்த நாதியும் இல்லா ஆட்சியாயிற்றே?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா 14-ஜூன்-2018 17:28 மூன்றாவது நீதிபதி ஆறு மாதங்கள் விசாரித்து விட்டு பிறகு அந்த இரண்டு நீதிபதிகளும் சொன்ன தீர்ப்புகள் சரிதான் என்று சொல்லி புதிய சர்ச்சைகளை உருவாக்க போகிறார். இது இப்படியே ஓடி கொண்டு தான் இருக்கும். பேசாம தினகரன் தரப்பு வழக்கை வாபஸ் வாங்கினால் நல்லது. அடுத்த ஆறு மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம். தேர்தல் கமிஷன் எவ்வளவு நாள் ஒத்தி வைக்க போகிறது தெரியல உள்ளாட்சி தேர்தல் மாதிரி. நடக்கறது எல்லாம் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே நடக்குது அப்பு .......////- அதுசரி, நீங்க சொல்லுற மாதிரி, இடைத்தேர்தல் வைத்தால், இந்த 18-பேர்களும் வெற்றி பெறுவார்களா?. எடப்பாடியார் சில தொகுதிகளும், சுடலை சில தொகுதிகளும், அப்ப வெற்றி பெற்றாலும், ஆச்சரியமில்லை எனலாம்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////Natarajan Ramanathan - chennai,இந்தியா 14-ஜூன்-2018 15:40 2G வழக்கிலும் மிக விரைவில் இறுதி தீர்ப்பு வரவேண்டும் என்று சுடலை சொல்லுமா?.//// - பொதுவா பார்த்தீங்க என்றால், யாரோ ஒருவர் விழுவதை பார்த்து தன்னையறியாமல் சிரிக்கும் ஒரு மனிதன், தான் விழும் போது மட்டும் அழுவதேன்?. அதாங்க, அடுத்தவங்களுக்கு வந்தா?, அது தக்காளி சட்னி, தனக்கு வந்தால், அது ரத்தம் என்ற சுயநலம் தாங்க. புரியுதாங்க, தொளபதியின் எண்ணம்?.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  அடுத்த தீர்ப்பு விரைவாக வர வேண்டும் , குறிப்பாக அடுத்த லோக்சபா தேர்தலுக்குள்

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  ஒரு நாலு வருஷம் இப்படியே வண்டிய ஒட்டுங்கப்பா? அடுத்த எலக்ஷ்ன்ல மக்கள் தெளிவாயிடுவாங்க.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  அயோத்யா வழக்கு எழுபத்தி ஐந்து வருஷமா நடக்குது

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  மூன்றாவது நீதிபதி ஆறு மாதங்கள் விசாரித்து விட்டு பிறகு அந்த இரண்டு நீதிபதிகளும் சொன்ன தீர்ப்புகள் சரிதான் என்று சொல்லி புதிய சர்ச்சைகளை உருவாக்க போகிறார். இது இப்படியே ஓடி கொண்டு தான் இருக்கும். பேசாம தினகரன் தரப்பு வழக்கை வாபஸ் வாங்கினால் நல்லது. அடுத்த ஆறு மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம். தேர்தல் கமிஷன் எவ்வளவு நாள் ஒத்தி வைக்க போகிறது தெரியல உள்ளாட்சி தேர்தல் மாதிரி. நடக்கறது எல்லாம் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே நடக்குது அப்பு .......

 • S.prakash - Palakkarai,இந்தியா

  நீதி மன்றங்கள் இந்தியாவின் பாதாள சாக்கடைகள் நீதிபதிகள் கோழைகள் அதனால் தான் மக்களாட்சி அலங்கோலம் ஆகிறது.தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மக்கள் பிரதிநிதிகள் . தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொகுதியில் இடை தேர்தல் நடத்த உத்தரவு தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று தினகரன் சொல்கிறார், எந்த கட்சி?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 14-ஜூன்-2018 14:05 தமிழ் நாட்டில் எது நடந்தாலும் நடக்கா விட்டாலும் மோடி தான் பொறுப்பா? உங்களுக்கெல்லாம் பகுத்தறியும் திறன் மழுங்கி விட்டதா?//// - யாங்க, காரணம், மோடிஜி ஆட்சியில், அனைத்து வரவு செலவுகளையும், நேர்மையாய், உண்மையாய், சிஸ்டமேடிக்கா இருக்கனும்னு, பிரதமர் வற்புறுத்துவதாலும், செயலாக்க முனைவதாலும் ஏற்ப்பட்ட அதிர்ப்தியும், Etc எனலாங்க.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  //////Nancy - London,யுனைடெட் கிங்டம் 14-ஜூன்-2018 14:02 தீர்ப்புக்கு முன்னாடியே இந்த புலிகேசிகள் 5 வருஷ ஆட்சியை அனுபவிச்சு முடிச்சிடுவாங்க .. இதம் இந்தியா................. Pannadai Pandian - wuxi,சீனா 14-ஜூன்-2018 14:02 இம்சை அரசன் பசி பதவியை அனுபவித்த மாதிரியா ???///// - சூப்பர்ங்க, பாண்டியன்ஜி.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அதாவதுங்க, அந்த காலத்தில், அதிமுக இரண்டாக பிளவுபட்டு, ஆட்சி கவிழ்ந்து, அது "ஜா-அணி, ஜெ-அணி", என்றாகி, பிறகு, இரண்டு அணியும் தேர்தல்களில் மோதி தோல்வியுற்று, அதன் பலனாக கட்டுமரம் ஆட்சியை பிடித்து, பிறகு, இரு அணியும் ஒன்றாக இணைந்து, தேர்தலின் மூலம் மீண்டும் ஆட்சியை பிடித்து, ஜெ-அணியின் தலவராக இருந்த, ஜெயலலிதா அவர்கள், முதல்வராக பதவி ஏற்றது போன்ற, அதே போன்ற ஒரு வரலாற்றை, இன்றைய தினகரனால் சாதிக்க முடியுமாங்க?. காரணம், ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுக்கும், சில தர்ம நியாய குறிக்கோள்களும், சூழல்களும், அதற்கு ஏற்ற பொதுமக்களின் மனங்களும் அமைந்ததால்தான், அப்படியெல்லாம், வரலாறுகள் நடந்தேறின எனலாங்க.

 • murugu - paris,பிரான்ஸ்

  இந்த தீர்ப்பு ,குதிரை பேரம் செய்ய நீதிமன்றமே அங்கீகாரம் வழங்கியதாகவே பார்க்கப்படுகிறது

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா 14-ஜூன்-2018 15:38 தினகரனை நம்பி தலையில் துண்டை போட்டுக்கொண்டவர்கள். இனி இவர்களின் அரசியல் வாழ்க்கை முடிந்தது. இலவு காத்த கிளியாக தினகரன்.//// - மேலும் தொளபதியும் தாங்க எனலாம்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////makkal neethi - TVL,இந்தியா 14-ஜூன்-2018 16:04 நீதி மன்றங்கள் அரசியல் கட்சி கூடாரங்களாக மாறுகிறதா ? என்றுதான் மக்கள் எண்ணுகிறார்கள்.//// - பொதுவாக, ஒரே விதமான, இரு வேறு வழக்குகளில், இரு வேறு நீதிமன்றங்களில், இரு வேறு விதமான தீர்ப்புக்கள், ஏன் வழங்கப்படுகிறது?. காரணம், அந்த இரு வேறு கோர்ட்டுகளில், நடந்த வழக்குகளில் உள்ள அம்சங்கள், சூழல்கள், நோக்கங்கள், Etc என்பவைகளில், சில பல மாறுபாடுகள் உள்ளதால்தான் எனலாம். ஆக, இது போன்ற சென்சிடீவ்வான வழக்குகளில், நீதிபதிகள், மிகவும் நன்றாக யோசித்துத்தான் தீர்ப்பு வழங்கி இருப்பார்கள் எனலாம். சும்மா, குவாட்டர் குடிமகன்கள் போல, வாயில் வந்ததை எல்லாம் கருத்தாக போடுதல் என்பது சரியா?.

 • Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா

  பானெர்ஜி ப்ரோமோஷனிற்காக காத்துக்கொண்டிருப்பவர்,பிஜேபி அரசின் சாமரமாக இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளவரிடம், வேறு என்ன எதிர்பார்க்க முடியும்......

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா 14-ஜூன்-2018 16:00 பாராளு மன்ற தேர்தல் அறிவிப்பு வரும்வரை இந்த அரசு ஓடும். மைய அரசின் தேர்தலோடு நமது மாநில அரசின் ஆயுசும் முடியும். அதுவரை திரு சுடலையின் பொறுமையோடு காத்திருக்கணும் .//// - அட, முதல்ல, இனி சுடலையை, எல்லா தொகுதியிலும், சென்னை ஆர்கே நகரில் நடந்த, டெஃபாசிட் இழப்பை போல வராம, பார்த்துக்க சொல்லுப்பா?. ஆமா, தனி அரசியல் கட்சி உருவாக்கி, செயல்பட்டு கொண்டு இருக்கும், ஒரு தலைவர் என்பவரிடம், இந்த 18-பேர்களுக்கும், என்ன வேலைங்க, அவரோடு, அங்கு, அரசியல் ரீதியாக?. இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை, என்பது போன்ற செயல்தானே?. அதாவது, தாங்கள் அனைவருமே, ஆன்டி அதிமுக நபர்கள்தான் என்பதை, சொல்லாமல், செயலால் ஒப்புக்கொள்வதை போன்றல்லவா இருக்கிறது?. இவைகளையும், கோர்ட்டு, அடுத்து வரும் விசாரணைகளில் கவனிக்கும் தானே?. அதாவது, இந்த 18-பேர்களும், சுய சிந்தனையில் செயல்படாமல், சிலரால் ஆட்டுவிக்க படும் சூழலில் மாட்டிக் கொண்டார்களோ, என கோர்ட் உண்ணிப்பா கவனிக்கும்தானே?. பொதுவாக, ஒரு குடும்பத்து உறுப்பினர்கள், நல்லமோ, கெட்டதோ, அந்த குடும்பத்துக்குள்ளே நடமாடி கொண்டு, வாழ்ந்து கொண்டுதாங்க, எந்த பிரச்சனையையும் தீர்க்க, தீர்வு காண, முயற்சி செய்யனுங்க. அதை விடுத்து, அயலாருடன் கூட்டு சேர்ந்து, தனித்து நின்று, ஆன்டி குடும்ப செயல்களில் ஈடுபடுவது சரியாங்க?. யோசியுங்க வாசகர்களே?.

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  உயர் நீதி மன்றமே வேண்டாம். எங்க ஊரு ஆலமரத்தடி பஞ்சாயத்தில் கூட ஒரு நாளில் வழக்கு முடிவுக்கு வந்து விடும். 18 தொகுதிகளின் நிலைமை ??????????????????????? எப்படியும் இன்னும் 6 மாதம் கழித்து தீர்ப்பு வரும். அடுத்து உச்ச நீதி மன்றம் செல்வார்கள். அங்கே ஒரு 8 மாதம் ................. மக்களின் நிலைமை தான் மோசம்.

 • தாழ்ந்த தமிழகமே - Chennai,இந்தியா

  ஒரே வழக்குக்கு ரெண்டு நீதிபதிகள் ரெண்டு வெவ்வேற தீர்ப்பு கொடுத்தா அதுல ஒரு நீதிபதி தப்பா தீர்ப்பு கொடுத்திருக்காருன்னு தானே அர்த்தம்....?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எனக்குப் பிடித்த மாதிரி தீர்ப்பு சொல்லும் நீதிபதி மிகமிகமிக நேர்மையானவர். வேறு மாதிரி தீர்ப்பளித்தால் அவர் மோடியின் இந்துத்துவா ஆள்.கைக்கூலி ஆரிய வந்தேறி . பதவியர்வுக்கு அலைபவர். பெட்டிவாங்கிட்டார். இப்படிக்கு டுமீளன் C/O Rs 20 .புட்டி பாளையம் குவாட்டரூர் . சரக்கு மாவட்டம். டாஸ்மாக் நாடு.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  18 எம்எல்ஏக்கள் நிலை தான் திரிசங்கு நிலையில் உள்ளனர். அப்போ டோக்கனாருக்கு சங்கா?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////AR - 14-ஜூன்-2018 14:11 சுடலையின் கனவு, இனி கானல்நீர்தான், ஹைக்கோர்ட், பெரிய பெஞ்சு சுப்ரீம்கோர்ட், பின்னர் அரசியல்சட்ட முழு பெஞ்ச், என அப்பீல்கள் முடிந்து, தீர்ப்பு வருவதற்குள், முப்பாட்டனாகி நொந்து நூடுல்சாகிவிடுவார்.//// - நொந்து நூடுல்சாகிவிடுவார், அவர் தொளபதி தானுங்களே?. உங்க கருத்துப்படி நடக்கும் வாய்ப்புக்கள் 100% உண்டு என்றே கூறலாங்க. என்ன ஒன்னு, அந்த 18-எம்எல்ஏ தொகுதிகளின் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், நல்ல திருப்திகளுடன், இப்பொழுதும் வேலையை தொடர்வார்கள் எனலாங்க. அரசியல்வாதிங்க தலையீடு, இப்ப கொஞ்சம் குறைவாகவே இருக்கும் இல்ல?, நிர்வாகத்தில்.

 • tamis - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஓபிஎஸ்,ஈபீஎஸ்,எம்கேஎஸ், வீகேயெஸ், இந்த குரூபெல்லாம் ஒழிஞ்சு புதிய குரூப் வருமா? அது ரஜினியோ கமலோ, அல்லது தமிழ் பேசுகின்ற தமிழர் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நல்ல ஆட்சியை கொடுக்க முன் வருவார்களா? ஈகோ விட்டு ஒன்று சேர்வார்களா?

 • makkal neethi - TVL,இந்தியா

  நீதி மன்றங்கள் அரசியல் கட்சி கூடாரங்களாக மாறுகிறதா ? என்றுதான் மக்கள் எண்ணுகிறார்கள்

 • RAMAKRISHNAN K - East Tambaram, Chennai,இந்தியா

  நியாயமும் நீதியும் ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் , பார்ப்பவரின் பார்வைக்கு ஏற்ப மாறிக்கொண்டேயிருக்கும்.

 • ராஜாராம்களனி -

  தயவு செய்து தலைவர்கள் என்பதற்கு வேற எதாவது வார்த்தையை பயன்படுத்தலாமே !!!

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அக்கா...எப்போதுமே வழவழா.....கொழ கொழாதானா...

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  இப்பொழுது தான் புரிகிறது, ஏன் ஆளும் கட்சிகள் தனக்கு சாதகமானவர்களை நீதிபதிகளாக நியமிக்கிறார்கள் என்று..........

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  2G வழக்கிலும் மிக விரைவில் இறுதி தீர்ப்பு வரவேண்டும் என்று சுடலை சொல்லுமா?

 • Sakthi Vel - chennai,இந்தியா

  பாம்பும் சாகக்கூடாது தடியும் உடையக்கூடாது சபாஷ்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement