Advertisement

புழல் சிறையில் கைதிகள் மோதல்

புழல்:புழல் மத்திய சிறையில், வெளிநாட்டு கைதிகள் மோதிக்கொண்ட சம்பவத்தால், பரபரப்பு
ஏற்பட்டது.
சென்னை, புழல் மத்திய சிறையில், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு, போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய, போர்ச்சுகல் நாட்டு கைதிகள், லியாஸ் கொய்ம்ரோ ஆர்மண்டோரோய், 65, மெண்டிஸ் அல்போன்சோ, 53,
ஆகியோர், நடைபயிற்சி மேற்கொண்டனர்.
ராமேஸ்வரத்தில், பாஸ்போர்ட் இன்றி, சட்ட
விரோதமாக திரிந்த வழக்கில் சிக்கிய, துருக்கி நாட்டு கைதி, மகீர் டெக்ரீன்புருஷோதர்ரும், 43, நடைபயிற்சி செய்தார்.மேற்கண்ட இருவரும், துருக்கி கைதியை, கிண்டல் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மகீர் டெக்ரீன்புருஷோதர், அங்கிருந்த கற்களால், இருவரையும் தாக்கினான். காயமடைந்த இருவருக்கும், சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement