Advertisement

கொள்ளையர் இருவர் கைது

படப்பை:படப்பை, நவசக்தி நகரைச் சேர்ந்தவர், தேவராஜ், 46; அப்பகுதியில் மருந்தகம் வைத்துள்ளார். நேற்று காலை, படப்பை அரசு பள்ளி அருகே, நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி, தேவராஜிடம், 500 ரூபாயை பறித்தனர்.அவரது புகாரையடுத்து, மணிமங்கலம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட, கீழ்படப்பை திவாகர், 23, விஜயன், 25, ஆகியோரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், ரவுடிகள் சிலருடன் சேர்ந்து, படப்பை மற்றும் அதை சுற்றி வசிக்கும் செல்வந்தர்களையும், தொழில் செய்வோரையும் குறிவைத்து, பணம் கேட்டு மிரட்டியது தெரிந்தது.இதையடுத்து, ஆத்தனஞ்சேரி, ஸ்ரீராம், 22, கூழங்கல்சேரி முருகன், 28, ஆகியோரையும், போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவர்களால் பாதிக்கப்பட்டோர் குறித்து,
போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement