Advertisement

நிரவ் மோடிக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ்

புதுடில்லி: வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள நகைகடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்ன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சி.பி.ஐ. . பிரபல வைரநகை வியாபாரி நிரவ் மோடி,46 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் புகார் கூறியது, இதைடுத்து நிரவ் மோடி நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளார். அவர் லண்டனில் வசிப்பதாக கூறப்படுகிறது.
வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக நிரவ் மோடி, மெகுல்சோக்ஸி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது. கடந்த மே மாதம் மும்பைசிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் நிரவ் மோடி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. இன்டர்போல் உதவியுடன் பிடிக்க நிரவ் மோடி, மெகூல் சோக்ஸி, உள்ளிட்டோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "யோவ், நிரவ் மோடி, உனக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டிஸ்' கொடுத்தாச்சு. இனிமேல் இந்தியா பக்கம் வர வேண்டும் என்று கனவிலும் நினைக்காதே. மீறி வந்தால் உன் மீது கடுமையான நடவடிக்கை (ஏதாவது ஒரு தீவுக்கு நாடு கடத்துவது) எடுக்க வேண்டியிருக்கும். எச்சரிக்கை".

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  திருடனுக்கு இடம் கொடுத்தவனை பிடிங்க. கண்டிப்பா வங்கி அதிகாரிகள் லஞ்சம் வாங்காம பெரிய லோன் கொடுக்க வாய்ப்பில்லை . அவனுக்கு எந்த கலர்ல நோட்டீஸ் கொடுத்தாலும் பிடிக்கப்போறதில்ல. ஏன் வீண் செலவு

 • raaj - surat,இந்தியா

  இருக்குற இந்திய அரசியவாதிகளை திருடனுங்க இல்லை கொள்ளைகரனுங்க கொள்ளைக்காரனை பிடிக்கிறதை விட்டுட்டு திருடனை பிடிக்கிறிங்க

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சும்மா எப்போ பார்த்தாலும் ஆஹாகாரம் ஓங்காரமாகத்தான் இருக்கின்றது, காரியம் என்னவோ பெரிய பூஜ்ஜியம். முடியாதா??அவனை என்கவுன்ட்டர் பண்ணுன்னு கமுக்கமாக ஆளை அனுப்பி என்கவுன்ட்டர் செய்தால் அவன் அவன் பயந்து கொண்டு இந்த மாதிரி தில்லாலங்கடி செய்ய மாட்டான்.

 • dandy - vienna,ஆஸ்திரியா

  ஹி ஹி ஹி இந்திய என்றோரு நாடு ,,,இங்கு நீதிமன்றம் ....வேறு

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  இந்த ஆளு எந்த CORNER ல இருக்காருன்னு தெரியல... நீங்களும் கலர் கலரா நோட்டீஸ் அடிச்சிக்கிட்டு இருக்கீங்க .... அடுத்து என்ன ஊதா நோட்டீசா???

 • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

  சுட்டு தள்ளுங்கள் நமது உளவு பிரிவின் மூலம்

 • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

  நாம் பிரிட்டிஷ் அரசு நமது நாட்டை சுரண்டுவதிலிருந்து விடுதலை பெற்று விட்டோம் ஆனால் நமது கார்பொரேட் கொள்ளைக்காரர்கள் நமது நாட்டிலிருந்து கொள்ளை அடித்துவிட்டு பிரிட்டனில் தஞ்சம் புகுந்து சொகுசான வாழ்க்கை நடத்திக்கொண்டுள்ளார் .. மல்லையா, நீரவ் மோடி, ...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  கலர் காலரா நோட்டீஸ் அனுப்புவாங்க, ஆனால் பயன் எதுவும் கிடைக்காது, நம்மை ஏமாற்ற ஒரு நடவடிக்கை எடுக்கிறோம் பாருங்கள் என்று கண்துடைப்பு

 • Anand - chennai,இந்தியா

  லண்டன் தான் எல்லா நாடுகளிலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகலிடம் போலிருக்கு.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  இதை மல்லையாவுக்கும் அனுப்பலாமே ஏன் அனுப்பவில்லை

 • ramesh -

  Punjab national bank or hdfc back

 • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

  மக்களின் பணத்தை கொள்ளை அடுத்தவனுக்கு 'அவர்' என்ற மரியாதை தேவையற்றது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்தியாவை விட்டு ஓடினால் தலை மறைவுதான்... இந்த கேடில் லண்டனில் தலைமறைவு ஏன் ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஓட விட்டுவிட்டு என்னா பாவலா கொடுக்கறாங்கா...?

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  போங்கடா ... பேசாம இருங்க.... மக்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்...

 • Raman - kottambatti,இந்தியா

  நோட்டீஸ் எங்கே அனுப்புனீங்க? இங்கிருக்கும் அவர் வீட்டுக்கா? அவர் தான் போயிட்டார்.. பிறகு லண்டனுக்கா ? எந்த அட்ரஸ்? லண்டன் குறுக்கு சந்து, லண்டன் மெயின் ரோடு, லண்டன் (இந்த லண்டன் பஸ் எல்லாம் வந்து நிற்குமே அதுக்கு பக்கத்தில் ) அப்படித்தானே ?

 • venkat Iyer - nagai,இந்தியா

  Yeppadida,evvalavu loan thuukki koduthurukkanuka

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement