Advertisement

அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: அணைகள் பாகாப்புக்கு சட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்ற உள்ளது. இந்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு வழிவகுக்கும்.
மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு, மேலும் அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை அமைக்கப்படும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • Jaya Ram - madurai,இந்தியா

  வேறொன்றும் இல்லை கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி அமைந்திருந்தால் இந்த பேச்சுக்கே இடமிருந்திருக்காது ஏனென்றால் இப்போ காவேரி ஆணையத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிய கர்நாடக அரசு மறுக்கும் பட்சத்தில் இந்த புதிய சட்டத்தின் மூலம் அணை பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? இரண்டாவது பெரியாறில் நியூட்ரினோ திட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதில் பிரச்சினை வரக்கூடாது அல்லவா இதையெல்லாம் யோசித்தே இப்போ இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது எல்லாம் சரிதான் நல்லனவற்றினை ஆதரிக்கும் அதேசமயத்தில் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தினையும் மத்திய அரசு தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு அவற்றினை அடிமைகள் போல் நடத்தும் சர்வாதிகாரம் தான் வெறுக்க வைக்கிறது

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அதாவது சுதந்திரம் அடைந்து இதனை வருடங்கள் ஆனபின்பும் இப்போதுதான் தேவையான சட்டங்கள் வருகிறது , தேவை அற்ற சட்டங்கள் ஒழிக்கப்படுகிறது. இதற்குத்தான் ஒரு நல்ல தலைவன் வேண்டும் என்பது.

 • RR Iyengar - Bangalore,இந்தியா

  திருட்டு கும்பல் வெறும் வாயவே மெல்லும், இதுல இப்ப அவல் வேற கிடைச்சிருக்கு ... ஏன்டா நாட்டுக்கு நல்லது செய்யவே விடமாட்டீங்களாடா

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அணைகள் உடைந்தால் மக்களுக்கு பேராபத்து எனவே அவற்றின் பராமரிப்புக்கு தேவையான பாதுகாப்பு விதிகளைத்தான் இப்போது முழுமையாகக் கொண்டுவந்திருக்கிறார்கள் மாநில சுயாட்சி பேசுபவர்கள் அணைகளை மத்திய அரசே கட்டுப்படுத்தவேண்டுமென்பது சிறந்த நகைச்சுவை

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நான்கு ஆண்டுகளாக இல்லாமல் இப்பொழுது மட்டும் தேசிய அணை பாதுகாப்பு குழு ஏன் ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தேசிய அணை பாதுகாப்பு குழு கட்டுப்பாட்டில்தான் மேட்டுர் அணை வருமா... வற்றி போகும் தருணத்தில் இருக்கும் அணைகளுக்கு என்ன பாதுகாப்பு குழு கேட்கிறது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  காவேரி ஆணையம் என்ன ஆவது...? அது என்ன செய்யும்...?

 • Darmavan - Chennai,இந்தியா

  இதில் ஒன்று தெளிவாக இல்லை..முல்லை பெரியார் போல்.இந்த அணைகளை யார் பராமரிக்க வேண்டும். அணையை உபயோகிக்கும் மாநிலம் அல்லது அது இருக்கும் மாநில அரசா இல்லை பொதுவான ஒரு குழுவா /மத்திய அரசா என்பது தெளிவாகவேண்டும்.நீர்மட்டத்தை வல்லுநர்கள் தீர்மானித்து உபயோகிக்கும் மாநில அரசிடம் விடுவதுதான் சரியாகும்..

 • ஆப்பு -

  நதிநீர் பங்கீடு மாநிலங்களைச் சார்ந்தது..ஆனா அணைகளை இவிங்க பாதுகாப்பாங்களாம். நல்ல காமெடி.

 • n.palaniyappan - karaikal ,இந்தியா

  N.Palaniyappan karaikal honourable Prime Minister please tell to cauvery water management authority in action . Don't have time Kharif season now going on. Don't have water for agriculture. Save agriculture and farmers . This is important and very essential to our nation.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  நல்ல முயற்சி...... நதிகளையும் இணையுங்கள்...... நாடே உங்களை வாழ்த்தும்......

 • mindum vasantham - madurai,இந்தியா

  ஐயா நரேந்திர மோடி அவர்களே இங்கே தினகரனை கொஞ்சம் கவனிக்கவும் , அவனுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவும் , அவன் புதிதாக எந்த தலைவரும் வர கூடாது என்று சாதிய ரீதியாக போர் தொடுக்கிறான்,தமிழகம் இப்படி பிளவு பட்டிருந்ததில்லை எப்போதும் , கிராமத்திற்கு சென்றதும் தான் அவன் லீலைகள் தெரிய வந்தது , முதல்வருக்கு எதிராக கொங்கு வெள்ளாளரை சீவி விடுகிறான் , எங்கள் ஊரில் விடுதலைக்கு போரிட்ட ஒரு வீரருக்கு சாதிய ரீதியாக திரள வைக்க பார்க்கிறான் , சீமான் போன்றோருக்கு அவன் தான் பணம் கொடுக்கிறான் , அவனுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை ..........

 • vns - Delhi,இந்தியா

  மிகவும் தேவையான சட்டம்.. இதே போன்று மக்கள் ஒழுக்கமாக இருக்கவும் நடக்கவும் சட்டம் இயற்றவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement