Advertisement

உணவு தயாரிப்பதை காணும் வசதி; ரயில்வே அமைச்சகம் புது திட்டம்

புதுடில்லி : ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் எப்படி தயாராகின்றன என்பதை பார்க்கும் வசதியை, பயணியருக்கு நேரடி வீடியோவாக வழங்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


பயணியருக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, ரயில்வே அமைச்சகம் செய்து வருகிறது. அவர்களது புகார்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


இந்நிலையில், 'ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை' என, பெரும்பாலான பயணியர் புகார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, பயணியருக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து, மத்திய ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் கூறியதாவது: நாடு முழுவதும், ரயில்வே உணவு கழகத்துக்கு சொந்தமாக, 200 சமையலறைகள் உள்ளன. இவற்றில் சில சமையலறைகளில், 'விஷன் கம்ப்யூட்டிங்' என்ற முறையில், நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.


இந்த கருவி மூலம், சமையலறையில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், உடனே, சம்பந்தப்பட்ட, ஒப்பந்ததாரருக்கு தானாக புகார் செல்லும். குறிப்பிட்ட நேரத்துக்குள், ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு புகார் செல்லும் வசதி உள்ளது.


மேலும், இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் சென்று, ரயில்வே சமையலறையில், உணவு தயாரிக்கப்படுவதை வீடியோவாக காணும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • MATHI,L.K. - Lalgudy,இந்தியா

  ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் எப்படி தயாராகின்றன என்பதை பார்க்கும் வசதியை, பயணியருக்கு நேரடி வீடியோவாக வழங்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது இனி கழிப்பறைகளிலும் சி.சி.டீ..வி, காமிரா பொறுத்தப் படுமா? காபி, டீ அங்குதானே தயாரித்த அவலத்தை பார்த்தோம்?

 • sagar saritha - Chennai,இந்தியா

  இது எத்தனை நாளைக்கு தாங்கும்? எந்நேரமும் எப்பொழுதும் ரயில்வேயின் செயல்முறைகளை நாம் பார்த்துகொண்டேயா இருக்க முடியும்? அவர் அவரவர்களுக்கு தோன்றி உண்மையாக வேலை செய்தாலேயொழிய பயணிகள் ஒன்றுமே செய்ய முடியாது.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  நல்ல முயற்சி பாராட்டுவோம். நீண்ட தூரம் செல்லும் பயனியர்களுக்கு அவர்கள் கொடுக்கும் உணவுகள் தரமில்லை என்றாலும் வேறு வழியில்லை என்ற என்னம்மே மேலோங்குவதால் உணவு தரமில்லாமல் இருக்கின்றது. இந்த நடவடிக்கையானது அவர்களுக்கு பயம் உண்டாக்கி தரமான உணவு கிடைத்தால் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  எல்லா வீடுகளிலும் சமையல் அறையில் கையுறைகளை அணிவதில்லை. தலையிலும் உரை அணிவதில்லை. பயணிகள் ரயில்சேவையில் இதை எதிர்பார்க்கிறார்கள். சாலையோர உணவகங்களில் சுத்தம் குறைவு விலை அதிகம்.

 • பிரபு - மதுரை,இந்தியா

  திருடனா பார்த்து திருந்தனும். வாங்குற காசுக்கு தரமான சாப்பாட்டை கொடுக்கணும்ன்னு சாப்பாட்டை விக்கிறவனுக்கு தெரியணும். வீடியோவில தெரிஞ்சு பிரயோஜனம் இல்லை.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  வீடியோவில் எப்படி வேண்டுமானாலும் காட்டலாம்.உண்மையிலேயே நல்ல ஆரோக்கியமான உணவு பயணியர்களுக்கு போய் செருகின்றதா என்பதுதான் கேள்வி.உணவகங்களிலும்,சுவீட் ஸ்டால்களிலும் கையுறை போடுபவர்கள் அதை சரியான முறைகளில் கையாளாமல் ஏதோ பெயருக்கு போடுகிறார்கள்.அவற்றை கண்ட கண்ட இடத்தில் கழற்றி வைத்து மீண்டும் அணிவதால் சுகாதார கேடுதான் அதிகரிக்கிறது.அதுபோல கொஞ்ச நாட்கள் இந்த வீடியோ தர்பார் நடக்கும்.அப்புறம் ஓ கயா தான்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  முடிந்தால் விழுப்புரம் ஜங்ஷன் பிலாட்பாரத்தில் விற்கும் இட்லி தோசைகளை சாப்பிட்டு விட்டு பதில் கூறுவது நல்லது. 30 ரூபாய்க்கு 3 இட்லி ( சட்னி இல்லை) வடை இலவசம். 40 ரூபாய்க்கு இரண்டு தோசை சாம்பார் மட்டும். அதில் காய் என்று ஒன்றை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு. ரயில் நிற்பதோ 5 நிமிடம். இதற்குள் சரிபார்த்து மீதி பணம் வாங்கவே நேரமிருக்காது.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இப்போதும் பான்ரி கோச்சுக்கு சென்று அங்கேயே உணவருந்த முடியும், தயாரிப்பை பார்க்க முடிகிறது, இருந்தாலும் தரம் இன்னும் மேம்படையவேண்டும், கடந்த வாரம் சென்னை சென்றிருந்தபோது மதிய உணவை அங்கிருந்த ஆகார் உணவகத்தில் தான் தயிர் சாதம் சாப்பிட்டேன் மிகவும் நன்றாக இருந்தது, விலையும் அனைவரும் வாங்கி பயன்பெறும் வகையில் இருந்தது சந்தோஷமே, ஆனால் பயணிகளிடம் சுத்தம் கொஞ்சமும் இல்லை, எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குற்றம் சொல்லமுடியாது

 • Homer Simpson - Springfeild,யூ.எஸ்.ஏ

  அந்த வீடியோவுக்காக மட்டும் ஒரு நாள் சுத்தமான சமையல் அறை,பாத்திரங்கள், கையுறை எல்லாம் போட்டு இருக்கும். Otherwise no guarantee for food safety. Better pack your own food and take it along with you.

 • Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா

  உணவு பாதுகாப்பானது ,உணவை கையாளும் முறை அதை தயாரிக்கும் முறையிலிருந்து,உட்கொள்ளும் வரையிலானது.இதில் தரக்கட்டுப்பாட்டு காவல்,சமையல் தயாரிப்பதில் சுகாதார கட்டுப்பாடு,கையாளும் முறையிலிருந்து,உணவு சம்பந்தப்பட்ட அனைவரும் மாசற்ற சூழலிலிருந்து,நோயற்ற (Free from Infections)முறையில் உத்திரவாதமளிக்கும்படி ,,பாத்திரங்கள்,உபகரணங்கள்,தகுந்த உடுப்புக்களை உடுத்துவது உட்பட கண்ணும்,கருத்துமாக மிக்க எச்சரிக்கையுடன்,விரும்பி அபிமானத்துடன் அருந்துவதற்கான சேவையாக கருதுமளவுக்கு,இதில் ஆன்மிக அற்பணிப்பு பரிமளிக்கவேண்டும். நடு வானில் பறக்கும் பயணிகளுக்கான பாதுகாப்பு,விமானிகளது உணவையும் அடிப்படையாக கொண்டதாகும்.

 • மனோ - pudhucherry,இந்தியா

  நான் 1997ல் பாம்பே சென்றேன் அப்போ எப்படி இருந்ததோ அதே லட்சணத்தில் தான் தற்போதும் உணவின் தரம் உள்ளது சென்ற வருடம் அகமதாபாத் சென்றோம் அகமதாபாத் ஸ்டேசன்ல காலையில் நண்பர் இட்லி சூடா விக்கிரான்னு சொன்னார்னு போய் பார்த்தோம் மேல இட்லி குண்டான்ல புகையா வந்துட்டு இருந்தது கீழ ஸ்டவ்வ பார்த்தா அது ல பர்னரே இல்ல கேஸ் சிலிண்டரே இல்ல அப்புறம் தான் ஒருத்தர் சொன்னாரு இட்லி குண்டான் உள்ள எட்டி பாருங்கன்னு பார்த்தா சாம்பிராணிய கொளுத்தி வச்சிருக்கான் அவன் கிட்ட இட்லியமட்டும் கொடுய்யா என வாங்கி பாத்தா பிசுபிசுன்னு ஒட்டுது நண்பர் முகத்துல ஈ. ஆடல பக்கத்துல ரயில்வே போலீஸ் போயி கினு வந்து கினு தான் இருக்கான் இந்த பிராடு பயல கண்டு கவே இல்ல இப்ப கூட நார்த் இண்டியா போகப் போறேன் சுத்தமில்லாத சாப்பாடு டாய்லட்ட நினைச்சா பயமா இருக்குது போகும் போது 2 நாளைக்கு வீட்ல செஞ்சு எடுத்துட்டு போயிடறோம் வரும் போது பிரட் வாங்கி சமாளிச்சிடறோம் ஆனால் இந்த டாய்லட் வ்வே....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அங்கே சமைப்பதைதான், நாம் வீடியோவில் கண்டதைதான் நமக்கு கொடுக்கிறார்கள் என்பது என்ன நிச்சசயம்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏமாற்றுவது என்றால் எப்பிடி வேண்டும் என்றாலும் ஏமாற்றலாம்...

 • raja -

  all ok how about we the some officers some ttr just look at the people drink alcohol near toilet together with gangs in north india mostly,

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இந்தியாவில் கிளவுஸ் போட்டு உணவை கையாள்வதை காண அசிங்கமான வேடிக்கையாக இருக்கும். கிட்டத்தட்ட 100% பேருக்கும் இதை பற்றிய அடிப்படை அறிவு இல்லயென்றே சொல்லலாம். ஒரே ஒரு கேள்வி. கையில் உறை அணிவது கையில் உணவு படக்கூடாது என்பதற்காகவா? இல்லை உணவில் கை படக்கூடாது என்பதற்காகவா? சரியாக செய்யவேண்டியது என்ன? (1) உணவை தவிர மற்ற இடம், பொருள்களை, உடல்பாகங்களை தொடக்கூடாது. மீறி தொட்டால், உறையை மாற்ற வேண்டும். அல்லது அவைகளை தொடுவதற்கு முன் உறையை கழற்றி வீசவேண்டும். (2) ஒரு முறை கழட்டி விட்டால் புது உறை அணியவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement