Advertisement

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை(ஜூன் 14) தீர்ப்பு

சென்னை : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை(ஜூன் 14) தீர்ப்பு வழங்குகிறது.


முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கக்கோரி, கவர்னரிடம் மனு அளித்த, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த 2017 செப்.,18ல் சபாநாயகர் உத்தர விட்டார். இதை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.


இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை மதியம் 1 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு தீர்ப்பினை வழங்குகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  மூணு நாளைக்கி முன்னாடி "அதிமுக ஹமாரா ஹை:" ன்னு சொல்லி முன்னோட்டம் வந்திச்சே. அதுக்கு வால்பிடிக்கும் இந்த தீர்ப்பு. எல்லாரும் மன்னிப்பு கடிதம் கொடுத்தா சேர்த்துக்கலாமுன்னு முடிவு செய்யும் உரிமையை சப்பைவிநாயகரிடம் ஐ மீன் சபாநாயகரிடம் கொடுத்துவிடுவார்கள். பதினாறு பேரை வளைத்து போட்டாகிவிட்டது என்று ஈப்பீஸே சொன்னாரே.

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  மேதகு சபாநாயரின் வானளாவிய அதிகாரத்தில் கோர்ட்டார் தலையிட விரும்பவில்லை. வேண்டுமானால் சபாநாயகரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர யோசனை தெரிவிக்கும் நீதிமன்றம். அதே சமயம் அந்த மன்னிப்பு கடிதத்துக்கு சபாநாயகர் அங்கீகாரம் கொடுப்பது என்பது அவரது முடிவை பொறுத்தது. அதில் கோர்ட்டார் தலையிட முடியாது. நாளை அரசியல் மன்றம்..சாரி நீதிமன்றம் தனது உரிமையை தெளிவு படுத்தும்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  உண்மை தான் எதற்கெடுத்தாலும், மோடி பிஜேபி காரணம் என்று, சங்கிமங்கி எல்லாம் கூச்சலிடுவார்கள்.

 • a.s.jayachandran - chidambaram,இந்தியா

  என்ன புதுசா தீர்ப்பு சொல்லப் போறாங்க எல்லாம் பழைய மொந்தையில் புதிய கள்.

 • ஸ்ரீனிவாசன்,COIMBATORE -

  இதுக்கெல்லாம் காரணம் பாஜகவின் மிகப்பெரிய தலைவர்தான்..!! என்றாலும் மனசாட்சி உள்ள நீதிபதி சொல்லும் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஆட்சி மாற்றம் அல்லது புதுத் தேர்தல் நடந்தால் அதுதான் கரெக்ட். இ.பானர்ஜி மனசாட்சி..???

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  இது என்ன IAS பரீட்சை முடிவா? எப்போதோ தீர்ப்பு கூறியிருக்க வேண்டும். அஞ்சு பைசா பெறாத கேஸெல்லாம் வேண்டுமென்றே இழுத்தடிக்கும் நீதி மன்றங்கள் இந்தியாவில் இருக்கும் வரை முன்னேற்றம் இன்னும் ஐம்பது ஆண்டானாலும் வரப்போவதில்லை

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்று உத்தரவு வரும். இந்த தீர்ப்பை நானே உடனடியாக எழுதுவேன். எதுக்காக வழக்கை 6 மாதம் இழுத்தடித்து பிறகு தீர்ப்பு. நீதி மன்றங்கள் தான் வழக்கை இழுத்தடிக்கிறது.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  ஆளுநர் இந்த தீர்ப்பை முன்கூட்டியே அறிந்தபின்புதான் மோடியை சந்தித்தார்.. மோடியின் ஆலோசனையின் பேரில் இந்த தீர்ப்பு வழங்கப்படும் .இந்த நீதிபதிகளால்தான் ஊழல் நடைபெறுகிறது. நீதிபதிகள் ஒருவழக்கை விசாரித்தால் இரண்டுவாரங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் .ஆனால் அரசியல் தலையீடு காரணமாக இவர்கள் வழக்கை இழுத்துக் கொண்டே போவார்கள் . தீர்ப்பு எப்படி வந்தாலும் நீதி நிலைநாட்டப் படவேண்டும் .

 • kavikaavya - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Indira banerjee is going to get promotion for supreme court. Congrats madam

 • ManiS -

  It should be Yes, so that it will be a lesson to MLAs

 • a.thirumalai -

  no worries! no comments.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  எப்படி இருந்தாலும் இதுல சம்பந்தம் இருக்கோ இல்லையோ மோடியை திட்டுற குரூப் வந்து மோடிதான் இதுக்கு காரணம்னு சொல்லி திட்டுவாங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement