Advertisement

பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரம்: ஓட்டல் அதிபர், மனைவியின் விரல்கள் துண்டிப்பு

திருநெல்வேலி : பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என்ற ஆத்திரத்தில் ஓட்டல் அதிபரின் நான்கு விரல்களையும் காலையும் வெட்டியதோடு, அவரது மனைவியின் கை விரலையும் ரவுடிகள் வெட்டினர். ரவுடிகளை கண்டித்து கடையடைப்பு நடந்தது.

திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில், பேட்டையை அடுத்துள்ள சுத்தமல்லி. அங்கு ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஒரு ஓட்டலில் நேற்று மாலையில் ஏழுபேர் கும்பல், பிரியாணி வாங்கிச் சென்றனர்.

கோபால சமுத்திரத்தில் தாமிரபரணியில் குளித்துவிட்டு, மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை என ஆத்திரமுற்றனர்.

அங்கிருந்த கிளம்பிய கும்பல், சுத்தமல்லி ஓட்டலுக்கு வந்தனர். அங்கு ஜாகீர் உசேனின் மனைவி பானு இருந்தார். அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது தலையிலும் கையிலும் அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடது கை விரல் துண்டிக்கப்பட்டது. கடைக்குள் இருந்த ஜாகீர் உசேன் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வலது கையின் நான்கு விரல்களை துண்டித்தனர். ‛லெக் பீஸ் வைக்கமாட்டாயா' என கேட்டு அவரது காலிலும் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.

காயமுற்ற இருவரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய ரவுடிக்கும்பல் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. 7 பேர் கும்பல் மீதும் பல்வேறு வழிப்பறி, கொள்ளை, அம்பையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இருப்பினும் யாரையும் கைது செய்ய சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடையடைப்பு : குற்றவாளிகள், ரவுடிகளின் அட்டகாசம் சுத்தமல்லியில் தினம் தினம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சுத்தமல்லியில் வியாபாரிகள் நுாற்றுக்கணக்கான கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனிடையே மாலையில் சுத்தமல்லி சபரி 27, பேட்டை சுடலைமுத்து ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Rajesh - Chennai,இந்தியா

  கண்டதும் சுடனும் அவ்வளவுதான்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பானு அம்மா ஆண்டவர் ஒரு கோழிக்கு இரண்டே கால்களைப் படைத்ததால் எல்லோருக்கும் லெக் பீஸ் கொடுக்கமுடியவில்லை .இனியாவது அதிக கால்களையோடு படைக்க துஆ செய்வோம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  லெக் பிசுக்கு பதிலாக பிங்கர் பிசுக்கு ஆசைப்பட்டு விட்டார்கள்.. இதற்க்கு தண்டிக்க வேண்டும் என்றால் மதுவை ஆறாக ஓடவிடும் தமிழக அரசைதான்..

 • DamuCoimbatore -

  People like jaihinth should be very carefully watched. His intentions seems to religious rivalry , enimity and unrest where ever possible and hatred by implicating BJP without valid evidence.

 • ஆப்பு -

  அதுசரி...குடுத்த காசுக்கு ஏன் லெக் பீஸ் வெக்கலை? வாங்கிட்டுப் போனவன் திரும்ப வந்து கேக்க மாட்டாங்கற தெகிரியம்தானே? நான் ரவுடிகளுக்கு வக்காலத்து வாங்கலை.. ஆனா, இந்தியாவுல அவனவன் ஏமாத்துறதே பொழப்பா போச்சு.

 • ஆப்பு -

  விரலை வெட்டி ஃபிங்கர் சிப்ஸ் போட்டு தின்னிருப்பாங்களோ?

 • HSR - Chennai,இந்தியா

  மொத்தமா என்கௌண்டர் பண்றதுக்கு என்ன தயக்கம். பாவம்.. இதுபோல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு புகார் தராமல் உள்ளார்களோ?

 • amuthan,Karaikudi - ,

  இந்த செயல் மிகவும் கண்டிக்க தக்கது... இந்த தம்பதியினரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்க பட்டிருக்கும்...காவலர்களை தூற்றும் கயவர்களே இச்செயலுக்கு பொருப்பேற்க வேண்டும்...என்றைக்கு காவலர்களுக்கு மதிப்பில்லையோ அப்போது இது போன்ற அராஜகங்கள் தவிர்க்க முடியாது...இந்திய சட்டங்களை மதிக்காத இத்தகைய ரௌடி கும்பல்களுக்கு என்கவுண்டரே பதில்...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  கேடுகெட்ட மானிடர்களா? குடிகாரர்களா.. எல்லாம் கலிகாலம். என்னத்தை சொல்ல. குடி என்னவற்றையெல்லாம் செய்யும்? இவர்களுக்கு தூக்கு தண்டனைதான் கொடுக்கவேண்டும்.

 • kumarkv - chennai,இந்தியா

  They are terrorist Muslims from local area. This area has lot of terrorist Muslims

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அடப்பாவிகளா உங்களை எல்லாம் கண்டந்துண்டமா வெட்டினாலும் தப்பே இல்லே

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  எப்படியாவது மதக்கலவரத்தை ஆரம்பிக்கணுமுன்னு போலீசே ரவுடிகளை விட்டு ஆரம்பிக்கிறாய்ங்க. மக்கள் அண்ணந்தம்பிகளா இருக்கானுங்களே.. என்ன பண்றது? ரெண்டு பேரை குறி வச்சு சுட்டுறலாமா? - காவி மற்றும் அடிமைகளின் எண்ணஓட்டம் ..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  // ரவுடிக்கும்பல் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. // எஸ்.வீ சேகருக்கு பாதுகாப்பு கொடுக்க போலீஸ் போயிட்டா?

 • raja - Kanchipuram,இந்தியா

  முதலில் இந்த ரௌடிகளை வெளியில் உலவவிட்டுள்ள போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

 • ருத்ரா -

  அராஜகம் தலை விரித்தாடுகிறது. அவன்களை பீஸ்பீஸாக்கி விடவும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பாஸ்கரன் - ஏன் இந்த செய்தியில் கூட அரசியல் எழவு கொண்டாடறீங்க? படுபயங்கரமாக அரசியல் பித்துப் பிடித்து அலைகிறீர்கள் போல. உடல்நலனையும் மனநலனையும் பார்த்துக் கொள்ளவும். நாடு முழுதும், செய்திகள் முழுதும், வாழ்க்கை முழுதும் அரசியல் அல்ல.

 • Sathish - Coimbatore ,இந்தியா

  இந்த மாதிரி செய்பவர்களை போலீஸ் தண்டிக்காது. பள்ளி மாணவியை வாயில் சுடும். சமூக விரோதியாச்சே அந்த பொண்ணு.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அவர்கள் நாம் தமிழர்கட்சியா அல்லது தமிழக வாழுரிமைகட்சியா என்று விசாரணை செய்யவும்

 • Sha Shank Shankar - Chennai,இந்தியா

  இவனுங்க ஒருத்தனைக் கூட உயிரோட நடமாட விடாம என்கௌண்டர் பண்ணனும் அப்போதுதான் தமிழக காவல்துறை மீது முழு நம்பிக்கை வரும்.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

 • senthil - chennai,இந்தியா

  ஒரு மனிதனுக்கு உடல் பலம் , கூட துணை பலம் , இருப்பதால் அதிகார எண்ணம் தலைக்கேறி ...அரக்கனாகி விடுகிறான் ...அவனுக்கு அவனை விட வலிமையை ஒருவனை கொண்டு அவன் செய்த அநியாயத்தை அவனுக்கு செய்யும் பொழுது மட்டுமே அவனுக்கும் அவனை போன்றவருக்கும் தெரிய வரும் ....மிக கொடுமையான செயல் ....அவர்களுக்கும் இதே போல் செய்ய வேண்டும் .. இளமை என்பது என்றுமே இருக்காது ...இதை யாவரும் உணர வேண்டும்.....நமது கலாச்சாரத்தில் இதை போன்ற செயல்களை தடுக்க சிறு வயதிலே பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்வார்கள் தவறு செய்தால் கடவுள் அடுத்த ஜென்மத்தில் தண்டிப்பார் , நரகம் அனுபவிப்பாய் , எண்ணெய் சட்டியில் போடப் படுவாய் என்று .... ஓரளவுக்கேனும் மக்களிடம் அநீதி செய்ய பயம் கொண்டு வளர்ந்தார்கள் பிள்ளைகள் ....... ஆனால் என்று கடவுள் இல்லை , ஜென்மம் இல்லை, நரகம் இல்லை , சொர்கம் இல்லை என்று பெற்றோர் வயதுடையவர்கள் நம்பினார்களோ அடுத்த தலைமுறை பயமற்று வளர்ந்துவிட்டது .....பயம் மட்டுமே ஒரு மனிதனை ஒழுக்கத்துடன் வாழவைக்கும்

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இவர்களில் அங்கங்களை வெட்ட வேண்டும். மாமிசம் தின்பவர்களின் மிருக குணம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement