Advertisement

ஸ்டெர்லைட் ஆலை அரசாணை : கோர்ட் அதிருப்தி

மதுரை : ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தெளிவற்று இருப்பதாக கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ள கருத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும். தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவு இல்லை. நிவாரணம் வழங்கி மனித உயிர்களை மதிப்பிட முடியாது. ஒரு மனிதனின் உயிரின் மதிப்பு ரூ.20 லட்சம் தானா? ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஐகோர்ட் ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. இதில் இருந்தே எந்த அளவிற்கு சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது என தெரிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 22 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • Rajan - singapore,சிங்கப்பூர்

  வேண்டும் என்ற போட்ட அரசனை . பாம்பும் சாகக்கூடாது , தடியும் நோகக்கூடாது , போன்ற ஆணை

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  இது நீதியின் குரல். மனித உயிரின் பாதிப்பு தெரியாத அரசு

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எத்தனை தீர்ப்புக்கள் தெளிவாக இருக்கின்றன? யோசியுங்கள் தெளிவாக இருந்தால் அப்பீல்களுக்கு இடமேது?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஹி...ஹி....ஜட்ஜு அய்யாவுக்கு புரியலையா?.... ஹி...ஹி.... நான் ஒன்னும் சொல்லறதுக்கில்ல.... ஹி...ஹி....

 • Ramesh - chennai,இந்தியா

  அய்யா கீழ் கோர்ட்லே சும்மா அப்படி இப்படி சொல்லுவாங்க. சட்டம் கரிக்கீட்டா தெரிஞ்சது உச்ச நீதிமன்றம்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  போதை ஆசாமிகளால் வெளியிடப்பட்டு இருக்கும் ஆணை அப்படிதான் தெளிவற்று இருக்கும் யுவர் ஹானர்.

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  சரியான கேள்வி... சரியான தீர்ப்பு.

 • GMM - KA,இந்தியா

  வாக்குகளை கருத்தில் கொண்டு ஆளும் அரசியல் கட்சி உத்தரவுகளை வழங்குவார்கள். எந்த தொழில்களும் மாசு கட்டுப்பாட்டுக்கு இணங்க வேண்டும். மாசுபாட்டை அளவிடுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தண்டிப்பதற்கான நடைமுறையை சட்டபூர்வமாக இருக்க வேண்டும். நிர்வாகம் குறைபாடுகள் மிகவும் பெரியவை. விசாரிக்க மற்றும் தண்டிக்க பல நீதிமன்றங்கள் தேவைப்படும்.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  இதைத்தானே எதிர்க்கட்சிகள் அனைத்தும் சொன்னார்கள்... எடப்பாடிக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம்... அரசு அதிகாரிகள் அரசு சட்டவல்லுனர்களுக்குமா?

 • Sahayam - cHENNAI,இந்தியா

  சரியான கேள்வி, அரசு வெறும் நாடகம் ஆட கூடாது. கொள்கை அளவில் முடிவு எடுத்து விட வேண்டும். அல்லது மூட மாட்டோம் என சொல்ல வேண்டும்

 • Somiah M - chennai,இந்தியா

  அரசு ஒரு ஆணை பிறப்பிக்கும் பொழுது நன்கு ஆராய்ந்து சாதக பாதகங்களை தெளிவாக குறிப்பிட்டு ஆணை பிறப்பித்தல் வேண்டும் . அவ்வாறு அல்லாது வெறுமனே ஆணை பிறப்பித்தல் என்பது மக்களுக்கு சாதகம் செய்வதாகாது .மாறாக பாதகமாகவே முடியும் .நீதி மன்றம் இதைத்தான் கோடிட்டு காட்டுவதாக தோன்றுகிறது .

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சிறு பிணக்கும் ஆலையை மூட உதவும். நல்லிணக்கம் திறக்கும் என்று ஒரு வாட்ஸாப்ப் செய்தி வந்தது. என்ன பிணக்கு யாருடன். யாரை பற்றிய செய்தி எதை பற்றிய செய்தி? யாருடன் நல்லிணக்கம் செய்யவேண்டும்?

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  கமிஷனுக்கும்,கையூட்டுக்கும் ஆசைப்படும் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள் கோலோச்சும் வரை, பெரும்பாலும் ஆலைகளில் விதி மீறல் தாராளமாக அனுமதிக்கப்படும் என்பதே உண்மை. ஏனெனில் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்களுக்கு மனித உயிர்கள் மீது அக்கறை ஒருபோதும் ஏற்படாது.

 • RamRV -

  தொழிற்சாலையால் மாசு என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரே ஒரு சான்றாவது வந்திருக்கிறதா? நக்ஸல்களின், மதவாத சக்திகளின் பிரசாரத்தை நம்பி நாட்டையும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாழாக்க வேண்டாமே. இவங்க சொன்ன அதே பகுத்தறிவையும் அறிவியல் அடிப்படையிலான சிந்தனையையும் மேற்கொள்வோம். பிரசாரங்களை, அவை எங்கிருந்து வந்தாலும், புறக்கணிப்போம்.

 • RamRV -

  வரவர நீதிபதிகளின் கருத்துக்களும் தீர்ப்புக்களும் அரசியல்வாதிகளை மிஞ்சும் போலிருக்கிறது. பகுத்தறிவு, அறிவியல் அடிப்படையிலான சிந்தனை போன்றவை பாமர மக்களிடம் இல்லாமல் போகலாம். ஆனால் நீதிபதிகள் முதிர்ச்சியையும் தெளிவையும் ஞானத்தையும் காண்பிக்க வேண்டாமா? இவர்களும் மீடியா மாயையில் விழுந்து விட்டால் நாடு என்னாகும்?

 • ManiS -

  Ivanga thuppina thodaichittu pora jaadhi... Ivanga kitta onnum edupadaadhu

 • MATHI,L.K. - Lalgudy,இந்தியா

  ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும். தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவு இல்லை. எதிர்கட்சி கூறினால், அவைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் ஆணை இடுவார் இப்போது நீதிமன்றம் தலையில் குட்டுகிறதே, எங்கே போய் அழுவீர்கள்?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆரம்பித்து வளர்த்த இரண்டு திராவிடர்களுக்கும் அதை மூட எப்பிடி மனம் வரும்... அணில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கமாட்டார்

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  ஆலைகளின் விதிமீறல் இருந்தால் அதை சரி செய்ய வேண்டாம் அதை அனுமதித்தது யார் என்று பார்க்கவேண்டாம். எவனோ ஒரு புறம்போக்கு சொல்வான் அவன் சொல்வதை கேட்டுக்கொண்டு ஆடுங்கள். துக்ளக் தர்பார். ஒரு ஆலையும் வேண்டாம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இந்த அளவுக்கு கழிவுகளை வெளியே விட்டு இயங்கியதை அனுமதித்த மாசுக்கட்டுப்பாடுத்துறை அதிகாரிகளை 100 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம்.

 • Darmavan - Chennai,இந்தியா

  ஏதோ ஆலையை மூடுவது தவறு என்று கோர்ட் சொல்லும் என்று எதிர்பார்த்தேன்... பொழுதின் தவறை சரி செய்யாமல் இப்படி ஒவ்வொரு அலையாக மூடினால் தமிழகத்தில் பிச்சையும்/திருட்டும் மேலும் அதிகமாகும்.

 • Jaya Ram - madurai,இந்தியா

  ஸ்கீம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் கேட்பதற்கே ஆறு வாரங்கள் எடுத்துக்கொண்டனர் இந்த இந்திய அரசினையே ஆளும் படித்த தகுதி நிறைந்த வர்க்கம், ஏதோ இந்நாட்டின் தென்கோடியில் அனைத்துவகையிலும் தரம் தாழ்ந்த ஒரு சிறு மாநிலம் அதற்க்கு திருத்துவதற்கு வாய்ப்பு தரக்கூடாதா?

 • Bharathanban Vs - tirupur,இந்தியா

  சி.டி.செல்வம் ஐயா தானே தி.மு.க அனுதாபி என்று சவுக்கு சங்கரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்?

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  100 கோடி அபராதம் போட்டப்ப மட்டும் சுற்று சூழல் வெளிவாயுடுச்சா ஜட்ஜ் அய்யா

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  அப்டின்னா பாதிப்பு ஏற்படுத்துற எல்லா ஆலைகளையும் மூடச் சொல்லுங்க எசமான் .

 • பின்லாடன்,ஆண்டிபட்டி -

  அங்கே வேலை செய்த 10000 பேருக்கு உங்க வேலைய போட்டு குடுங்க சாமி...புண்ணியமா போகும் சாமி....

 • vasanthan - Moscow,ரஷ்யா

  இந்த குல்லா பசங்கள் நடத்தும் தோல் பதனிடும் ஆலையை முதலில் மூடினால் தான் தமிழ் நாடு உருப்படும். அதை விட்டு விட்டு ரோடு போடுறத இந்த குல்லாவும், பாவாடை பசங்களும் எதிர்க்குறானுக

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தாழ்மையான வணக்கங்கள் நீதிபதிகளே உங்கள் உத்தரவுக்கு நன்றி .சரி உங்களுக்கே சில கேள்விகள்.நாட்டிலுள்ள தண்டிக்கப்பட்ட அல்லது கண்டனத்துக்குள்ளான அல்லது அபராதம் விதிக்கப்பட்ட அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளை மூட உத்தரவிடுவீர்களா? நீங்கள் வீற்றிருக்கும் கட்டிடமே ஒரு குடிநீர் மற்றும் பாசன ஏரியை மூடி நியாய விரோதமாகக் கட்டப்பட்டது என்பது உண்மையென்றால் இடிக்க உத்தரவிடாததேன் ? அது சூழ்நிலை கேடில்லையா ? உள்ளூர் மக்கள் விரும்பத எந்த ஆலை மற்றும் வணிக நிறுவனமும் இயங்கக்கூடாது என கோர்ட் நினைத்தால் தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் சிறுபான்மையினர் எங்காவது தொழில் செய்யமுடியுமா? முக்கால்வாசி விவசாயிகள் சரிவிகித உரமிடாமலே யூரியாவை மட்டுமே பயன்படுத்தி பயிரையும் நிலவளத்தையும் ஏன் ஆற்றையும்கூட பாழ்படுத்துகிறார்களே அவர்களிடமிருந்து நிலங்களைபறித்து விவசாயத்திலிருந்து வெளியேற உத்தரவிடுவீர்களா? விவசாய இலாகாவின் அறிவுறுத்தல்களைமீறி இஷ்டத்துக்கு கண்ட கண்ட வீரியமுள்ள பூச்சிமருந்துகளை அளவுக்குமீறி அடித்து ஆபத்தான உணவுப்பொருட்களை பயிரிட்டு மற்றவர் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விவசாயிகளை என்ன செய்துள்ளீர்கள்? அது மட்டும் நல்லதா? சென்னையில் லட்சத்துக்குமேற்பட்ட வீடுகள் கட்டிடங்கள் நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்துக் கட்டி ஆபத்தை விளைவித்துள்ள கிரிமினல்கள் எவரையாவது கைது செய்ய வைத்ததுண்டா? உங்கள் மதுரையிலேயே ஆயிரக்கணக்கில் ஆபத்தான விபத்து ஏற்படுத்தக்கூடிய விதிமீறல் கட்டிடங்கள் உள்ளனவே . எத்தனை கட்டிடங்கள் இந்த ஆண்டில் அகற்றப்பட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் ? மதுரை நகரிலேயே வைகையாற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆலைமற்றும் வணிகநிறுவனக் கழிவுகளை கலந்து ஆற்றையே கூவமாக்கியுள்ளார்களே அவர்கள் ஸ்டெர்லைட்டைவிட பெரும் குற்றவாளிகளா இல்லையா? தமிழர்களும் வேற்று மாநிலங்களில் தொழில் செய்கிறார்கள் . அவர்களுக்கும் இதே கதியேற்படலாம்

 • chails ahamad - doha,கத்தார்

  ஸ்டெர்லைட் ஆலையை மூட தெளிவற்ற அரசாணையை பிறப்பிப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தெளிவற்றவர்கள் இல்லை என்பதே உண்மையாகும் , மக்களை ஏமாற்றுவதில் கரை கண்டவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை என்ற நிலையில் , அடங்கா உயிர் பலிகள் வாங்கியதும் போதாது என்ற நிலையிலே ஸ்டெர்லைட் ஆலையை மூட தெளிவற்ற அரசாணை பிறப்பித்தது அறிந்தே பிறப்பித்த ஆணையாகும் , மக்களிடம் ஓரளவாவது விழிப்புணர்ச்சி இருப்பதால் இன்று நீதிமன்றத்தால் குட்டு வாங்கி கேவலப்படுகின்றார்கள் இன்றைய ஆட்சியாளர்கள் ,

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  உயர் நீதிமன்றன் றமும் தீர்ப்பில் தெளிவில்லை 100 கோடி எவ்வளவு சுற்றுசூழல் பாதிப்புக்கு? அளவு என்ன? ஒரு உயிருக்கு எவ்வளவு விலை? 100 கோடி கட்டினால் பிரச்ச்னை தீர்ந்துவிடுமா? நிறுவனத்தின் பொறுப்பு என்ன? அரசாங்க அதிகாரிகளுக்கு என்ன தண்டனை ? மீண்டும் நடந்தால் எவ்வளவு கோடி கட்டணும் ? இல்லை நிறுவனத்தை மூடுவது மட்டும் போதுமா? இல்லை அந்த நிலத்தை தரைமட்டம் ஆக்க வேண்டுமா? அதை அரசு செய்யுமா? இல்லை அந்த்த நிறுவனமே செய்ய வேண்டுமா? செலவு யார் செய்வது யார் பணத்தில்?? என பல கேள்விகளுக்கு விடையே இல்லாத தீர்ப்பு

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  எல்ல ஜட்ஜுகளுக்கும் நல்ல மூளை உள்ளது என்றும் சொல்லிவிட முடியாது.

 • HSR - Chennai,இந்தியா

  எப்படி அறிக்கை குடுத்தா நிரந்தரமாக மூட முடியும்னு நீதி அரசர்கள் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்த விழைகிறேன்..

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எந்த தொழிற்சாலையும் நிறுவுவதில்லை , இருக்கும் தொழிற்சாலைகளுக்கும் உரிமம் ரத்து , நிரந்தரமாக மூடல் என்று அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே பாதிரிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் இலக்கை எட்ட முடியவில்லை என்று. இது மட்டும் நடந்தால் பிறகு எப்படி ஒரு வளர்ச்சி இருக்கும் தெரியுமா ? வாடிகனுக்கு அடிமை ஆவதா ? அரபிக்கு அடிமை ஆவதா என்று மக்கள் குழம்பி போவார்கள் . நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

 • thiru - Chennai,இந்தியா

  இந்த லட்சணத்துல ஸ்டெர்லைட் மூடல் அரசாணை ஐநா வரைக்கும் செல்லும்னு ஒன்னு சொல்லிட்டு திருஞ்சுது..

 • Raja - Doha-Qatar,இந்தியா

  மூளை இல்லாதவங்க தான் இவனுங்க ஜட்ஜ் அய்யா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement