Advertisement

மோடி அழைப்பு: குமாரசாமி ஜகா

பெங்களூரு: உடல் பயிற்சி குறித்து பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்க, கர்நாடக முதல்வர் குமாரசாமி மறுத்துவிட்டார்.


சவால்டுவிட்டரில் தனது உடற்பயிற்சி குறித்த வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், இவ்வாறு உடற்பயற்சி செய்து வெளியிட வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார்.


மாநில வளர்ச்சிஇது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், எனது உடல் நலத்தை விட கர்நாடக மாநில நலனே முக்கியம். தினமும் யோகா செய்தாலும், மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறேன். மாநில வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவு தேவை. எனது உடல்நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (48)

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சூர்யாய நமஹ என்பதை ஞாயிறு போற்றுதும் என தமிழ் படுத்தி கூறுவேன் என கருணாநிதியும் நீண்ட நாள் அரோகயமாக வாழ நான் யோகா செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதே காரணம் என முன்பு முதல்வராய் இருந்த பொது தெரிவித்துள்ளார்.நம்மில் பலர் 8 மணி நேரம் உழைப்பதற்கே களைத்து போய் விடுகிறோம் அதிகாலை எழுத்து சில மணித்துளிகள் யோகா செய்வதால் பிரதமரால் தேசத்திற்காக 18 மணிநேரம் களைப்பின்றி உழைக்க முடிகிறது . குமாரசாமி உள்பட அனைவரும் வருமுன் காப்பதே நல்லது என்பதை பிரதமரின் செய்தியால் உணர்ந்து தன ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் .

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஐயோ இந்த சாமி பஸ்கி எடுப்பானா என்று நினைத்தகால் ஒரே சிரிப்பாணியா வருது.நாட்டு நலனாமே,அது என்ன புதுசா ?

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஒரு நாட்டின் பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு மாநில முதல்வருக்கு சவால் விட்டால் பரவாயில்லை. ஆனால் இவர் "என்னுடன் கிட்டிப்புள் விளையாட முடியுமா? கோலி விளையாட முடியுமா? பச்சைக்குதிரை தாண்டி விளையாட முடியுமா? பல்லாங்குழி விளையாட முடியுமா?" என்று சின்ன பிள்ளை மாதிரி சவால் விடுகிறார். ("குமரசாமி, நாடு எக்கேடு கெட்டால் நமெக்கென்னய்யா? வா ஜாலியாக விளையாடலாம்").

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  ஒரு உண்மை தெரிஞ்சாகணும்....இந்த ரெண்டு பேர்ல..யாரு ரொம்ப பிஸி....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பிரதமரின் செய்கை படுகேவலமாக இருக்கிறது. நிஜம் இதுதான். ஆனால் பல படித்தவர்களின் மனம் கூட ஏற்க மறுக்கிறது. ஏனெனில் இன்றைய தேச நிலவரம் அவ்வளவு கேவலமாக இருக்கிறது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும் சாமி...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நல்லதை யார் சொன்னாலும் கேட்கிறது நல்லது...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ள இவர்களுக்கு தெரியாது. குறிக்கோள் எல்லாம் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது.

 • matheen - chennai,இந்தியா

  சேரன்..முதல் குண்டு உனக்கு தான்.. முடிஞ்சா தப்பிச்சிக்கோ

 • Raja - chennai,இந்தியா

  குமாரசாமி மைண்ட் வாய்ஸ் : உனக்கு என்ன ராசா குடும்பமா குட்டியா, எனக்கு மனைவி , துணைவி (குட்டி ராதிகா ) வச்சிக்கிட்டு நான் படுற பாடே போதும் டா சாமி

 • Shanmuga Sundaram - Bangalore,இந்தியா

  good message back to modi

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  கொமாரோட நலம் காக்க அழகிய மனைவி ராதிகா இருக்காங்க .

 • பின்லாடன்,கொட்டாம்பட்டி -

  சவாலை ஏத்துகிட்டா....கான்கிராஸ் தலைவன், கான்கிராஸ் mla க்கள் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா...பாவம் அவரே 37 பேரவச்சி முதல்வர் ஆயிருக்காரு...பின்னாடி ஆட்சி கவிழ்றதெல்லாம் கண்ணு முன்னாடி தெரியுமுல்ல.....ஹிஹி...

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  மத்திய விளையாட்டு துறை அமைச்சரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜவர்தான் ரத்தோர், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் நம் எண்ணங்களும் செயலும் ஃபிட்டாக இருக்குமென்பதற்காக அதை விராட் கோஹ்லி, சாய்னா நோவால், ஹிருத்திக் ரோஷன் போன்றவர்களுக்கு அனுப்பி அவர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. அதன்படி உடற்பயிற்சி செய்த வீடியோவை மோடி வெளியிடுகிறார் என்றால் அது மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதைப்பார்த்து ஒரு சிலர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் நல்லதுதானே என்பதற்காக வெளியிடுகிறார்கள். அந்தவகையில் மோடி குமாரசாமியிடம் கேட்டிருந்தார். அது இந்த தற்குறிக்கு புரியவில்லை. என்ன செய்வது. நல்லவேளை ராஜவர்தான் ரத்தோர் குமாரசாமியை பாக்சிங் போடலாம் வாங்கனு கூப்பிடாம போனாரு.

 • Kalyani S - Ranipet,இந்தியா

  நல்ல வேளை யோகா செய்கிற வீடியோவை வெளியிட்டார் .................

 • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

  நெத்தியடி.. மாநிலத்தின் மேலும் மாநில மக்கள் மேலும் அக்கறை கொண்ட முதலமைச்சரின் பதிலடி சரவெடி நெத்தியடி...பிரதமர் ஜனாதிபதி கவர்னர்கள் முதலமைச்சர்கள் எம் பிக்கள் எம் எல் ஏ கள் தங்கள் வேலைகளை மக்களுக்காக பார்க்கவே நேரம் போதவில்லை இதில் யோகாவாம் உடற்பயிற்சியாம் மூக்குடை தேவையா? மக்களுக்காக வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொருவரும் யோகாவுக்கு மேல் பெண்டு நிமிரும்... திணிக்க, உருவாக்க திட்டமிடுவோர்களுக்குத் தான் இது போன்ற விஷயங்களை அறிவித்து செய்ய சொல்ல தோன்றும்..ஆரோக்கியமான பொது வாழ்க்கை வாழ மக்கள் ஒவ்வொருவருக்கும் மிக நன்றாக தெரியும்...அதை எப்போது எங்கு எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்வார்கள்..ஸீன் போடாமல் மக்களுக்காக உழைக்க கற்றுக்கொண்டால் போதும்...சபாஷ் கர்நாடகா சி எம்...

 • aa -

  ulaga maga nadippuda samil

 • Logesh -

  கோலி கூறிய சவாலை எல்லாம் சாதிக்கும் திரு: மோடி அவர்கள்,,ஏன் தமிழ்நாட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தயங்குகிறார்...ஒருவேலை 5நிமிட வீடியோவாக பதிவு செய்ய சொன்னால் செய்வாரோ...?

 • karupanasamy - chennai,இந்தியா

  உடல் நலம் இருந்தால் மன நலம் இருக்கும், ஒவ்வொரு பிரஜையும் தேக சக்தியும் தேச பக்த்தியும் பேணிக்காததால் நாடு ஆரோக்கியமாய் இருக்கும்.

 • Arsath Ali - Malaysia,மலேஷியா

  மோடி அவர்களுக்கு பொழுது போகவில்லை .அதான் விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று கொள்ளுவதும், குமாரசாமிக்கு சவால் விடுவதுமாக இருக்கிறார்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  bangalore ஜெய்நகர் தேர்தலில் பலமுறை வென்ற பிஜேபி தோற்றுவிட்டது அதற்கு பழிவாங்க இப்படி ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடுகிறார் மோடி .

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  கும்ஸ் குனிச்சி அவரு காலை தொட்டாலே பெரிய சாதனை..

 • amuthan,Karaikudi - ,

  சோணை முத்தா...முதலைகிட்டே தலையை குடுத்துட்டு...சர்கஸே பண்ணிக்கிட்டு இருக்ககேன்...இவரு வேற விளையாடுராரே...

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  நான் தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கமுடையவன், ஆதலால், எனது உடற்தகுதி சவாலைக் காட்டிலும், கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சி குறித்த பிட்னஸ் குறித்து அதிகமாக அக்கறைப்படுகிறேன் என்று பிரதமர் மோடிக்குக் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார். நெத்தியடி குடும்பம் உள்ளவன் எங்கே பிட்டா இருக்கமுடியும் இல்லாதவன் எல்லாம் செய்யலாம் SCHOOL பீஸ் கட்டணம் பஸ் பாஸ் கட்டணும் என்று நிறைய கவலைகள் இதில் எந்த விலை எப்போ ஏறுமோ இதில் எங்கே FITTNESS

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  ​பொதுவாக​வே ஒரு நாட்டின் பிரதமர் இந்தளவிற்கு ஆ​ரோக்கியத்துடன் இருப்பதற்காக உடற்பயிற்சி ​செய்வது வரே​வேற்க்கதக்கது. மக்களும் தங்கள் உடல்நல​னை காத்து​கொள்வதவற்கு உடற்பயிற்சி ​செய்வது அவசியம் என்று டிவிட் ​செய்தது நல்லவிஷயம். அ​தே​வே​ளையில் நடுத்தரவகுப்பினர் மற்றும் அன்றாடம் தினக்கூலிக்கு ​வே​லை ​செல்பவர்கள்தான் நாட்டின் பிரதானமாக உள்ளனர். அவர்களு​டைய வாழ்வியல் என்பது மிகவும் கவ​லைகுறியதாக உள்ளது. ​பெட்​​ரோல் வி​லை உயர்வு அதனால் அ​த்தியாவசிய ​பொருட்கள் விலைவாசி உயர்வு, உயிர்காக்கும் மருத்துவத்திற்கான ​செலவு என்பது எல்​லை​யை மீறிஉள்ளது. ​பொருளாதார ஏற்றதாழ்வு மக்களி​டை​யே அதிகரித்துவிட்டது இதனால் ​கொ​லை ​​கொள்​ளை அதிகமாகிவிட்டது. இது​போன்ற பிரச்ச​னைகள் இருக்கும்​போது மக்களுக்கு உடற்பயிற்சி ​செய்ய​நேரம் ஏது. ஆக முதலில் மனக்கவ​லையின்றி வாழ​செய்துவிட்டு அதன்பின் உடற்பயிற்சி ​செய்ய​​சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என்னு​​டைய ​வேண்டு​கோள்.

 • Sitaraman Munisamy - SALEM,இந்தியா

  பிரதமந்திரி தன் நாட்டின் வளர்ச்சியை பிற நாட்டிற்கு சவால் விட்டு உயர்த்தி காட்டுவதை விட்டு தேவை இல்லாதவற்றை பேசிக்கொண்டு இருக்கிறார். ஏன் ஒரு மல்யுத்த வீரரிடம் தன் பலத்தை பற்றி பேச வேண்டியதுதானே

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மோதி ஜீ க்குப் பொழுது போகலை ..... அந்த அளவுக்குப் பிசி போலிருக்கு .....

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  "என்து உடல் நலத்தை விட கர்நாடக மாநில நலனே முக்கியம்"- இதெல்லாம் வெறும்பேச்சு வேற்றுப் பேச்சு இப்படித்தான் எல்லா ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் உளறிக் கொண்டிருக்கின்றார்கள் நீங்கள் இந்திய தேசத்தை மதிப்பவரென்றால் முதலில் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அக்கறைக் காட்டுங்கள். மத்திய அரசையே நீங்கள் கொஞ்சமும் மதிக்கவில்லையே

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Edhu Enna Pudhusa Erukkudhu. Mr.Kumarasamy is worrying too much about his state people than his health.The people of his state know well about his Veera Soora Vasanaingal and they don't believe and trust such statements of Mr.Kumaraswamy any more.

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  நாட்டோட வளர்சசி, மாநிலத்தோட வளர்சசி பற்றி சவால் விட்டா பரவாயில்லை ... போலபத்தவனுங்க ... வேல இல்லன்னா வெளிநாட்டு போக வேண்டியது தானே

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஐயா, அவரவர் உடல் ஃபிட்னஸ் மீது அக்கறை இல்லாமல், நன்கு சாப்பிட்டு, திடுதிப்புன்னு, நோயில் விழுந்து, பின்பு, லட்சக்கணக்கான ரூபாவை, கடனை உடனை வாங்கி, உயிரை காப்பாற்ற போராடும் மக்கள், இன்றைய காலத்தில் கூட, நிறைய பேர்கள் இருக்காங்க, மிடில் கிளாஸ் குடும்பங்களில் எனலாம்தானே?.

 • Being Justice - chennai ,இந்தியா

  கரடியே.... முதலில் பிதற்றுகிற உங்களின் பல எம்எல்ஏக்களின் வாயை மூடச்செய்யவும். ஏனெனில் அவர்களினால் பலரின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பிறகு சவால் எல்லாம் விடலாம். ராஜ நீதியை கடைபிடியுங்கள். இது முன்னாள் பிரதமர் திரு வாஜிபாய் உங்களுக்கு அறிவுருத்தியது.

 • raja - Kanchipuram,இந்தியா

  தீராத விளையாட்டு பிள்ளை. அருமை நல்ல பொழுது போக்கு. வாழ்க பாரதம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  //தினமும் யோகா செய்தாலும், மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறேன்// அது என்ன புதுவிதமான யோகா , வெளியிடமுடியாத யோகா. குட்டி ராதிகாவிற்கு தெரியுமா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement