Advertisement

'வாராக்கடனை குறைத்து வங்கிகளை வலிமையாக்குவேன்'; ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் உறுதி

புதுடில்லி : ''வாராக்கடன் உட்பட, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, வங்கித் துறையை வலிமையாக்குவேன்,'' என, பார்லி., நிலைக்குழுவிடம், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் நேற்று, முன்னாள் மத்திய அமைச்சர், வீரப்ப மொய்லி தலைமையில், நிதி துறைக்கான பார்லி., நிலைக் குழு கூட்டம் நடந்தது.


கூடுதல் அதிகாரம் :
இக்குழு முன், உர்ஜித் படேல், இரண்டாவது முறையாக ஆஜரானார். இது குறித்து, நிலைக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: உர்ஜித் படேலிடம், குழு உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, அதிகரித்து வரும் வங்கிகளின் வாராக் கடன் சுமையும், அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் கேட்கப்பட்டது.


அதற்கு, 'வாராக் கடன் பிரச்னையில் இருந்து வங்கித் துறை மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது; மத்திய அரசு அறிமுகப்படுத்திய திவால் சட்டம், நல்ல பலனை தந்து வருகிறது' என, உர்ஜித் படேல் தெரிவித்தார்.


திவால் சட்டம் காரணமாக, வாராக் கடன் வசூல் அதிகரித்துள்ளது; இந்த சட்டத்தில், பல நிறுவனங்களின் வாராக் கடன்கள்

மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளன. எனவே, வாராக் கடன் வளர்ச்சி விகிதம் கட்டுக்குள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.


பொதுத் துறை வங்கிகளை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஒருசில உறுப்பினர்கள், 'பெருகி வரும் வங்கி மோசடிகளை தடுக்க, போதுமான நடவடிக்கை எடுக்காதது ஏன்...' என, கேள்வி எழுப்பினர்.


மேலும், 'நிரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோர் மூலம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற, 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடிக்கு, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு குறைபாடுகள் தான் காரணமா...' எனவும் வினவினர்.


பணத் தட்டுப்பாடு :
சமீபத்தில், நாடு முழுதும், ஏ.டி.எம்., மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் என்ன என, சில உறுப்பினர்கள் கேட்டனர்.


அதற்கு அவர் பதிலளித்ததாவது: ஒரு சில மாநிலங்களில், ஏ.டி.எம்.,மில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது, ரிசர்வ் வங்கி விரைந்து எடுத்த நடவடிக்கையால், சில தினங்களில், இயல்பு நிலை திரும்பியது. ரிசர்வ் வங்கியின், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், அறிமுகமாகி உள்ள கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றால், வங்கிகள் வலிமை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.


வங்கி ஊழியர்களின் துணையுடன் நிரவ் மோடி செய்த மோசடி குறித்து, புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன; இனி, இதுபோன்ற மோசடிகள் நடைபெறாத வகையில், விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கி உள்ளது.ரத்து :
இந்த மோசடிக்கு அச்சாரமாக இருந்த, 'லெட்டர் ஆப் கிரெடிட்' எனப்படும், கடன் பொறுப்பேற்பு ஆவண நடைமுறையை, ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. திரிணமுல், காங்., தலைவரும், நிலைக்குழு உறுப்பினருமான, தினேஷ் திரிவேதி, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், திரும்ப வந்த, 'செல்லாத நோட்டுகள்' குறித்து கேட்ட கேள்விக்கு, அவற்றை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு உர்ஜித் படேல் கூறினார்.

இரு வங்கிகள் : கடந்த, 2017- - 18ம் நிதியாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், இந்தியன் வங்கி, விஜயா வங்கி ஆகியவை தான் லாபம் ஈட்டியுள்ளன. இதர வங்கிகளுக்கு, 87,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கித் துறையின் மொத்த வாராக் கடன், 2017 டிசம்பர் நிலவரப்படி, 8.31 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • Sulikki - Pudukkottai,இந்தியா

  எப்படி வரா கடனை குறைப்பார்? வர வேண்டிய கடனை வசூலித்தா அல்லது இது அதுன்னு மக்களிடம் தண்ட கட்டணம் வசூலித்தா? இன்னொரு யோசனை இருக்கு. வரா கடனே இல்லைன்னு அறிவிச்சுட்டா வராகடன் போயிடுமில்ல. இதை யாராவது இவரிடம் சொல்லுங்களேன்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  அவர் கேட்பது அதிக அதிகாரம், நிர்வாகத்தை மேம்படுத்த வெளியில் இருந்து ஆட்களை பிடித்து இழுத்து வர நினைக்கும் அரசு, திறமையானவர்களை ஏன் பயன்படுத்திக்கொள்ள முயல்வதில்லை, என்று புரியவில்லை

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  கடன் களுக்கு வட்டியேதாராது ஏமாற்றும் நிலை ஒழியனும் ,கடனைத்தள்ளுபடி செய்றானுகளே எவன் ஆட்ச்சிக்கு வந்தாலும் இப்படியேபோனால் வங்கிகள் திவால் தான் ஆவும் , மழை கொட்டினாலும் வெள்ளாமை இல்லீன்னு ஒப்பாரி வைக்குறானுக எல்லோரும் என்பதுதான் உண்மை கடன்வாங்குவானுகள் கணிசமான தங்கம் லே இன்வெஸ்ட் செய்றானுக என்பதுதான் உண்மை

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  "வாராக்கடன்" ன்னு சொல்லாதீங்க ஆபீசர் .... அப்படி சொல்லிட்டால் வசூலிக்கவே முடியாதுன்னு நீங்களே ஒத்துக்கிட்ட மாதிரி இருக்கு.....

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  முன்பு தங்கத்தை சேப்டி லாக்கரில் வைத்து பாங்குக்கு லாக்கர் வாடகை தந்து கொண்டிருந்த சேட்டுக்கள்... பாங்கில் டெபொசிட்ட் செய்து வட்டி வாங்கும் அதீத யோசனையை கொடுத்தது யார்? பாங்குகள் பாஜக ஆட்சியில் பணக்காரர்களுக்கு உதவும் அமைப்பானது... நிதி கொள்கைகள் நாட்டு முன்னேற்றத்திற்கு பயன்படுவதைவிட நீரவ் மோடி போன்ற கொள்ளைக்கார்களுக்கு உதவிய புண்ணியம் இவர்களுக்கு...இனியாவது நுனிப்புல் மேயாது ரங்கராஜன், YV ரெட்டி போன்று பொறுப்பான கவர்னராக இருந்து நாட்டு வளம் கொள்ளை போகாமல் பார்த்துக்கொள்ளவும்...

 • a.thirumalai -

  மழை எப்ப சார் வரும். ஹி ஹி ஹி

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இவர் இட ஒதுக்கீட்டில் வந்தவரா இருக்குமோ? அல்லது திராவிடரோ? வங்கிகள் வீக்கா இருக்கா? வலுப் படுத்தப் போறாராம்.

 • Jaya Ram - madurai,இந்தியா

  மக்களே உங்கள் டெபாசிட்கள் பத்திரம் ஏனென்றால் இவர்கள் அதில தான் கைவைப்பார்கள்

 • Ramesh - chennai,இந்தியா

  வந்துட்டேன்

 • VenkataramanRamesh -

  ஊர்ஜிதமாத்தான் சொல்றாரா, இல்ல வெறும் குத்து மதிப்பா சொல்றாரா?! சினிமா விரும்பி

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  \\\\ வங்கி ஊழியர்களின் துணையுடன் நிரவ் மோடி செய்த மோசடி குறித்து, புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன இனி, இதுபோன்ற மோசடிகள் நடைபெறாத வகையில், விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கி உள்ளது. //// பொய்களில் பெரும் பொய் இதுதான் .....

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மக்கள் வரிப்பணத்தைக் கடன் என்கிற பெயரில் செல்வாக்குள்ளவர்களுக்கு வரி வழங்கி அதை அடைக்க மீண்டும் வரிப்பணத்தை வைத்தே முட்டுக்கொண்டுக்கும் பெரும் பாவம் இந்திரா ஆட்சியில் இருந்து துவங்கியது ...... இதை ஒரு ரிசர்வ் வங்கி கவர்னர் சூளுரைத்து மாற்றிவிட முடியாது .... பண மதிப்பிழப்பையே அறிவிக்க வேண்டியவர் ரிசர்வ் வங்கி கவர்னரே .... ஆனால் காமெரா முன்னால் தோன்றுவதில் அதிக ஆர்வம் கொண்ட நமது பிரதமர் ஹீரோ போலத் தோன்றி அறிவிக்கிறார் .... விஷயம் தெரியாத மக்கள் பல கோடி .... விஷயம் தெரிந்து அதிருப்தியும் அடைந்துள்ள மக்களில் ஏமாளிகள் எத்தனை சதவிகிதமோ அவர்கள் நம்புவார்கள் ....

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கி மோசடியிலும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்று பதில் கூற கடமைப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டி கடுமையாகச் சாடியுள்ளார்.‘வங்கி மோசடியில் மக்கள் இழந்த பணத்துக்கு பதில் சொல்லுங்கள்’: மத்திய அரசை விளாசிய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரெட்டி அவர்கள். இதில் இப்போ தான் விழித்து கொண்டு அறிக்கை விடுகிறார் அம்பானியின் சொந்தக்காரர்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  நவம்பர் எட்டாம் தேதி 2016 ம் வருஷம் அறிவிச்ச செல்லாத நோட்டுக்களை எண்ணி முடிச்சுட்டீங்களா இல்லை இன்னும் பாக்கி இருக்கா?

 • SUNA PAANA - Chennai,இந்தியா

  It is high time to reveal the data of defaulters bank wise and amount wise to be published in the public domine. Also the list should contain, name of the defaulter, the date of loan sanctioned, Amount sanctioned and name of the person who has stood as gurantor for the loan and amount repaid and amount defaulted and securities available at the bank againt the sanctioned loan. If any politician is involved, he should also be punished according to the law without any political interference.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  நாடு முழுதும், ஏ.டி.எம்., மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்று கேட்டால் தட்டுப்பாடு சரி செய்யப்பட்டது என்கிறார். அப்படி என்றால் சொல்ல முடியாத காரணமோ?

 • sam - Doha,கத்தார்

  இவர் என்ன கிழித்தார் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இன்றைய வங்கிகளின் நிலைமையும், மோசமான அணுகுமுறைகளும், இவர் கவர்னர் ஆகா பதவி ஏற்றதில் இருந்து தான் நிறைய நடை பெறுகிறது. சாதாரண மக்களுக்கு எந்த லட்சத்தில் வங்கி கடன் கிடைக்கிறது, திருட்டு பணக்கார கம்பெனி களுக்கு எந்தவித சுருட்டி யும் இல்லாமல், பெரிய கடனை பெற்று நாட்டை விட்டு ஜாலியா செல்வது தான் இன்றைய வங்கிகளின் லட்சணம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏழைகளையும் ஒரு வாடிக்கையாளராக கருதி ஆசனம் கொடுத்து மிகவும் எளிதாக சிறிய கடனை கூட பெரிய மனதுடன் கொடுக்கிறீர்களோ அன்றுதான் வங்கிகள் வலிமை அடைந்து விட்டதாக கருதப்படும்...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஊழல் செய்த வங்கி அதிகாரிகளின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் அந்தப்பட்டியலை தயார்செய்து அதனை பத்திரிகைகளுக்கு வெளியிட தயிரியம் உண்டா உங்களுக்கு

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சாப்டவேர் துறைக்குக்கூட துவக்கத்தில் வங்கிகள் கடன்கொடுக்கத்தயாராக இல்லை ஏனெனில் அதில் ஸ்டாக்கை சரிபார்ப்பதும் அடக்கவிலை நிர்ணயிப்பதும் கடினம் .அதுபோல சில புதுதுறைகளில் முக்கியமாக சேவை சார்ந்த துறைகளில் ரிஸ்க் எடுத்துதான் கடன் கொடுக்கவேண்டியுள்ளது .உலகப்பொருளாதார சூழலைப்பொறுத்து அத்துறை வளரலாம் அல்லது தேய்ந்து நிரந்தர வாராக்கடனாகலாம் .அப்படிப்பட்ட கடன்களை வளர்ச்சிக்கு போடப்பட்ட ரிஸ்க் முதலீடாகவும் வங்கிகள் வணிக பங்குதாரர்களாகவும் கருதப்பட்டால் வாராக்கடன் என்பது வளர்ச்சிக்கான வித்தாகவே தெரியும் . ஆனால் UPA காலத்தில் கறுப்பிலேயே புரளும் ரியல் எஸ்டேட் போன்ற்வற்றுக்கு அதிகமாகக்கடன் கொடுத்தார்கள் .கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளாலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் பினாமி ஒழிப்பு சட்டங்களாலும் துறையே வீழ்ச்சியில் உள்ளது வீடுகளை வாங்குவாரில்லை .பெருமபாலான வாராக்கடன் ரியல் எஸ்டேட் மற்றும் டெலிகாம் துறைகளில்தான்.அவற்றுக்கு வகைதொகையின்றி கடன் கொடுத்த பசியும் மன்மோகனும்தான் இத் தவறுக்குப் பொறுப்பேற்கவேண்டும்

 • Homer Simpson - Springfeild,யூ.எஸ்.ஏ

  செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணி முடிக்கலையாம்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஐயா, நம் இந்தியா, சுதந்திரம் வாங்கிய பின்பு, எத்தனை லட்சம் கோடிகள் ரூபாக்கள், வங்கிகளுக்கு, வாரா கடனுங்க?. இதை தடுக்க, நெறி முறைபடுத்த, சீர் செய்ய, வரைமுறை படுத்த, இன்றைய நவீன விஞ்ஞான உலகில், வழியே இல்லீங்களா?. இதை எழுதும் போது, நம்மூர், வெள்ளை ஜொள்ளை ஞாபகத்துக்கு வந்துட்டாரேப்பா?.

 • Anandan - chennai,இந்தியா

  தங்களுக்கு தலையாட்டும் பொம்மையாக ரிசர்வ் வாங்கி கவர்னர் வேண்டும் என்று வந்தவர் உர்ஜித் இனிமேதான் நடவடிக்கை எடுக்கப்போகிறாராம். இவ்வளவு நாள் தூங்கினார் போல.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இனியாவது வரக்கடன்களை கொடுப்பதை தவிர்க்கலாம்... ஆனால் நிதி அமைச்சகம் அது போல ஒரு கொள்கையை வைத்து இருப்பதாக தெரியவில்லை...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  கடைசியில் வங்கி எங்க அக்கவுண்ட்டை வீக் ஆக்காம இருந்தா சரி , இப்படிக்கு டவுட்டு தனபாலின் சிஷ்யை

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  சிரிக்காமே நம்புங்கப்பா...

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  Will make banks strong by looting poor people and giving large loans (non repayable) to bug corporates

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement