Advertisement

'நீட்' தற்கொலையில் அரசியல்: நீதிபதி வேதனை

சென்னை : 'மாணவர்கள் தற்கொலை சம்பவங்களில், கட்சிகள் அரசியல் செய்வது, துரதிருஷ்டவசமானது' என, சென்னை உயர் நீதிமன்றம், வேதனை தெரிவித்துள்ளது.


மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர வேண்டும் எனில், 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வால், மனம் உடைந்த மாணவி அனிதா, கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.அப்போது, மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் விரக்தி அடைவதையும், அதனால், ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கவும், அரசுக்கு உத்தரவிட்டார்.

அமல்படுத்தப்படவில்லை :மாணவர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும் என,
தெரிவித்திருந்தார். தற்போது நடந்து முடிந்த, நீட் தேர்வில் தோல்வி அடைந்த, இரண்டு மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து, நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் முறையிட்டார்.


'மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, முறையாக அமல்படுத்தப்படவில்லை. அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர் கோரினார்.

குற்றம் கூறக்கூடாது :உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனுவும் தாக்கல் செய்தார். மனு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


''நீட் தேர்வை, மாணவர்கள் எளிதாக அணுகும் வகையில், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எதிர்பாராத வகையில், தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு, அரசை குற்றம் கூறக்கூடாது,'' என்றார்.


உடனே, நீதிபதி கிருபாகரன், ''மாணவர்களின் தற்கொலை சம்பவங்களில், கட்சிகள், அரசியல் செய்வது துரதிருஷ்டவசமானது. முன்பே மாணவர்களுக்கு ஆலோசனை வழங்காமல், இறந்த பின், கண்ணீர் வடிப்பது தேவையற்றது.


''தற்கொலை சம்பவங்களுக்கு, அரசை மட்டுமே குற்றம் கூற முடியாது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு, சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உள்ளது,'' என்றார்.


மாணவர்களின் தற்கொலையை தடுக்க, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளிவைத்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழ் மாணவர்கள் NEET - விட பெரிய நுழைவுத் தேர்வை கூட திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். ஆனால் போலி அரசியல் வாதிகளும் சீக்கோ (சீமான் + வைகோ) போன்றோர்களும் ஓட்டுக்காகவும், கல்வி வியாபாரிகளிடம் கமிஷன் வாங்கவும் தமிழக மாணவர்களின் திறமையை தேசிய அளவில் சிறுமைபடுத்துகிறார்கள். அப்படிப் பட்டவர்கள் தமிழினதிற்கே ஆபத்தானவர்கள். அவர்களை ஒழிக்க நீதி மன்றம் ஒரு நீதி பிறப்பிக்க வேண்டும்...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  டாஸ்மாக்கினாட்டில் எந்த தலைவரும் அறிவாளி கிடையாது???? கூமுட்டைகளின் தலைவர் எப்படி அறிவாளியாக முடியும்???? இப்தார் விருந்தில் பாஞ்சி கஞ்சி குடித்தால் அந்த கூமுட்டைக்கு பச்சை மூர்க்கர்களின் வோட்டு கிடைக்குமாம்?????கிறித்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் பாவாடைகள் ஒட்டு கிடைக்குமாம்???எவண்டா இதை கண்டு பிடிச்சது???? அவ்வளவு கேவலமான மதமா இஸ்லாமும், கிறித்துவமும்??? அது போதாது என்று நீட் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ 7 லட்சம், அந்த பிணத்துக்கு மரியாதை செலுத்த போவது???? 2 வது நீட் தற்கொலை, 3 வது நீட் தற்கொலை என்னவாயிற்று???அவர்கள் வீட்டில் சென்று பார்க்கவில்லை, அவர்களுக்கு ரூ. 7 லட்சம் கொடுக்கவில்லை????ஏண்டா எதில் வோட்டு கிடைக்கும் என்றே பார்த்துக்கொண்டே இருப்பதா?? அப்படியே இப்தார் கஞ்சி, கிறிஸ்துமஸ் கேக் ஸ்டைலில் நடக்கின்றது? அப்போ நீட் எழுதும் குடும்பங்கள் எல்லாம் அவ்வளவு கேவலமானதா???இதை பார்த்தவுடன் வோட்டு போட்டுவிடுவார்களா???? நாராயணா மக்களே உங்களுக்கு ஒரு விண்ணப்பம் இப்போது டாஸ்மாக் நாட்டில் இருக்கும் எந்த ஒரு எம்.எல்.ஏ , எம்.பி யையும் இந்த ஆயுள் முழுவதும் தேர்ந்தேடுக்காதீர்கள். அவ்வளவு கேடு கெட்ட மனத்தினராக இருக்கின்றனர்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி உள்ளாட்சி அமைப்புகளை சீரழித்த புண்ணியவான்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பொதுத் தேர்வுகள், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு கொண்டு தோல்வியடைந்தவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ..... தனியாக கட் ஆப் மதிப்பெண், அரசின் சலுகைகள் கிடையாது, ஒரே ஆப்ஷன் மெரிட் இருந்தாலும், மேனேஜ்மேண்ட் கோட்டாதான் என்கிற நிலையிலும் "அவாள்" வீட்டுப்பிள்ளைகள் (பலர் ஏழ்மையுடன் போராடினாலும்) தற்கொலை செய்து கொள்வதில்லை ..... தொழிற்கல்வியோ, மருத்துவக் கல்வியோ இல்லாவிட்டாலும் சி.ஏ. அது .... இது என்று முற்சிக்கிறார்கள் ..... அவர்களில் உடல் உறுதியோ, மன உறுதியோ இல்லாதவர்கள் பலர் .... இருப்பினும் தற்கொலை என்றோ, தற்கொலை முயற்சி என்றோ நான் கேள்விப்பட்டதில்லை ..... எனக்கு மிகவும் வியப்பை அளிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று ..... நம்மிடம் இல்லாத ஒன்று (ஒன்றுதானா, பலவா?) அவர்களிடம் ஏதோ நிச்சயம் இருக்கிறது .....

 • narayanan iyer - chennai,இந்தியா

  இந்த மாணவர் சமுதாயத்தில் எல்லா காலங்களிலும் தோல்வியால் தற்கொலை செய்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது . என்ன இப்போ நிறைய ஊடகங்கள் வந்துவிட்டது அவர்களுக்கும் பரபரப்பான செய்திவேண்டும் . வேகமாக பரவுகிறது வேதனையாக இருக்கு .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அனிதா தற்கொலை செய்துகொண்ட பிறகு தமிழக அரசு அவருடைய சகோதரருக்கு அரசு வேலை வழங்கியது .... பிரதீபாவின் உறவினர்களும் இதே ரீதியில் ஒரு கோரிக்கையை வைத்ததை நீதிபதி கவனித்திருப்பார் ....

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  எப்படியோ வைகோ,.திருமா,கம்யூனிஸ்ட்,சீமான் மற்ற எண்ணற்ற குப்பை கட்சிகள் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன,ஆனால் இவர்கள் ஒருபோதும் அரசியலில் வெற்றி பெறப்போவதில்லை காசு வாங்கி கட்சி மற்றும் போராட்டம் பண்ணி மக்களை போராட்டத்தை தூண்டி கொன்று விடுவார்கள்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  நீட் தற்கொலைன்னு சொல்லாதீங்க. பொணத்தை கூட விட்டு வைக்காமல் பொணத்திலும் அரசியல் செய்து இந்த கேவலத்தை உருவாக்கி விட்ட கேடு கெட்டவன் கட்டுமரத்தானை ....

 • s t rajan - chennai,இந்தியா

  நல்ல அறிவுரை. அரசியலாக்கும் கட்சிகளை முழுமையாக தடை செய்ய வேண்டும்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில், நன்னெறி வகுப்புகள், நீதிபோதனை வகுப்புக்கள் எல்லாம் தொடர்ந்து நடைபெறவேண்டும், அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை வளர்க்க கூடாது, எதையும் ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும், அடுத்து இந்தியாவில் சாவை வைத்து அரசியல் செய்யாத கட்சிகளே கிடையாது

 • Anvardeen - chennai,இந்தியா

  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் போதும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் போதும் மாணவர்கள் செய்து கொண்ட தற்கொலைகள் ஏராளம் நமக்கு வரலாறு இருக்கிறது .. நீட் தேர்வினால் மட்டுமே மாணவர்கள் தற்கொலை செய்ய படுகிறார்கள் என்ன சுடாலின் தொல்லைமாவளன் சைக்கோ சீ .. மான் எல்லாம் சமூக நீதிக்காகவும் தமிழன் மத்திய அரசால் வஞ்சிக்க படுவதாக கூவி கூடி மாணவர்களை சாகடிப்பார்கள் .. தற்கொலை செய்து கொண்டால் அணைத்து அரசியல் கட்சிகளும் அந்த குடும்பத்துக்கு நிதி கொடுப்பார்கள் நம்ம ஜோசெப் விசை உட்பட .. உயிரோட இருக்கும்போல இவர்களிடம் போய் உங்கள் MLA MP கோட்டாவில் சீட் வாங்கி குடுங்க அய்யா சாமி நான் பரம ஏழை என்று கேட்டால் காசு இல்லாதவனுக்கு எதுக்குயா டாக்டர் படிக்கணும் போயி 50 லட்சம் எடுத்துட்டு வா சொல்லி அனுப்பிடுவானுக இவனுக எல்லாம் சமூக நீதி பத்தி பேசுவானுக எவன் எங்க இறந்தலும் அரசு நிதி கொடுக்கணும் இன்ஜினியரிங், டாக்டர் படிக்கறவனுக்கு முக்கியமான சப்ஜெக்ட் ஆங்கிலம் , கணிதம் அறிவியல் தான் .. இதுல எடுத்க்கு தமிழ் முதல் தாள் தமிழ் இரண்டாம் தாள் ஆங்கிலம் முதல் தாள் ஆங்கிலம் இரண்டாம் தாள் என்று 12 ஆம் வகுப்பு வரை நம்மளை படிக்க சொல்லி சாகடிக்கணும்? 8 வகுப்புக்கு மேல் language subject தேர்தெடுக்கும் விருப்ப பாடமாக வைக்கணும் .. மாணவர்கள் 9 ஆம் வகுப்பு மேல் தொழில் சார்த்த படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் தேவை இல்லாத சப்ஜெக்ட் ஐ குறைத்து அவர்களின் சுமையை குறைக்கும் இதுவே மன நிம்மைதியை தரும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தூத்துக்குடி சம்பவத்தை தூண்டியவனை கூட சும்மா விட்டுவிடலாம்... மாணவர்களின் வாழ்வை சுய லாபத்திற்க்காக பாழடிக்கும் இவ்ரகளை சும்மா விடவே கூடாது... இந்த அரசியல்வாதிகள் நன்றாக இந்த விவகாரத்தில் குளிர்காய்கிறார்கள்... குளிர்காய விடாதீர்கள்... அவர்களை கொளுத்தி பொசுக்கி விடுங்கள்...

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  இங்க எந்த எழவு விழுந்தாலும் அரசியல் தான் ஜட்ஜையா.... நல்லது நடந்தா பாராட்டமாட்டாங்க.... சீனா சுமார் 30 லட்சம் டன் அரிசியை ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்கிறது. அது இந்தியாவின் பாசுமதி அல்லாத ரகங்களுக்கு தடையும் விதித்து இருந்தது. இதனால் பாசுமதி அல்லாத இந்திய அரிசி வகைகள் அங்கே விற்க முடியாத, ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.... இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் பெரும் வித்தியாசம் பலகாலமாக இருந்து வருகிறது. இதை சரி செய்யும் முயற்சியில் தற்போது இந்திய-சீன ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி இந்திய அரிசி வகைகளை சீனா இறக்குமதி செய்ய ஏதுவான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்றுள்ளன... சுமார் 15-18 ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள இந்த சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு இனி கணிசமாக துவங்கும்.... உலகின் பெரும் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது... ஆக...மோடி ஒழிக... மோடி வெளிநாட்டுக்கு போய் உன்னோட நிலத்தில் விளைந்த அரிசியை கூட வித்துட்டு வர்றாரு... இதை நீ கேட்கலன்னு அவர் காத்துகிட்டு இல்ல... நீ சம்பளம் குடுக்காத பிரதம விற்பனை பிரதிநிதின்னு கூட வச்சுக்கலாம்.... எவ்ளோ நல்லது பண்ணாலும் பைத்தியம் மாதிரி...மோடி ஒயிக தான் இவனுங்க வாய்ல வரும்

 • Velu Karuppiah - Chennai,இந்தியா

  முதலில் இந்த நீதிபதியின் வாரிசுகள் எந்த பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும் இவரின் வாரிசுகள் மத்திய கல்வி திட்டத்தில் படித்து கொண்டு இருந்தால் இவரிடம் இப்படி பட்ட கருத்துருவைத்தான் எதிர்பாக்க முடியும் இவரின் வாரிசுகள் மாநில கல்வி திட்டத்தில் படித்திருந்தால் வேறு மாதிரியான கருத்துருவை கூறியிருப்பார். எல்லாம் சுய நலம் தான் இதில் அரசியல்வாதி வேறு நீதிபதி வேறு அல்ல

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  டாக்டர்கள் உயிர்காக்குறாங்களோ இல்லியோ நோயாளிகளை வச்சு காசு சேர்க்கிறானுகள் என்பது 100%உண்மை ஜஸ்ட் கோல்ட் வந்துட்டு தினறிந்து Dr கிட்ட போனால் தொலைஞ்சோம் அவ்ளோதான் ஸ்கேன்எடுக்கவேண்டும் இப்படி சொன்னதால் ஒரு பேஷன்டு வீட்டுலே பாட்டி செய்து தந்த மிளகு கஷாயம் லே பூரான் குணம் அடைஞ்சுட்டாரு என்பதும் உண்மை . வீட்டுலே நம்ம சமையல் அறையிலேயே ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கே , மிளகு ஜீரகம் ஓமம் சோம்பு வெந்தயம் ஏலக்காய் கிராம்பு கடுகு தனியா இவற்ராலேயே பல நோய்களை குணம் செய்யலாமே கடும் ஜலதோஷம்னா 4 கிராம்பு ஒரு ஏலக்காய் 10 மிளகு ஒரு ஸ்பூன்ஓமம் எடுத்து வெறும் இலுப்பச்சட்டிலே வறுத்து நாலு கிளாஸ் தண்ணீர் விட்டு தலைக்கவிடனும் ஒருகிலாஸ் போல சுண்டவச்சு ஒரு ஸ்பூன் தென் அல்லது ஒரு ஸ்பூன் பனசர்க்கரை சேர்த்து குடிச்சால் கோல்டுக்கு ஃப்ளு கூட குணம் ஆவுது எவ்ளோபெருக்கு தெரியும் இந்த எளிய மருத்துவம் COLDHART க்ரோசின் பிராசிட்டமால் அஸ்பிரின் ஸாரிடான் எல்டோப்பார் என்று நாடுவோர் எவ்ளோபெரு இருக்காங்க 90%நோய்கள் பூரான் குணம் நிஸ்ச்சயம்

 • sridhar - Chennai,இந்தியா

  நீட் தேர்வு முடிந்த பிறகு எங்காவது பிணம் விழாதா, அதை வைத்து ஒப்பாரி அரசியல் செய்ய மாட்டோமா என்று எதிர்க்கட்சிகள் பிணம்தின்னி கழுகுகள் போல் அலைகிறார்கள். இவர்கள் தான் தமிழகள் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு தடை என்று கூட புரியாத மக்களை என்ன சொல்ல.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  பொதுவாக, மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில், எதிர்காலத்தில் சாதித்து வாழ, ஆயிரம் நல்ல வழிகள் உண்டு, உலகிலே எனலாம். இந்த, இப்படிப்பட்ட, பாசிடீவ் விசயங்களை, ஆசிரியர்களும் பெற்றோர்களும், மாணவ மாணவியருக்கு, எடுத்து சொல்லனுங்க. மேலும், மத்திய மாநில அரசுகளை, எதிர்ப்பதாக நினைத்து கொண்டு, சில கட்சிகள், இப்படிப்பட்ட சோக நிகழ்வுகளை, அரசியலாக்கி, பெரிதுபடுத்துகிறார்கள் எனலாம், காரணம், ஆளும் அரசுகளின் மீது பொதுமக்களுக்கு கோபம் அதிகமானால், அதன் பலன்கள்(ஓட்டுக்கள்), எதிர் கட்சிகளுக்குத்தானே போய் சேரும்?. அதான், அவரவர் சார்ந்த தொலைக்காட்சிகள், இப்படிப்பட்ட நிகழ்வுகளை வைத்து, ஒரு பெரும் பிரச்சாரத்தையே, நடத்தி முடித்து விடுகின்றன எனலாம். அதாவதுங்க, அகில இந்திய மாநிலங்கள் அனைத்தும், நீட் தேர்வு முறையை ஏற்று இயங்கும் போது, தமிழகம் மட்டும், எப்படி ஒதுங்கி இயங்க முடியும்?. குறைந்தபட்சம், தெலுங்கானா அரசின் நிலயையாவது, தமிழகம் பின்பற்றி இருக்கனும், சீட் ஒதுக்கீடுகளில். சரிதானே?.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  பேசி பேசியே ஈழத்தில் என் இனத்தை கொன்றொழித்த பிணம்தின்னிகள் கொலைப்பசி அடங்காமல் இன்று தமிழகத்தையும் சுடுகாடாக்க மைக்கோடு அலைகின்றன..... அமைதியை விரும்பும் தமிழனுக்கும் இந்த கலவரக்கூட்டத்தால் தொல்லைதான்.....

 • Manian - Chennai,இந்தியா

  யுவர் ஆனர் : பயிற்சிக்கு கொடுக்கப்படட கணினி போன்ற உபகரணங்களை பெருச்சாளி கொண்டு போய்விட்டது. பதுக்கும் இடம் எது என்று புரியவில்லை. தேடல் ஆரம்பித்துவிட்டது. தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் கூட சேர்ந்து அந்த உபகாரங்ககளை தேடாதது அவர்கள் பெற்றோர்கள் குற்றமே. டாக்டராகி காசு சம்பாக்கவே விரும்பும் மாணாவர்களுக்கு உபகரணங்களின் அருமை தெரியாவில்லை என்பதை மேல் உலகில் களப்பணி செய்து கொள்ளவேண்டும் என்பது மத்திய அரசியின் விருப்பமாக இருக்கலாம். ஏனென்றால் மோடி ஓடிவந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, படிப்பே வேண்டாம் , வாழை மரத்துக்கு ஊசி போட்டு கற்றுக்கொண்டால், உங்கள் தமிழ் வழி "ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்" என்பதால், எல்லோரும் டாக்டர்கள் என்று நான் பிரகடனம் செய்து, கெஜட்டில் போடுவேன் என்று ஏன் சொல்லவில்லை? மேல் நாடு போனவர்கள் திரும்பி வராதவர்கள் என்பது யுவர் ஆனாருக்கு தெரியும். அவர்களை தேடி செல்ல ஐ நாவிற்கு விண்ணப்பித்துள்ளோம். இனி அது அவர்கள் கையில். ஆனால் நீங்கள் சொன்னது புரிகிறது. ஆக்கப் பொறுத்தவன் (நீட் தேர்வை) ஆறப்போ பொறுக்க கூடடாதுன்னு( தற்கொலை செயபவர்களை தடுக்க, ஒவ்வொரு மாணவருக்கும் பரிக்ஷை ஹாலை விட்டு வந்தது முதல் ஒரு போலீசு பாது காப்பு தரவேண்டும்)- புது மொழியை கற்றுக் கொண்டோம். அதோடு தொளபதி போன்றவர்களை போராட்டம் செய்து களைப்படைவதிலிருந்து விடுவிக்க, பரீக்ஷை முடியும் வரை, அவர்களை கிருஷ்ன பவனத்தில் சொகுசாக வைத்திருப்போம். நன்றி . ஜட்ஜி கிருபாகரன்: அயையோ, புள்ளியார் புடிக்கலாம்னு போனா, கொரங்காய்ல்லே ஆயிடிச்சு.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  என்ன செய்வது கடந்த ஆறு வருடங்களாக பிழைப்பு நடக்கவில்லை. வருமானமும் இல்லை .ஆட்சியில் இருந்தாலாவது எதோ மக்களை மிரட்டி சம்பாதிக்கலாம். வயிறார சாப்பிட்டு ரொம்பநாளாகி விட்டது. அதனால் தான் மாணவர்கள் இறந்தது தொழிலாளி இறந்தது இவைகளை வைத்து எந்த தலைவன் அதிகமாக காசு கொடுத்தால் வேகமாக கூவுவது போல் நடந்து கொள்ளுகிறோம். இது ஒரு தப்பா .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement