Advertisement

தலைநகர் டில்லியில் இன்று இப்தார் விருந்து; ஓரணியில் திரளும் எதிர்க்கட்சி தலைவர்கள்

கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு பின், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள, 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்காக, மீண்டும் இன்று டில்லியில் கூடவுள்ளது, எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.

கடந்த, 2015ல், டில்லியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின், இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் தேசிய அளவில், காங்கிரஸ் சார்பில், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.


இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் மீண்டும், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவராக, ராகுல் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் விருந்து என்பதால், இது கூடுதல் முக்கியத்துவம், பெற்றுள்ளது.


ஆலோசனை:
'ஜனாதிபதி மாளிகையில் இந்த ஆண்டு இப்தார் நோன்பு இல்லை' என்ற தகவல் உறுதியானதும், தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே இடத்தில் திரட்ட, தங்களுக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு என கருதி, காங்கிரஸ் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.


அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலை கருத்தில் வைத்து, பா.ஜ.,வுக்கு எதிராக, ஓரணியாக திரள்வதை காட்ட, தங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடக் கூடாது என்பதில், எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன.


ராகுலின் இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க, முக்கிய பிரமுகர்கள் உட்பட, பா.ஜ.,வை எதிர்க்கும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர், இதில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றதற்காக, கடும் விமர்சனங்களுக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு, அழைப்பு விடுப்பதில் குழப்பம் நிலவியது. ஆனாலும், சோனியாவின் ஆலோசனைப்படி, அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


நம்பிக்கை:
ஆந்திராவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும், பல ஆண்டுகளாக காங்கிரசுடன், எதிரும் புதிருமாக இருந்துவரும், தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.டில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ்., தலைவருமான, சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.


டில்லி தாஜ் பேலஸ் ஓட்டலில், இன்று மாலை நடக்கும் இந்த விருந்துக்கு, தலைவர்களிடம் நேரடியாக பேசி, வருகையை உறுதி செய்த பின்பே, பட்டியல் இறுதியாகிஉள்ளது. இதனால், முக்கிய தலைவர்கள் அனைவரும் வருவர் என்ற பெரும் நம்பிக்கையில், காங்கிரஸ் உள்ளது.


'இப்தார் நோன்பு திறப்பு என்ற காரணமாக இருந்தாலும், பெங்களூரில் நடந்த, குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு பின், மீண்டும், எதிர்க்கட்சிகள், தங்கள் பலத்தை காட்டும் நிகழ்ச்சியாகவே இது பார்க்கப்படும்' என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


- நமது டில்லி நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  ஏழையின் பசியை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ்வே இந்த மாதத்தை புனிதப்படுத்தியுள்ளான். இம்மாதத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வது மற்றும் இறைவனை போற்றி துதி செய்தால் பத்து மடங்கு நன்மையை வழங்குகின்றான். இது அல்லாமல் நோன்பு நோற்பவர்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்றும் ஊக்கப்படுத்தியுள்ளான். ஆகவேதான் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு நோற்பது கடமை ஆக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ள அரசுகளும் நாங்களும் ஏழைகளின் பசி போக்கவே உழைத்துவருகின்றோம் என்ற அடிப்படையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருந்தார்கள். இதனால் இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சிகளோ, அரசோ நடத்துவதால் பயன் அடைகின்றார்கள் என்ற அர்த்தமில்லை, நாங்களும் உங்களைப்போல் (ஏழைகளின்) பசியை உணர முன்வருகின்றோம் என்ற நல்லசிந்தனையுடன் இந்த இப்தார் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருந்தார்கள். இந்த அரசு புறக்கணித்ததால் எதிர்க்கட்சிகள் நாங்கள் ஏழைகளோடு இருக்கின்றோம் என்று நடத்த முன்வருகின்றார்கள். அரசோ, கட்சிகளோ நடத்தினாலோ, அல்லது நடத்தாவிட்டாலோ இஸ்லாமியர்கள் கவலை படப்போவதில்லை. அவர்கள் சிந்தனை எல்லாம் மறுமை வாழ்க்கைக்காக நன்மையை எப்படி சேமிக்கலாம் என்பதே.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  கர்நாடகாலே ஆட்ச்சி அமைய செய்தது சோனியா என்ற அதிமேதாவி

 • vbs manian - hyderabad,இந்தியா

  முஸ்லீம் பண்டிகைக்கு அரசியல் கட்சிகள் எதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பண்டிகையின் மஹத்வம் மறைந்து அரசியல் அக்கப்போர் மேலோங்கி நிற்கிறது. இந்த விருந்தில் ஏழை முஸ்லிம்களுக்கு இடம் கிடையாது. முஸ்லீம் சமுதாய செல்வந்தர்கள் அரசியல் வாதிகள் முஸ்லீம் அல்லாத செல்வந்தர்கள் பங்கு. இந்த பண்டிகையின் புனிதமே கெட்டு போகிறது.முஸ்லீம் சமுதாயம் யோசிக்க வேண்டும்.

 • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

  புனித ரமலான் அன்று வேண்டாம் தயவுசெய்து வேறு ஓருநாள்ல உங்கள் கொள்ளை கூட்டத்தை கூட்டுங்கள்

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  இதுவே தான் உங்களுக்குள் பானிபட் களம். அடித்துக் கொள்ளுங்கள்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ஒரு அரசியல் நிகழ்ச்சி, எல்லா கட்சிகளும் ஏதோ ஒரு அடிப்படையில் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டி இடுகின்றன, கூட்டணி அமைக்கின்றன, ஆனால் புனித ரமலான் நோன்பு நிகழ்ச்சியை இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த கூடாது,

 • samkey - tanjore,இந்தியா

  ஏன்டா ஊழல் பெருச்சாளிகளா? நீங்கள் ஒன்றுகூடி சதித்திட்டம் போடுவதற்கு இப்தார் நிகழ்ச்சி தான கிடைத்தது? இதனை ஏண்டா அரசியல் ஆக்குகிறீர்கள்? மோடியை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளுங்க இப்படி உங்கள் கீழ்த்தரமான சதிக்கு இஸ்லாமியர்களை இழுக்காதீர்கள் குல்லா போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்காதீர்கள் அந்த அல்லாஹ் உங்களை மன்னிக்க மாட்டார்.

 • sankar - Nellai,இந்தியா

  குப்பைகள் ஒன்று சேர்வதில் பலன் இல்லை - பிஜேபி என்கிற புயல் அவற்றை ஊதி தள்ளிவிடும்

 • Arasu - Ballary,இந்தியா

  இன்னொரு கர்நாடகாவைத் தவிர இவர்களால் ஒன்றுசேரமுடியாது. அடித்துக் கொண்டு போய்விடுவார்கள். ஒற்றுமையாக இருந்தால் கான் கிராஸ் க்கு அதிகபட்சம் 125 சீட்கள் கொடுப்பார்கள் (2019 ல் போட்டியிட)

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  இதில் பாஜகவை எதிர்க்கும் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... ஒரு மதத்தின் புனித நிகழ்ச்சியை அரசியல் கூட்டமாக நடத்துறாங்க. இத அந்த மதத்தை சேர்ந்தவங்க கூட எதிர்க்கலை. உண்மையாக தனது கடவுளையும் மதத்தையும் நேசிப்பவன் எவனும் இது போல் தனது மத சடங்கு அரசியலாக்கப்படுவதை விரும்பமாட்டான். சிறுபான்மையினர் வழிபாட்டை கட்சிகள் மதிப்பதாக இருந்தால் ஏழை இஸ்லாமியர்களுக்கோ அல்லது மசூதியிலோ இப்தார் விருந்து நடத்தியிருந்தால் அது உண்மையான மத நல்லிணக்கம். இதெல்லாம் வெறும் தாஜாவுக்காக போடப்படும் வேடம். இதையும் பெருமையாக இந்த மதத்தை சார்ந்தவர்கள் ஆதரிப்பதுதான் கொடுமை. நம்ம மதத்தை மட்டும் விமர்சிக்குறானுங்க வழிபாடுகளை மதிக்கலையே அரசியல்வாதிகள் என்றெல்லாம் வருந்தியதுண்டு. ஆனால் இப்படி போலியாக வழிபடுவதற்கு பதிலாக இவனுங்க இப்படி விமர்சிப்பதே நல்லதுனு தோணுது. இந்த விஷயத்தில் மோடி எவ்வளவோ பெட்டர். நல்லிணக்கத்தை கடைபிடிக்கிறேனு மற்ற மதத்தை போலியாக வழிபடவில்லை. எப்படியோ வாக்கு வங்கிக்காக மட்டும் சிறுபான்மையினர் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை இந்த கட்சிகள் மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள்.

 • Ravi . A - Chennai,இந்தியா

  இது தான் செகுலரிஸமா? எப்போவாவது இதுபோல் தீபாவளிக்கு விருந்து வைத்திருக்கிறார்களா? This is the height of Hypocrisy.......SHAME ON OUR VOTE BEGGARS. Vote Beggars என்பது ஓட்டுப்பொறுக்கி என்று தமிழில் சொல்வதை விட கொஞ்சம் நாகரீகமாக இருக்கிறது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எதிர்க்கட்சிகள் எப்பொழுது எதிர்க்கட்சியாக பரிமளிக்கிறதோ அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும்

 • Rajan - chennai,இந்தியா

  எல்லாம் ஒண்ணா நில்லுங்க. அப்போ தான் மோடிக்கு வசதியா இருக்கும். இப்போதும் சவாலாக சொல்கிறேன் மோடி தான் அடுத்த பிரதமர். ஒரு வேளை அப்படி தோற்றால் அது இந்திய மக்களே ஊழலை ஆதரிக்கிறார்கள்., இலவசங்களை பேணுகிறார்கள்., வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்ற முயல்கிறார்கள் எனலாம். நான் மட்டும் நன்றா இருந்தால் போதும்., நாட்டின் வளர்ச்சி முக்கியம் இல்லை என்போர் தான் இந்த போலி கூட்டணியை ஆதரிப்பார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால் சந்திரபாபு காரு, கே சி ஆர் கரு தவிர மற்றவர்கள் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன., சிலர் ஜாமினில் கூட வெளிய உலா வருகின்றனர்.

 • Darmavan - Chennai,இந்தியா

  எதோ ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு ஓசியில் விருந்த சாப்பிட கூடுகிறார்கள்.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  எதிர் கட்சிகளின் பலமே, அவர்கள் வைத்திருக்கும் ஊடங்கங்கள் தான்... கோவையில் இந்துமுன்னனி பொறுப்பாளர் சசிகுமார் மதபயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட போது ரைஸ்பெக்கர்ஸ் மற்றும் உண்டியல்ஸ், இது கள்ளக்காதல் பிரச்சனை என கூசாமல் பொய் சொன்னார்கள். எங்கோ அஸ்ஸாமில் ஒரு தாழ்த்தப்பட்டவன் அடிவாங்கினால் பொங்கும் ஓநாய்கூட்டம் சசிகுமாருக்கு ஆதங்கத்தை கூட வெளிப்படுத்தவில்லை. காரணம் சசிகுமார் தன்னை ஹிந்துவாக உணர்ந்ததால். மதம் பார்த்தே மனிதாபிமானம் கொள்ளும் மதசார்பற்ற புனிதர்கள் இவர்கள். தூத்துக்குடியில் குறிவைத்து தான் போலீஸ் கொன்றார்கள் என சொல்லும் அதே உண்டியல்ஸ், செத்தது எல்லாமே நக்சல் வகையறா (ஒரு சிலரை தவிர) இயக்கத்தினர் என்பதை சொல்லாமல் மறைத்திடுவர்... உண்டியல்ஸ்களே, சசிகுமார் விஷயத்தில் ஆதாரமில்லாமல் நீங்கள் களங்கம் கற்பித்த மாதிரி, உங்களையும் பிறர் பேச மாட்டார்கள் என நம்புகிறீர்களா? அப்படி பேச ஆரம்பித்தால் தான் நீங்கள் திருந்துவீர்களா?... உச்சபட்ச கடுப்பு என்னவென்றால், உண்டியல் அவர்களே ஒரு இணையபத்திரிக்கை உருவாக்கி அந்த லிங்க்கை ஆதாரமாக தருவர்..... உண்டியல்ஸ்களின் ஏகபோக சொத்தாக இருந்த ஊடகம் இப்போது பொதுசொத்து ஆகிவிட்டதை சோ கால்டு இண்டலெக்சுவல் உண்டியல்ஸ்கள் உணர மறுப்பது விந்தையிலும்விந்தை.....

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  What will be the menu in everu ifthaar feast?sking out of curiosity

 • sridhar - Chennai,இந்தியா

  ஹிந்து மதம் சார்பாக ஏதாவது அரசியல்வாதி பேசினால் அது காவி தீவிரவாதம். ஆனால் இஸ்லாமிய மத விழாவில் அரசியல் செய்தால் அது செகுலரிஸ்ம்.

 • sridhar - Chennai,இந்தியா

  ராகுல் தலைமையில் எதிர் கட்சிகள் ஒன்று சேர வேண்டும். இதுவே பிஜேபி ஆதரவாளர்கள் விருப்பம்.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  இந்த படத்த போடாதீங்க ...விக்ரம் ஞாபகம் வருது ..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இந்துக்கள் தேசநலன் கருதி ஒன்று சேரவில்லை என்றால் ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்க இவர்கள் கை கோர்ப்பார்கள்...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  நாட்டுல இருக்கிற எல்லா யோக்கியனுங்களும், ஒன்னா சேர்ந்து வரானுங்களேடா, பேசாம, நாம, ஆட்டத்தை கலைச்சிட்டு, எங்காவது ஓடி போய்டுவோமா?, சட்டுபுட்டுன்னு சொல்றா?, இன்னா பண்ணலாம்?.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  கூட்டணி ஆட்சி குழப்பத்தை தரும்..... மாறாக அனைத்து உதிரி கட்சிகளும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. வில் இணைந்து விடலாம்.....இரு கட்சி அரசியல் நிலையான அரசமைக்க உதவும்......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement