Advertisement

டீ கடை பெஞ்ச்

சென்னையில் தங்க அழகிரிக்கு ஆலோசனை!
''வேலை, 'அலாட்' செய்ய, லஞ்சம் வாங்காருன்னு தானே, வேற எடத்துக்கு மாத்தினாவ... மாறி எப்படி வே பழைய எடத்துக்கே வர முயற்சி செய்ய முடியும்...'' என, பெஞ்ச் விவாதம் துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.


''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.


''நெல்லை அரசு போக்குவரத்துல, பொது மேலாளர் ஒருத்தரு இருந்தாரு... கண்டக்டர், டிரைவர்க்கெல்லாம், 'டூட்டி' போடுறது அவர் வேலை... சாதகமான ரூட்டு, பாதகமான ரூட்டுன்னு பிரிச்சு விளையாண்டுட்டு இருந்தாரு... 'எலே, நீ கேக்குற ரூட்டு வேணுமின்னா, இவ்ளோ ரூவா தரணும்'ன்னு, கண்டக்டரு, டிரைவருங்ககிட்டே கறாரு காட்டிப் போட்டாரு...


''அவங்க மேலிடத்துக்கு புகார் குடுத்துட்டாவ... மேலிடமும், 'சம்பந்தப்பட்ட' நபரை, சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு மாத்திடிச்சு... ஆனா, மசியலியே மனுஷன்...


''மாவட்ட மினிஸ்டரைப் புடிச்சு, நெல்லையிலேயே தங்கலாம்னு முடிவு பண்ணிட்டிருக்காரு... இப்போதைக்கு சென்னையிலே, 'டேரா' போட்ருக்காராமுல்லா...'' என்றார் அண்ணாச்சி.


''இந்த கோமதிகுமார், என் வீட்டுக்கு வாரேன்னா... இன்னும் காணோம்...'' எனக் கூறி, அண்ணாச்சியைப் பார்த்த அந்தோணிசாமி, ''என்ன வே... உம்ம உச்சரிப்பு போலவே பேசுதேனா...'' எனக் கேட்டு, 'கடகட'வெனச் சிரித்தார்.


'சூப்பர்' என்பது போல், சைகை காட்டினார் அண்ணாச்சி.


''மணல் திருட்டு, படு ஜோரா நடந்துண்டிருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணா, கேள்வியை எதிர்பாராமல் தொடர்ந்தார்...


''கரூரில் மணல் அள்ள தடையான பிறகு, இப்போ, திருப்பூர் மாவட்டத்துல, அமராவதி ஆத்துல மணல் அள்றா... இங்கே, இடைக்காடுன்னு ஒரு பகுதி... மாபியாக்களின் சொர்க்க பூமி... தீவு மாதிரி இருக்கற இந்த பகுதிக்கு, புஞ்சை தலையூரிலிருந்து பாலம் கட்டப்பட்டிருக்கு... இந்த பாலத்தை ஒரு நா கண்காணிச்சா போரும்... நிறைய மேட்டர்கள் கிடைக்கும்...'' என்றார் குப்பண்ணா.


''வாரிசுக்கு பதவியை கொடுத்து, தந்தையை சாமியாராக்கிட்டாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.


''மாஜி தி.மு.க., மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதிக்கு, வரும் லோக்சபா தேர்தல்ல, மதுரை தொகுதியும், கட்சியில முக்கிய பொறுப்பும் கொடுக்கிறதுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம், அவரது சகோதரி செல்வி, பேச்சு நடத்தி முடிச்சிட்டாங்க...


''அழகிரி, இனி மதுரையில தங்கக் கூடாது, சென்னையில தங்கட்டும்னு, ஸ்டாலின் தரப்புல நிபந்தனை விதிச்சிருக்காங்க... அதேபோல, ஓரங்கட்டப்பட்டுள்ள அழகிரி ஆதரவாளர்களுக்கும், கட்சியில பொறுப்புகள் குடுத்து, அவர்களின் பணிகளை, கட்சிக்கு பயன்படுத்திக் கொள்ளவும், ஸ்டாலின் தரப்புல பச்சைக்கொடி காட்டி
யிருக்காங்க பா...'' என, விளக்கினார் அன்வர்பாய்.


''ஓஹோஹோ...'' எனக் கூறிச் சிரித்தபடி, அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • venkat Iyer - nagai,இந்தியா

  We have to see the party stand in next election.Lot of anty party secretaries in district,taluk level.Mr.Staline,how will approach this members

 • A R J U N - ,இந்தியா

  ..........கோமதிகுமார் படா ஆளு. அமைச்சரை கையில் வைத்துள்ளாராம்.. இப்படியே போனால் சில "இளிச்சவாயன்கள் 'மட்டுமே மாற்றுவார்கள் போல.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இன்னும் சகோதரர்கள் சண்டையை உண்மையின்னு நினச்சு ஒரு கூட்டம் இருக்கே அவனுகளே நினச்சு பரிதாப படறதா அழறதா

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ரெண்டு நாளைக்கு முன்னாடி கட்சி கொள்கைப்படி ஒரு கல்யாணத்துல அரசியல் பேசும்போது, இன்னிக்கு திமுகவில் இருக்கிறவன் எல்லாம் பதவிக்காகத்தான் இருக்கான்னு இந்த ஆங்கிலப்பேராசிரியர் அழகிரியார் சொன்னதோட அர்த்தம் மவனுக்கு பதவி வாங்கத்தான்னு இன்னிக்குத்தான் தெரியுது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement