Advertisement

41 நிமிட சந்திப்பு திருப்தி: டிரம்ப்

சிங்கப்பூர்: வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் சந்தித்து 41 நிமிடம் பேசினர்.. இச்சந்திப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்பேச்சுவார்த்தையில், பொருளாதார தடைகளை நீக்குதல், அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தை முக்கியமாக இருந்தது.

நன்றாக இருந்தது
இருவரும் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களை பார்த்து கையசைத்த டிரம்ப் கூறியதாவது: பேச்சுவார்த்தை மிகவும் நன்றாக இருந்தது. அனு ஆயுத பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இப்பிரச்னையில் வடகொரியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்றார்.

மகிழ்ச்சி
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறுகையில், அமெரிக்க டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.முன்னதாக,பேச்சு நடத்துவதற்காக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், சிங்கப்பூர் வந்தடைந்தார்.ஆசிய நாடான, சிங்கப்பூரில், இன்று, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு நடந்தது..
சிங்கப்பூரின், பிரபல சுற்றுலா தலமான, சென்ட்டோசா தீவில் உள்ள, கேபெல்லா ஓட்டலில் இம்மாநாடு நடந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டை, உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தன. வட கொரிய அதிபர் ஒருவர், அமெரிக்க அதிபரை சந்திப்பது, இதுவே முதன்முறை.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன், நேற்று காலை சிங்கப்பூர் வந்தார். இவரைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், நேற்று மாலை வந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  கிம் ஜாங் நாம ஊரு மோடி மாதிரி . உள்நாட்டில் அட்டூழியம் , வறுமை , குடிநீர் பிரச்சினை , வேலை இன்மை , நோய் என்றிருந்தாலும் மோடி 10 லெட்ச்சத்திற்கு சொக்கா போடுவார் ,அதிகம் பேர் ட்விட்டரில் தொடர்வார்கள் அது போல கிம் ஜாங் வாழ்வார் . அமெரிக்காவின் ஆப்பு கிம் ஜாங் சரண் . இது போல மோடியும் சரண் ஆகி இந்தியா செழிக்கும் காலம் சீக்கிரம் வரும் .

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  வட கொரியாவால் அமெரிக்காவுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும் என தாளாத ஆசையிலும் தளராத கற்பனையிலும் கருத்து ஏவுகணை விட்டுக்கொண்டிருந்த அடிமைகள் எங்கே போய்விட்டார்கள்.என்ன என்ன விதமான கனவு கண்டுகொண்டிருந்தார்கள்.இப்போது கனவும் கலைந்து தூக்கமும் கெட்டு துவண்டு போய் பாயை பிராண்டுகிறார்களோ தெரியவில்லை.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  வட கொரியா நுக்ஸ் டெஸ்ட் எல்லாம் முடிஞ்சி பார்முலா ரெடி ...இனிமே நூக்ஸ் தயாரிக்க ஒன்னும் ரெம்ப நேரம் ஆகாது......டெம்ப்ளட்ஸ் எல்லாம் ரெடியா தான் இருக்கும்...அதையெல்லாம் அழிக்க மாட்டானுவோ..... ஏற்கெனவே டெஸ்ட்க்கு தயாரிக்க நூக்ஸை மட்டும் டிஸ்மாண்டில் பண்ணுவானுங்கோ.

 • Sweety - Tuticorin,இந்தியா

  எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஜெர்மனி இணைந்தது மாதிரி கொரியாவும் இணைய வேண்டும். உலகத்தில் தீவிரவாதம் ஒழிந்து அமைதி செழிக்க வேண்டும்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  அதென்னா வட கொரியா மட்டும் நுக்ஸ் வெக்கக்கூடாதாம்....ஆனா டிரம்பு மட்டும் நெறையா சேத்து வைப்பாராம்...? ...மேலும் ...இந்த டிரம்ப்பு...கம்மி சப்பை மூக்கன் கிட்ட நெறையா இருக்கே..அதையெல்லாம் ஏன் பார்த்தும் பார்க்கலாமே போறாரு..?

 • S.Kumar - chennai,இந்தியா

  முதலில் இவர்கள் சந்திப்பிற்க்கான முதற்காரணம் அமெரிக்கா தற்போது இறக்கும் பொருளாதார சூழலில் அமெரிக்கா எந்த நாட்டுடனும் போரிட விரும்பவில்லை காரணம் அவர்களுடைய பொருளாதாரம் தற்பொழுது இறங்கிக்கொண்டிருக்கிறது வரியே இல்லாத அரபு நாடுகளில் கூட vat வரி அமுலாக்கப்பட்டுள்ளது இதற்கு காரணம் அமெரிக்கா நிறுவனங்கள் நிறைய தொழிற்சாலைகளை இங்கு தான் வைத்துள்ளது மற்றும் வட கொரியா தென் கொரியா இணைவது சாத்தியமில்லாதது காரணம் அமெரிக்கா ரஸ்யா.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  // வடகொரியா ஜனநாயகத்துக்கு திரும்பினால் சுபிட்சம் அடைய வாய்ப்பு உள்ளது... இரு கொரியாக்களும் இணைந்தால் வரவேற்கலாம்// ஜெர்மனி இணைந்தது போலவா? கிழக்கு ஜெர்மனி & மேற்கு ஜெர்மனியும் இணைந்தபோது, மேற்கு ஜெர்மனியின் பல தொழிற்சாலைகள் பல நாடுகளிலிருந்து திரும்ப பெறப்பட்டு கிழக்கு ஜெர்மனியில் நிர்மாணிக்கப்பட்டன. இதே நடைமுறை பின்பற்றப்பட்டால் இந்தியாவில் குறிப்பாக சென்னையிலுள்ள ஹூண்டாய் கம்பனி இடம் பெயர்ந்துவிடுமா? தமிழ்நாட்டின் பல பெரிய தொழிற்சாலைகளை போராளீஸ் என்கிற கேடு கெட்டவர்களால் விரட்டப்படும் நிலையில், கொரியா கம்பனிகள் இடம் பெயர்ந்தால் ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கிம் ஜாங் உன் வாயால் மிரட்டியே ..... காரியம் சாதித்தார் இல்லீ...

 • amuthan,Karaikudi - ,

  சோணை முத்தா...எல்லாத்தையும் ந..ல்..லா வீடியோ கவரேஜ் பண்ணிடணும்...இல்லேன்னா...கிம்,டிரம்ப் காலை புடிச்சு கெஞ்சினார் அப்படின்டுருவாங்க...

 • Mannan - Madurai,இந்தியா

  பரிசுத்த கம்யூனிஸ்ட் கிம் திடீரென ஒரேடியாக இறங்கி வந்த அரசியல் காரணங்களை ஒரு கட்டுரையாக எழுதுங்களேன். ராணுவ வலிமையில் தன்னிறைவு அடைந்ததாக வெளி உலகினரால் அறியப்பட்ட கிம் அமெரிக்காவுடன் இணைவதற்கு அவசியம் என்ன என்பதை அறிய அனைவருக்கும் ஆவல்.

 • செண்பகம்மாமி,சிங்கப்பூர் -

  trump Singapore வந்தாச்சா... அவருக்கு பிடிக்கும் என்று என் கையால் வெங்காய வத்தக்குழம்பு, கத்திரிக்காய் சாம்பார், தக்காளி ரசம், வாழைத்தண்டு கூட்டு, உருளைக்கிழங்கு பொடிமாஸ்.. எல்லாம் தயார்... அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு எடுத்துச் செல்ல போகிறேன்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எறும்பு யானையை வென்று விடுமோ...

 • ஆப்பு -

  வட, தென் கொரிய நாடுகள் அமெரிக்கா, மற்றும் ரஷியாவினால் அவர்கள் தேவைக்கேற்ப துண்டாடப் பட்டன. வட கொரியா ரஷியாவின் ஆதிக்கத்தில் கம்யூனிச நாடாகியது...தென் கொரியா அமெரிக்காவின் ஆதிக்கத்தில் கேபிட்டலிச நாடாகியது. சோவியத் யூனியன் உடைந்தபின் வட கொரியாவுக்குத் தேவையான உதவி ரஷ்யாவிடமிருந்து நின்றுபோனது. இன்றைய நிலையில், வட கொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்தால், அமெரிக்கா வட கொரியாவுக்கு இழைத்த துன்பங்களுக்கு பரிகாரம் கிடைக்கும். நல்லதே நடக்கும் என நம்புவோமாக...

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  உங்களைப் போன்ற நலன் விரும்பிகள் நல்லதே நடக்கட்டும் என்று சொல்லுகிறீகள். சிலருக்கு தங்கள் பிழைப்பு கெட்டுதே என்று கவலை. வடகொரியா மக்கள் நின்மதி சுதந்திரத்தை அனுபவிக்கனும், என்னைப் பொறுத்தவரை அணு ஆயத்தத்துக்கு முன் மக்களின் நலன் முக்கியம்.

 • poonguzhali - singapore,சிங்கப்பூர்

  உலக அரங்கில் தனித்திருக்கும் நாடும் மக்களும் அன்போடு ஒன்றிணைய வரவேற்கப்படுகிறார்கள்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வடகொரியா ஜனநாயகத்துக்கு திரும்பினால் சுபிட்சம் அடைய வாய்ப்பு உள்ளது... இரு கொரியாக்களும் இணைந்தால் வரவேற்கலாம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement