Advertisement

உரிமையை மீட்போம்...உரிமையை மீட்போம்...

'உரிமையை மீட்போம்…. உரிமையை மீட்போம் யார் வச்சது… யார் வச்சது …. உன் சட்டமடா இங்க வாழ்வென்பதும்… சாவென்பதும் நிலம் மட்டுமடா...'' 'காலா' படத்தின் தீப்பிடிக்க வைக்கும் வரிகள்… இளைஞர்களின் நாடி நரம்பில் சூடேற்றி புது ரத்தம் பாய்ச்சி கொண்டிருக்கிறது. இந்த பாடலுக்கு சொந்தக்காரர் அறிவரசன் என்ற அறிவு.

முதல்படமே… முதல் பாட்டே… ரஜினிக்காக எழுதிய பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. படம் வெளியான துள்ளலோடு, நம்மிடம் பேசினார் 25 வயது இளைஞர் அறிவு. சொந்த மண் அரக்கோணம். அப்பா, அம்மா ஆசிரியர்கள். அதனால நான் இன்ஜினியரா ஆனேன். கோவைல எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் முடிச்சேன்.

சின்ன வயசுல இருந்தே எழுத்தும், புத்தகமும் ரொம்ப பிடிக்கும். ஸ்கூல், காலேஜ்ல படிக்கும் போது, தெரிஞ்ச கவிதையை, சும்மா மெட்டு போட்டு பாடுவேன். அப்போ பிரெண்ட்ஸ் ஊக்கப்படுத்துனாங்க. அப்படியே சினிமாவுக்கு பாட்டெழுதணும்னு ஆசை பாடா படுத்துச்சு.காலேஜ் முடிச்சுட்டு எட்டு ஆல்பம் சாங் எழுதினேன். அப்போ இயக்குனர் ரஞ்சித் அறிமுகம் கிடைச்சது. திடீர்னு ஒரு நாள் கூப்பிட்டார். காலா படத்தில் ஒரு பாடல் எழுதணும்னு சொன்னார். ஒருவாரம் சுத்தமா துாக்கமே வரல.

'பயப்படாதே, நார்மலா எழுது, எளிமையாக இருக்கணும்; எல்லோருக்கும் புரியுற மாதிரி எழுது' என்று அவர் உற்சாகப்படுத்தினார். இது வரைக்கும் எழுதுன பாடல்களை விட நல்லா பண்ணனும்னு யோசிச்சு எழுதினேன். பாடலில் ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பார்த்து எழுதினேன். ஒரு வாரத்தில் முழுசா எழுதிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிட்டயும், ரஞ்சித் கிட்டயும் காண்பிச்சப்போ, சூப்பர்னு பாராட்டினாங்க.

பிறகு ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி. இது வரைக்கும் எந்த ஆடியோ லாஞ்சுக்கும் போனது இல்ல.என் முன்னாடி ரஜினி, தனுஷ் என்று பெரிய ஜாம்பவான்கள் இருந்தாங்க. அவங்க பக்கத்துல அமர்ந்தது நம்ப முடியாத சந்தோஷம்.

மேடையில் ஏறி பேச சொன்னப்ப எதோ சாதிச்சது போல இருந்துச்சு. அங்க இருந்து ரஜினிய பார்த்து வணக்கம் சொன்னபோது அவரும் வணக்கம் சொன்னது, வர்ணிக்க முடியாத சந்தோஷம்.

படிச்சு முடிச்சுட்டு சென்னைக்கு போகணும்னு சொன்னப்ப, முதல்ல வீட்ல ஓகே சொல்லல்ல. இப்போ சந்தோஷ மழையில மிதக்குறாங்க.

நாடோடிகள் 2-ல ஒரு பாடல் எழுதிருக்கேன். ஹிப்ஹாப் தமிழா ஆதியோட சேர்ந்து ஒர்க் போயிட்டு இருக்கு. அடுத்து கல்வி, சமத்துவம், பெண் விடுதலை, விழிப்புணர்வு, மக்கள் பிரச்னைகள் பற்றி எழுத ஆசை'' என்றார் நம்பிக்கையோடு!
தொடர்புக்கு : Fb :- Arivarasu kalainesan(அறிவு)

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (1)

  • Manasaatchi - bangalore,இந்தியா

    வாழ்த்துக்கள் சகோதரா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement