Advertisement

'போராடுவது தப்பில்லே' - 'வீடியோ ஜாக்கி' அஞ்சலி

கொஞ்சமாக பேசினாலும் கொஞ்சி பேசும் பைங்கிளி; உலக அதிசயங்களே உற்றுப்பார்க்கும் அழகு; வாலிபர்களை மட்டுமல்ல வயோதிகர்களையும் தடுமாறச் செய்யும் கண்கள், இவரை கண்டு ரசிக்கும் கண்கள் நிச்சயம் காவியம் படைக்கும்...
பேஸ்புக், டப்ஸ் மாஸில் சேர்ந்த ரசிகர் கூட்டம் போதாதென, சின்னத்திரையிலும் வீடியோ ஜாக்கியாக வலம்வந்து வாலிப மனங்களை வளைத்துப் போட்டவர் சென்னையை சேர்ந்த
அஞ்சலி. தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக மனம் திறந்தார் இங்கே:


* வீ.ஜே ஆனது?
'டிவி'யில் வரணும்னா யாருக்குத்தான் பிடிக்காது. பி.எஸ்சி., முடிச்சதும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன். நெட் சேனலில் வீ.ஜே., ஆக வாய்ப்பு கிடைச்சது. இப்போ ஒரு 'டிவி'யில் வேலை பார்க்கிறேன்.


* முன்னோடி?
அப்பவும், இப்பவும் எப்பவும் 'பெப்ஸி' உமா தான். அவங்களை பார்த்து தான் எனக்கு ஆசையே வந்துச்சு. இப்போ பிரியங்காவை பிடிக்கும்.


* நடிப்பு...
பயங்கரமா பேசும் எனக்கு நடிக்க வராதா. சூப்பரா நடிப்பேன். படங்களில் நடிக்க வாய்ப்பு நிறைய வருது.


* பிடித்தமானவர்கள்
நடிகர் விஜய், சிம்பு, நடிகை சமந்தா.


* பொழுது போக்கு
நான் கூடைப்பந்து வீராங்கனை.... அப்பப்போ விளையாடுவேன். போர் அடிச்சா 'டப்ஸ் மாஸ்' ல நடிச்சு வீடியோவ ப்ரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணி 'உசுர' வாங்குவேன். இல்லேன்னா வீட்ல இருக்குறவங்க கூட பேசியே பொழுதை போக்குவேன்.


* 'கலாய்' அனுபவம்
சத்தியமா என்னை யாரும் கலாய்ச்சது இல்ல. அப்டி சொன்னா நம்பவா போறீங்க. 'டிவி'யில் புரோகிராம் பண்ணும் போது நான் தான் மத்தவங்களை கலாய்ச்சிருக்கேன்.


* மறக்க முடியாதது
என் சொந்த உழைப்பில் சம்பாதிச்சு டூவீலர் வாங்கியிருக்கேன். அதை மறக்கவே முடியாது. இன்னொன்னு வீடியோ ஜாக்கி ஆனதையும்தான்..


* அரசியல்
தெய்வமே... அந்த ஆசையெல்லாம் எனக்கில்லேப்பா... இனியாவது பணத்துக்கு ஓட்டு போடாமல், நல்ல மனசுக்காரங்களுக்கு ஓட்டு போடுங்க. அந்த மனசுக்காரர் யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.


* டிப்ஸ் சொல்றீங்களா?
வாழ்க்கையே பெரும் போராட்டம் தானுங்க. அதுல ஜெயிக்கிறதும், தோற்கிறதும் நம்ம கையில தான் இருக்கு.இப்பல்லாம் போராடாமல் எதுவுமே நடக்குறது இல்ல. நாம நினைச்சது நடக்கணும்னா போராடுவதில் தப்பில்லை. நான் பொதுவா தான் சொன்னேன்.


இவரை வாழ்த்த anjli.rohinigmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement