Advertisement

ரூ.3,500 கோடி முறைகேடு; சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி

புதுடில்லி : 'ஏர்செல் - மேக்சிஸ்' நிறுவனங்கள் இடையிலான, சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, சிதம்பரம், அமலாக்க துறை முன், நேற்று ஆஜர் ஆனார்.

முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே, 3,500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் நடந்தது. இதில் சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.


இந்த மோசடியில், சிதம்பரத்திற்கும், அவரது மகன், கார்த்திக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில், கார்த்தியிடம், அமலாக்க துறை அதிகாரிகள், ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி, சிதம்பரத்திற்கு, அமலாக்க துறை அதிகாரிகள், சமீபத்தில் புதிய, 'சம்மன்' அனுப்பினர்.

இதையடுத்து, டில்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்துக்கு, நேற்று காலை, தன் வழக்கறிஞருடன் சிதம்பரம் வந்தார். சிதம்பரம் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த வாரம், சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜரான சிதம்பரம், தன்னை கைது செய்யக்கூடாது எனக்கோரி, மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக, நேற்று உத்தரவு பிறப்பித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, 'ஜூலை, 10 வரை, சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது' என, அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவர் நிதி அமைச்சராக இருந்தது தன் குடும்ப நிதியை பெருக்கிக்கொள்ள. இதனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் கீழே இருந்தது. இவர் சேர்த்த கள்ளப்பணத்தை, திரும்ப வாங்கினால், இந்தியா பணக்காரநாடாகிவிடும். பணபசி ப.சி. ரூபாய் நோட்டுகளாகத்தான் சாப்பிடுவார் போல. எதற்கு இவ்வளவு பணம் பணபசி ப.சி.? இவ்வுலகம் விட்டு சென்றால் எதையும் கொண்டுபோக முடியாது.நினைவில் கொள்க.

 • bal - chennai,இந்தியா

  இவரும் கொஞ்ச நாளில் நிரபராதி என்று வெளியில் விடுபடுவார் ...மாறன், கனி, ராஜா எல்லோரும் நிரபராதி...அதுபோல் இதுவும்...இதற்கெல்லாம் ஒரு போராட்டம் இல்லை....இவர் வீடு சொத்து 10 வருடங்கள் முன்னால் எப்படி இருந்தது..இப்போ எப்படி இருக்கிறது...அதிலிருந்து கிடைக்காத உண்மை.... வழக்கில் கிடைக்கபோகிறதா....

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////வெகுளி - Maatuthaavani,இந்தியா 06-ஜூன்-2018 01:52 ஐ..... இது நல்லா இருக்கே.... தன்னை கைது செய்யக்கூடாது எனக்கோரி, இவர் வாரா வாரம் மனு தாக்கல் செய்தால் போதும் போல இருக்கே.....//// - பின்னே, பெரிய இடத்து பிள்ளை, பெரிய இடத்து பிரமுகர்ன்னா சும்மாவா?, கூடுதலாக, முன்னாள் மத்திய மந்திரி, பொருளாதார மேதை, அரசியல் சாணக்கியர், மிக சிறந்த வழக்கறிஞ்சர் மற்றும் வெள்ளை வெள்ளை பிரியர், அதான் எளிதாக, சலுகை, கோர்ட்டில் கிடைக்கிறது

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  விசாரணை, விசாரணை, விசாரணை இதைத்தவிர வேறு எதுவும் தெரியாது இந்த மரமண்டைகளுக்கு. இதுவே சாதாரணன் என்றால் அவனை கைது செய்து ஜெயிலில் வைத்திருப்பார்கள் 10 வருடம் வரை அந்த தீர்ப்பு வரும் வரை, தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால் 10 வருடம் கழித்து தவறு நடந்து விட்டது என்று விடுதலை செய்வார்கள். ஆனால் இந்த மாதிரி அரசியல்வாதிகளுக்கு, நடிக நடிகையர்களுக்கு , பணக்காரர்களுக்கு மட்டும் இது விதி விலக்கு வெறும் விசாரணை ஒரு நீண்ட "" கதை போல தொடரும், கைது செய்யாமல்???

 • C.Elumalai - Chennai,இந்தியா

  பசிக்கு திருடினா மன்னிக்கலாம், இவரோ மிகபெரிய செல்வந்தர். மேலும் மேலும் பலதலைமுறைக்கு, சொத்துசேர்கக ஆசைபட்டதின், விளைவு இந்நிலை.படித்தவன் திருட்டுக்கு கடவுள் பலஜென்மத்திற்கு தண்டனை தருவார்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பேசுவது எல்லாம் உத்தமர் மாதிரி , பண்ணுவதெல்லாம் ஊழல்.

 • Arunachalam Swaminathan - FREMONT,யூ.எஸ்.ஏ

  இவரது நெருங்கிய நண்பி ஜெயந்தி நடராஜனை விசாரித்தார் நிறைய தகவல் கிடைக்குமே .

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  என்ன வேண்டுமானாலும் செய்யுங்கோ அனா இந்த செட்டியாரை புடிச்சு உள்ளே போட்டுடுங்கோ ....

 • amuthan - karaikudi,இந்தியா

  ரெண்டு லட்சம் கோடிக்கே தல குனியல...இதுக்கு மட்டும் ஏன்...?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சிதம்பரத்தின் விவகாரம் சிதம்பர ரகசியமாகவே இருக்கிறதே... முழு நீள கலர்படம் எப்போவெளியே வரும்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சூப்பர்... கதறல் தொடரும்... தீர்ப்பு சீக்கிரம் வரவேண்டும்...

 • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

  திரு சிதம்பரம் ஒரு மலை முழுங்கி மஹாதேவன் . சட்டத்தின் சந்து பொந்துகள் அவருக்கு நன்றாக தெரியும் . நீதிமன்றமும் அவருக்கு முழு ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளது . ஒரு கருத்து சொன்னதற்காக திரு எஸ் வீ சேகருக்கு பிடி வாரண்ட் . 3500 கோடி ஊழல் செய்தால் உடனடி முன்ஜாமீன் . இதுதான் நீதிமன்றத்தின் நிலைப்பாடு

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஐ..... இது நல்லா இருக்கே.... தன்னை கைது செய்யக்கூடாது எனக்கோரி, இவர் வாரா வாரம் மனு தாக்கல் செய்தால் போதும் போல இருக்கே.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement