Advertisement

தி.மு.க., - காங்., உறவில் ரஜினி ரூபத்தில் உரசல்

தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட, 'இப்தார்' நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்க மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே, உரசல் உருவாகியுள்ளது.
துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரம் தொடர்பாக, சட்டசபை புறக்கணிப்பு முடிவை, தி.மு.க., எடுத்தது. அதில், காங்கிரசுக்கு உடன்பாடில்லை. அதனால் தான், சென்னை, அறிவாலயத்தில் நடந்த, போட்டி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார், மறுநாளே, சட்டசபைக்கு சென்றனர்.

மேலும், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டால், ரஜினியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், ரஜினியை மையப்படுத்தி, தி.மு.க.,விடம் பேரம் பேசலாம் என்றும், டில்லி தலைமை கருதுகிறது.

இந்நிலையில், ரஜினியை, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், கராத்தே தியாகராஜன், சமீபத்தில் சந்தித்து பேசினார். பின், பேட்டி அளித்த அவர், 'சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை' என்றார்.

ரஜினிக்கு ஆதரவாக, கராத்தே தியாகராஜன், 'டிவி' விவாதங்களில் பேசி வருவதும், ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. இதனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை ஒட்டி, ரஜினி தெரிவித்த வாழ்த்து செய்தியை, 'முரசொலி' நாளிதழில் வெளியிடாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டது.

தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னையில் நடத்தப்பட்ட, 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வரும்படி, ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் வர மறுத்து விட்டார். தனக்கு பதிலாக, ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவனை அனுப்பி வைத்தார்.

ஸ்டாலின் புறக்கணித்த தகவல், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தெரிய வந்ததும், அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து, தி.மு.க.,வினர் கூறுகையில், 'ரஜினி ரூபத்தில், தி.மு.க., - காங்கிரஸ் உறவில், விரிசல் உருவாகியுள்ளது' என்றனர்.

-நமது நிருபர்-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (61)

 • kumarkv - chennai,இந்தியா

  தி மு கா காங்கிரஸ் இரண்டும் அழிக்க பட வேண்டும்

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  சுடலையை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஒரு சான்ஸ் கொடுத்து பாருங்களேன். பதவியில் இருந்தால் போராட்டம் என்ற பேச்சை எடுக்க மாட்டார். மக்கள் நிம்மதியாக போய் வரலாம்

 • raja - Kanchipuram,இந்தியா

  திமுக ஒழிந்தால் நல்லது.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  கராத்தே தியாகராஜன் ஒரு சொம்பு

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  செயல் தலைவர், மற்றவர்களை நல்ல வச்சு செய்யுறாரு.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ரஜினி மிகவும் யோசிப்பது அவருக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் .... ஒருவேளை அவரது முயற்சி 2026 ஆம் ஆண்டுக்கான அடுத்த சட்டசபைத் தேர்தலுக்காக அல்லது 2024 க்கான மக்களவைத் தேர்தலுக்காக இருக்கலாம் ....

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  திமுக கழுத்தை புடிச்சு வெளில தள்ளினாதான் காங்கிரஸ் வேறு மடம் பார்க்கும்... இல்லேன்னா கழகத்துக்கிட்ட பிச்சை எடுத்துக்கொண்டே இருக்கும்.... ரஜினி வருவதை யாராலும் தடுக்க முடியாது...

 • Saravanan Ayyasamy - Bangalore,இந்தியா

  'தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட, 'இப்தார்' நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்...' - Why the hell the secular party conducts a religious ritual? - Cheating people. மதச்சார்பற்ற கட்சி ஏன் ஒரு மத சடங்கை முன் நின்று நடத்துகிறது? - பித்தலாட்டம்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ரஜினியை நம்புவது காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் பின்னடைவைத்தான் தரும், ரஜினியை தனியாக விட்டு அவரின் வெயிட் என்ன என்று பார்க்கவேண்டும் அது தான் நல்லது

 • C.Elumalai - Chennai,இந்தியா

  ரஜினிக்கு ஒரு அட்வைஸ், காங்கிரஸ்க்கு தேவை,தன்னை சுமக்க ஆள் வேணூம். அது நீங்களாக இருக்கவேண்டாம். காங் திமுகவும், 100க்கு 200 சதவீத ஒற்றுமையுள்ள ஒட்டிப்பிறந்த குழந்தைகள்.

 • sree - klang,மலேஷியா

  அட ஏங்க... நீங்க வேற ...... ரஜினியெல்லாம் அரசியலில் எடுபட மாட்டார்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  முதல்வர் கனவு கண்டிருந்த நிறைய பேரின் எண்ணத்தில் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது அவர்களின் வயிற்றில் புளியை கரைத்து விட்டது . அதன் விளைவாகவே எதிர்ப்பு குரல்.

 • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

  மக்களுக்கு தெரியும் ரஜினி அந்தளவிற்கு ஒர்த்து இல்லை என்று. பக்தால்சும், ரசிகர்களும் உயர்த்தி பிடிப்பானுங்க. ஒட்டு போடுவது நடு நிலை மக்கள். வச்சு அடிபண்ணுங்க ஆப்பு.

 • Suri - Chennai,இந்தியா

  கடைசியில் ரஜினிக்கும் ஆப்பு. பிஜேபிக்கு ஆப்பு.காத்திருந்து பார்க்கவும்.

 • ramesh - chennai,இந்தியா

  உரசலை ஏற்படுத்த சிண்டுமுடியும் வேலையை தாங்கள் தான் தற்போது செய்துவருவது நன்றாக தெரிகிறது.

 • sam - Doha,கத்தார்

  இந்த காங்கிரஸ் ஆல் எந்த பிரோயசனமும் இல்லை என்பதை ஸ்டாலின் நன்கு அறிவர்.

 • vazhga Rajini - Chennai ,இந்தியா

  எப்பொழுது தவறு நடக்கிறதோ அப்போதே கொதித்து எழுபவன் தான் உண்மையான அரசியல்வாதி....// ஜெயலலிதா உச்சத்தில் இருந்த போதே மக்கள் நலனுக்காக அவரை எதிர்த்து ரஜினிதான். அவரால்தான் மூப்பனாரும் , கருணாநிதியும் அந்த தடவை (1996) ஆட்சிக்கு வந்தது. ADMK அப்போது ரஜினியை இழிவு படுத்தி செய்திகள் பரப்பியது ஆனாலும் மக்கள் ரஜினி சொல் கேட்டு ADMK வை வீட்டிற்கு அனுப்பினர் என்பது வரலாறு. போலீசை அடிப்பதுவும் , கலெக்டர் ஆஃபீசிஸை தாக்குவதும் தேசதுரோககிகள் செயல் என்று தைரியமாக சொல்ல துணிந்தவர் ரஜினி . அவர் அரசியலுக்கு வருவது பெரிய கட்சிகளுக்கு நடுக்கம் தந்துள்ளது என்பது இஙகு அவரை தாக்கி உள்ள கருத்துக்களை பார்த்தாலே தெரியுது .நல்ல எண்ணம் படைத்த அவரை எதிர்க்கும் கும்பல் தோல்வியை தழுவும் என்பது நிச்சயம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கலகம் பிறந்தால்தான் விடிவுகாலம் பிறக்கும்...

 • உகதி -

  பாஜகவை நோட்டாவில் இருந்து காப்பாற்றுங்கள்.

 • R.Subramanian - Chennai,இந்தியா

  ரஜினியின் இடத்தில் இருந்து பாருங்கள் ஒரு விஷயம் புரியும், ரஜினிக்கு சினிமா வியாபாரமே பெரும் அளவில் பணம் கொடுக்கிறது, ஒரே ஒரு படத்தில் ரஜினி நடித்தாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பணம் அவருக்கு கிடைக்கிறது, இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்து நாளை என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு விஷயத்தில் கால்பதிப்பது சாதாரண விஷயம் இல்லை. ரஜினிக்கு இனி பேர் புகழ் என்று எதுவும் தேவையில்லை அனைத்தின் உச்சத்தையும் அவர் தொட்டுவிட்டார், தற்போது தமிழகத்தில் நடக்கும் மிக மோசமான இனவெறி பிரிவினைவாத வன்முறை ஊழல் மலிந்த அரசியலால் தமிழக மக்களுக்கு மிக பெரும் ஆபத்தை கொண்டு வரும் என்பதால் அதையெல்லாம் தடுக்க மக்களுக்கு சேவை செய்யவே ரஜினி அரசியலுக்கு வருகிறார். அவர் நினைத்தால் அரசியலுக்கு வராமலே சுலபமாக சினிமாவில் நடித்து கொண்டே காலத்தை கடத்திவிடலாம்.

 • ஸ்ரீனிவாசன் - COIMBATORE

  இந்த மாதிரி காமெடி செய்தி வேறு பத்திரிகையில் பார்க்க முடியவில்லை..!! நீங்க வாழ்க..!!! 🙌

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  காங்கிரஷ் கட்சியே தள்ளாடிபோய்விட்டது. மு ண் டு கொடுக்கும் கட்டையாக தி மு க இருக்க விரும்பவில்லை போலும்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நாங்க எப்படியாவது ஆட்சியைப்பிடிச்சுருவோம்னு கனா கண்டுக்கிட்டு இருக்கும்போது இந்த ரஜனி இடையிலே புகுந்து காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்துவந்தவன் அடிச்சிகிட்டு போய்ட்டமாதிரி இருக்கக்கூடாதுன்னு திமுக நினைக்கிறது நியாயம் தானுங்களே

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  எப்பொழுது தவறு நடக்கிறதோ அப்போதே கொதித்து எழுபவன் தான் உண்மையான அரசியல்வாதி.....பிசினஸ் பண்ணுவதற்காக அரசியல் கருத்துக்களை தெரிவிப்பவர்கள் அரசியல்வாதி கிடையாது......பெயரே வைக்காமல் ஒரு பிசினஸ் செய்ய முனைகிறார் ஒருவர்.........அடாவடியாக அனைவரையும் அடித்து நொறுக்கி சுட்டு பொசுக்குவது ஆன்மீக அரசியல் கிடையாது...அனைவரையும் அனைத்து அன்புடன் புன்னகைத்து பரிவுடன் பேசி பாசமுடன் அரவணைப்பதே ஆன்மீக அரசியல்............இது அவசர கதியில் பிசினஸ் செய்பவர்களுக்கு புரியாது.............

 • Sandru - Chennai,இந்தியா

  கராத்தே ஒரு 420 .

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கராத்தே தியாகராஜன் எல்லாம் ஒரு ஆளு. 100 வோட்டு கூட வாங்க முடியாதவர் . ரஜினி ஒரு NOTA பார்ட்டி . குசேலன் , கோச்சடையான் , கபாலி பிளாப் க வரிசையில் இன்னொரு பிளாப், காலா படம் . எப்படி தெரியும் என்று கேட்கிறியா, எனக்கு எல்லாம் தெரியும் என்று சில்லறை போல உளறியதை பார்த்தால் இன்னும் 100 வருடங்கள் தியானம் செய்யணும் போல .

 • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

  வழக்கம்போல இதுவும் ஊக செய்தியே....

 • kandasamy sundaresan - bangalore ,இந்தியா

  செயல் தலைவர் அஞ்சாநெஞ்சனிடம் கட்சி தலைமையை கொடுத்தால் கட்சி தமிழ் நாட்டை விட்டு விடை பெறுவதை சற்றே நிறுத்தலாம். குடும்ப சண்டை, தப்பான மக்களின் அறிவுரை, பிரசன்னா போன்ற கீழ்தரமானவர்களை விட்டு பேச வைப்பது, வீரமணி, சுப வீ. போன்றவர்களின் மறை முக தலைஈடு போன்றவைகளை தடுத்து நிறுத்த அஞ்சா நெஞ்சனால் தான் முடியும்.

 • Mohamed Hanifa - Tirunelveli,இந்தியா

  ரஜினியை மிகப்பெரும் அரசியல் தலைவராக காட்டுவது மக்களிடம் எடுபடாது.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  கிழவரசர் புறக்கணித்த தகவல், இளவரசருக்கு தெரிய வந்ததும், அவர் அதிருப்தி அடைந்துள்ளார்....

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எல்லா காலத்திலும் எல்லாவற்றையும் நம்ப வைத்து விட முடியாது. பக்தால்ஸ் மீடியா மெனக்கெடும் அளவுக்கு கண்டக்டர் இன்றைய தேதியில் வொர்த் இல்லை.

 • chails ahamad - doha,கத்தார்

  நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரையும் முன்னிறுத்தி தமிழக அரசியல் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள மறுப்பதாலேயே , திமுக ., காங்கிரஸ் ., உறவில் ரஜினி ரூபத்தில் விரிசல் என மகிழ்வடைகின்றார்கள், இந்த விரிசலை உருவாக்க இப்போது மட்டும் அல்ல , எப்போதுமே இந்த நடிகர்கள் ஒரு காரணமாக இருக்க இயலாது , தமிழகத்தை பொருத்த மட்டிலும் திமுக வை சுற்றியே அரசியல் நகர்வுகள் இருக்க இயலும் என்பதால் இந்த நடிகர்களின் சுயரூபம் என்ன என்பதையும் , இவர்களை ஆட்டுவிப்பவர்கள் யார் என்பதையும் தமிழக மக்கள் தெளிவாகவே புரிந்துள்ளதால் இந்த நடிகர்கள் தமிழகத்தில் குப்பை கொட்டுவது ஆகாத காரியமாகும் , கதைக்கும் ஆகாத வகையாகும் , காங்கிரஸ்க்கும் , ரஜினி முகமூடி அணிந்த பா ஜ வுக்கும் க்கும் கூட்டு ஏற்படும் காலங்கள் வரும் போது ரஜினியை பற்றி பேசுவது ஏற்புடையதாக இருந்திடலாம் .

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  எத்தை தின்னா பித்தம் போகும் என்று கான்-கிரேஸ், திமுக. என்று பல சமூக விரோத கும்பல்கள், தமிழ் இந்த விரோத கும்பல்கள்....தமிழகத்தின் அடுத்த முதல்வர் தலைவர் ரஜனி என்று எல்லோருக்கும் தெரியும். ஆரம்பித்துவிட்டன தன் லீலைகளை. ரஜனி, இவர்களை கண்டுக்காதீர்கள்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  பரட்டை, பத்த வைச்சிட்டேயே பரட்டை.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ரஜினி உடல் தளர்ந்திருப்பது போல தெரிகிறதே? ஓய்வு தேவை அவருக்கு.

 • LAX - Trichy,இந்தியா

  செம..

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஒரே சிரிப்பா வருது..கட்சி பேரு தெரியாது..கொடி ரெடியில்ல..கொள்கை தெரியாது..இதுக்கே செயலு அரண்டு போயிருக்கே..ஐயோ..ஐயோ.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement