Advertisement

ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு: முதல்வராக பொறுப்பேற்கிறார் எடியூரப்பா

பெங்களூரு: எடியூரப்பா நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ. எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் இன்று கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.சுரேஷ்குமார் டுவிட்டடரில் பதிவிட்டிருப்பதாவது: பா.ஜ.தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் கவர்னர் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் , இதனையடுத்து நாளை காலை9.30 மணி அளவில் முதல்வராக எடியூரப்பா கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் பதவியேற்க உள்ளதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கவர்னர் மாளிகை வட்டாரங்கள் இரவு தெரிிவித்தாவது: தனிப்பெரும் கட்சி என்ற முறையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். எடியூரப்பா 15 நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பதிவு நீக்கம்எடியூரப்பா பதவியேற்பு குறித்த டுவிட்டரை நீக்கினார். பா.ஜ., எம்எல்ஏ., சுரே்ஷ்குமார். இதனையடுத்து பா.ஜ., கட்சியும் அதே கருத்தைகொண்டிருந்த டுவிட்டர் பக்கத்தை நீ்க்கி உள்ளது.

11 நாள் அவகாசம்இதற்கிடையே எடியூரப்பாவிற்கு 11 நாட்கள் அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனநாயகம் குழி தோண்டி புதைப்புகர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @மதுரை கோபி:: ஜனநாயக படுகொலை எது தெரியுமா - வெறும்36% வாக்குகளுடன் பிஜேபி ஆட்சி அமைக்க முயல்வதும் 38% வாக்குகள் பெற்றும் போதிய இடங்கள் கைவசம் இல்லாமல் போனதால் காங்கிரஸ் ஒதுக்கப்படுவதும் தான் விந்தையான ஜனநாயகப் படுகொலை.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  எடியூரப்பா முதலவர் பதிவியேற்றால்,தமிழ்நாட்டிலிருந்து சுடலை முதல் ஆளாக வாழ்த்து சொல்வார் என்று நம்பலாம் . அவர் அப்பாவின் பாசமிகு தம்பி எடியூரப்பா பதவி ஏற்பதால் ...கொள்ளையில் 2 பேரும் ஒருமித்த கொள்கை உள்ளவர்கள் என்பதால்... ..

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பழைய கான்-கிரேஸ் செய்த லீலைகளை பாருங்கள். எப்படி மெஜாரிட்டியை நிரூபிக்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம். கெட்டவர்களை ஒழிக்க, கெட்டவர்களுக்கு கெட்டவனாக இருப்பதால் தவறில்லை. நடத்துங்கள்..

 • Gokul,Madurai -

  இவர்கள் மட்டும் தேர்தலுக்கு முன் தனியாக நிற்பார்களாம். ஒருவருக்கொருவர் எதிராக பிரச்சாரம் செய்வார்களாம். தேர்தலுக்கு பின் உறுப்பினர் எண்ணிக்கைக்காக கூட்டணி அமைப்பார்கள். மிககுறைந்த சீட்டு வாங்கி பெரும்பாலான இடங்களை கோட்டை விட்ட கட்சியின் தலைவரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்களாம். ஓட்டு போட்ட மக்களை இவர்கள் ஏமாற்றவில்லையா? இது ஜனநாயக படுகொலை இல்லையா?

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  ஒட்டு பொறுக்கிகள் பதவி வெறி பிடித்தவர்கள் இதெல்லாம் இன்று நேற்றல்ல காங்கிரஸ் காலத்தில் இருந்தே நடைமுறை யார் உத்தமர் வெள்ளைக்காரனே உத்தமன் . அன்று ஆங்கிலேயனுக்கு அடிமை இன்று அரசியல்வாதிக்கு அடிமை.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  கேப்டன் பாணியில் சொல்வதென்றால் "இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?". மிகப் பெரிய ஜனநாயக படுகொலை. கேப்டன் செய்தது மாதிரி த, தா, தி, தீ........ வரிசையில் செய்யலாம். ஆனால் தினமலர் அதை பிரசுரம் செய்யாது.

 • Sami - Tirupur,இந்தியா

  Next target tamilnadu, no one votes for bjp, but they will become to power. What a dictatorship rule in India by bjp. We people are idiots and stupids to watch and die. Definitely, India is going to loss it's prestigious because of bjp. Very shame to be Indian under this govt.

 • suresh - chennai,இந்தியா

  மெஜாரிட்டி இல்லாத பாஜக,,,,, ஆட்சியமைக்கும் என தமிழிசை சொல்லி வருகிறார்,,,, எதன் அடிப்படையில் ஆட்சியமைப்போம் என சொல்கிறார் ?

 • sham - riyadh,சவுதி அரேபியா

  எதுக்குயா வீண் தேர்தல் செலவு, சீட் கம்மியா இருந்தாலும் பிஜேபி ஆட்சி அமைக்கிறாங்க ஜாஸ்தியா இருந்தாலும் அதான் நடக்குது .. பேசாம மாநில ஆட்சியெல்லாம் கலைச்சிட்டு ஒரே ஆட்சி பிஜேபி ஆட்சி நடத்துங்க யார் கேட்க போறா ...

 • Siva - Aruvankadu,இந்தியா

  சரியான முடிவு... வாழ்த்துக்கள்...

 • raja - Kanchipuram,இந்தியா

  ஜனநாயக படுகொலை தொடர்கிறது

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  திருட்டு கூட்டம் பாஜக , கோவா மணிப்பூர் மேகாலயா வரிசையில் மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலை அரங்கேறுகிறது , நாட்டின் அரசியல் சாசனத்தின் காவலர் ஜனாதிபதி என்றால் ஒரு மாநிலத்தின் அரசியல் சாசனத்தின் காவலர் அந்த மாநிலத்தின் கவர்னர் ஆவார் , கர்நாடகத்தின் ஆறரைக்கோடி மக்களின் பாதுகாவலராக நடுநிலையோடு செயல்படவேண்டிய ஆளுநர் இப்படி மத்திய பாஜக அரசின் கைப்பாவையாகி இந்திய அரசியல் சாசனத்தை கேலிக்குரியதாக ஆக்கிவிட்டார் , இந்தியாவின் 7 வது பெரிய மாநிலத்தில் நடக்கும் கொடுமையை உலகமே உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது ஆளுநர் பாஜக வின் அடியாளுநராக மாறியது வெட்கக்கேடான விஷயம் , பக்கா பாஜக நபராக செயல்படும் இந்த ஆளுநர் அந்த பதவிக்கே களங்கம் , கொல்லைப்புற ஆட்சிக்கு அலையும் பாஜக தான் ஒரு அரசியல் சாக்கடை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது ,

 • suresh - chennai,இந்தியா

  மெஜாரிட்டி இல்லாத பாஜக ஆட்சி அமைக்குமாம்...தமிழிசை கருத்து இது... எப்படினு சொல்லுங்க அக்கா

 • suresh - chennai,இந்தியா

  எடியூப்பா கோல்ட் ... பக்க கோல்ட் ....பக்கா கோல்ட்...அப்புறம் பாஜவும் கோல்ட்

 • ALL INDIAN BJP - singapore,சிங்கப்பூர்

  இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் வாழ்த்துக்கள்.

 • suresh - chennai,இந்தியா

  பாஜக பிரதமர்.... பாஜக ஜனாதிபதி.. பாஜக துணை ஜனாதிபதி...பாஜக கர்நாடக கவர்னர்...... எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதில் விஷயம் ஒன்றும் இல்லை....ஆனா ,,,,,அதிகாரப்பூர்வமாக பாஜக 104 தொகுதிகளை வென்றுள்ளது.. தற்போது உள்ள நிலையில் .மெஜாரிட்டிக்கு தேவையான 112 சீட்டுகள் இல்லை.....மெஜாரிட்டிக்கு தேவையான சீட்டுகள் இல்லாத போது எப்படி பாஜக ஆட்சியை தொடர முடியும் ? அப்படியானால்...வேறு கட்சியினர்...ஆதரவு வேண்டும்....வேறு கட்சியினர் ஆதரவு வேண்டும் என்றால்....வேறு கட்சியினரை பாஜகவிற்கு இழுக்க வேண்டும்......கழுவி கழுவி பாஜகவை காரி துப்பி பாஜகவை வென்ற வேறு கட்சியினரை வைத்து பாஜக ஆட்சி செய்ய வேண்டும் ...

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  கர்நாடக, தமிழக மக்கள் இணக்கமாக வாழ நல்ல முடிவெடுங்கள் திரு எடியூரப்பா அவர்களே. ஆட்சி உங்களுடையதாகட்டும்.

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  இதில் அதிசயம் ஏதுமில்லை வெறும் 2 MLA வைத்து ஆட்சியமைக்கும் போது 100 MLa வைத்து ஆட்சியமைப்பது பாஜக கட்சியினால் மட்டுமே முடியும்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Since 15th of May 2018 onwards the medias are getting Surprise and hot news about Karnataka state assembly election and forming of new government for every after 5 minutes and making all readers and viewers in ter hook.Tomorrow will be the last episode of this political scenary of Karnataka state as per this news.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  தமிழ்நாட்டில் 18 MLA , 11 MLA வைத்து கவர்னர் ஆடிய நாடகம் இப்போ கர்நாடக மக்கள் கண்டு களிக்க போகிறார்கள் . என்ன இன்டர்நேஷனல் ஊழல் மாபியா கூட்டம் கையில் கர்நாடகா சிக்கிவிட்டது .

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மோசடி கட்சி இப்படி தான் செயல்படும் , ஜனநாயகமாவது ? அரசியலமைப்பு சட்டமாவது ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement