Advertisement

தன்னாட்சி இல்லாத வாரியம் விசை ஒடிந்த அம்பு:ஸ்டாலின்

சென்னை:தன்னாட்சி இல்லாத வாரியம் விசை ஒடிந்த அம்பு என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தன்னாட்சி, அதிகாரம் இல்லாத வாரியம் விசை ஒடிந்த அம்பு நடுவர் மன்ற தீர்ப்பின் படி அதிகார மிக்க வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். தன்னாட்சி மிக்க வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் மூலம் உறுதியான வாதத்தை நாளை சுப்ரீம் கோர்ட்டிலும் வாதாட வேண்டும் என கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    தன்னாட்சியில்லாத வாரியம் என்று ஸ்டாலின் அவர்கள் சொன்னதைதான் - அதிலும் அதிலுண்மைகளிருக்கலா மென்றுதான் சொன்னேன் விவசாயிகள் சொல்வதைதான் அவர் மீண்டும் மீண்டும் சொல்கின்றார் அவர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட வேண்டுமென்று சொன்னாரே இதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை

  • Jaya Ram - madurai,இந்தியா

    நல்ல சொல்லாடல் ஆனால் அதை இவர் சொல்லியிருக்க கூடாது இருப்பினும் இந்த வாரியத்தில் மூன்று குறைகள் உள்ளன , ஒன்று, அணைகளின் கட்டுப்பாடு இதன் வசம் இல்லாதது , இரண்டு, வாரியத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவின்படியே தண்ணீர் திறக்கப்படும், மூன்று, இதில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் 10 எனப்படுகிறது அதில் நான்கு மாநிலத்திற்கு ஒரு உறுப்பினர் வீதம் 4 போக மீதம் ஆறு நபர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுபவர்கள் எனவே இந்த வாரியமானது முழுக்கமுழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே ( விருப்பத்தின் படியே) இயங்கும் எனவே தமிழக அரசானது உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைத்து வாதாட வேண்டும், அல்லது உச்சநீதிமன்றம் ( நடுவர்மன்ற ) உத்தரவுப்படி அந்தந்த மாதங்களுக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை எந்தவித கட்டுப்பாடின்றி திறந்து விடவேண்டும், இல்லையெனை நாளை எங்களுக்கு உச்சநீதிமன்றம் இவ்வளவு டி எம் சி தண்ணீர் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது அது போக மீதி தண்ணீர் தான் தரமுடியும் என்று எப்போதும் அவர்களின் தேவைக்கு இருப்பு வைத்துக்கொண்டு மீதி மட்டுமே வழங்கும் நிலை ஏற்படும் பின்னர் நாம் மத்திய அரசிடம் சென்று முறையிட்டால் அவர்கள் என்ன கூறுவார்கள் எங்களுக்கு இதில் தலையிட அதிகாரமில்லை வாரியம் முடிவெடுக்கும் என்று சொல்லக் கூடமாட்டார்கள் வெறும் கடிதம் மட்டும் ஒருவாரமோ, பத்து நாட்களோ கழித்து அனுப்புவார்கள், வாரியத்திடம் சென்றால் அங்கே 6 பேர் மத்திய அரசின் ஆட்கள் , ஒருவர் கர்நாடகாவின் ஆள், எனவே பெரும்பான்மை படி தான் நாங்கள் முடிவெடுக்கமுடியும் எனவே எங்களால் தற்போது தண்ணீர் திறக்க சொல்ல நிர்பந்திக்க முடியாது என்று கூறிவிடுவார்கள் அப்புறம் மீண்டும் தமிழகத்தின் கதி பழைய குருடி கதவை திறடி என்ற கதைதான், கோர்ட்டுக்கு சென்றால் இந்த பிரச்சினை 15 ஆண்டுகளுக்கு கோர்ட்டுக்கு வரக்கூடாது என்றுதான் வாரியம் அமைத்தோம் அங்கே போங்கள் என்று விரட்டிவிடுவார்கள் எனவே இந்த பிரச்சினையினை நன்கு கவனித்து செயல் படுங்கள் தமிழக அரசே, வழக்கறிஞர்கள் மீண்டும் திமுக செய்த தவறினை நீங்கள் செய்து இன்னுமொரு 44 ஆண்டுகள் ஆக்கிவிடாதீர்கள்

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    ஸ்டாலின் அரசியல் எதிரியாகயிருக்கலாம் அதிமுக வினர் தங்களின் சுயமரியாதை தன்மானத்தை கொஞ்சம் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவர் வாரியத்தைப் பற்றி அது தன்னாட்சியில்லாத வாரியம்,விசையொடிந்த அம்பு என்றுச் சொல்வதிலும் உண்மை யிருக்கலாம் தமிழக அரசு அந்தக் குறைப்பாடுகளை உடனே கண்டறிந்து அதை நீக்குவதற்காகவும் சரியான தெளிவான வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் எடுத்துறைக்கவேண்டும் அணையும் கர்நாடகாவின் அவர்களின் கையில் இன்றுவரை தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமும் அவர்களின் வகைகளில் இதை வாரியத்திடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் தமிழகத்திற்கு வேண்டியதெல்லாம் வலிமையான வாரியம் இதையெல்லாம் அன்றே பலரால் புரட்சித் தலைவி என்றுப் புகழப்படும் ஜெயா அம்மையார் பலமுறைகள் தமிழக முதல்வராகயிருந்தும் கொஞ்சமும் செய்யவில்லை இன்றைக்காவது அதிமுக ஆட்சியாளர்கள் இதில் மிக அதிகமானக் கவனத்தை உடனே செலுத்த வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement