Advertisement

ஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

அதே போல் ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜந்தலூரு கிராமத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய பல்கலைகழகம் அமைக்கப்பட உள்ளது.மேலும் உ.பி., மாநிலத்தில் காசியாபாத் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.1,967 கோடி மதிப்பில் நொய்டா வரை நீட்டிக்க ஒப்புதல் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    நம்ம தமிழ்நாட்டிலே கட்டணும்னு சொன்னது என்ன ஆச்சு? ஏற்கனவே தமிழ் நாட்டுக்கு சாங்க்ஷன் ஆயிருச்சே , மாநில அரசு முனைப்புடன் இடத்தை தேர்வு செய்து , ஒதுக்கி கொடுக்கணும், மத்திய அரசுக்கு சீக்கிரம் கட்ட நெருக்கடி கொடுக்கணும். சும்மா, சமாதி கட்டுறதிலேயே நேரத்தை செலவழிச்சிகிட்டு இருந்தா எய்ம்ஸ் வேறு மாநிலத்துக்கு போய் விட வாய்ப்புண்டு.

  • Raja - Dammam,சவுதி அரேபியா

    தமிழ் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்னாச்சு. தமிழ் நாட்டில் இல்லாத இடம் ஜார்கண்டில் இருக்கா. Odhavadha Pump Set & Edupadaatha Pump Set எங்க போச்சு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement