Advertisement

சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: குமாரசாமி

பெங்களூரு: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தனது முடிவை அறிவிப்பதாக கவர்னர் தெரிவித்ததாக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி கூறியுள்ளார்.


தடைமதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்தனர். அவர்களுடன் எம்எல்ஏக்கள் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எம்எல்ஏக்கள் அணிவகுப்புக்கு கவர்னர் தடை விதித்தார். இதனையடுத்து 10 எம்எல்ஏக்களுடன் குமாரசாமி மற்றும் காங்., நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.


சட்டப்படி முடிவுபின்னர் குமாரசாமி கூறுகையில், மாநிலத்தில் நிலையான அரசை அமைக்க தேவையான பெரும்பான்மை எங்களிடம் உள்ளது. ஆட்சியமைப்பது தொடர்பாக நிர்வாகிகள் கவர்னரை சந்தித்து விளக்கம் அளித்தோம். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஆட்சியமைக்க வாய்ப்பு தர வேண்டும். அந்த உத்தரவின்படி, பெரும்பான்மையை பார்க்க வேண்டும் என கூறினோம். எங்களுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணங்களை அளித்தோம். சட்டப்படி முடிவெடுப்பதாக கூறினார். சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக கவர்னர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • murugu - paris,பிரான்ஸ்

  வர வர நீதிபதிகளும் கவர்னர்களுக்கும் கணக்கு வரமாட்டேன்கிறது கணக்கில் இவர்களுக்கும் ""நீட்""பரீட்சை வைக்க வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை அது என்ன கர்நாடகாவில் உள்ள நீதிபதி முதல் கவர்னர் வரை (117 பெரிதா ,104 பெரிதா ?)கணக்கு பாடத்தில் மக்காக இருக்கிறார்களே ????????

 • siva india - chennai,இந்தியா

  மக்கள் மெஜாட்டியாக ஒரு கட்சிக்கு வோட்டு போட்டால் அந்த கட்சி முழுமையாக நன்மை செய்யும் என நம்பி ஓட்டு போடுகிறார்கள் சிலர் கட்சி தாவினால் கட்சி தாவல் சட்டபடி பதவி இழக்கிறார்கள்.மக்களால் மெஜாட்டி பெற்ற கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைத்த பிறகு சொந்த பிரச்சனைக்கா பிரிந்தால் அந்த கூட்டணி கட்சி தாவல் சட்டம் போல பதவி பறிக்கபடவேண்டும். வெற்றி பெற்ற பின் கூட்டணி வைத்தால், கூட்டணி வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை ,. மக்கள் முடிவு செய்ய சட்டம் வேண்டும்

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இந்த ஆளு கர்நாடக ஆளா ,இல்லே வேற ஆளா ?சீமான் கொஞ்சம் ஆராய்ச்சி செயது சொல்லணும்,ஏனென்றால் சுடலை, திருமா போன்றோர் ஆதரவு தராங்க ,ஒரு வேளை இவரின் உருவத்தை பார்த்து உண்மை திராவிடன் என்று நினைக்கிறார்களோ?

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  யாருக்குமே ஆட்சி வேண்டாம். திருடர்கள். யார் வந்தாலும் காவேரியில் தண்ணீர் வராது. கவர்னர் ஆளட்டும் மக்கள் காசை அவரும் தின்னட்டும்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  கவர்னர் மாளிகை அறிக்கை: "கவர்னர் சட்ட நிபுணர்களுடன் (மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், தமிழிசை, ஹெச். ராஜா, சுஷ்மா போன்றோருடன்) ஆலோசனை செய்த பிறகு மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் தேர்ந்தெடுத்தபடி எடியூரப்பாவை ஆட்சி அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அத்துடன் பாஜக ஆட்சி அமைத்தவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரமும், தங்களுக்கு பெரும்பான்மைக்கு வேண்டிய எண்ணிக்கைக்கு தக்கபடி நியமன எம்.எல்.ஏ களை நியமித்துக் கொள்ளும் அதிகாரமும் வழங்கப்படுகிறது. அதுவரையில் அவர்கள் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது".

 • sams - Palakkad,இந்தியா

  மோடியின் சட்ட புத்தகம் பாமரனுக்கும் தெரியும் .....இது குமாரசாமிக்கு புரியல

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  சட்ட நிபுணர்கள் நாகபூரில் இருந்து சொல்லுவாங்க

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  கவர்னர் சட்ட நிபுணர் என்று கால்குலேட்டர் குமாரசாமி கிட்டே ஆலோசனை கேட்ட கணக்கை சரியாய் போடு கொடுப்பார்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Bjp is weak in mysore region ,so jds had hidden support of bjp to win these many seats,but arasiyal ah intha ani matram will am sakajam

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  எக்காரணம் கொண்டும் குமாரசாமியை மட்டும் முதல்வராக பதவி ஏற்க அனுமதிக்கக்கூடாது..... அனுமதித்தால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஒரு டிம்சி தண்ணீர்கூட விடமாட்டான்.

 • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

  Legal specialist among appointed by BJP..So dream of Congress will bee broken by BJP.

 • மணிமாறன் - trichy,இந்தியா

  சட்ட நிபுணர் அமித் சா தானே

 • John -

  மோடியை போல் ஒரு ஒரு ஆள் இந்த உலகில் இல்லை.

 • JosephJohn -

  ஏன் மோடி இன்னும் உத்தரவு தரவில்லையா

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  ஜேடிஎஸ் பாஜாகா'வின் "பி" டீம்'னு சொன்ன காங்கிரஸ் இப்போ ஜேடிஎஸ்'ஸின் "பி" டீம்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  முதலில் என்னை அழைத்து விட்டு அப்புறமா ஆலோசனையெல்லாம் பண்ணிக்குங்க கவர்னர் ஐயா..... நேரம் ஆக ஆக என் பேச்சை நானே கேட்காமல் அந்தப் பக்கம் தாவிடுவேன் போல இருக்கு.....

 • Anand - chennai,இந்தியா

  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம், இவ்விரண்டையும் குழிதோண்டி புதைக்கவும், இதுதான் முடிவாக இருக்க வேண்டும் என்பது பச்சை மற்றும் பாவாடைகளை விடுத்து ஏனையோரின் ஒருமித்த கருத்து.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement