Advertisement

என்ன செய்ய போகிறார் கவர்னர்?

பெங்களூரு : கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற பரபரப்பு உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரை சந்தித்து, பா.ஜ.,வின் எடியூரப்பா கடிதம் அளித்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாலை 4 மணிக்க மீண்டும் கவர்னரை சந்திக்க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நேரம் கேட்டுள்ளார். இதுவரை கவர்னர் எந்த பதிலும் அளிக்கவில்லை.


மாலை 6 மணிக்கு பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது தொடர்பாக கவர்னர் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ள குமாரசாமி, கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கவர்னரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளார்.


இதற்காக மஜத மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்களிடம் அவர் கையெழுத்து பெற்று வருகிறார். கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஆஜர்படுத்த காங்., மற்றும் மஜத திட்டமிட்டுள்ளன.


ஒருவேளை கவர்னர் நேரம் ஒதுக்கவில்லை என்றால், அதனை எதிர்த்து கவர்னர் மாளிகை முன் எம்எல்ஏ.,க்களை அழைத்துச் சென்று தர்ணா போராட்டம் நடத்தவும் காங் மற்றும் மஜத கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால் அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் காங்., ஆலோசனை நடத்தி வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (57)

 • Divahar - tirunelveli,இந்தியா

  பல இடங்களில் கவர்னர்களால் பிரச்னை. கவர்னர் கட்சியின் அடிப்படையில் தானே இருப்பர்

 • Anandan - chennai,இந்தியா

  காங்கிரஸ் அயோக்கியனுங்கனு பார்த்தால் இவங்க அதைவிட மோசமான அயோக்கியனுங்களாய் இருக்கானுங்க.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  பாஜக ஏஜெண்டான இந்த கவர்னர் மட்டும் என்ன புதிதாக செய்யப்போகிறார்? வழக்கம் போல் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பாஜக வை தான் ஆட்சி அமைக்கச் சொல்வார். ஜனநாயக நாட்டில் ஒரு கவர்னர் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு கட்சிகளை சந்திக்க முடியாது என்று சொல்வது எவ்வளவு பெரிய ஜனநாயக கொலை? பைத்தியக்கார நாட்டாமையில் யார் என்ன செய்ய முடியும்?

 • sampath, k - HOSUR,இந்தியா

  Before election joining with any party is OK. After election joining is shame to our tem. Modification is warranted.

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  தமிழ்நாட்டில் நடக்கற கூத்து பத்தாது என்று இப்போ கர்நாடகாவிலும் தொடர்கிறது ஒன்னு மட்டும் நிச்சயம் நாடு போகும் பாதை அழிவை நோக்கி என்பது தான் உண்மை.நீதி நேர்மை இல்லாத நாடு எங்கே உருப்படும்.

 • Vijay - Chennai,இந்தியா

  காங்கிரஸ் நடத்திய ஜனநாயக படுகொலைகள் 2005 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 30 இடங்களை கைபற்றி இருந்தது அன் கூட்டணி கட்சியான JDU 6 இடங்களை கைபற்றி இருந்தது எதிரணியில் காங்கிரஸ் 9 இடங்களையும் கூட்டணிகட்சியான JMM 17 இடங்களையும் கைபற்றியது மீதமிருந்த சுயேட்சைகளில் 5 பாஜகவை ஆதரித்தனர் 36+5 = 41 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அனைவரிடமும் ஒப்புதல் கையொப்பம் பெற்று ஆளுனரிடம் அளித்தது பாஜக அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் வகையில் ஆளுனர் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் Sr பொம்மை வழக்கினௌ தீர்ப்பின் படி 1. தனி பெரும்பான்மையான கட்சி - பாஜக 2. தனி பெரும் Pre Poll கூட்டணி பாஜக - JDU 3. தனிப்பெரும் Post Poll கூட்டணி பாஜக + JDU+ Independents இந்த மூன்றுமே பாஜகவிற்கு சாதகமாகியிருந்தும் இந்த ஜனநாயக கொலையை அரங்கேற்றியது காங்கிரஸ் அதன் பின்னர் நடந்தது தான் இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்பு பக்கங்கள் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி முன்னர் MLA க்களை அணிவகுப்பு நடத்த பாஜக திட்டமிடுகிறது ஜார்கண்ட் ரான்சி விமானநிலையத்தில் இருந்து டெல்லி செல்லயிருந்த விமானத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் இருந்தன இதையறிந்த JMM - Congress குண்டர்படை துணைமுதல்வர் தலைமையில் விமானநிலைய்த்திற்கு வந்து கிளம்ப தயாரான விமானத்தை நிறுத்தி பாஜக- JDS கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 5 யேட்சை MLA க்களை களவாட முயன்றனர் ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த தரங்கெட்ட அரசியலை முன்னரே யூகித்த பாஜக அந்த 5 எம்எல்ஏ க்களையும் ஜார்க்கண்ட் அண்டை மாநிலமான மேற்கு வங்த்துக்கு அனுப்பியிருந்தனர் அப்பொழுது மேற்கு வங்கத்தில் Communist ஆட்சி அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கமுடியுமா?? மேற்குவங்க போலீஸ் காங்கிரஸ் குண்டர்களுக்கு சாதகமாகிவிட்டது என்பதை உணர்ந்த பாஜக அந்த 5 பேரையும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் ஒரிசாவிற்கு சாலைமார்க்கமாக அழைத்து சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி அழைத்துச் சென்று ஜனாதிபதி முன்னிலையில் அணிவகுப்பு நடத்தி முறைகேடாக அமைக்கபட்ட காங்கிரஸ் ஆட்சியை கலைத்து பாஜக ஆட்சி நிலைநாட்டப்பட்டது இந்த ஜனநாயக அசிகங்களை நடத்தி கொண்டிருந்த அன்னைறைய மைனாரிட்டி மத்திய காங்கிரஸ் அரசை தாங்கிபிடித்துக் கொண்டிருந்த கம்னுயிஸ்ட் களும் நம்ம தமிழக கட்சிகளான மதிமுக விசிக பாமக போன்ற கட்சிகள் நமக்கு இன்று ஜனநாயத்தை பற்றி பாடமெடுப்பதுதான் காலக் கொடுமை

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  1994 எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநிலங்களில் தொங்கு சட்டசபை ஏற்படுகிறது எனில் அப்போது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் அடிப்படையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியின் அடிப்படையில் பெரும்பான்மை உள்ள கட்சிகளை அழைக்கலாம் இல்லையெனில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் என்கிறது அத்தீர்ப்பு, 2006-ம் ஆண்டு இத்தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சால் மேலும் மெருகேற்றப்படுகிறது, அதில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஒன்றும் தவறானது அல்ல, ஒரு அரசியல் கட்சி மற்ற கட்சி அல்லது எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினால் பெரும்பான்மை இருக்கும் நிலையில் அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் தயங்கக் கூடாது, ஆளுநர் தமக்கு அதிகாரம் இருக்கிறது என ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது, ஆளுநர் ஒன்றும் எதேச்சதிகாரம் படைத்தவரும் அல்ல என்கிறது அத்தீர்ப்பு, ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு விரோதமாக, குறைந்த இடங்களைப் பெற்ற பாஜகவைத்தான் அம்மாநில ஆளுநர்கள் அழைத்தனர். இப்போது கர்நாடகாவில் பெரும்பான்மை கொண்ட ஜேடிஎஸ்- காங்கிரஸை அழைக்க ஆளுநர் மறுப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது,

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  இந்த புற்று, kums , சுடலை எல்லாம். நேர் வழியே தெரியாத பிறவிகள். கவர்னர் அய்யா , கொஞ்சமாவது இதுகளுக்கு ஜனநாயக பாடம் படிக்க ஒரு வாய்ப்பு கொடுங்க. please

 • K.Sugavanam - Salem,இந்தியா

  ஆலோசனைக்காக காத்து இருக்கிறார்..சட்ட ஆலோசனைக்கு.

 • Guru - cbe

  இது ஒரு எண்களின் முடிவு மட்டும் என்று எடுத்துக் கொள்ள நாம் இயந்திரங்கள் அல்லமனிதர்கள். ௭ந்த ஒரு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதோ அது ஆட்சி செய்ய வேண்டும். குறைந்த MLA க்கள் உள்ள கட்சி ௭வ்வாரு ஆட்சியை பிடிக்கலாம்?

 • ar saravanan - tiruchirapalli,இந்தியா

  ஒரு தனி ஒருவனுக்காக இத்தனை black cats பயப்படுத வாழ்க மோடிஜி

 • J.Isaac - bangalore,இந்தியா

  கவர்னர் முழிக்கிற முழியே சரியாய் இல்லையே.

 • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

  He is the spring of BJP. Key for spring is in the hand of Leads. So he will favor to BJP only. Otherwise ext the time to make manipulation by BJP as ordered or instructed by leads of BJP. Authorized and empowered governor will take time of one to three days maximum to call the party to form government. Weather he is not capable for this governor position or acting as a member of BJP? This is new history made by Karnataka Governor that Indian politics slammed down in such a way of in-civilized.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Onnum Aagadhu and the BJP will be strong and form the government and Siddaramayya and Kumaraswamy will meet Governor and waiting and waiting followed by many Dharnas and what ever happened to Staline after EPS proved his majority in our state assembly in 2017 February the same will happen to Siddaramayya and Kumaraswamy in Karnataka.Mr.Staline even carried out his Dharma in torn shirt along with his party MLAs but nothing was happened as per his choice.The same with the Congress and JD(S) also.Wait and see.

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  தன்வினை தன்னை சுடும் என்பது இப்போதைய சூழலில் பாஜாகாவிற்கு நன்றாக புரியும் ..முற்பகல் செய்த் கோவா திரிபுரா இன்னும் பல இடங்களில் செய்த ஊழ்வினைகள் யாவும் பிற்பகலில் வந்து சேரும் ..

 • Mal - Madurai,இந்தியா

  Public have given their verdict in favour of BJP... So bringing in Kumaraswamy who has got only 38/222 seats and Congress supporting this bad. Either it is BJP rule or congress supported by JD or re election. BJP has got 104/222.... And are short only by 8 seats. Congress n JD combinedly have got 115/222 which is just 3 seats ahead. So Bjp is in a better position to ensure a safe, s and people voted government. Let's see... On the lighter side, governors were not known until now or their importance known .. But in bjp rule even all governors are gaining importance and the whole nation eagerly waits for their judgement.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நேரிடையாக எம் எல் ஏக்களை வரவழைத்து யாருக்கு பெரும்பான்மை இருப்பது என்று அறிந்து ஆட்சி அமைக்க அழைக்கலாம்.

 • பிரபு - மதுரை,இந்தியா

  கவர்னர் என்ன செய்வார்? பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பார். இன்னும் 10 சீட்டு குறைவாக இருந்தாலும் கூட பா.ஜ.,வையே ஆட்சி அமைக்க அழைப்பார். ஜனநாயகம் செத்துவிட்ட நாட்டில் வேற என்ன எதிர்பார்க்க முடியும்?

 • மனோ - pudhucherry,இந்தியா

  கவர்னரின் நடவடிக்கைக்கு முன்பே அவரை மிரட்டுவது சரியல்ல. காங்கிரஸ் JDS ஆதரவுடன் பதவியேற்க கோரினால் தவறில்லை. ஆனால் JDS ஆட்சி அமைக்க கோரும் பட்சத்தில் காங்கிரஸ் போராட கூடாது. இது ஏற்கனவே மக்கள்ஆதரவை இழந்தது போதாதென்று மேலும் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  கவர்னர்=கலெக்டர்கள் ...அவ்வளவுதான்..

 • chails ahamad - doha,கத்தார்

  ஆளுநர் அவர்கள் தனக்கு மேலிடத்தால் இடப்பட்ட. பணிகளை கச்சிதமாக செய்து முடிப்பார் , பா ஜ ஆட்சி அமைக்க அனைத்து வழிகளிலும் ஆதரவை அளித்து ஆட்சி அமைத்திட செய்திடுவார், அதனை எவராலும் தடுத்திட முடியாது , ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என நேரத்திற்கு தக்கபடி தீர்ப்பெழுத நீதிவான்கள் காத்தும் உள்ளதை நாமும் கண்டு களிப்போம் . புத்தியுள்ளவர்கள் பிழைத்து கொள்வார்கள் பணம் பத்து செய்யுமாம் .

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இந்த கவர்னர் குஜராத்தில் பிஜேபி கட்சி தலைவராக இருந்தபோது அங்கு இருந்த பெரும்பான்மை பிஜேபி அரசை கலைக்க வேண்டாம் என்று எவ்வளவோ மன்றாடியும் தூங்குமூஞ்சி தேவகௌடா பிரதமராக இருந்த காரணத்தால் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்று மெஜாரிட்டி பிஜேபி அரசை கலைத்தார்...... விதி வலியது... இப்போது அதே மனிதரிடம் இந்த தூங்குமூஞ்சியின் மகன் கை ஏந்தி நிற்கிறார்.

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  இன்​றைய சூழலில் இந்தியா ​போன்ற வலி​மை மிகுந்த ஜனநாயகநாட்டில் இது​போன்ற நிகழ்வுகள் வாக்களர்க​ளை அவமானபடுத்துவதாக அ​மைகிறது. அதுமட்டுமல்ல வாக்காளர்களுக்கு கடு​மையான கட்டுபாடு வாக்கிற்க்கு பணம் ​கொடுத்தால் சட்டபடி குற்றம் என்பது ​போன்ற ​​தேர்தல் ஆ​ணையத்தின் அறிவிப்புகள் வாக்க​ள​ர்ளை மட்டும் கட்டுபடுத்துவதாக அ​மையகூடாது. மு​றைபடி ​தேர்​தெடுக்கபட்ட சட்டமன்ற பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டங்க​ளை கடு​மையாக​வேண்டும். அதாவது ஒருசின்னத்தில ​போட்டியிட்டு ​வெற்றி​பெற்றபிறகு குறிப்பிட்ட கட்சி எதிராகவும் த​லை​மைக்கு எதிராகவும் ​செல்லமுற்படும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்க​​ளை தகுதிஇழக்க​செய்வ​தோடு மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ​தேர்தலில் நிற்க த​டைவிதிக்க​வேண்டும். குறிப்பிட்ட கட்சிக்கு ​பெரும்பான்​​மை நிருபிக்க கவர்னர் முன் சம்மந்தபட்ட கட்சியின் ​தேர்​​தெடுக்கபட்ட உறுப்பினரக​ளை ஆஜர்படுத்தி ​கை​யெழுதிட​வைக்க​வேண்டும். ஆட்சிஅ​மைக்க ​பெரும்பான்​மை இல்லாத​போது உடனடியாக சட்டமன்ற்த்​தை முடக்கி​வைத்துவிட்டு கட்சிகள் வாங்கிய வாக்குகளின் அடிப்​படையில் உறுப்பினர்க​ளை ​தேர்த்ல் ஆ​ணையம்​மே நியமனம் ​செய்யலாம் . அதில் குறிப்பிட்ட கட்சிக்கும் ​மேலும் ​பெரும்பான்​மை கி​டைக்கவில்​லை என்றால், ஆட்சி​யை க​லைத்து அடுத்த ஆறுமாதத்தில் மறு​தேர்தல் ​வைக்கலாம். இ​தை​யெல்ல்ாம் ந​டைமு​றைபடுத்தினால் நிச்சயம் குதி​லை​பேரம் அல்லது கட்சிமாறி வாக்களிப்பது என்பது தடுக்கமுடியும். இன்று கர்நாடகவில் நடப்பது என்ன வாக்களித்தவன் நமக்கான புதிய ஆட்சி வரும் என காத்திருக்கும் ​வே​லையில் M L A க்க​ளை வி​லை​போகாமல் இருப்ப​தை தவிர்க்க ரிசார்ட் பயணம் என ​கொண்டாட்டமாக இருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? உலகநாடுகள் நமது நாட்​டை மிகவும் ​தரகு​றைவாக நி​னைக்கிறாரகள்.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் "இந்தா காவேரி தண்ணீர்" என்று திறந்து விடப்போவதில்லை .. அந்த விஷயத்தில் அவர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள் ... நம் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் ..

 • Karthi -

  Bjp has more than full support from SC n Governor or even President.No use appealing the SC.

 • narayanan iyer - chennai,இந்தியா

  கவர்னர் பி ஜெ பி யை தான் அழைப்பர் . அவர்களும் ஆட்சியை அமைப்பார்கள் . நம்பிக்கை வாக்கெடுப்பின்போதுதான் அவர்களை கவிழ்க்க முடியும் .ஆனால் அதுவரை ஏனைய எம் எல் ஏ க்கள் விலைபோகாது இருக்கவேண்டும் .

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  . இஷ்டத்திற்கு ஆடமுடியவில்லை. கணக்குக் காட்டச் சொல்றானுக, மணல் திருட முடியல, கல்லூரி வச்சுக் கொள்ளையடிக்க முடியல, ஊழல் செய்து அதிகாரத்தைப் பிடிக்கவோ தக்க வச்சுக்கவோ முடியலை என்ற கோபத்தில், எதையாவது சொல்லிப் போராடிட்டே இருக்கானுக. விவசாயத்திற்குத் தண்ணி தரலைனு போராடினவர்ய்கள், தமிழ்நாட்டுக்குத் தண்ணி தரமாட்டேன்னு சொல்றவன் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை, நேர்மையா இருக்கச் சொல்றவன் ஆட்சிக்கு வந்திடக் கூடாதுனு கத்துறானுக. இந்த லட்சணத்தில் தான் தமிழ்நாட்டினை புளுத்தறிவுப் பகலவன் மண்ணுங்கிறானுக இந்த மண்ணுப்பயலுக. அதை நாலு மீம்ஸ் ஃபார்வேடு பண்ணி முட்டாள்கள்னு ஊரு பூராம் டமாரம் அடிச்சுக்கிறானுக.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  மைனாரிட்டி திமுக அதிமுக MLA களை இழுத்து மெஜாரிட்டி ஆட்சி கருணாநிதி நடத்தினால் அது ராசதந்திரம் சும்மா கெடந்த தேமுதிக MLA களை இழுத்து அந்த கட்சியை ஜெயலலிதா பலவீனபடுத்தினால் அது பக்கா ராசதந்திரம் அமித்ஷா செய்தால் மட்டும் அது ஜனநாயக படுகொலை

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄 கவர்னர் :- குமாரசாமி... ஹெச் டி குமாரசாமி....? குமாரசாமி:- எஸ் ஸார்.. ஹெச் டி குமாரசாமி க :- ஹெச் டி... தேவ கௌடா? தேவ கௌடா மகனா நீங்க? கு:- ஹி ஹி .. ஆமாம் ஸார் க:- தேசிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்தாரே ... கு :- கரெக்ட் ஸார்... அவரே தான் ...ஹி.. நீங்க கேட்டீங்கன்னு அப்பா கிட்ட சொல்றேன்... க :- கேட்டேன்னு சொல்ல வேண்டாம்... ரொம்ப நாளாக தேடிக்கிட்டு இருந்தேன்னு சொல்லுங்க.. கு :- ஸார்.. க :- ஆமாம் மிஸ்டர் குமாரசாமி.. தேடிக்கிட்டு தான் இருந்தேன்... கு :- புரியவில்லை ஸார்... க :- 1996 ல நான் குஜராத் மாநில பிஜேபி தலைவரா இருந்தேன்.. கு :- ஓ .. அப்படியா ஸார்.. க :- அது ஒண்ணும் ஆச்சரியமான நியூஸ் இல்லை. அந்த சமயத்தில் சுரேஷ் மேதா தலைமையில் பிஜேபி அரசு இருந்தது. உட்கட்சி தகராறு. சங்கர் சிங் வகேலா ... கு :- தெரியும் ஸார்.. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி.... க :- கரெக்ட் அவர் தான்... அப்போ பிஜேபியை உடைச்சாரு . ஆனால் எங்களுக்கு மெஜாரிட்டி இருந்தது... அப்படியும் உங்க அப்பா சட்ட சபையை முடக்கி .. எங்க கவர்மெண்ட கலைச்சிட்டாரு .. கு :- ஐய்யோ ... க - உங்களுக்கே அதிர்ச்சியா இருக்கு இல்லை? அந்த சமயத்தில் எங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்? கையில் இருந்த ஆட்சி பறிபோகும் கஷ்டத்தை உங்களால் பீல் பண்ண முடியுமா? கு :- நிச்சயமாக ஸார்.. ரொம்ப கஷ்டம் தான் ஸார்.. க :- அதே மாதிரியான ஒரு கஷ்டம் தேவ கௌடா அனுபவிக்கும் போது பார்க்க ஆசைப்பட்டு தேடிக்கிட்டு இருந்தேன் மிஸ்டர் குமாரசாமி... கு :-

 • Sudarsanr - Muscat,ஓமன்

  இதை எழுத வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் எழுதுகிறேன்.. ஆளுநர் கான்+கிராஸ் கூட்டை ஆட்சி அமைக்க அழைப்பதே சிறந்தது. அப்போதுதான் இவர்களின் ஆட்சி தரத்தை மக்கள் உணர்வார்கள். மீண்டும் தேர்தல் வந்தால் பிஜேபி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க இயலும்..

 • Anand - chennai,இந்தியா

  எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் ....

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  அவராகவே ஒன்றும் செய்யமாட்டார் ....அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மத்தியில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருப்பர்.

 • abu - chennai,இந்தியா

  கவர்னர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி, ஜனாதிபதி எல்லாம் பிஜேபி... உங்களுக்கு ஞாயம் கிடைக்க, கிடைத்தால் வாழ்த்துகள்...

 • Mariadoss E - Trichy,இந்தியா

  தவறு செய்ய போகிறார்? வேற என்ன சொல்ல .... தாமதிக்க தாமதிக்க ஜன நாயக படுகொலை, குதிரை பேரம் தான் நடக்க போகுது...கவர்னர் துணையோடு .....

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  கவர்னர் நீண்ட அரசியல் பாரம்பர்யம் கொண்டவர் என்பதால் சரியான முடிவெடுத்து குமாரசாமியை பதவியேற்க அழைத்தால் அது அவருக்கு சிறப்பு சேர்க்கும்.

 • POPCORN - Chennai ,இந்தியா

  கோவா வில் 2 ஆம் இடம் பெற்ற கட்சி போல் கர்நாடகாவில் 3 ஆம் இடம் பெற்ற கட்சியை அழைக்க வேண்டும்

 • Panangudiyan - MUMBAI,இந்தியா

  எப்படியாவது, என்ன செய்த்தாவது, தாமரை மலர்ந்தே தீருமா? மகிழ்ச்சி

 • kandhan. - chennai,இந்தியா

  சபாஷ் சரியான போட்டி இதுதான் தேவை , மக்கள் நலனை விட ஆட்சியை பிடிப்பதுதான் முக்கியம் என்று இருக்கிறார்கள் இது நியாயமா ???இது ஜனநாயகமா>>>>???சிந்தியுங்கள் மக்களே கந்தன் சென்னை

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  மரியாதையாக எங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்...... எங்களது வேண்டுகோளை மீறி பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால், வேறு வழியின்றி எங்களது எம்எல்ஏ.,க்கள் சிலரும் கவர்னரது முடிவை ஆதரிக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.....

 • Rajan - chennai,இந்தியா

  இதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது., அதாவது., இரு முதலமைச்சர் வேட்பாளரையும் சட்டசபைக்கு அழையுங்கள்., யார் அதிக எண்ணிக்கையை காண்பிக்கிறாரோ அவர் தான் முதலமைச்சர். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  என்ன செய்வார் ? MLA எல்லோரும் ஆளுக்கு 100 கோடி வாங்கியாச்சு என்று செய்தி போனதும் பிஜேபியை ஆட்சி அமைக்க கூப்பிடுவார் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement