Advertisement

பா.ஜ.,வை தடுக்க காங்.,3 திட்டங்கள்

பெங்களூரு : கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பா.ஜ., மஜத கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் நாங்கள் பா.ஜ.,விடம் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்களை இழுப்போம். பாஜ.,வில் இருந்து வெளியேற சில எம்.எல்.ஏக்கள் தயாராக உள்ளனர் என பா.ஜ.,விற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்நிலையில், கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி அமைப்பதை தடுக்க காங்., தீவிர முனைப்பு காட்டி வருகிறது. எடியூரப்பா ஏற்கனவே 2 முறை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார். அதற்கான எம்எல்ஏ.,க்கள் ஆதரவு கடிதத்தையும் கொடுத்து விட்டு வந்துள்ளார். ஒருவேளை பா.ஜ.,வின் கோரிக்கையை ஏற்று ஆட்சி அமைக்க எடியூரப்பாவை கவர்னர் அழைத்தால், அடுத்தகட்டமாக 3 நடவடிக்கைகளில் இறங்க காங்., திட்டமிட்டுள்ளது.


காங்.,ன் 3 திட்டங்கள் :

* பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னரை அழைத்தால் அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.


* ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் அழைத்துச் சென்று கவர்னர் முன் ஆஜர்படுத்துவது.


* ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இந்த பிரச்னையை கொண்டு சென்று, ஜனாதிபதி முன்பு ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை ஆஜர்படுத்துவது.இதனிடையே, கவர்னரை மீண்டும் சந்திக்க காங்கிரஸ் கட்சி சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கப்படும் போது, 78 எம்எல்ஏக்களை கவர்னர் முன் நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, 70 எம்எல்ஏக்கள் கையெழுத்து போட்ட கடிதத்தையும் வழங்க முடிவு செய்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (76)

 • Siva - Aruvankadu,இந்தியா

  மோடி ஜி இந்த யுகத்தின் தலைவர்...... இந்தியா முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது

 • கைப்புள்ள - nj,இந்தியா

  தான் செத்து சுண்ணாம்பானாலும் பரவாயில்லை பா.ஜ.க வை கொன்றால் போதும் என்கிற அளவுக்கு வெறி புடிச்சு சுத்துகிறது இந்த காங்கிரஸ். அதனால்தான் ரெண்டு சீட்டு வாங்கின குமாரசாமியிடம் பிச்சைக்காரனை போல் அடிமை ஆனாலும் பரவாயில்லை என்று, அவனை கூட்டிட்டு வந்து ஆட்சி அமைக்க விடுவோம் என்று ஜனநாயகத்தை கொலை செய்கிறது. காங்கிரஸ் ஒரு மக்கள் விரோத கட்சி என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும். தனக்கு புடிக்கவில்லை என்றால், தனக்கு உபயோகம் இல்லை என்றால் மக்களை கொலை செய்ய கூட தயங்காது இந்த காங்கிரஸ் என்பது ஏற்கனவே தமிழர்களை கொன்றதில் நிரூபணம் ஆனது. இப்பொழுது தன்னால் முடியவில்லை என்றதும் கர்நாடக மக்களையும் கழுத்தறுத்து பழி தீர்க்க பார்க்கிறது இந்த பாழாய் போன காங்கிரஸ். என்றுதான் இந்த காங்கிரஸ் சனியன் நாட்டை விட்டு ஒழியுமோ?

 • sankaseshan - mumbai,இந்தியா

  நம்ம ஊரிலும் ஒருவர் 99 MLA களை வைத்து கொண்டு மெஜாரிட்டியை நிரூபிக்காமல் மையினாரிட்டி அரசை நடத்தியது நியாபகத்துக்கு வருகிறது

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : 29 தொகுதிகளில் டெபாசிட்-ஐ இழந்த பாஜக 12 தொகுதிகளில் 5000 க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது தொகுதிகள்: சர்வணபிலகோலா 7,506 மகடி 4,379 ராம நகம் 4,837 கனகபுரா 6,213 மளவள்ளி 8,372 மட்டூர் 3,948 மெலுகோட்டே 1,587 ஸ்ரீரங்கபட்னா 11,326 நாக மங்களா 1,781 கிருஷ்ண ராஜபட்டே 3,839 அர்சிகிரி 25,258 ஹோலெநரசிபூர் 1,781 அர்கல்குட் 18,982 புலிகேசி நகர் 9,479 பெரியபட்னா 4047 கிருஷ்ணராஜநகரா 2,515 தேவனகளி 9,799 கோளார் 12,230 முல்பகள் 4,906 ஸ்ரீனிவஸ்பூர் 1,544 சிந்தாமணி 1,961 சித்லக்ஹத்தா 3,596 சிக்கபல்லப்பூர் 5,576 பெகபல்லி 4,140 கௌரிபிந்தனூர் 35,579 மதுகிரி 2, 333 பவகடா 9,668 சிர்ஸ் 6,469 கோட்டகிரி 11,102

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  Bjp secured only 30% vote and cong plus jd took more than 60%. we should follow what arun jetley tweeted on goa and other recent election

 • Vijay - Chennai,இந்தியா

  காங்கிரஸ் நடத்திய ஜனநாயக படுகொலைகள் 2005 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 30 இடங்களை கைபற்றி இருந்தது அன் கூட்டணி கட்சியான JDU 6 இடங்களை கைபற்றி இருந்தது எதிரணியில் காங்கிரஸ் 9 இடங்களையும் கூட்டணிகட்சியான JMM 17 இடங்களையும் கைபற்றியது மீதமிருந்த சுயேட்சைகளில் 5 பாஜகவை ஆதரித்தனர் 36+5 = 41 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அனைவரிடமும் ஒப்புதல் கையொப்பம் பெற்று ஆளுனரிடம் அளித்தது பாஜக அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் வகையில் ஆளுனர் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் Sr பொம்மை வழக்கினௌ தீர்ப்பின் படி 1. தனி பெரும்பான்மையான கட்சி - பாஜக 2. தனி பெரும் Pre Poll கூட்டணி பாஜக - JDU 3. தனிப்பெரும் Post Poll கூட்டணி பாஜக + JDU+ Independents இந்த மூன்றுமே பாஜகவிற்கு சாதகமாகியிருந்தும் இந்த ஜனநாயக கொலையை அரங்கேற்றியது காங்கிரஸ் அதன் பின்னர் நடந்தது தான் இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்பு பக்கங்கள் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி முன்னர் MLA க்களை அணிவகுப்பு நடத்த பாஜக திட்டமிடுகிறது ஜார்கண்ட் ரான்சி விமானநிலையத்தில் இருந்து டெல்லி செல்லயிருந்த விமானத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் இருந்தன இதையறிந்த JMM - Congress குண்டர்படை துணைமுதல்வர் தலைமையில் விமானநிலைய்த்திற்கு வந்து கிளம்ப தயாரான விமானத்தை நிறுத்தி பாஜக- JDS கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 5 யேட்சை MLA க்களை களவாட முயன்றனர் ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த தரங்கெட்ட அரசியலை முன்னரே யூகித்த பாஜக அந்த 5 எம்எல்ஏ க்களையும் ஜார்க்கண்ட் அண்டை மாநிலமான மேற்கு வங்த்துக்கு அனுப்பியிருந்தனர் அப்பொழுது மேற்கு வங்கத்தில் Communist ஆட்சி அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கமுடியுமா?? மேற்குவங்க போலீஸ் காங்கிரஸ் குண்டர்களுக்கு சாதகமாகிவிட்டது என்பதை உணர்ந்த பாஜக அந்த 5 பேரையும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் ஒரிசாவிற்கு சாலைமார்க்கமாக அழைத்து சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி அழைத்துச் சென்று ஜனாதிபதி முன்னிலையில் அணிவகுப்பு நடத்தி முறைகேடாக அமைக்கபட்ட காங்கிரஸ் ஆட்சியை கலைத்து பாஜக ஆட்சி நிலைநாட்டப்பட்டது இந்த ஜனநாயக அசிகங்களை நடத்தி கொண்டிருந்த அன்னைறைய மைனாரிட்டி மத்திய காங்கிரஸ் அரசை தாங்கிபிடித்துக் கொண்டிருந்த கம்னுயிஸ்ட் களும் நம்ம தமிழக கட்சிகளான மதிமுக விசிக பாமக போன்ற கட்சிகள் நமக்கு இன்று ஜனநாயத்தை பற்றி பாடமெடுப்பதுதான் காலக் கொடுமை

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  நல்ல விஷயத்தை கூட தப்பான முறையில செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது புற்று கட்சியே. சனா நாயக கொலையை எல்லாம் பத்தி பேசுற அருகதையே இல்லாத கட்சி ரெண்டுன்னா அது எங்க புற்று கட்சியும் திருட்டு கட்சியும்தான். இப்போ உங்களுக்குத்தான் பயம். எங்களுக்கு விட்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு. உங்களுக்கு விடவும் பிடிக்கவும் எதுவுமே இல்லை. மோடியின் பிஜேபி upgraded version . வாஜபேயி பிஜேபி பேசிக் வெர்சன். சும்மா அதிருதா பெற சொன்னா. அதுதான் மோடி. இப்போ, எதுவுமே செய்யாம உங்களை அப்பிடியே விட்டுட்டா கூட அதுவும் நாங்கதான் முடிவு செய்யணும். நீங்க இப்போ புற்று கட்சிக்கு காரியம் பண்ணுற கடைசி காட்சி ஓடிக்கிட்டு இருக்கு. காந்தியால் செய்ய முடியாத நல்ல 'காரியத்தை' தாயும் மகனும் செஞ்சு போற பாதைக்கு புண்ணியம் தேடுங்கள். பப்புதான் புற்று கட்சியின் கடைசி இளவல். இங்க எங்க சுடலை. உங்களால ஒண்ணுமே செய்ய முடியாது. அப்பிடியே ஏதாவது செய்ய முடிஞ்சால், அது நாங்க உங்கள செய்ய விட்டதாகத்தான் இருக்கும். ஏன்னா, சாகப்போறவனை கொல்லாமல் சாகவிடுவது. புரியலையா, நீங்க ஏதாவது செஞ்சா அது உங்களுக்கு உரிமையை இழந்த இந்துக்கள் கொடுக்கிற கடைசி வாய்ப்பு - தற்கொலை செஞ்சுக்கலாம் அப்பிடின்னு. கும்ஸ் க்கு கழுவி விட்டு அந்த பாத புண்ணிய நீரை குடிச்சி கொஞ்சோண்டு உங்க பாவத்தை கழுவிக்கலாம். ஆனால், அதுக்கு மோடிஜி உங்களை மன்னிக்கணும். உங்க பாஷையிலே அவரு மரண வியாபாரி. அதுனால, மன்னிக்கிறது அல்லது தண்டிக்கிறது இரண்டும் அவரோட சாய்ஸ். ரொம்ப திமிரா, அகம்பாவமா தெரியுமே. எத்தனை கேசு அவரு மேல போட்டீங்க. அப்போயெல்லாம்இந்த அகம்பாவம் தெரியலேல்ல. கடவுள் நின்னு கொல்லும். ஒடனே எங்களுக்கும் இது பொருந்தும்னு கோஷம் போடுவீங்க. தன்னலம் இல்லாமல் செய்த எந்த செயலும் செய்தவனை ஒருபோதும் பாதிக்காது. புரியலையா? நீங்க செஞ்ச எல்லா விஷயமும் உங்க சொந்த லாபத்துக்காக. மோடிஜிக்கு நாட்டு நலன் மட்டுமே நோக்கம். சோ அடிக்கடி சொல்லுவாரு, இந்த புற்று கட்சி அழியக்கூடாது, அது ஒரு தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் னு. உண்மைதான். ஆனால், நீங்க தனி கொடி, மத பிரிப்பு, மத ஓட்டுன்னு போயி அடிப்படை நோக்கத்தையே காலி பண்ணீட்டிங்க. ஆக,திரு சோ வின் ஆன்மா எங்களை மன்னிக்கணும். புற்று கட்சி தன்னுடைய இருப்புக்கான உண்மையை எதிர்த்து செயல்பட்டதால் மோடிஜி உங்களுக்கு மன்னிப்பு வழங்குவது ரொம்ப கஷ்டம், வேண்டிக்கோங்க. கவர்னருக்கு ரெண்டு சட்ட ரிதியான சரிசமமான வாய்ப்பு. ஒன்னு, பெரிய கட்சியை அழைப்பது. ரெண்டாவது மெஜாரிட்டி உள்ளவர்களை அழைப்பது. இது ரெண்டுமே அவருக்கு சட்டம் கொடுத்துள்ள உரிமை. நீங்க .............கூட பண்ண முடியாது. அவரு பிஜேபி யோட ஆளுதான். என்ன செய்ய. அவருக்கு எது சரின்னு படுதோ அதை செய்யலாம். உச்ச கோர்ட்டும் தலையிடாது. ஓட்டுக்காக கோயில் போன நீங்க இப்போவும் ஒருக்கா போய்ட்டு வாங்க. அதுதான் பரிகாரம் , அது பரிதாபமும் கூட. வரலாறு எப்போதுமே திரும்பி தாக்கும். உலக வரலாறை படிச்சு பாருங்க. கடவுளை தவிர புற்று கட்சிக்கு வாய்ப்பே இல்லை.போங்க. நடிக்காம, உண்மையா மனசு உருகி வேண்டுங்க. கெடச்சா உங்களுக்கு. கெடைக்கலீன்னா நாட்டுக்கு. புற்று கட்சிக்கு இப்போதான் சன நாயகம்னா என்னனு லேசா புடிபடுது. ஸிரோ லாஸ் , நிலக்கரி, நேஷனல் ஹெரால்ட். நரசிம்ம ராவ் அவர்களை தொரத்திவிட்டது, அவசர நிலை பிரகடனம், மொரார்ஜி தேசாயின் மிக அருமையான ஆட்சியை கவுத்தது, நூத்திபத்திமூணு உறுப்பினரோட ஆட்சிக்கு வந்தது, அறுபது வருசமா காவேரி பிரச்னையை ஊற போட்டது, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றத்தை அனுமதிச்சு, அவங்க ஓட்டை ஆட்டை போட்டபோது, உங்கள காப்பாத்திக்க , கட்டுமரத்தை அவுத்து விட்டது, அப்போவெல்லாம் ஜனநாயகம் நினைவில் வரலையா? இனி வரும்.

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  2019 பார்லி தேர்தலில் இப்படி நிலைமை ஏற்பட்டால் என்னவாகும் குமாரசாமியின் கதையை காங்கிரஸ் முடித்து விடும்.

 • Mal - Madurai,இந்தியா

  Congress has lost its brain. Either it's bjp rule or re-election. Congress is really stupid to think that when people of Karnataka have given their verdict in favour of BJP( with their majority seats).... If congress brings in Kumaraswamy who has only 38/222 just to oppose BJP they are degrading themselves. People will make sure that congress wont get even the 78 mark next time... This election with its twist in the in the evening has showed public how low congress can stoop.... God has made congress bad face known to public.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "தீய சக்திங்கள" தலதூக்கெ உடாமெ செய்யணும்... அப்பெதான் இந்தியா முளுசா, ஒண்ணா இருக்கும்...

 • K.Palanivelu - Toronto,கனடா

  பார்க்கப்போனால் ம.ஜ.த.வைவிட காங்கிரஸ்தான் அதிக எண்ணிக்கையில் வென்று அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை பெற்றுள்ளது.இவ்விரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதாக இருந்தால் அதிக உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸிலிருந்துதான் முதலமைச்சர் நியாயப்படி தேர்வு செய்ய வேண்டும்.ஆனால் பி.ஜெ.பி மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் காங்கிரஸ், தங்களில் ஒருவர் முதலமைச்சர் ஆகாவிடினும் பரவாயில்லை என்ற கெட்டஎண்ணத்துடன் அப்பதவியை ம.ஜ.த வுக்கு அளித்துள்ளது.காங்கிரசின் உள்நோக்கமே ம.ஜ.த வுடன் எக்காரணத்தைக்கொண்டும் பி.ஜெ.பி.இனைந்து மந்திரிசபை அமைக்கக்கூடாது என்பதே.ஆகையால் சூழ்ச்சியை சூழ்ச்சியால்தான் பி.ஜெ.பி.வென்று மந்திரிசபை அமைக்கவேண்டும்.

 • G Mahalingam - Delhi,இந்தியா

  More of the Karnataka Political Story : You need not score 100 to be successful in life. All you need is 35 . Time and history has proven that the guy who score 35% is happier than who score distinction. Karnataka situation currently. 38 marks 1st Rank, 78 Marks, 2nd Rank, 104 3rd Rank

 • Karikalan Govind - Chennai,இந்தியா

  காலச்சக்கரம் எப்படி சுழல்கிறது. 1996ல் குஜராத்தில் 120+ MLA க்களுடன் BJP ஆட்சியில் இருந்தது.Congress எதிர்க் கட்சி. BJP அதிருப்தி குழு தலைவராக வகேலா இருந்தார். அவருக்கு 28 பேர் ஆதரவு.காங்கிரஸ் இவர்களை பயன்படுத்தி சட்டசபையில் அமளி செய்து ஆட்சியை கவிழ்க்க முயன்றது. சபாநாயகர் எதிர்க்கட்சியினரை சஸ்பென்ட் செய்து முயற்சியை தடுத்து விட்டார். அப்போது மத்தியில் தேவகௌடா பிரதமர். குஜராத் கவர்னர் முந்தைய மத்திய காங்கிரஸால் நியமிக்கப்பட்டவர். அவர் சட்டசபையில் நடந்த அமளியை சட்டம் ஒழுங்கு கேடு என்று கூறி ஆட்சியை கலைக்க பரிந்துரைத்தார். பிரதமர் அதை ஏற்று ஆட்சியை கலைத்தார். பிறகு வகேலா தலைமையில் ஓராண்டு ஆட்சி. இந்த ஆட்சிக்கும் காங்கிரஸ் ஆதரவை திரும்ப பெற தேர்தல் வந்தது. தேர்தலில் BJP வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இப்போது சுவாரஸ்யம் என்னவென்றால், மேற்கண்ட காலத்தில் குஜராத் BJP கட்சி தலைவராக இருந்தவர் வாஜுபாய் வாலா. அவர் தான் இப்போது கர்நாடகா கவர்னர். தேவகௌடாவும் காங்கிரஸும் அவரிடம் உத்தரவு கோரும் நிலை.

 • Raja - mumbai,இந்தியா

  is there no native for this type of awkward incidents?. There is an anti-defection law but the law enforcing machinery is biased and failed

 • Ramachandran Madambakkam - Chennai,இந்தியா

  78 எம் எல் ஏக்களை வைத்து 38 எம் எல் ஏக்கள் உள்ள கட்சியின் காலில் காங்கிரஸ் மேலிடம் விழுவதை தன்மானமுள்ள காங்கிரஸ் எம் எல் ஏக்கள் எப்படி பொறுத்துக்கொள்வார்கள்.

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பிஜேபி யை ஏன் காங்கிரஸ் தடுக்க வேண்டும், பிஜேபி தான் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை தடுக்க முட்டுக்கட்டை போடுகிறது......

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  கர்நாடக கவர்னர் பிஜேபி யை ஆட்சி அமைக்க இன்று அழைக்கிறார்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஆக .....மொத்தம் பிஜேபி யும் ஒரு சாக்கடை என்பது உறுதியாகி உள்ளது.. அவர்களுக்கு தமிழ் நாடு கொடுக்கும் treatment தான் மிக சரி...தமிழர்கள் தான் மொத்த இந்தியாவையும் பிஜேபி யிடமிருந்தும் மோடியிடமிருந்தும் காப்பாற்ற போகிறார்கள்..

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  உங்களோட மூணு திட்டமும் ரொம்ப மொக்கையா இருக்கு....... "நான் ஆணையிட்டால்" ன்னு இப்போ வந்த ஒரு திரைப்படம்......அதுல நாலாவதா ஒரு திட்டம் சொல்லியிருப்பாங்க...... ரொம்பவே வித்யாசமான திட்டம் அது.....

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மஜத ஆட்சி அமைக்கலாம், லோக்சபா தேர்தலுக்குள் காங்கிரஸ் கவிழ்த்து விடும் . லோக்சபாத்தேர்தலுடன் மீண்டும் சட்ட மன்ற தேர்தல் நடத்தலாம்.

 • Karthik TVR - Tiruvarur,இந்தியா

  அதான் ஒரே பதட்டமா இருக்கா

 • puratchiyalan - Nagercoil,இந்தியா

  தமிழ்நாட்டில் காமராஜர் கூறிய விச ஜந்துக்கள் இந்தியாவில் பாஜக வடிவில் உள்ளது. தலை கீழ் நின்றாலும் பாஜக ஆட்சி அமைக்கும் அல்லது கட்சிகளை உடைத்து நொறுக்கும். பிஜேபி திருட்டு நரி கூட்டம்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  "எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் நாங்கள் பா.ஜ.,விடம் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்களை இழுப்போம்". "பா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி". இவனையெல்லாம் காங்கிரஸ் முதன் மந்திரியாக துடிக்கின்றது??????அறிவற்ற பேச்சு

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அதான் சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் மேல் நம்பிக்கை இல்லை என்று உதவி ஜனாதிபதியிடமும், உதவி ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டிலும் மாறி மாறி மகஜர் கொடுத்துவந்துள்ள நிலையில், இந்த கர்நாடக ஆட்சி பிரச்சனைக்கு ஜனாதிபதியிடமோ, அல்லது உச்ச நீதிமன்றத்திடமோ கோரிக்கை எழுப்ப முடியுமா?

 • abu - chennai,இந்தியா

  கவர்னர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி, ஜனாதிபதி எல்லாம் பிஜேபி... உங்களுக்கு ஞாயம் கிடைக்க, கிடைத்தால் வாழ்த்துகள்...

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  நீதியை நிலை நாட்ட காங்கிரஸ் தன்னுடைய முழு சக்தியையும் திரட்ட வேண்டியுள்ளது .... பிஜேபி யின் பண பலத்திற்கு முன்னால் இது எடுபடுமா என்பது சந்தேகம் தான் ..?

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  கர்நாடகத்தின் வைகோவானார் சித்தராமையா ஸ்டாலினை கருணாநிதி முன்னிலை படுத்துவதை எதிர்த்து வெளியேறி தனிகட்சி தொடங்கி பலரை தற்கொலை செய்ய வைத்து மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்க வைகோ துடிப்பது போல் தேவகெளடா தன் மகன் குமாரசாமி யை முன்னிலை படுத்துவதை எதிர்த்து கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த சித்தராமையா இன்று குமாரசாமி யை முதல்வர் என்கிறார் இது தான் காலத்தின் கோலம்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  மூணு திட்டமும் வேஸ்ட்

 • Sahayam - cHENNAI,இந்தியா

  இந்த முறை விடாதீங்க அவங்க பதவி வெறி பிடிச்சி அலைகிறார்கள்

 • RGOPAL -

  அப்ப 8 எம்எல்ஏ க்க ள் பாஜக விற்கு தாவி விட்டனரா

 • raja - Kanchipuram,இந்தியா

  தமிழ்நாட்டில் காமராஜர் கூறிய விச ஜந்துக்கள் இந்தியாவில் பாஜக வடிவில் உள்ளது. தலை கீழ் நின்றாலும் பாஜக ஆட்சி அமைக்கும் அல்லது கட்சிகளை உடைத்து நொறுக்கும்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This is waste and useless statement by HD Kumaraswamy. He can't pull out any MLA from BJP camp as they are well disciplined and more attachment with their party and trusted lieutenants to their party. The Congress and JD (S) parties MLAs can be very easily purchased by hefty amount.Nowadays such political changes and events are taking place frequently in all states. .All states are playing such games when no party is in majority to form government .So as in Karnataka also now.All will be settled down gradually and calm and peace will be restored once again in coming days.

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  ஆகா. மக்களுக்கு சேவை செய்ய போட்டி போட்டுக்கொண்டு படாத பாடுபடும் நமது கட்சி மற்றும் தலைவர்களின் சேவை மனப்பான்மையை பாருங்கள்.

 • sethu - Chennai,இந்தியா

  119 எம் பி களை வைத்துக்கொண்டு சோனியா பிரதமர் பதவி வேணும்னு கேடடார்களே அப்போது யாரும் சுப்ரீம் கோட்டிற்கு சொல்லவில்லையே ,எல்லாம் வாடிக்கனின் வேலையாகத்தான் இருக்கும்.

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  மூடர்களே, அதிருப்தி MLA என்று உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்று ஆராய வில்லையா? ம ஜ த உறுப்பினர்களுக்கு காங்கிரசுடன் கூட்டணி சேர விருப்பமில்லை என்று தெரிந்த பிறகு, நீ ஏன் காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறாய்? சரி ஆட்சி அமைத்தாலும் எவ்வளவு காலம் காங்கிரஸ் ஆதரிக்கும்? மூடனே குமாரசாமி, காங்கிரஸ் வரலாற்றை பார், ஆதரவு கொடுத்து விட்டு ஈரம் காய்வதற்குள் கவிழ்க்கும் ஒரு துரோக கட்சியே காங்கிரஸ் கட்சி. விரைவில் உன் உறுப்பினரகளை விலைபேசி காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்பது என்ன நிச்சயம்?

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  ஹஹஹா... இப்பவே குமாரசாமிக்கு மரண பயம் வந்துடுச்சு. அடிமை கான்கிராஸ் 3 திட்டம் போட்டால் தலைவன் அமீத்ஷா இந்நேரம் 300 திட்டம் போட்டிறுப்பாரு. குமாரசாமிக்கு கட்டாயம் குல்பி ஐஸ் தான். Wait and watch..... அதகளம் ஆரம்பம்.....

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  இன்னும் மூணை சேர்த்துக்கோங்கடா...திப்பு சுல்தானுக்கு செத்தப்போறவும் எம் எல் ஏ பதவி குடுக்கணும் ...கர்நாடகத்துக்கு தனி கொடி கேட்டதால் சித்தனுக்கு ரெண்டு எம் எல் ஏ ன்னு கவுண்ட் பண்ணனும்... லிங்காயத்து தனி மதம் ன்னு தீய கொளுத்தி போட்டதினால எங்க கச்சி தலைவன் ப்புவுக்கு ஒரு எம் எல் ஏ பதவி குடுக்கணும் ....ன்னு....இப்படியெல்லாம் கேட்டா ஒங்க எம் எல் ஏ கவுண்ட் கூடிரும்..

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  எல்லா ஆளும் எங்க ஆள் தான் ஒன்னும் செய்யமுடியாது

 • yila - Nellai,இந்தியா

  சபாஷ்....சரியான போட்டி... இப்படியே முன்னேறுங்க... எதிரியை வீழ்த்தி விடலாம்... அவங்களுக்கு பிரச்சனைகளை உண்டுபண்ண மட்டும்தான் தெரியும்....தீர்வு கண்டுபிடிக்க தெரியாது....இதுதான் வரலாறு

 • Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா

  முற்பகல் செய்தது (காங்கிரஸ்) பிற்பகல் விளையும். பிஜேபிக்கு கற்றுக்கொடுத்து காங்கிரஸ்...

 • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

  மூனு திட்டமும் பயனளிக்காமல் மூக்குடை கொடுத்து ஆட்சியை தக்க வைக்க காங்கிரசை விட கிரிமினலாக பிஜேபி செயல்படும் என்பது 200% உறுதி.. நீதிமன்றம் கவர்னர் இரண்டும் அவர்களது கைப்பிடிக்குள்..எனவே இந்நேரம் ஒரு குரூப்பே உட்கார்ந்து என்ன என்ன காரணம் காட்டி தட்டிக்கழிக்கலாம் லூசில் விட்டு ஆற போட்டு எதிர்வினை இல்லாமல் செய்யலாம் என்பதை தீவீரமாக ஆராய்ந்து அதை வரைந்திருப்பார்கள்...பிஜேபி கிரிமினல் நம்பர் ஒன்...இனி இந்தியா மீதமும் காலி...

 • Sheik - Doha,கத்தார்

  BJP ஒரு பெரிய திருடன் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கவர்னர் ஜனாதிபதி உச்ச கோர்ட் எல்லாம் காவி ஆட்கள் தான் அதனால நியாயம் கிடைக்காது . இதற்கு பதிலா வீடு வீடாக சென்று பிஜேபி மோசடிகளை அமபலப்படுத்தி பிரச்சாரம் செய்யுங்கள், எப்படி கனிம கொள்ளையர்கள் தான் பிஜேபி என்று உண்மையை பரப்புங்கள் . 2019 பிஜேபி MP எல்லாம் படு தோல்வி அடைவார்கள் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement