Advertisement

கொரிய அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை சஸ்பெண்ட்டா?

சியோல்: வட கொரியா மற்றும் தென்கொரியா இருநாட்டு அரசு பிரதிநிதிகள் இன்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவிருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன்னும், , தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ளஅமைதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு ஒப்புக்கொண்டனர்.இ

சஸ்பெண்ட்




ரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கைஒன்றை வெளியிட்டனர். இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக் கொண்டு உள்ளன” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (மே.16) வட, தென்கொரியா அரச பிரதிநிதிகள் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தென்கொரியா , அமெரிக்க ராணுவ போர் ஒத்திகை நடத்தியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.




Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • WE ARE INDIAN - Chennai,இந்தியா

    நான் தான் அப்பவே சொன்னேனே. நடக்க இருந்த இடம் ராசி அப்படி. உருப்படாதுன்னு சொன்னேனே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement