Advertisement

மக்களிடம் குறை கேட்க போறேன்: பயணம் துவங்கும் கமல் அறிவிப்பு

துாத்துக்குடி: ''மக்கள் குறைகளை நானாவது கேட்கிறேன்,'' என, நேற்று துாத்துக்குடியில் கமலஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், தென் மாவட்டங்களில் இன்று முதல், மூன்று நாட்கள் கட்சி பயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியிலிருந்து இன்று பயணத்தை துவக்குவதற்காக, நேற்று
மதியம் துாத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து காரில்கன்னியாகுமரி சென்றார்.


அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மக்களையும், மக்கள் நீதி மையம் கட்சி உறுப்பினர்களையும் சந்திப்பதுதான் இந்த பயணத்தின் நோக்கம். இதில், மக்கள் அவர்களின் குறைகளைச் சொன்னால், கண்டிப்பாக கேட்பேன். யாராவது ஒருவர் கேட்கத் தானே வேண்டும். நானாவது அவர்களிடம் குறைகள் கேட்கிறேன்.


ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதியை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தி வைத்திருப்பதே, மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. போராடும்
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை நிறுத்த ஆவண செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த போராட்டம் தொடரதான் செய்யும். மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு, மக்கள் நீதி மையத்தின் ஆதரவு என்றுமே உண்டு. இவ்வாறு கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • amuthan - karaikudi,இந்தியா

  அண்ணே...சரக்கு எல்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது.....

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  ஒருவன் நல்லது செய்ய நினைத்தாலும் அவனை எதிர்க்க ஒரு மூடர் கூடம் முளைத்து விடும், காமராசரை தோற்கடித்த தமிழகம் அல்லவா.......

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நல்லது செய்ய நினைக்கிறார் , அவ்வளவு சீக்கிரத்தில் செய்ய விட்டுவிடுவார்களா நம்மவர்கள். மக்கள் தான் இந்த ஊழல் கலகங்களை ஒழித்து புதிய நல்லவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

 • Mahendiran - chennai,இந்தியா

  Good People always support for you...

 • Mahendiran - chennai,இந்தியா

  குட் லக் sir

 • sankar - trichy,இந்தியா

  கவுதமி இடம் குறை கேட்பீர்களா

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒன்று முதல் மந்திரியோ, மந்திரியோ atleast ஒரு எம்.எல்.வாக இருந்தால் சொல்வது ஏதோ ஏற்றுக்கொள்ளப்படும், மொதல்லே போயி கவுதமிக்கு நீ பணம் பாக்கியாம் அந்த குறையை தீர் முதலில். ஏதோ உளறவேண்டும் என்று உளறுகின்றார் இவர்.

 • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

  வேகாத வெயில்ல இவர் காமடி பன்றாப்புல ஆனா என்ன சிரிப்பு தான் வரல்ல

 • mindum vasantham - madurai,இந்தியா

  Pathiriyar makan othayil nikkiran mothamma vanthu seinga la

 • mindum vasantham - madurai,இந்தியா

  Let me tell it practically,till now it was mgr or jaya who were the one who stopped national parties from entering tamil nadu,we have a large hindu population and they earned trust from them ,still no hate for muslims,any poor muslim can easily approach them.You guys plan to destroy admk planning to a rabble rouser in their place it wont work,seeman is claiming jaya is from karnataka ,isnt that stupid jaya is tamil brahmin with roots from trichy with her mother settled in kannada for living that doesnt make her no less tamil,suppose if I am a thevar,dalit or nadar settled in australia for living does it make my child an australian.Leave aside these there should be a leader who should have good will of hindus as well in current political space if growth of national parties needs to be stopped ,I cant think of any one beyond rajini or vijaykanth to fill the space now,former is healthy and active still,I will vote for vijaykanth as well if he stands in my constituency madurai.let us be wise and make a better tamil nadu not a fanatic one

 • krishnan - Chennai,இந்தியா

  இன்னும் களத்தில் இறங்கி போராட வேண்டும். பேச்சை குறைச்சு செயலில் ஈடுபடுங்க. சினிமாவும் நிசமும் ஒன்றல்ல.

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  எங்க கவுதமி?

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Mr.Kamal is not doing any thing properly.Till now he was concentrated his mind on Cauvery water issue by meeting the Tamil nadu farmers and also giving statement as again going to talk with people in Big Boss TV programme and now switched over to Thooththugudi Sterlit issue and going to hear the Kuraigal from the people and also from his party nirvagigal.The people are in confusion and dilemma about his Dassa avadaram film style function.I don't know what he is going to do and how to sort out the problem of our state if he comes to power in our state in future.

 • Ramesh - chennai,இந்தியா

  அலையடிப்பா உடம்பு கெட்டுப்போகும். நாங்க வாசகர் பக்கம் எழுதுறோம். கேட்டு வாங்கிக்க 1.ஊழல்.வங்கி நஷ்டம்,டப்பா govt பஸ்,குடி தண்ணீர் கஷ்ட்டம்.

 • தமிழ் netizen - Chennai,இந்தியா

  இன்னிக்கு நியூஸ் பேப்பர்ல வருவதற்கு ஒரு பிட்ட போட்டாச்சு .. மக்களுக்கு கொஞ்சம் டைம் பாஸ்... இந்த செய்திக்கு வேறு ஒரு முக்கியத்துவமும் இல்லை.

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  யாரப்பா நீ? இவ்வளவு நாளா எங்க திரிஞ்ச? திடீர்ன்னு பெரிய மீசையா வச்சு கெட்டப்ப மாத்துற, திடீர்ன்னு குறை கேக்குறேங்குற, எல்லாரும் வாங்க கூடி பேசலாம்கிற? என்ன வேணும் உனக்கு? முதல்வராகணுமா? எங்களையெல்லாம் பாத்தா உனக்கு எப்படி இருக்கு?

 • vbs manian - hyderabad,இந்தியா

  இவர் காமெடிக்கு அளவே இல்லை

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  மானம் கெட்ட தமிழ்நாடு ......

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  உங்களை புரிஞ்சுக்கவே முடியலையே நீங்க நல்லவரா?..... இல்ல........... கெட்டவரா?

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  தமிழக மக்களிடம் குறையை தவிர வேற என்ன இருக்கு அதைத்தானே உங்களை போன்ற அரசியல் வாதிகள் அவர்களுக்கு தொடர்ந்து தருகிறீகள்.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கேட்பவராக இல்லாமல், குறைகளை நீக்கும் தீர்வுகளையும் கூறுங்கள்.

 • Sundar - Chennai,இந்தியா

  அரசியல் வியாபாரம் துவங்கிய கமால் என்ன ஆகாயத்திலிருந்து குதித்தாரா அல்லது பூமியைப் பிளந்து வந்தாரா இத்தனை நாள் மக்கள் குறைகள் தெரியாமல் இருக்க?

 • Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா

  கமல் புரிந்து பேசுகிறாரா இல்லை புரியாமல் பேசுகிறாரா? இவர் அவங்க குறைகளை கேட்டு என்ன செய்ய போகிறார். என்ன பதவியில் இருக்கிறார். என்ன தீர்வு காணமுடியும். இவர் சொன்னால் எடப்பாடி கேட்க போகிறாரா? மக்கள் தங்களுக்கு நிதி வேண்டும் என்றால் அள்ளி கொடுக்க போகிறாரா? இவரே சினிமாவில் மார்க்கெட் போய் விளம்பரம்-டிவி நிகழ்ச்சி என்று ஒட்டி கொண்டு இருக்கிறார்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  குறைகளை மட்டும் கேட்டு என்னையா புண்ணியம்? கிழவிங்க தான் தங்கள் குறைகளை பக்கத்துக்கு வீட்டு கிழவிகளிடம் கூடி பேசி சொல்லி விடுமே........ குறைகளை யார் களைய போறா அப்படிங்கிறது தான் முடியம்...............

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  குறைகள் என்றால் பலவிதத்துலேயும் டார்ச்சர் பின்னும் விதமாயிருக்குமே கமல் நீர் பொறுமையா ஹேண்டில் பண்ணனும் அரசியலிலே மெயின் ஸ்விச் பொறுமை அபத்தமா அபஸ்மாரமா கேட்க்கும் நபர்களை சமாளிக்கவேண்டுமே முடியுமா மோடியைப்போல பொறுமையா இருக்கமுடியுமா ?????/அவரையே பொறுமையிழக்கவச்சானே ராஹுலு எவ்ளோகேவலமா பேசிண்டுருக்கான் ,பதவியே இல்லே அந்த நபர் ஆனால்பெசும் பேச்சுக்களை கேட்டு நான் அடையுவேன் ஆத்திரம் ஆனால் மோடிகண்டுக்காமலே போயிண்டுருக்காரே அதுபோல எந்த விமரிசனமும் உன்னை பாதிக்காமல் இருக்கவேண்டும் , கரெக்ட்டா சொல்றதென்றால் எருமை மாட்டுமேல மலை கொட்டிஆப்பள் என்பேன் ஓகே உங்களுக்கு நீங்க வாழ்ந்துணருக்கும் வாழ்க்கை வேறு ஆனால் பொதுவாழ்க்கை என்கிறான் பொது ஜனம் களுக்கு எவ்ளோ பிரச்சினைகள் தெரியுமோ அன்றாடம் சாப்பாட்டுலேந்து ராவு தூங்க்போவும் வரை பிரச்சினைகளேதான் பாவம் காலை எழும்போது என்ன சமையல் ப்ரெகஃஆஸ்தி செய்யணும் னு துவங்கி ராவுலே சாப்டுட்டு தூங்கும்போதுபுர்சன் முட்டாக்குடிச்சுட்டு வந்துகாரணமே இல்லாது மொத்துவானே அதெல்லாம் தெரியுமா ????/பல வீடுகளில் பொண்ணுகளின் காயமேதான் சாப்பாட்டுக்கும் பிள்ளைகள்படிக்கவும் (டாஸ்மாக் உபாயம் 80$ஆண்கள் குடிகாரணுக்கள் என்று சர்வே சொல்றது குடியால் செத்து விதவைகள் ஆனா பொண்ணுகள் கஷ்டம் தெரியுமாசாமி ?வீடுகளில் வேலை செய்துட்டு அவா தரும் மிச்சம் மீதியை கொண்டாந்து பிள்ளைகள் வயத்தை நிரப்பி பள்ளிக்கு அனுப்பும் பொண்ணுகள் நிலைமை தெரியுமாயா ??வேலை செய்யும் வீடுகளுக்கு ஓடணும் சித்த தாமதமானால் எஜமானிகள் பேசும் இழிசொல்லுகள் இருக்கே கடவுளே எதனால் இவ்ளோ கொடூரம் என்று தோணும் அவாளும் இல்லாமையால் கௌரவமான இருக்கணும்னுதான் வேலைக்குவரங்க கல்வி இல்லீங்க அதுவும் மைனஸ் பாயிண்ட் வெளிநாடுகளில் வீடுகளை வேளைக்கு வரும் பெண்கள் ஜாம்னு கார்லே வாங்க காரின் திக்கில் வாக்குவம் க்ளீனரிலேந்து எல்லாம் இருக்கும் ப்லீஸ்ச்சுன்னு கிளீன் செய்வாங்கபோயிண்டே இருப்பாங்க 3மணிநேரம் க்கு 90 $என்று வங்கின்னு போயின்நெஇருக்காங்க யாரும் அவளை மெய்ட் செர்வாண்ட் என்று என்னவேமுடியாது அவ்ளோ நீட்டா இருக்காங்க ஆங்கிலம் தேய்த்து பலரும் நல்ல காலரா அழகாவும் இருக்காங்க நம்ம ஊர்கள் போல குப்பம் தமிழ் பேசிண்டு வாயிலே புகையிலை அதக்கிண்டு வெத்தலை மெண்ணுண்டு தலையே பெரிய கொண்டாய் அதுலே பூ வேறு இருக்கும் ,பாவமாயிருக்கும் , என் வீட்டுலே வேலைக்கு ஒரு திருநங்கை ஹெல்பேராக இருந்தார் மேஜர் அறுவை ஆனதால் வச்சுண்டேன் , அவர் அவ்ளோ நன்னா வேலை செய்வார் பேசவே மாட்டார் வருவார் வேலைகள் முடிச்சதும் நான் தேறும் காலை உணவு சாப்டுட்டு போயிடுவார் அன்பான மனுஷி நான் என் வேலைகள் நானேதான் செய்துக்கவேண்டும் என்று எண்ணுவேன் மூன்றுமாதம் இருந்தார் பிறகு நானே செய்யத்துக ஆரம்பிச்சேன் அதுபோல நம்ம வேலைகள் நாமே செய்துண்டால் என்னாத்துக்கு மெய்ட் வச்சுக்கணும் என்பது என் கொள்கை வீடு பெரியதாக இருந்தால் கிளீனிங் ப்ராப்லம் தான் வீட்டுலே எல்லோரும் ஒரு வேலை என்று செய்தால்போதுமே நிச்சயம் வீடு கிளீன் ஆகா இருக்குமே சிறு குடும்பம்னா ரெண்டுபேட் ரூம் பிளாட் போதுமே அதெல்லாம் இல்லாது வீண் டாம்பீகமா வீட்டை வச்சுண்டு எல்லாத்துக்கும் வேலைக்கு நபர்கள் வச்சுண்டு உடம்புபெருத்து சொபாலே முடங்கணுமா குப்பை டிவி பார்த்துன்னு , ஆனால் ஒரு நடிகனா நீர் எப்படியும் வாழ்ந்துருக்கலாம் உங்களை நாடிகள்=ன் என்றுதான் மக்கள் பார்க்குறாங்கmgr சிவாஜி ஜெயா மனோரமா இவள் எல்லாம் நடிக்க என்று தான் விரும்பினார்கள் மக்கள் என்ற ரசிகர்கள் இப்போ நீரும் ரஜினியும் varel நேரிலே பார்ப்போம்னு முந்தி அடிப்பானுக விஜயகாந் வந்தார் அவர் முன்கோபம் உலகப்பிரசித்தம் அதுனாலே அவர் அரசியல் ஸ்டில் ஆஹா இருக்கு டைரக்ட் பண்ண ஒரு ஆள் வேண்டும் நீங்க பேசும் வசன எழுத ஒரு நபர் வேண்டும் இது சினிமாலே நெஜத்துலே அப்படியில்லீங்க எவனோ எழுதித்தரும் அபத்தத்தை கேனத்தனமா பேசிண்டு நிக்குறாங்க ராகுல் அதுபோல ஆவாம ருந்தால் ஓகே , ஆனாலும் நீங்கல்லாம் சி எம் ஆவோனுமா

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  முட்டாள் கமல்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மய்யம் - மையலில் இருந்து விடுபடவில்லை போலும்... கோமாளிகள் கூடாரம்...

 • kumaresan - Petaling Jaya,மலேஷியா

  அப்பு கமல் என்ன செய்கிறீர் நீர் ? மக்களிடம் குறை கேட்கிறீர்? நீர் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியா? ஜனநாயகத்தின் அடிப்படை என்ன வென்று புரியாமல், அரசியல் ஆதாயம் தேட இதனை நீர் செய்ய முயல்கிறீர் . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஜனநாயக முறைப்படி கொடுக்கப்பட்ட காலம் 5 ஆண்டுகள். இதற்குள்ளாக ஏன் பொறுமை இன்றி இதனை செய்யணும்? உமக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் அப்பு? மக்கள் அறிவில்லாமல் குறிப்பிட்ட கட்சிக்கு மஜுரிட்டி வாக்கு அளிக்கவில்லை என்பதனை நீர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நீர் என்ன தற்பொழுதைய ஆளும் கட்சி என்ற நினைப்பா அல்லது அடுத்த முதல்வர் என்று மக்களால் முடிவு செய்ய பட்ட ஒன்று என்ற நினைப்பா? போ அப்பு போ , முதலில் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற எம் ஜி ஆர் போன்ற தலைவனாக ஆக முயற்சி செய்யும்

 • subramanian - Mumbai,இந்தியா

  and do what after that?? A big stupid joker.

 • JIGMONEY - Chennai,இந்தியா

  மக்களிடம் அது மட்டும் தான் இருக்கிறது நிறை கேட்க வேண்டும் என்றால் நாட்டில் உள்ள அரசியல் வாதிகளிடம் கேட்டு அறியலாம்

 • krishrish - New York,யூ.எஸ்.ஏ

  குறை கேட்டு நீ என்ன செய்ய போறே...இத்தனை நாள் குறை இருந்தபோது எங்க போன?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  வாழ்த்துக்கள். ஆனால் காவேரிக்காக நல்லகண்ணு தலைமையில் கமல் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தை, மற்ற கட்சியினர் வேண்டுமென்றே புறக்கணித்துவிடும் வாய்ப்பு உள்ளது. கூட்டத்திற்கு யாரும் வரவில்லை என்று, காமெடியன் ஆக்கிவிடுவார்கள். மற்ற கட்சியினரை கூட்டுவதை விட, கமல் நேரடியாக விவசாயிகளை சந்திப்பது நல்லது. அதே மாதிரி கர்நாடக விவசாயிகளையும் சந்திப்பதும் நல்லது. அரசியல்வாதிகள் தான், தங்கள் பொழைப்பிற்காக கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகளை பிரித்து வைத்துள்ளார்கள். தமிழகத்தின் பிரச்சனைகளை கர்நாடகாவிற்கும் எடுத்து செல்வதும், விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதும் கூட ஒரு சில ஆதரவு குரல்களை எதிர் தரப்பில் இருந்தும் எழுப்பும். இதில் மனிதன் மட்டுமின்றி, பிற வாயில்லா ஜீவன்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, கர்நாடகாரர்களுக்கும் சொல்ல வேண்டியது நமது கடமை. நமது உரிமை என்பது மட்டுமின்றி, மற்ற ஜீவன்களின் வாழ்வுரிமையும் காவேரி ஆற்றில் சம்பந்தப்பட்டுள்ளது. காவேரி தண்ணீர் பற்றாக்குறைக்கு அடிப்படை காரணம் குடகு மலையில் உள்ள மரங்களை வெட்டும் மாபியா கும்பலை கர்நாடக அரசு தடுக்க வேண்டிய அவசியத்தையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். கடல் தண்ணீர் சுத்திகரிப்போம் என்பது, சாப்பிடுவதற்கு பதில் வெறும் வைட்டமின் மாத்திரைகளை உண்டு உயிர் வாழுங்கள் என்று சொல்வதற்கு சமம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement