Advertisement

கடலில் குளித்த மாணவர்கள் மாயம்

அண்ணாசதுக்கம்: மெரினா கடலில் மாயமான, மாணவர்கள் இருவரை, கடலோர காவல் படை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்தவர், நரேன் நிவாஷ், 20; கல்லுாரி மாணவன். அவரது நண்பன், அகமது மற்றும் யுவராஜ். அகமது, பள்ளி மாணவன்.
மூவரும் நேற்று, அண்ணாசதுக்கம் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே, மெரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது மூவரும், திடீரென கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த அங்கிருந்தோர், யுவராஜை மீட்டனர். மற்ற இருவரும், கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த, அண்ணாசதுக்கம் போலீசார், கடலில் மாயமான இருவரையும், கடலோர காவல் படை உதவியுடன் தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement