Advertisement

கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி

சென்னை: வருங்கால மாமியாருடன், வாலிபர் ஒருவர், போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன், தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாங்காடு, சார்லஸ் நகரைச் சேர்ந்தவர், கிருஷ்ணமூர்த்தி, 26. இவருக்கும், பக்கத்து வீட்டுக்காரர், தங்கமணி என்பவருக்கும், நேற்று முன்தினம் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி, மாங்காடு போலீசில் புகார் அளித்தார்; நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர், வருங்கால மாமியார், சாந்தியுடன், வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன், நேற்று, பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
போலீசார் இருவரையும் காப்பாற்றி, வீட்டிற்கு அனுப்பினர். தங்கமணியிடம் விசாரணை நடக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement