Advertisement

கர்நாடகாவில் காங்., - ம.ஜ.த., கட்சிகள் உடையும்! தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையில்லை

பெங்களூரு : கர்நாடகா சட்டசபை தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வின், எடியூரப்பா, ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார். அந்த கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, எட்டு இடங்களே தேவைப்படும் நிலையில், காங்., - ம.ஜ.த., கட்சிகள் உடையும் என, தெரிகிறது. இதனால், ம.ஜ.த., தலைவர், குமாரசாமியை பகடை காயாக்கி, குளிர்காய நினைக்கும், காங்., எண்ணம் தவிடுபொடியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில், மொத்தமுள்ள, 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை, மாநிலத்தின், 38 மையங்களில் நேற்று நடந்தது. 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்ததால், 112 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, அரியணை ஏறத் தகுதி பெறும்.


நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். பா.ஜ., 112 முதல், 115 இடங்கள் வரை முன்னிலை வகிப்பதாக, தகவல்கள் வெளியாகின. ஆளும், காங்., 70க்கும் குறைவான தொகுதிகளிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மதச்சார்பற்ற ஜனதா தளம் எனப்படும், ம.ஜ.த., 40க்கும் குறைவான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.


தலைகீழ் :
'தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து விடுவோம்' என, பா.ஜ.,வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சமயத்தில், நிலைமை தலைகீழாக மாறியது. நேற்று இரவு நிலவரப்படி, பா.ஜ., 104; காங்., 78; ம.ஜ.த., 37; பகுஜன் சமாஜ், 1; சுயேச்சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.


எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகா அரசியலில் பரபரப்பு தொற்றியது. ஆட்சியை இழப்பது உறுதி என்ற நிலையில், காங்., தடாலென கீழே இறங்கியது. ஆட்சியை, ம.ஜ.த.,விடம் தாரைவார்க்க தயாரானது. இதன்பின், கர்நாடக அரசியலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.

பெங்களூரில், சித்தராமையா, காங்., தலைவர்கள், குலாம்நபி ஆசாத், வேணுகோபால், மாநில தலைவர், பரமேஸ்வர் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி, காங்., தலைவர், ராகுலிடம் தொலைபேசியில் பேசினர். 'ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து, குமாரசாமியை முதல்வராக்குங்கள்...' என, ராகுல் கூறினார்.


காங்., முன்னாள் தலைவர், சோனியா, தேவ கவுடாவுடன் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தார். நிபந்தனை இன்றி, ம.ஜ.த.,வுக்கு ஆதரவு தருவதாக, முதல்வர், சித்தராமையா அதிகாரபூர்வமாக அறிவித்தார்; தன் ராஜினாமா கடிதத்தை, மாலை, 4:00 மணிக்கு, கவர்னர், வஜுபாய் வாலாவை சந்தித்து கொடுத்தார். இதன்பின், காங்கிரசின் ஆதரவை ஏற்பதாக, குமாரசாமி அறிவித்தார்.


சந்திப்பு :
இதற்கிடையே, முன்னாள் பிரதமர், தேவ கவுடாவை, பா.ஜ., தரப்பில், மூத்த தலைவர், ஆர்.அசோக் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர், அனந்தகுமார், மாநில மேலிட பொறுப்பாளர், முரளிதர ராவ், எம்.பி., ஷோபா ஆகியோருடன், நேற்று மாலை, 5:00 மணிக்கு, கவர்னரை சந்தித்த, பா.ஜ.,வின் எடியூரப்பா, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக, பா.ஜ., உருவெடுத்துள்ளதால், ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி, கடிதம் கொடுத்தார்.


அக்கடிதத்தில், ஆட்சி அமைத்து, ஏழு நாட்களில் பெரும்பான்மை நிரூபிப்பதாகவும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, ம.ஜ.த., மாநில தலைவர், குமாரசாமி, காங்கிரசின் சித்தராமையா, பரமேஸ்வர், டி.கே.சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல் போன்ற தலைவர்கள் கூட்டாக சென்று, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க தேவையான, 112 இடங்களுக்கு மேலாக, தங்கள் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதால், ம.ஜ.த., தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.


இதையடுத்து, கவர்னரின் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்தே, கர்நாடகாவில் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறும் சூழல் உருவாகியுள்ளது. மரபுப்படி, தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வை ஆட்சி அமைக்க, கவர்னர், வஜுபாய் வாலா அழைப்பு விடுக்கலாம்.


பா.ஜ.,வின் எடியூரப்பா, முதல்வராக பதவியேற்று ஆட்சி அமைத்தால், அவருக்கு, மேலும், எட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அதற்கு, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறலாம். இல்லாவிடில், காங்., அல்லது, ம.ஜ.த.,வை உடைத்து, அவற்றின், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெறலாம்.


இந்த முயற்சிக்கு, கட்சி தாவல் தடை சட்டம் என்ற ஆபத்தும் உள்ளது. இதிலிருந்து தப்பிக்க, அந்த கட்சிகளின் மூன்றில் ஒரு பங்கு, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற்றாக வேண்டும். மற்றொரு முயற்சியாக, காங்., அல்லது, ம.ஜ.த., கட்சிகளின், எம்.எல்.ஏ.,க்கள் சிலரை ராஜினாமா செய்ய வைத்து, பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை குறைக்கலாம்.


ஆட்சி அமைப்பதற்காக, பா.ஜ., மேலிடம் இந்த முயற்சியில் ஈடுபடுமா அல்லது குமாரசாமிக்கு முதல்வர் பதவி ஆசை காட்டி, குளிர்காய நினைக்கும் காங்கிரசின் தந்திரம் வெற்றி பெறுமா... என்பது, அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.


இப்படியும் நடக்கலாம்! கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளை ஒதுக்கி, அடுத்த இடத்தை பிடித்த கட்சியை, ஆட்சி அமைக்க அழைத்த வரலாறு உண்டு. அதேபோல, கர்நாடகாவில், ம.ஜ.த.,வை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ம.ஜ.த.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், காங்., ஆதரவுடன் எளிதில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும். ம.ஜ.த.,வுக்கு, பா.ஜ., ஆதரவு அளிக்கும் வாய்ப்பும் உள்ளது. இது, மிக அரிய வாய்ப்பாக கருதப்பட்டாலும், மாறி வரும் அரசியல் உலகில் எதுவும் நிகழ்வது சாத்தியமே. ம.ஜ.த.,வை, பா.ஜ., ஏற்கனவே அணுகியுள்ளது. இருப்பினும், காங்., ஆதரவை ஏற்பதாக, ம.ஜ.த., அறிவித்துள்ளது. 'தற்போதுள்ள சூழ்நிலையில், ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு பெறும் கட்சி, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்' என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (138)

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஹாஹாஹா எனக்கு நல்லா செம ஜோக்கா இருக்குது இங்க. டெய்லியும் வந்து இந்த மோடி எதிர்ப்பாளர்கள் வயிறு எரிஞ்சு எரிஞ்சு கத்துவதை பார்க்கும் போது செம ஆனந்தமா இருக்கு. அது, இது, எது ன்னு எந்த ஒரு உண்மையும் இல்லாத கருத்துக்களை சொல்லி சொல்லி மாஞ்சு போவதை பார்க்கும் போது, அடடா இவனுகளுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது, இப்புடி வீணா போறானுகளேன்னு நினைக்கிறப்போ கொஞ்சம் வேதனையாவும் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன பண்றது? உலகத்துல எல்லோரையும் நாம திருத்த முடியாதே. ஒரு நாலு முட்டாள், நாலு வயித்தெரிச்ச புடிச்சவன் இருக்கத்தானே செய்வான்? அதுக்கு நாம என்ன பண்றது? என்ன நான் சொல்றது?

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  இந்திய நாட்டுக்கு காங்கிரஸ் செய்த பாவங்கள் நீங்க பல யுகங்கள் தேவைப்படும் .

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  காங்கிரசை நாலா பக்கமும் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள்

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  எங்கும் தாமரை மலரட்டும் .வாழ்த்துக்கள் மோடி ஜி

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  வாழ்க பாஜக வாழ்க பாரதம்

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  தேர்தலில் 38 சதவிகித ஒட்டு வாங்கிய காங்கிரஸ் தான் இந்த சூழ்நிலையில் மிக பெரிய கட்சி ...அதன் கூட 18 .4 சதவிகித வோட்டு மத சார்பற்ற ஜனத்தளம் சேரும்போது அதன் வலிமை 56 . 4 சதவிகிதமாக மாறுகிறது ... அந்த அடிப்படையில் காங்கிரஸ் அமைக்கும் கூட்டணிக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ... 36 சதவிகிதம் வாங்கிய பிஜேபி யை கவர்னர் அழைத்தால் அது ஜனநாயக கொலை , மட்டுமன்றி மற்ற கட்சிகளை உடைத்து விலை பேசி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ரெட்டி சகோதர்களின் ஊழல் சாம்ராஜ்யம் மேலும் விரிவடைய தான் வழி வகுக்கும் ...

 • Ashanmugam - kuppamma,இந்தியா

  BJP can grab eight MLAs by throwing crores of money but not to allow minority party SDs who secured just one third of BJP seats(38) at any cost. Otherwise what is prevailing in Tamil nadu that will happen at Karnataka if minority SDS formed government. For example: a student who secured 1170marks could not get in reputed college but a student who secured 800 marks hot seat in reputed college, how does feel meritorious student who could not get seat in reputed college however he secure 1170marks that is fate of yediyurrappa.

 • Ashanmugam - kuppamma,இந்தியா

  It is not a great victory for BJP to secure 104 seats indepently but to form government is challengeable task for BJP whose effort should not go to minority king maker rather they should be" kooja maker".

 • balakrishnan - coimbatore,இந்தியா

  கரடியா கத்தி ஓட்டு கேட்ட பிரதமருக்கு மக்கள் அங்கீகரிக்க வில்லை, சில பல தொகுதிகளை தேர்ந்தெடுத்து பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து வெற்றி பெற முடியவில்லை என்கிற ஆத்திரம் பி.ஜெ.பி க்கு., இனி தங்களது திறமையை காட்ட துவங்குவார்கள், என்னென்ன குறுக்கு வழிகள் இருக்கிறதோ அத்தனை குறுக்கு வழிகளிலும் ஜனநாயக முறையில், கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து உள்ளே நுழைந்து அனைத்து முறைகேடான வழிகளிலும் செல்வார்கள், இது தெரிந்த விஷயம் தான், தேவைப்பட்டால் சட்ட விதிமுறைகளையும் மாற்றுவார்கள்

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  நாங்க எதுக்கு நேர்மையா அரசியல் செய்யணும்? பெட்டிகளை குடுத்தால் கட்சி மாறி காலில் விழ பலர் உள்ளனர். பொய்களை சொன்னால் நம்பி ஏமாற ஏமாளி மக்கள் ஒரு சாரார் உள்ளனர். பகத்சிங்கை நேரு சந்திக்கவில்லை என்று சொன்னால் அதையும் நம்புவார்கள். ஜெனெரல் திம்மையா நேருவால் அவமதிக்கப்பட்டார் என்றால் அதையும் நம்புவார்கள். உச்சகட்டமாக இந்தியா முழுக்க எல்லா கிராமங்களிலும் மின்வசதி செய்துவிட்டோம் என்று சொன்னால் அதையும் நம்புவார்கள். இப்படிப்பட்ட ஏமாளிகளிடம் வாக்குகளை வாங்குவது கடினம் அல்லவே. போதாக்குறைக்கு நீதித்துறை, ஊடகம் என்று எல்லாவற்றையும் களங்கப்படுத்தி எங்கள்வசம் வளைத்துவிட்டோம். இனி எங்களுக்கு என்ன கவலை??? ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத தமிழகத்தை நாங்கள் ஆளவில்லையா? வெறும் இரண்டு உறுப்பினர்களை மட்டும் வைத்து மேகாலாயாவை நாங்கள் ஆளவில்லையா? அதை மக்கள் வேடிக்கை பார்க்கும்போது, இதற்கு மட்டும் என்ன கேள்வி? தவறு என்றார் தெரிந்தாலும் எங்கள் ஆணைப்படி செய்யும் எங்கள் ஆளுநர் மூலம் கால அவகாசம் வாங்கி, பிறகு எதிர் அணி உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் வாங்கி எப்படியும் ஆட்சி அமைப்போம். வழக்கம்போல் வேடிக்கை பாருங்கள்...

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  இந்த தேர்தலில் 29 இடங்களில் பாஜக டெபாசிட் இழந்ததை பல ஊடகங்கள் மறைத்து விட்டன. பல தொகுதிகளில் வெறும் 2000 வாக்குகளுக்கு குறைவாகவே பாஜக பெற்றுள்ளது. இந்த லட்சணத்தில் இவர்கள் எதை வைத்து மக்கள் ஆதரவு என்று மார்தட்டுகிறார்கள் என புரியவில்லை. பெட்டிகளை கொடுத்தும், எங்களோடு சேராவிட்டால் வீட்டுக்கு சிபிஐ ரெய்டு அனுப்புவோம் என்றும் பயமுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெட்கமே இன்றி வளைக்கிறார்கள். இது மக்கள் ஆதரவு பெற்ற கட்சி அல்ல. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் கட்சி.

 • suresh - covai,இந்தியா

  ஏம்பா இந்த பொழப்புக்கு நீ போயி.........

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  MLA க்களை மிரட்டும் பணி துவங்கிவிட்டது

 • Petchi Muthu - Kolwezi,டெம் ரெப் ஆப் காங்கோ

  கோவாவில் காங் 17 இடங்கள் பிஜேபி 13 இடங்கள் ஆனாலும் பிஜேபி தான் ஆட்சியில்.... மணிப்பூரில் காங் 28 இடங்கள் பிஜேபி 21 இடங்கள் ஆனாலும் பிஜேபி தான் ஆட்சியில்....மேகாலயாவில் காங் 28 இடங்கள் பிஜேபி 2 இடங்கள் ஆனாலும் பிஜேபி கூட்டணி தான் ஆட்சியில்... தமிழ்நாட்டில் பிஜேபி 0 ஆனாலும் ஆட்சி செய்வது யார்? தனிப்பெருக்கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும் அது தான் சரி...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  தலைவரே, நம்ம சிவகுமார் இருக்காருள்ளே, அதாங்க காங் கட்சி MLA, பணமுதலை, அதாங்க நாம கூட IT ரெய்டு நடத்தி சோதனை செய்து, சில பல விவரங்களை சேகரித்து தகுந்த நேரத்திற்காக காத்திருக்கோமே, இதுதாங்க நேரம், சொல்லுங்க, வழக்கு வேணுமா, கட்சியை உடைத்து ஆதரவாளர்களுடன் சேர்ந்து வெளியே வந்து பதவிக்காக அலையும் எடியை ஆதரிக்கிறாரா இல்லையா என்று கேளுங்கள், வேண்டுமானால் அவருக்கு மந்திரிப்பதவியையும் கூட அழைக்கலாம், என்ன ஆபரேஷன் ஆரம்பிக்கலாமா? சிக்கினால் பதவி, சிக்கவிட்டால் சின்னாபின்னம். ஓகே. ஆரம்பமாகட்டும், ஆட்டம்.

 • Anand - chennai,இந்தியா

  பிஜேபி ஆட்சி அமைக்கும், இல்லாவிட்டால் மறுதேர்தல் வரும்.

 • srini - chennai,இந்தியா

  காங்கிரஸ் செய்யாத கூத்துக்களா , அலங்கோலங்களா , அநீதிகளா, அகங்காரங்களா இந்த பிஜேபி செய்யப்போகிறது . காங்கிரஸ் செய்ஞ்ச பாவம் அதை கொல்கிறது. ஹிந்து சமுதாயத்திற்கு செய்த துரோகம் அதை சுடுகிறது . காங்கிரஸ் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டும்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த தேர்தலில் பிஜேபி எந்த முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. அவர்கள் ஆதரவு இல்லாமல் பிஜேபி ஆட்சி அமைக்க போகிறது. பிஜேபி கட்சியை, ஹிந்துக்களை எதிர்க்கும் எந்த இனமும் இனி அரசியலில் இருந்து ஒதுக்கப்படும். உத்தர பிரதேசத்தில் 304 பிஜேபி எம் எல் எக்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை தேர்தலிலும் அது நிறுத்தவில்லை. அது போல தான் கர்நாடகாவிலும் நடந்திருந்திருக்கிறது. இந்தியா முழுவதும் இனி இது நடக்கும். தமிழ்நாட்டிலும் அது நடக்கப்போகிறது. பொறுத்திருந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  இந்த கேடுகெட்ட அரசியல் நாத்தம், கூவத்தை விட நாறுகிறது.

 • Suri - Chennai,இந்தியா

  அது என்னவோ தானாக உடையும் என்பது போல் தினமலர் தலைப்பு. என்ன கூப்பாடு போட்டாலும் தமிழகத்தில் பிஜேபி யின் நிலைமை NOTA விற்கும் கீழே என்பதை மறந்துவிடவேண்டாம். பாவம் தமிழிசை எவ்வளவு கூப்பாடு போட்டாலும் ஒரு ராஜ்ய சபா சீட் கூட கிடைக்காது. MLA ஆவதற்கு கனவு கண்டுகொண்டே இருக்கவேண்டும். இன்னும் நிர்மலா (நீங்கள் நிர்மலாதேவியை நினைத்துகொண்டால் கம்பெனி பொறுப்பல்ல) நிலைமை இன்னும் மோசம்.என்னதான் தூக்கிப்பிடித்தாலும் சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். கோவா, மேகாலயா மற்றும் மணிப்பூர் பாவம் சும்மா விடுமா?

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இங்கு ஒரு தவறு யிருக்கிறது. இந்த கர்நாடக தேர்தலில் கான் கிராஸ் பெற்ற வாக்கு சதவீதம் 34 .8 சதவீதம் . பிஜேபி பெற்ற வாக்கு சதவீதம் 46 .4 சதவீதம் JDS பெற்ற வாக்கு சதவீதம் 16 .9 சதவீதம். இந்த கர்நாடக தேர்தலில் வாக்கு சதவீதம் மற்றும் சீட்டுகள் அதிகரித்து இருக்கும் ஒரே கட்சி பிஜேபி மட்டுமே. மற்ற இரு கட்சிகளும் வாக்கு சதவீதம் மற்றும் சீட்டுகளை இழந்து இருக்கிறது. கான் கிராஸ் 44 சீட்டுகளை இழந்து இருக்கிறது. குமார சாமி கட்சி இரண்டு சீட்டுகளை இழந்து இருக்கிறது. ஆனால் பிஜேபி 44 லி இருந்து 104 என்று அதிகரித்து இருக்கிறது. இதில் இருந்து சொல்லுங்கள் கர்நாடக மக்கள் யாரை ஆதரித்து இருக்கிறார்கள்? பிஜேபி கட்சியையா அல்லது கரையான்புற்றையா?

 • Divahar - tirunelveli,இந்தியா

  ஜனநாயகம் அல்ல.பணநாயகம் தான் ஆளுகிறது . ஜனநாயகம் செத்துவிட்டது ?

 • Rajan - chennai,இந்தியா

  அது சரி ., காங்கிரஸ் ச. ம. உ. கூட்டத்தில் 4 பேர் காணாமமுள ...கோவா போர்முலா என்று கதறும் மோடி எதிரிகள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளலாம்., அதில் எதுவுமே காங்கிரஸ் முற்காலத்தில் செய்த தகுடுத்ததோம் தான் ...வெறும் 2017, 18 வரலாறு தெரிந்த பெருமக்கள் மட்டும்தான். கொஞ்சம் பின்னாடி போங்க சார். பொய் பாருங்க வரலாரை...

 • Subramanian - chennai,இந்தியா

  ...உங்களுக்கு வெட்கமா இல்ல ....

 • Rajan - chennai,இந்தியா

  சிலர் இங்கே பா.ஜ ஆதரவாளர்கள் பேசவில்லை என்று கூவுகிறார்கள், நேற்று பா. ஜ 115 வரை முன்னணியில் இருந்தது., அப்போதெல்லாம் எல்லாரும் ஒளிந்து கொண்டு., இத்தாலிய தாய் கௌடாவுடன் கூட்டு என்றதும் தான் வெளியே வருகிறீர்கள்...மோடி ஆதரவாளர்கள் நேற்று காலை முதல் இன்று வரை கருத்துக்களை பதியவைத்து கொண்டுஇருக்கிறார்கள்...பா.ஜ வை பொறுத்தவரை அகலபாதாள தோல்விகளையும் சந்தித்துள்ளது., 23 மாநிலங்களில் வெற்றி பெரும் அளவிற்கு வளர்த்துள்ளது, ஆனா ஒன்னு ., சும்மா இருந்த அமித் ஷா வை தூண்டிவிட்டுட்டாங்க...இனி என்ன ஆவ போவுதோ காங்கிரஸ்க்கு.

 • suresh - chennai,இந்தியா

  பாலியல் ஜல்ஸா பார்ட்டி சொம்புகள் இதற்க்கு பதில் அளிக்கலாம், மேகாலயாவில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வென்று 28.5 சதவிகித வாக்குகளை பெற்றது,,,பாஜக 2 தொகுதிகளை வென்று 9.6 சதவிகித வாக்குகளை பெற்றது...பெரும்பாண்மையான மக்கள் பாஜவிற்கு எதிராக வாக்களித்து இருந்தாலும்,,,மற்ற கட்சிகளை இழுத்து காங்கிரஸ் ஆட்சியமைக்க விடாமல் தடுத்தது பாஜக,,,அப்போது அதனை சொம்புகள் தவறு என சொல்லவில்லை..மாறாக பாஜகவின் அந்த செயலை வெற்றியாக கொண்டாடினர்...கர்நாடகாவில் பாஜக 104 தொகுதிகளில் வென்றாலும்,,, பெற்ற வாக்கு சதவீதம் 36.2 ,,,,காங்கிரஸ் 78 தொகுதிகளில் வென்றாலும் பெற்ற வாக்கு சதவீதம் 38 ,,,,சீட்டுகள் அடிப்படையில் பாஜக அதிகம் என்றாலும்,,,மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கே கர்நாடக மக்கள் அதிக ஆதரவு அளித்துள்ளனர்... சட்டப்படி சதவிகிதப்படி ஆட்சி அமைக்க முடியாது என்றாலும்...மெஜாரிட்டி என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தருகிறது,,,தற்போது கேள்வி என்னவென்றால்... மேகாலயாவில் 2 வேட்பாளர் வெற்றியை கொண்டு காங்கிரேஸை விட 19 சதவிகிதம் வாக்குகள் குறைவாக பெற்று,,, காங்கிரஸ் ஆட்சியை பாஜக தடுத்து எவ்வாறு சரி ? கர்நாடகாவில் பாஜகவை விட 1.8 சதவிகிதம் வாக்குகள் அதிகம் பெற்று,,,78 வேட்பாளர்களின் வெற்றியோடு காங்கிரஸ் ,,,பாஜக ஆட்சியை தடுத்தது எவ்வாறு தவறு ? இது ஒரு மாநில ஒப்பீடு தான்...மேலும் பல மாநிலங்களில் இது போன்ற ஒப்பீடுகள் இருந்தாலும்,,, நேர்மையான காவிகள் இருந்தால்,,,இந்த ஒரு ஒப்பீட்டுக்கு பதில் அளிக்கலாம்.

 • Kailash - Chennai,இந்தியா

  மோசமான தலைப்பு

 • Rajan - chennai,இந்தியா

  விகிதாச்சார அடிப்படியில் நாம் தேர்தல் விதிமுறைகள் இல்லை.. உங்களுக்கு அபிமான (பா. ஜ. எதிர்ப்பு வெறியர்கள்) கட்சி தோற்கும் பொது மட்டும் இந்த வாதாம் வைப்பது நகைபுரியது... இந்த தேர்தலில் வித்யாசம் 1.5% வீதம் அதிகம் தான். அப்படி கணக்குப்போட்டால். குஜராத்தில் 49.1% பா ஜ., 41.4% காங்கிரஸ்.. அப்படி பார்த்தால் காங்கிரஸ் 72 ஸீட் தான் வரவேண்டும். ...2014 பொது தேர்தலில் பா.ஜ 52 % பெற்றது., காங்கிரஸ் வெறும் 8% தான்....அப்போ என்ன சொல்றீங்க?

 • Balakrishnan S - Trichy,இந்தியா

  காங்கிரஸ் சூழ்ச்சியை முறியடிக்க , BJP குதிரை/கழுதை பேரம் செய்தால் அது நியாயமே...

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ஆடிய ஆட்டம் என்ன????

 • suresh - chennai,இந்தியா

  மேகாலயாவில் காங்கிரஸ் 21 தொகுதிகளை வென்றது,,,பாஜக 2 தொகுதிகளை வென்றது, மெஜாரிட்டிக்கு 31 தொகுதிகள் தேவை....ஆனால் ஆட்சியமைத்தது பாஜக

 • suresh - chennai,இந்தியா

  நேற்றைய காலை பொழுதில் பாட்ஷாவாக வெளிவந்த கருத்துக்கள்,,,இறுதியில் சந்தானம் காமெடியாக முடிந்தது....

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  என்னங்க உங்க நியாயம் ? கோவா மணிப்பூர் மேகாலயா இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் தான் இருக்கிறது அங்கெல்லாம் ஒரு நடைமுறை கர்நாடகத்தில் மட்டும் இன்னொரு நடைமுறையா ?

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  நேற்றோ ..யாரோ ஒருவர் இங்கே" அடிச்சான் பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர்" என்றார்..இன்று.."வச்சான் பாரு ஆப்பு" என்று நிலைமை மாறி விட்டது...

 • மணிமாறன் - trichy,இந்தியா

  104 Mla க்களை வைத்திருக்கும் பிஜேபி எப்படி பெரும்பான்மையை நிரூபிக்கும்..ஆளுநரின் ஆட்டம் ஆரம்பம்..ஆனால் ஒன்று..பிஜேபி இதற்கு முன் கோவா, மணிப்பூர்,திரிபுராவில் எடுத்த அதே ஆயுதத்தால் இங்கே வீழப்போவது உறுதி... All is fair in politics..not only for BJP..but also for Congress.

 • மணிமாறன் - trichy,இந்தியா

  64 சதவீதம் பேர் பிஜேபி யை வேண்டாம் என்று தள்ளி இருக்கிறார்கள். பிஜேபி வாங்கியது 36 %.. காங்கிரஸ் 38 %.வாக்குகள்..104 சீட்டு வாங்கியும் பிஜேபியை பாயை பிராண்டை வைத்த காங்கிரசிற்கு வாழ்த்துக்கள்..ஆளுநர் ஒரு வாரம் பிஜேபி க்கு அவகாசம் கொடுத்தது தவறு..மீதி இருக்கும் 9 Mla க்களை விலைக்கு வாங்கவே இந்த அவகாசம்...அதையும் முறியடித்து பிஜேபி , ஆளுநர் முகத்தில் காங்கிரஸ் கரியை பூசும்..

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  நீங்களும் உங்க ஜனநாயகமும்.வெறும் பணநாயகம்

 • Rajan - chennai,இந்தியா

  என்னை பொறுத்தவரை இந்த ஆட்டத்தை பா.ஜ., இப்போதைக்கு ஆறப்போடுவது சிறந்தது,.நேற்று பா.ஜ. வெற்றி என்றதும் ஒரு காங்கிரஸ் தொண்டன் (மோடி எதிர்ப்பு வெறியர்கள்) கூட இங்கே கருத்து போடவில்லை. ஆனால் காங்கிரஸ் தேவா கவுடா கூட்டணி ஆட்சி என்றதும் கருத்து மழையாய் பொழிகிறது.. காங்கிரஸ் 78 இடங்கள் பெற்றும் வேறுஒருவரை முதல்வர் என்று சரண் அடைவது அவரகள் அளித்துவிட்டார்கள் என்று அர்த்தம். ..கோவாவில் பா. ஜ. செய்தது தவறு தான்., அதற்கான பலன் தான் இது என்பதை மோடியின் ஆதரவாளன் நானே ஒப்புக்கொள்கிறேன்...ஆனாலும் கர்நாடக மக்கள் காங்கிரஸ் ஆட்சியை விரும்பவில்லை என்பது எதார்த்தம். சிலர் எங்கு சொல்வது போல் குமாரசாமி முதல்வர் என்றால் ஏன் கர்நாடக மக்கள் குமாரசாமி கட்சிக்கு 70 சீட் கூட கொடுக்கவில்லை. மக்கள் ஆதரவு பா.ஜ. விற்குத்தான்... மோடி அமித் ஷா பொறுமை காத்து., இந்த சந்தர்ப்பவாத சுயநல கூட்டணியை ஆட்சி செயவிடட்டும். ஒரு இரு ஆண்டுகள் தான் (அதிகபட்சம்) ஆட்சிசெய்வர்கள்.Unconditional support என்பதெல்லாம் சாதாரண விஷயம்., எதார்த்தத்தில் சரிப்படுவராது., எனவே மோடி அமித் ஷா பொறுமை காத்தாலே போதுமானது என்பது என் கருத்து., கண்டிப்பாக 2019 மோடிக்கு வெற்றி கிடைக்கும் கர்நாடகாவில் என்பதற்கு இந்த சுயநல கூட்டணி உறுதிசெய்யும்., எனவே நீண்ட நாள் வெற்றியை மனதில் கொண்டு இந்த சிறு தோல்வியை ஒப்பு கொள்ளுங்கள்., உங்கள் மீது மக்களுக்கு அனுதாப அலை வீசும். இல்லை கட்சியை உடைப்பேன் என்றால் அது அந்த உடைக்கப்படும் கட்சி மீது மக்களுக்கு அனுதாபம் வீசும்....மோடியின் ஆதரவாளர்கள் சற்று பொறுமை காக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு சிறு வழுக்கல் தான்...நாம் மீண்டும் மத்திய பிரதேஷ்., ராஜஸ்தான் வர இருக்கும் தேர்தல்களில் எப்படி வெற்றி பெறலாம் என்று யோசிப்போம்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  விரைவில் குமாரசாமி கூவத்தூர் குமாரசாமியானாலும் ஆச்சர்யமில்லை அஞ்சு வருஷமா சுகமாயிருந்த .பல காங்கிரஸ் எம் எல் ஏக்கள் பதவிகலைக்கிறார்கள்.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  நாட்டுல உள்ள எல்லா சட்டசபையையும் கழுதை கூட்டங்களா மாத்திட்டானுங்க 'படுகுழி' பாஜகக்காரனுங்க.. கழுதை பேர வல்லுநர்கள், அரசியல் புரோக்கர்கள், கார்ப்பரேட் ஏஜெண்ட்களை வச்சு இந்திய அரசியலையே சின்னாபின்னமாக்கிட்டானுங்க..

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மஜதவின் பெரும்பாலான எம் எல் ஏக்கள் காவிரி பாயும் மாவட்டத்தவர்கள் காங் சித்தராமையா ஏற்கனவே தண்ணீர் தர மறுப்பவர். எந்த வாரியமமைத்தாலும் இருவருமே அணைகளை மறித்து தண்ணீர் விடுவதை தடுப்பார்கள்.வாரியமோ குழுவோ எதுவாயிருந்தாலும் அதன் உறுப்பினர்களை அணைகளுக்கருகே விடமாட்டார்கள் .. ஆகமொத்தம் நம்ம ஊரு மதச்சார்பற்றவர்களுக்கு மகிழ்ச்சி .விவசாயம் பாழ்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  விரைவில் அஞ்சாநெஞ்சர் சுடலை பாணியில் ரேவண்ணாவும் குமாரசாமியும் அடித்துக்கொள்ளும் திருக்காட்சியைக்காணலாம். தப்பித்தவறி இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் சித்து விடமாட்டார். ஒரே ஒரு நாள்கூட பதவியின்றி இருப்பதை கேவலமாக நினைப்பவர் அவர் .

 • Sahayam - cHENNAI,இந்தியா

  காங்கிரெஸ்ஸாவது ஒப்பான சொல்லியாச்சு. எடியூரப்பா 7 நாட்களில் எப்படி மஜுரிட்டி நிரூபிப்பார் ?? உடைப்பது யார் . யாருக்கு 8 சீட் தேவை ? யார் குதிரை பேரத்தில் இறங்குவார்கள் ?

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஜனநாயகத்திற்கு புறம்பான அத்தனை ஆயுதங்களையும் பிஜேபி கையில் எடுக்கும்.. ஊழல் அரசியலின் ஊற்றுக்கண் பிஜேபி.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இப்போதிருப்பவர்களில் பெரும்பாலானோர் பலகட்சிமாறிகள் தான் . எனவே அனைத்துக்கட்சி கூட்டாட்சி அமைக்கட்டும் .எப்படியும் வாக்குவங்கிக்காக பிரிவினைவாத அரசியல் செய்யும் திராவிஷ தமிழக வழியிலேயே போங்கள். உங்களை யார் தடுப்பது ? இனி தமிழகத்துக்கு ஒரு சொட்டு காவிரிநீர்கூட கிடைக்காது

 • R.Nagarajan - CHENNAI,இந்தியா

  'மரபுப்படி, தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வை ஆட்சி அமைக்க, கவர்னர், வஜுபாய் வாலா அழைப்பு விடுக்கலாம்.' இந்த மரபு கோவா, மேகாலயா,மணிப்பூரில் எங்கே போயிற்று. பிஜேபி நினைத்தால் எப்படியும் MLA க்களை விலைக்கு வாங்கி வோட்டு போட்ட மக்களுக்கு நாமத்தை போடுவார்கள்.

 • ருத்ரா -

  Nothing is impossible.எல்லாம் கையில் உள்ளது.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  போட்டானுங்க பாரு ஒரு போடு வாட்டாள் நாகராஜுக்கு........ மூஞ்சி அப்படியே பக்கவாதம் வந்தவன் மாதிரி திருப்பிகிட்டு போயிடுச்சு..ஏற்க்கனவே அடி வாங்குன மூஞ்சி தான்.......போங்கடா போங்க போகத்த அரசியல் செய்து மக்கள் வாழ்வை உங்கள் அரசியல் ஆசைக்கு பலிகடா ஆக்காதீங்க........இந்த காவேரி பிரச்சினையை திட்டமிட்டு காங்கிரஸ் , பா.ஜெ.க மற்றும் உதிரி கட்சிகள் அரசியல் ஆக்கி விட்டன...இது 40 வருடத்திற்கு முன்பே தீர்ந்து இருக்க வேண்டிய பிரச்சினை..........பா.ஜெ.க அரசு இப்போ கூட அதனை முழுதாக தீர்க்க விரும்பாமல் , இந்த தமிழ்நாடும் கர்நாடகமும் தன்னை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நினைப்பில் வரைவு அறிக்கையை தாக்க செய்து உள்ளது.... பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று உருப்படியாக நினைத்தால் தன்னாட்சி மிக்க அதிகாரம் கொண்ட ஆணையத்தை மத்திய அரசால் உருவாக்கி மாநிலங்களுக்கு இடையில பாகுபாடு இல்லாமல் நீரை பகிர்ந்தளிக்க இந்நேரம் வலிமை மிக்க ஆணையத்தை உருவாக்கி தந்து இருக்க முடியும்........கன்னட மக்களும் பிரச்சினையை தீர்க்க தான் விரும்புகிறார்கள் ஆனால் அரசியல் கட்சிகள் தான் பிரச்சினையை உருவாக்குகின்றன...........

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  என்னப்பா எல்லாரும் நேத்து தாம் தூம்னு குதிச்சு கருத்து போட்டீங்க.... இன்னைக்கு எல்லாரும் அப்படியே வாயடைச்சு போயி உக்காந்து இருக்கீங்க? மக்களுக்கு காங்கிரஸ் பிடிக்கல, அதே நேரத்துல பி.ஜே.பியும் பிடிக்கல.... அதனால தான் இப்படி மைனாரிட்டியில நிக்குது எல்லாம்........ இந்த காங்கிரஸ் பி.ஜே.பி ரெண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் ஓட்டு வங்கி அரசியல் செய்வதில்...ஒரே வித்தியாசம் என்னன்னா காங்கிரஸ் ஆட்சியில ஊழல் அதிகம் இருக்கும்.....பி.ஜே.பியில் ஊழல் கொஞ்சம் கம்மியா இருக்கும்.... ஆனா கர்நாடகத்தில் அப்படி இல்லை....ரெண்டுமே ஊழல் கட்சிகள் தான்.......... ரெட்டி சகோதரர்களும் எடியூரப்பாவுமே அதற்கு சாட்சி.......சரி ம.ஜ.க பக்கம் போகலாம்னா குமாரசாமி அதைவிட பெரிய ஊழல்வாதி...பாவம் கர்னாடக மக்கள் என்ன தான் செய்வாங்க? இந்த தொங்கு நிலை வரும்னு தேர்தல் முடிவுக்கு முன்னாடியே வந்த கருத்து கணிப்பு சொல்லிடுச்சு.....அடடா செயலு அவசரப்பட்டு எடியூரப்பாவுக்கு வாழ்த்து சொல்லிட்டோமேன்னு தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருக்காரு...... ராகுலும் சோனியாவும் கடுப்பில் இருப்பதாக கேள்வி..............

 • Raman - kottambatti,இந்தியா

  பாவம் என்னென்ன கதையோ சொல்லி பிச்சை எடுக்குது பிஜேபி.. பாப்போம் யார் ஆட்சி அமைக்கிறார் என்று... evm ஒழுங்கா செட் பண்ணி இருந்தா இந்த பிரச்னை இல்லையே... மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாதுன்னு கொஞ்சம் மெஷின் இல் கோல்மால் பண்ணினீர்கள். இப்போ உங்களுக்கே பிரச்னையாயிடுது

 • siriyaar - avinashi,இந்தியா

  BJP want to win 2019 they must do one more, anti dynasty force in congress and spilit congress by 2 then easy to win in rajasthan and MP. This should be the reason for splitting the congress in karnataka so that congress will be two parts here so BJP rule to continue. Breaking the congress is more important for current karnataka crisis and 2019 compor win.

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  2005 ல் சித்தராமையா ஜனதா தள கட்சியை விட்டு விலகி, பெரும் படைகளுடன் காங்கிரஸில் இணைந்தார் (தனி கட்சி ஆரம்பித்து மூடுவிழா கண்டது தனிக்கதை) 2006 டிசம்பரில் நடந்த சாமுண்டேஷ்வரி இடைத்தேர்தலில் தேவே கவுடாவின் கடுமையான பிரச்சாரத்தையும் மீறி ஜனதா தள கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். சித்தராமையாவை பழிவாங்க தேவே கௌடாவிற்கு இதுதான் தக்க தருணம். 2003 தேர்தலில் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை அமைக்கும் நிலைக்கு வந்தபோது, ​​தேவே கவுடாவின் கட்சியின் ஆதரவு தேவைப்பட்ட போது, தனக்கு பொடியாக திகழ்ந்த தனது சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணாவை ஒதுக்கி தரம் சிங்க்கை முதல்வராகச் செய்தார். அந்த தருணத்தில் குமாரசாமி தந்தையின் இனத்திற்கு எதிராக பா ஜ க வுடன் கைகோர்த்து காங்கிரஸ் ஆட்சியை கலைத்தாலும், அதே கணம் தான் சித்தராமையா ஜனதா தல கட்சியை விட்டு விலகினார். குமாரசாமி பதவியேற்றால் சித்தராமையாவை ஓரம் கட்டி அவரின் அரசியல் வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அம்ஸம் நிபந்தனையாக நிச்சயம் சேர்க்கப் பட்டிருக்கும். ஹிந்தி எதிர்ப்பு (அங்கும் நிலைமையை அறியாமல் சித்தராமையா கையாண்டார்) லிங்காயத் பிரிவினை, தனிக்கொடி இவை எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் பி.ஜே.பி பல வருடங்களாக சிரமங்களை மேற்கொண்டு மோடிக்கு பக்கபலமாக களத்தில் உழைத்து வருவது மோடிக்கு மிகப்பெரிய பலம். காங்கிரஸ் அவ்வாறு உழைக்கவில்லை, தனக்காக உழைக்கும் எந்த ஒரு இயக்கத்தையும் அது உருவாக்கிக் கொள்ளவில்லை. வாரிசு அரசியலை பின்பற்றிவருவதால் கைவசம் இருக்கும் நல்ல தலைவர்களைக்கூட இருட்டடிப்பு செய்கிறது. rss வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தேர்தல் சமயத்தில் மட்டுமே காங்கிரஸ் உழைக்க முற்படும் உத்தி கைகொடுக்கவில்லை. அடுத்த காய் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்த்தப்படும், இவர்களை சமாளிக்க எந்த யுக்தியும் மம்தாவிடம் இல்லை. மம்தா மண்ணை கவ்வப்போவது உறுதியாகிவருகிறது

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  29 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் டெபாசிட் வாங்காத AAP யை குறிப்பிட மறந்துவிட்டீர்களே

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  If Kumarasamy accepts Congress support, there will be in fight for minster posts and congress can sit idle only for a few months. Then there will be difference of opinions in ministerial allocations to them and definitely the History of Delhi which happened to AAP Kejariwal in his first Government with congress support will happen here in Karnataka also. So it is wise for Kumarasamy to support BJP, if the 5 year term to complete without any hurdles.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் அதன் விஷத்தன்மையால் ஆட்சியை இழந்தது... இப்பொழுதைய நிலை அவர்களின் விஷத்தன்மையை அதிகரிக்கலாம்...

 • ஆப்பு -

  பேசாம பா.ஜ குமாரசாமிக்கு ஆதரவு குடுத்து காங்கிரசுக்கு ஆப்படிக்கலாம். கொஞ்சநாள் கழிச்சு வெளியே வந்து குமார கவுக்கலாம். இல்லே நம்ம பன்னீரு மாதிரி துணை முதல்வராகலாம்.

 • Kit Karson - Chennai,இந்தியா

  வட மாநிலங்களில் பாலாறு தேனாறு ஓடுது என்று நம்பி பிஜேபி க்கு ஓட்டு போட்ட கர்நாடக மக்களுக்கு வாழ்த்துக்கள் காங்கிரஸ் ஊழல் கட்சிதான். ஆனா பிஜேபி அதைவிட மோசமான ஊழல் + சர்வாதிகார + மதவாத + பெண்களுக்கு பாதுகாப்பற்ற + சட்டத்தை தனக்கு ஏற்றார் போல மாற்றும் கட்சி. ஆனா எங்களுக்கு தண்ணீர் திறந்து விடமாட்டம்னு சொன்னதுக்கு , இது உங்களுக்கு கண்டிப்பா வேணும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  36.2 % வாக்குகளை பெற்று 104 சீட்டுகள். 38% வாக்குகளுடன் காங்கிரஸ் வெறும் 78 இடங்கள். காங்கிரஸ் மிகப்பெறும் வாக்கு வித்தியாசங்களில் வெற்றி பெற்று, மிக சொல்ப வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளது என்பதை தான் இந்த விவரம் காட்டுகிறது.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  உடையும் இல்லை. உடனயனும். உடைக்கணும். உடைத்து எரியனும். எப்போ இவ்வளவு தீய சிந்தனையுடன், தனக்கு ஒண்ணுமே கிடைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை, தான் செத்தாலும் பரவாயில்லை, தான் அடிமையாகி போயி கையேந்தி பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, தன் எதிரிக்கு அந்த பதவி போய் விட கூடாது என்ற கேந்தியில், காங்கிரஸ் ஓடோடி போயி எனக்கு எதுவுமே வேண்டாம், நாங்கள் அனைவரும் உங்கள் அடிமைகள், முதல்வர் யார் எனபதில் இருந்து எல்லாவற்றையும் நீங்களா முடிவு செய்யுங்கள் எஜமான் என்று குமாரசாமியின் கால்களில் விழுந்து மன்றாடினார்களோ, அந்த நிமிடமே அந்த கட்சிகள் இரண்டையும் உடைத்தாவது பா.ஜ.க அரியணை ஏறினாலும் தப்பே இல்லை.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் நடந்தார் போல கர்நாடகாவிலும் நடக்க ஏன் அனுமதிக்கக்கூடாது ? கட்சிகளை உடைப்பதும், வேறுகட்சி ஆட்களை இழுப்பதையும் விட கூட்டணி ஆட்சி மேலில்லையா ?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  பிஜேபி மட்டுமே சூழ்ச்சி, சாணக்கியத்தனம் செய்ய முடியும் என்பதல்ல, காங்கிரஸ் ம் செய்யும் என்பதை இப்போது காட்டி உள்ளது. இனி எப்படி கட்சி தாவல் விதிகளை மீறி, பிஜேபி ஆட்சியை கைப்பற்ற போகிறது என்று பார்ப்போம்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இவ்வளவு நடந்துகிட்டு இருக்கு இங்க. தேர்தல் முடிஞ்ச உடனே ஒரு கருத்து சொல்ல கூட பப்பு இங்கு இல்லை. மணிமேகலாவிடம் இருந்தும் ஒரு அறிக்கை இல்லை.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ரொம்ப இடியாப்ப சிக்கலா இருக்கே. ம்ம்ம் என்ன பண்ணலாம். ம்ம்ம் அதெல்லாம் பா.ஜ.க எப்படியும் வந்திடும்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  தோல்வியை ஒத்துக்கொள்ள காங்கிரஸ் தயாரில்லை.... கைக்கெட்டிய வெற்றியை தவற விட பா.ஜ.க. வும் முட்டாளில்லை.... அடுத்தது கட்சி உடைப்புதான்....... இப்பொழுது சிரிப்பவர்கள் அப்போது குறைகூறுவார்கள்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement