Advertisement

சிக்கலாகுமா காவிரி விவகாரம்? தேர்தல் முடிவால் புதிய அரசியல் சூழல்

'கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலை, காவிரி பிரச்னையை, மேலும் சிக்கலுக்கு ஆளாக்கலாம்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: காவிரி பிரச்னையில் எப்போதுமே சாதுர்யமாகவும், சாணக்கியத்தனமாகவும், கர்நாடக மாநில அரசியல் தலைவர்கள் இருப்பது வழக்கம். சட்டரீதியிலான சவால்கள் வந்தாலும், அசைந்துகொடுத்தது இல்லை.


வெற்றியை பாதிக்கும் :
இந்த சட்டசபைத் தேர்தலில், இந்த பிரச்னை, பா.ஜ.,வுக்கு நிச்சயம் பெரிய தலைவலியாகத்தான் இருந்தது. இது, தேர்தல் வெற்றியை நிச்சயம் பாதிக்கும் என, அம்மாநில மூத்த தலைவர்கள் அனந்த குமார், எடியூரப்பா, சதானந்த கவுடா போன்ற பலரும், பா.ஜ., தலைமையை எச்சரித்தபடி இருந்தனர்.


இதனால் தான், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வரைவு திட்டத்தை தாக்கல் செய்வதில் மிகுந்த கவனம் காட்டியது. கடும் அதிருப்தியும், விமர்சனங்களுக்கு இடையில், உச்ச நீதிமன்றத்தில், இரண்டு முறை, 'வாய்தா' வாங்கியது.


'ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டால், அதற்கு பின், ஓட்டு எண்ணிக்கை, புதிய அரசு அமைத்தல் என, பல விஷயங்களில் தான், கர்நாடக அரசியல் களம், 'பிசி'யாக இருக்கும். 'காவிரி விஷயத்தில் உணர்வுப்பூர்வமான பிரச்னைகள் தற்காலிகமாக எழாது. உடனடியாக வரைவுத் திட்டத்தை

தாக்கல் செய்யலாம்' என, உளவுத்துறையும் தெரிவித்து இருந்தது.


இதையடுத்தே, ஓட்டுப்பதிவு முடியும் வரை காத்திருந்து, அடுத்த நாளே, உச்ச நீதிமன்றத்தில், வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே, வரைவு திட்டம், தமிழகத்துக்கு சற்று சாதகமாக இருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், புதிய ஆட்சி எது என்பதில், கர்நாடக அரசியல், பரபரப்பாக இருந்தது.


இந்நிலையில் தான், தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் கிடைக்காமல், மாநில கட்சியான மதச் சார்பற்ற ஜனதா தளத்திற்கு, ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


பா.ஜ.,வை தடுக்கும் ஒரே நோக்கத்திற்காக, எந்த நிபந்தனைகளும் ஏற்க தயார் என, காங்கிரஸ் பல படிகள் கீழே இறங்கி வந்து நிற்கிறது. மதச் சார்பற்ற ஜனதா தளமோ, மாநில நலன்களுக்காக, குரல் கொடுக்கும் கட்சி.


ஓட்டு வங்கி :
குறிப்பாக, காவிரி பாயும் மைசூரு மாண்டியா உள்ளிட்ட பகுதிகள் தான், இந்த கட்சியின் ஓட்டுவங்கியாக உள்ளன. தவிர, விவசாயிகள் மத்தியிலும், பெரும் ஆதரவு உள்ள கட்சி, இது.


மற்ற தலைவர்களைப் போல அல்லாமல், தேவகவுடா, குமாரசாமி போன்றவர்கள், 'காவிரியில் தண்ணீரை தர மாட்டோம்' என, வெளிப்படையாக பலமுறை பேசியவர்கள். தமிழகத்துக்கு எதிராக, எத்தகைய கடுமையான நிலைப்பாட்டையும் எடுக்க கூடியவர்கள்.முன்னாள் பிரதமர் என்பதை மறந்து, 'காவிரி விஷயத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது' என, பிரதமர் நரேந்திர மோடியை, நேரில் சந்தித்து வலியுறுத்தியவர், தேவகவுடா, இந்த பின்னணியில், காங்கிரஸ் அல்லது பா.ஜ., ஆதரவோடு, ஆட்சி அமைக்கும் பட்சத்தில், காவிரி விவகாரத்தில் நிச்சயம், தமிழகத்தின் நியாயம் ஒருபோதும் எடுபடாது. என்ன தான், சட்டப் போராட்டம் என கூறினாலும், காவிரி விவகாரத்தில், பல ஆண்டுகளாகவே, அரசியல் அழுத்தங்கள் இருந்து வருகின்றன.


உச்ச நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகளில், இந்த அரசியல் அழுத்தங்கள், நிச்சயம், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியே வந்துள்ளது. தற்போது, காவிரி பிரச்னையில் தீவிரத் தன்மையை, எப்போதுமே பின்பற்றி வரும் மதச் சார்பற்ற ஜனதா தளம், ஒருபோதும் தன் நலனை இழக்க சம்மதிக்காது.


எனவே, வரைவுத் திட்டம், செயல் திட்டம் என, சட்டரீதியிலான நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தாலும், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலையால், காவிரி பிரச்னை மேலும் சிக்கலாகவே அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


- நமது டில்லி நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • guru - Trichy,இந்தியா

  இங்க ஊட்டில இருந்து கபினி அணைக்கு போற தண்ணிய தடுக்க ஒருத்தனுக்கு துப்பில்லை ......

 • Rohith Raja - chennai,இந்தியா

  பாஜக யோசிக்கிறது ரொம்ப சிம்பிள். தமிழன் என்னை வேண்டாம் சொல்லுறான் அவனுக்கு சுடலை குருமா கோவாலு தமிழ் தமிழ் சொல்லி இலவசம் கொடுத்து பிச்சை போடுறவன் தான் நமக்கு வேணும் என்று முடிவு பண்ணிட்டோம்.. அதே மாறி அவனும் தமிழன் வேண்டாம் என்று புறக்கணிக்கிறான் இதுல என்ன தப்பு...

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  காவேரி விஷயத்தில் புதிய சிக்கல்களை யார் உருவாக்கினாலும் அவர்களை அடிக்க வேண்டும். அதை மத்திய அரசு அனுமதிக்குமானால் அப்புறம் என்ன இந்திய இறையாண்மை? இனி பொறுப்பதற்கில்லை.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அரசு என்றாலே அது மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும்...மக்களை ஏமாற்றி வெற்றி பெற மட்டும் அல்ல...தேர்தல் முடிந்ததும் எண்ணை நிறுவனங்களின் நிலையை பார்த்தால் நாடே வெட்க்கி தலை குனிய வேண்டும்...

 • R Sanjay - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டின் தலையெழுத்து இனி அதோகதிதான்.

 • Bala - Trichy,இந்தியா

  ட்ரிபியூனல் கொண்டு வந்தது வி பி சிங் .

 • vbs manian - hyderabad,இந்தியா

  இந்த கவுடா இருக்கும் வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. இவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் உச்ச நீதி மன்றம் வாரியம் இவையெல்லாம் இவர்கள் முன்பு எடுபடாது. ஆட்சியை கலைப்பது விபரீத விளைவுகளுக்கு வழி வகுக்கும்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஒரேவழி அதுதான் நல்லவழி என்று மனத்துளே தூய்மையுடன் உச்ச நீதிமன்றம் நீதி வாங்கினால் தான் தீர்வு உண்டு இல்லேன்னா தமிழன் நிலை அந்தோ பரிதாபம் தான் எல்லாகாட்ச்சிக்காரனும் காவிரியை சொரண்டி நதியின் ஆதாரத்தையே கொள்ளை அடிச்சுக்கொடியே இருக்கணுக்களே எல்லா அரசியவியாதிகளும் அவாளின் பணவெறி என்ற கேன்சரும் உள்ள வரை காவிரிப்பிரச்சினை தான் அவாளுக்கு துருப்புசீட்டு

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  உண்மை .ஆனால் தீர்வு கூட எட்டப்படலாம் .சொல்வதற்கு இல்லை .

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இதில் என்ன பிரச்சினை? பா.ஜெ.க வுக்கு தான் சாதகம்........... உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தாவிட்டால் கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து விடலாம்......இதன் மூலம் காங்கிரஸ், ம.ஜெ.க கூட்டணி ஆட்சி அமையாமல் தடுத்து விடலாம்........அப்படியே ஒரு வருசத்துக்கு ஒட்டிவிட்டால் மக்களும் மறந்து விடுவார்கள்...அடுத்து திரும்ப தேர்தல் வச்சு பார்த்தீங்களா காவிரி விவகாரத்தை நாங்கள் தான் சுமுகமாக தீர்த்தோம் இதனால் கர்நாடகம் எந்த விதத்திலும் பாதிக்க படவில்லை என்று கூறி அங்கும் ஓட்டு விடலாம், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்த்தோம் என்று இங்கும் ஓட்டு வாங்கி விடலாம்.......ரெண்டு மாங்காய்..............

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காவிரிப்பிரச்சினையில் தேசிய நலனை முன்வைத்து அக்கறையுடன் செயல்பட்டால், திராவிடப்புளுகர்களை மிஞ்சி, பாஜக தமிழகத்தில் கூட தழைக்க வாய்ப்பு இருக்கிறது... இல்லை என்றால் தென் மாநிலங்களில் வட்டாரக்கட்சிகளின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும்...

 • JIGMONEY - Chennai,இந்தியா

  இப்படி ஒரு கேள்வி கேட்களாமா?

 • Manian - Chennai,இந்தியா

  தமிழ் இளவரசி காவேரியை, சுய நலனுக்காக ஒக்கலிகர்களுக்கு தாரை வார்த்து கொடுத்துத்தார் மஞ்சள் துண்டார். அவள் இப்போது பிரசவிக்க மட்டுமே (மழை தண்ணிர் அதிகமானால் மட்டுமே) அப்பன் வூட்டுக்கு வருவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். சொந்தம் கொண்டாடும் திருடர்கள் கழகம் அப்போது மஞ்சள் துண்டாரை தடுக்கவில்லை. எப்போதும் காங்கிரஸ் என்ற பஞ்சாயத்து இருக்கும், அப்போ இளவரசியை தூக்கியாரெல்லாம் என்று சொல்லி மு்டடாள் திராவிட தொண்டர் கூட்டத்தை மஞ்சள் துண்டார் அலட்சியமாக சம்பந்தி வூட்டுக்கு போகலை. இப்போ எல்லா திராவிட சொந்தங்களும் அழு, ஆர்ப்பாட்டம் செய்யுறானுக. இளவரசி போனவ போனதுதான். இது ஒரு ஆந்திர பொய்யனை அறிவாளி என்று ஏமாத்த திராவிட காக்காய் கதைதான்(காக்கைகள் மிகுந்த புத்திசாலி என்று ஆராச்சிகள் கூறுகின்றன.ஆனா திராவிட காக்கைகள் மட்டும் இப்படி ஏன்? இது லஞ்சத்திலேயே வளர்ந்த காக்கை கூடடம்). கர்நாடகா நரி என்றுமே புத்திசாலிதான். மணிமேகலை பாட்டி தன் குயில் குஞ்சை காப்பாத்தப் போறாராம்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  இந்த இடியாப்ப சிக்கலுக்கு எல்லாம் காரணம் நமது உச்ச நிதிமன்றம்தான் காரணம். ஒழுங்கான ஒரு உத்தரவை போடாமல், போட்ட உத்தரவை கடைபிடிக்காத கர்நாடக மற்றும் மத்திய அரசுகளை கண்டிக்காதது, ஜவ்வாக இந்த விஷயத்தை இழுத்து அடிப்பது, இப்படி பல காரணம்கள்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன தேவகவுடா தான், ட்ரிப்யூனல் கொண்டுவந்தார். அரசியல்வாதிகள் சொல்வது வேறு, செய்வது வேறு. தேவகௌடாவின் பெயரை கெடுக்க, பிஜேபி வலுவான காவேரி வாரியம் அமைக்க வாய்ப்புள்ளது. அதற்கு காங்கிரஸ் ம் தலையாட்ட வாய்ப்புள்ளது. பிஜேபி அல்லது காங்கிரஸ் ஐ விட, இது நமக்கு நல்லது. இத்தனை நாள் வரை தமிழகத்தை மாநில ஆட்சி ஆண்டதால், தமிழகம் வஞ்சிக்க பட்டது. இப்போது கர்நாடகாவின் முறை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement