Advertisement

நூலிழையில் வெற்றி: சித்தராமையா 'ஷாக்'

பெங்களூரு : கர்நாடகா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட, முதல்வர் சித்தராமையா, ஒன்றில் தோல்வியும், மற்றொன்றில், நுாலிழையில் வெற்றியும் பெற்று உள்ளதால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.


கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில், முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த தொகுதியில் முதல்வர் மீது, மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார்.அதன்படி, பாதாமி தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த தொகுதியில், பா.ஜ., சார்பில், ஸ்ரீராமுலு களம் இறக்கப்பட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா, இம்முறை, மதச் சார்பற்ற ஜனதாதளம் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.


அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பாதாமி தொகுதியில், வெறும், 1,696 ஓட்டுகள் வித்தியாசத்தில், சித்தராமையா வெற்றி பெற்று உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, பா.ஜ., வேட்பாளர், ஸ்ரீராமுலு தோல்வி அடைந்தார்.
எனினும், ரெட்டி சகோதரர்களுக்கு மிக நெருக்கமானவரான ஸ்ரீராமுலு, மொலக்கல்முறு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்ந்து 5 ஆண்டுகள், கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா, தனக்கு மிகுந்த செல்வாக்கு நிறைந்த தொகுதியாக கருதிய, சாமுண்டீஸ்வரியில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி, பாதாமி தொகுதியிலும், நுாலிழையில் வெற்றி பெற்றுள்ளது, அவரது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஹாஹாஹா எனக்கு நல்லா செம ஜோக்கா இருக்குது இங்க. டெய்லியும் வந்து இந்த மோடி எதிர்ப்பாளர்கள் வயிறு எரிஞ்சு எரிஞ்சு கத்துவதை பார்க்கும் போது செம ஆனந்தமா இருக்கு. அது, இது, எது ன்னு எந்த ஒரு உண்மையும் இல்லாத கருத்துக்களை சொல்லி சொல்லி மாஞ்சு போவதை பார்க்கும் போது, அடடா இவனுகளுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது, இப்புடி வீணா போறானுகளேன்னு நினைக்கிறப்போ கொஞ்சம் வேதனையாவும் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன பண்றது? உலகத்துல எல்லோரையும் நாம திருத்த முடியாதே. ஒரு நாலு முட்டாள், நாலு வயித்தெரிச்ச புடிச்சவன் இருக்கத்தானே செய்வான்? அதுக்கு நாம என்ன பண்றது? என்ன நான் சொல்றது?

 • ManiS -

  The big mistake by Congress is Lingayat. They should also see others mind.

 • Ramanathan Balakrishnan - chennai,இந்தியா

  புகழேந்தி நின்றாரா ? எவ்வளவு ஓட்டு வாங்கினார் ?

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  சோனியா குடும்பத்திடம் கூட்டணி வைப்போருக்கு இது மீண்டும் ஒரு எச்சரிக்கை

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  நாலா பக்கமும் காங்கிரசை மக்கள் விரட்டி அடிக்கிறார்கள் . ஐயோ பாவம்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சித்தம் கலங்கிய ராமைய்யா?????

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  சிந்துவை அரசியலிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று பிஜேபி மட்டும் இல்லை ரெட்டி சகோதரர்களின் லட்சியம் அதுவே .. அதனால் தான் ஸ்ரீ ராமுலுவை பதமியில் கொண்டு நிறுத்தத்தில் பிஜேபி சார்பில் பணத்தை வாரி இறைத்தனர் ... ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத கனிம கொள்ளையை எதிர்த்து சிடடரமைய மிக பெரிய போராட்டம் பேரணிகள் நடத்தினார் ... அதனால் அவரை ஒழிப்பது என்பது பிஜேபி , ரெட்டி சகோதரரகளின் தீராத லட்சியம் ...

 • Sanjay - Chennai,இந்தியா

  ராம் என் பெயரியிலே இருக்கிறார் என்று கூவிய போலி சித்துவிற்கு மக்கள் சாட்டையடி கொடுத்துள்ளனர்.

 • Seenu Cp - Chennai (Madras),இந்தியா

  கர்நாடகாவுல அஇஅதிமுக நோட்டாவை விட குறைவு...அழுத்தமாக பதிய வைக்கும் தினமலர். அப்படியே கொஞ்சம் தமிழகத்தில் திரும்பி பார்க்கவும்...

 • Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா

  மோடி பேச்சில் நம்பிக்கை இல்லை காங்கிரசுக்கு தலைமை இல்லை மக்களுக்கு மாநிலத்தலைவர்களை சார்த்திருப்பதை தவிர வேறு வழி இல்லை.

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  ஜித்தா ... நீ ஆடிய ஆட்டமென்ன ....? பேசிய வார்த்தையென்ன .... ?

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஹிந்துக்களோடு மோதுபவன் நிச்சயம் அழிவான் என்பதற்கு இவன் ஒரு உதாரணம்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஆணவம்..அகம்பாவம்.. தான் தான் பெரியவன் என்ற தோரணத்தோடு நடந்தவன். தன்னை அரசியல்ரீதியாக அசைக்க முடியாது என்ற ஆணவத்தினாலும் , ஹிந்துக்களை ஜாதிவாரியாக உடைத்து அதன் மூலம் தான் பிரதமரை விட பெரியவன் இந்த நாட்டின் பிரதமர் மைசூருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வரும்போது அந்த நாளில் ஹர்த்தால் என்று அறிவித்து பஸ், கடைகள், மற்றும் ஒன்றும் கூட செயல்படவிடாமல் செய்து அவமானப்படுத்தியவன். இறைவன் அளித்த தண்டனை இது. கர்நாடக அரசியலில் செல்லாக்காசு ஆகி விட்டான். இறைவன் கைவிட்டதால் அரசியலில் முழுவதுமாக ஒதுக்கப்படும் நிலையை பார்க்க போகிறோம். யாரெல்லாம் இறக்குமதி கூட்டம் தன் பக்கம் இருக்கிறது அதன் காரணமாக ஹிந்துக்களை அவமானப்படுத்தலாம், உதாசீனப்படுத்தலாம், அவர்களை வேண்டும் அளவிற்கு கொன்று குவிக்கலாம் என்று நினைக்கும் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் இந்த சித்தாராமையா ஒரு பாடமாக அமையும்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஏன் சித்து, காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிட்டு போன கதையா, நீ பாவம் ஊர் பூரா அலஞ்சு திரிஞ்சு ஐயோ அம்மான்னு கத்தி கத்தி கொண்டு வந்தா, அப்பாடா ரொம்ப நன்றின்னு அவன் புடுங்கி தின்னுட்டு போயிட்டான்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  சித்து நீயி, நீ முதலமைச்சர் ஆகிறதுக்கு பாடுபட்டதை விட இப்போ குமாரசாமிக்கு பாடுபடுவதுதான் ஜாஸ்தியாக இருக்கிறது. உன்னோட நெலம பாத்தியா

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஆனா சித்து உன்னை கொண்டு போயி குமாரசாமி வீட்ல நிக்க வெச்ச்சு இருக்காங்களே

 • rajan. - kerala,இந்தியா

  அன்றய முதலமைச்சன் இன்று வெட்டியான் வேலைக்கு அவன் எஜமான் வீட்டிலேயே பணி அமர்த்த பட்டுள்ளார் என்பதை பணிவுடன் தெரிவித்துள்ளது காலம் எனும் நீதி தேவன். நீர் பஞ்சபூதம் என்பதை நிரூபிக்கிறது சித்து.

 • rajan. - kerala,இந்தியா

  ஏனப்பா சித்து இப்படி சுருங்கி சோம்பி போயிட்டே. இப்போ உனக்கு காங்கிரஸ் கொடுத்திருக்கிற வேலையே அம்மான் தேவகவுடாவுக்கு அடிவருடி பணியும் எடுபிடி வேலையும் தானே. இது தான் உனக்கு ஏற்ற வெட்டியான் வேலை. நல்ல பிழைப்பை பாரு.

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  இப்பவே தமிழ்நாட்டில் பாதி எம் எல் எ, மந்திரி எல்லாம் அரண்டு பொய் கிடைக்கானுங்க அடுத்த தேர்தலில் எவனும் நிக்க மாட்டான்.நின்ன டெபாசிட் தப்பாது என்று தெரியும்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நம்ம பழனி இப்போவே தன் தொகுதியில் பணம் கொடுத்து தன் சாதிக்கார வாக்குகளை தயார் பண்ணி வச்சுக்கிறது எதுக்கும் நல்லது

 • Indhuindian - Chennai,இந்தியா

  காங்கிரஸின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது அதனால் இவரைப்பற்றி கவலையில்லை ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் பறக்கும்போது இலவம் பஞ்சின் கதை என்ன

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  சித்தன் தலையில் கையை வச்சுக்கிட்டு உக்காந்து இருக்குற போஸை பார்த்தாலே படா ஷோக்கா இருக்கீது பா...........

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எப்பொழுதும் தூங்கி வழியும் புலி வேண்டாம் என்று மக்கள் சொல்லி விட்டார்கள்..

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  மைசூரு மக்கள் புத்திசாலிகள்,

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அட ச்சய் அடிமை படுத்தே விட்டானய்யா..... டிங் டிங் டிகாணா டங் டங் டகானா மன்னா இன்று முதல் நான் உங்கள் அடிமை. நீங்கள் சொல்வதை எல்லாம் நான் கேப்பேன். உங்கள் கால்களை என் தொழில் மீது வைத்து ஏறினாலும் உங்களை தூக்கி சுமப்பேன். டிங் டிங் டிகாணா....... டங் டங் டகானா......

 • கைப்புள்ள - nj,இந்தியா

  உன்னுடைய ஆணவம் உன்னை யார் காலடியில் எப்படி அடிமையாக கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது பார்த்தாயா? கொக்கரித்தாயே, உன்னுடைய கையை எடுத்து உனக்கே செக் வைத்து இருக்கிறேன் என்று? இப்ப பாரு உனக்கு வைத்து இருக்கும் செக்கை/

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அதுவுமின்றி எங்கிருந்து பிசிச்சுகிட்டு வந்தானோ, அதே குமாரசாமியிடம் மண்டியிட வைத்துள்ளது மேலிடம். கி கி கி.... சித்தா என்ன ஆட்டம் ஆடுன? செக்கு வைக்கிறியா செக்கு? இன்னிக்கு ஆப்பு வெச்சிருக்கா ஆப்பு?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அநேகமாக விரைவில் பா.ஜ.க. விற்கு தாவி விடுவார்.....

 • Baskar - Paris,பிரான்ஸ்

  நீ செய்த பாவத்திற்கு கிடைத்த தோல்வி. தண்ணீர் கொடுக்காமல் தமிழ் மக்களை படாதபாடு படுத்தியதற்கு கடவுளாக கொடுத்த தண்டனை. இனி என்ன செய்ய போகிறாய்

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  சிறுபான்மைகள் எல்லாம் ஒரு தனி SC ST மதம் என்று அறிவித்து விடுங்களேன்.. ஒளிமயமான எதிர்காலம் இருக்கும்.. ஆனால் என்ன செய்ய.. பதவி போயிடிச்சே..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement