Advertisement

கர்நாடகத்தில் இணையற்ற வெற்றி: மோடி பெருமிதம்

புதுடில்லி : ''கர்நாடக மக்கள் பா.ஜ.,வுக்கு முன் எப்போதும் இல்லாத, இணையற்ற வெற்றியை கொடுத்து உள்ளனர். தேர்தல் முடிவுகளால் அம்மாநிலத்தின் வளர்ச்சி பயணம் சிதைக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்,'' என பிரதமர் மோடி பேசினார்.கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.,வின் பாராளுமன்ற குழு கூட்டம் டில்லியில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அமித்ஷா வரவேற்றார்.


இதில் மோடி பேசியதாவது: கர்நாடக மக்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன்.
தேர்தல் முடிவுகளால் அம்மாநிலத்தின் வளர்ச்சி பயணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. மாநிலம் பின் தங்குவதை அனுமதிக்க மாட்டோம்.


பா.ஜ., இந்தி பேசும் வடமாநிலங்களுக்கான கட்சி என்ற பொய் தோற்றத்தை சிலர் உருவாக்க முயன்றனர். ஆனால் எங்களுக்கு வெற்றி அளித்து, அது போன்ற சிதைந்த சிந்தனை கொண்டவர்களுக்கு சரியான பதில் அளித்துள்ளனர் கர்நாடக மக்கள். இது எப்போதும் இல்லாத, இணையற்ற வெற்றி.


நம் நாட்டை பல ஆண்டுகளாக ஆண்ட ஒரு கட்சி வடமாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் பகையை ஏற்படுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கியும் அரசியலமைப்பையும், ஜனநாயக நெறிமுறைகளையும் சிதைத்து விட்டது.பல மாநில மொழி தெரியாததால் தகவல்களை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்ற தயக்கம் இருந்தது. ஆனால் கர்நாடக மக்கள் மிகப் பெரிய அன்பை பகிர்ந்து, மொழி ஒரு பிச்னை இல்லை என்பதை உறுதி செய்து விட்டனர்.


கட்சி தலைவர் அமித்ஷாவின் நுணுக்கமான அணுகுமுறையால் நமக்கு அடுத்து அடுத்து வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பின் மூலம் கட்சித்தொண்டர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (32)

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  இந்த வெற்றியை பெறுவதற்காக காவேரி நீதியை குழி தோண்டி புதைத்ததை சொல்வதா? பணம் பாதாளம் வரை பாய்ந்ததை சொல்வதா? மத துவேஷங்களை பரப்பியதை சொல்வதா? அனைத்திற்கு மேலாக ஆட்சி அமைப்பதற்காக மாற்று கட்சி MLA க்களை வளைப்பதற்காக குறுக்கு வழியை கையிலெடுத்து பம்பரமாக வேலை செய்வதை சொல்வதா?

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  கலியுகம் எப்போது முடிமென கண்ணனிடம் கேட்டதற்கு “தருமநெறி பொய்த்ததென தாயர்குலம் வாடுவது தாளாது பொங்கும் நேரம்... தடியுடைய முரடர்களும், படையுடைய தலைவர்களும் தலைதூக்கி நிற்கும் நேரம்.... தர்மவினை பொய்யாகி, காலநிலை தவறாகி, கருணை பறிபோகும் நேரம்... கண்ணனவன் சொன்னபடி, கண்ணெதிரில் வந்துவிடும் “கலியுகம்” முடியும் நேரம்....” என பகவத்கீதை கண்ணன் சொன்னபடி... “கலியுகம்” முடியும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்... மேலே சொன்னதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது... அதனால் கண்ணனவன் சொன்னபடி, கலியுகம் முடியும் நேரம் வந்து... உலகத்துல இருக்குற அத்தனை மனிதப் பதர்களும்... திடீரென ஒருசில நொடிகளில் பூமி பிளந்து... நல்லவன்,கெட்டவன், அறிவாளி, முட்டாள், பணக்காரன், பிச்சைக்காரன் எல்லாருமே மண்ணுக்குள் புதையும் நேரம் வந்துவிட்டது... சர்வம் கிருஷ்ணார்ப்பணம்....

 • amuthan - kanyakumari,இந்தியா

  ஓட்டு எந்திரம் கூட எதிரா வேலை செய்யுது. 70 % ஓட்டு தாமரைக்கு செட் பண்ணி வச்சா 50 % கூட பதியாம விட்டுடிச்சி.

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  பெரும்பான்மையினர் சண்டைபோட்டால் சிறுபான்மையினருக்கு கொண்டாட்டம் தான் . அதற்கு வழிவகுக்க வேண்டாம்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மோடி பிரச்சாரம் , அமித் ஷா வீடு எடுத்து தங்கிய பிரச்சாரம் செய்தது , 10 முதல்வர்கள் , 50 மந்திரிகள் , தேர்தல் கமிஷன், IT டிபார்ட்மென்ட் , ஊடகம், whatsapp பொய் செய்தி, இது எல்லாம் இருந்தும் 104 சீட் , 2008 இது எதுவுமே இல்லாம 110 சீட் எடியூரப்பா வாங்கினார் . உங்க EVM ஆட்கள் திறமை இல்லை போல .

 • balakrishnan - coimbatore,இந்தியா

  அதாவது பெரும்பான்மை வெற்றி பெறுவது அது வெற்றியாக கருதப்பட்டது, இப்போது அதிகமான இடத்தில் வெற்றி பெற்றால் அது வெற்றி, நாளை ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அது வெற்றி, அதற்கு பிறகு தேர்தலில் கலந்துகொண்டால் அது வெற்றி, வெற்றிக்கு ஆயிரம் அர்த்தங்கள்

 • suresh - covai,இந்தியா

  வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் மெஜாரிட்டியை கூட பெறவில்லையே. மோடி இருந்தும் கூட. எனவே இது உங்களுக்கு பெரிய அவமானம். அதை மறைக்க இந்த வேசம்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  கேவலத்தின் உச்சமாக பெல்லாரி, குவாரி கொள்ளையர்களுக்கு அவரது பினாமிகளுக்கும் மொத்தமாக 10 சீட்டுக்கள் ஒதுக்கி ஊழலை ஒழிக்க பாடுபட்டார்கள், ஆனால் அங்கே அவர்களின் சகோதரர்கள் இருவரும், பினாமி ஸ்ரீராமுலுவும் வெற்றி பெற்றார்கள், வாக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்தார்கள், மொத்தமாக பேரம் பேசி வாங்கினார்கள், ஆனாலும் மாஜிக் என்னை பெறமுடியவில்லை அதுதான் எதார்த்தம். என்னத்த சொல்ல.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  தான் முதுகை தானே தட்டி கொடுத்துக்கொள்ளவேண்டும், ஏன்னா, அடுத்தவர்கள் தட்டிக்கொடுப்பதில்லையையே? இதைவிட அதிக இடங்களை 2008 ல் பிஜேபி பெற்று தனியே ஆட்சி அமைத்தது, அதையெல்லாம் மறந்து, துள்ளி குதிக்கிறார்கள், அல்ப சந்தோஷத்தில்.

 • rajan - nagercoil,இந்தியா

  பிஜேபி 29 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது...12 தொகுதிகளில் 5000க்கும் குறைவான வாக்குகளே வாங்கியுள்ளது..

 • Sahayam - cHENNAI,இந்தியா

  ஜெயித்து விட்டர்கள் அல்லவே , காவேரி தண்ணீரை எங்களுக்கு தாருங்கள் . உங்கள் தம்பட்டம் பற்றி கவலை இல்லை

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்ல மறந்துட்டார்.......தொகுதிக்கு அஞ்சு கோடி கொடுத்ததையும், ஒரு ஓட்டுக்கு 1200 பணம் கொடுத்ததையும்......... பணம் கொடுத்தால் அன்பு தன்னால் வராதா? தினகரனும் இதே வசனத்தை சொல்லலாமே?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இவங்க ஒரு விஷயத்தை மறந்துடறாங்க......புதுசா உள்ள கட்சி தான் இந்த மாதிரி வெற்றியை பார்த்து ரசிக்கணும்......இவங்க ஏற்கனவே பெரும்பான்மையான ஆட்சியில இருந்தவங்க தான்...அதை தான் போன தடவை காங்கிரஸ் கிட்ட இழந்தாங்க...அப்புறம் திரும்ப இப்போ மைனாரிட்டியா ஜெயிச்சு இருக்காங்க..மெஜாரிட்டி இல்லை......அப்படின்னா இது ஒன்னும் சாதனை இல்லை.....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  முழு வெற்றியின் குறுக்கே காங்கிரஸ் நிற்கிறது... பாஜக ஆட்சிபீடத்தில் அமரக்கூடாது என்று காங்கிரஸ் பிடிவாதமாக நிபந்தனை அற்ற ஆதரவை தனது முன்னாள் எதிரிக்கட்சிக்கு வலியச்சென்று கொடுக்கிறது...

 • kumaresan - Petaling Jaya,மலேஷியா

  தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்து கர்நாடகாவின் வாக்கை பெற்று அடைந்த வெற்றி அதுவும் சிம்பிள் மஜுரிட்டியை பெறமுடியாமல் போன வெற்றி . எனினும் ஆட்சி அமைக்க முடியாமல் போன வெற்றி. தமிழனுக்கு செய்த துரோகத்தில் கிடைத்த வெற்றி எவ்வளவு தூரம் கொண்டு செல்லும் என்பதை பொறுத்திருந்து பாரும். அமிட்ஷா இப்பொழுது தமிழகத்தை குறிவைத்து செயல் பட முனைகிறார். உங்கள் கனவு நிறைவேறாது. நிறைவேறக்கூடாது, தமிழர்கள் நிறைவேற விடமாடடார்கள். நல்லவன் தான் வாழ்வான். துரோகி வாழ மாட்டான். இது தான் இயற்கையின் நியதி. தமிழ் நாட்டை பொறுத்தவரை, ப ஜ க மிகப்பெரிய துரோகி தான். இதை விட காங்கிரஸும் தி மு கவும் பெரிய துரோகிகள் தான். காவேரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு இந்திய அரசியல் சாசனத்துக்கு (Indian Constitituion ) , மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான ஒன்று.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்பதை பன்னீரும், பழனியும் வெற்றி வாழ்த்து அனுப்பி கிண்டல் செய்து விட்டார்கள். அடிமைகளின் வீழ்ச்சிக்கு நேற்று திருப்பதியில் அடித்தளம் அமைக்க பட்டுவிட்டது.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  இது பா,ஜ.க. விற்கு கர்நாடகத்தில் பெரும் வெற்றிதான்..... .ஆனால் அது வடநாட்டு கட்சி என்ற கருத்து இந்த வெற்றியால் மாற வாய்ப்பில்லை...... அந்த கருத்து மாறும் வரை தமிழகத்தில் அவர்கள் காலூன்றவும் வாய்ப்பில்லை......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement