Advertisement

'ஆப்பரேஷன் தாமரை' பீதி: ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.,க்களுக்கு சிறை?

பெங்களூரு : கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற, பா.ஜ.,வுக்கு சில எம்.எல்.ஏ.,க்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., தலைவர்களுக்கு, 'ஆப்பரேஷன் தாமரை' பீதி எழுந்துள்ளது. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்க, இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க, 112 இடங்கள் தேவை என்ற நிலையில், 104 தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இது, அக்கட்சியின் மேலிடத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, 38 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ம.ஜ.த.,வுக்கு, காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன், ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, முதல்வர் பதவி ஏற்க, பேச்சு தீவிரமாக நடந்து வருகிறது.


காங்., - ம.ஜ.த., இடையே உடன்பாடு ஏற்பட்டு இருந்தாலும், ஆட்சி அமைப்பதற்குள், 'ஆப்பரேஷன் தாமரை' மூலம், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., ஈர்க்கலாம் என, இரு கட்சி தலைவர்களும் பீதி அடைந்துள்ளனர்.


எனவே, ஆட்சி அமைக்கும் வரை, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக, தங்கள் எம்.எல்.ஏ.,க்களை ஏதாவது, 'ரிசார்ட்'டில் சிறைவைக்க திட்டமிட்டுள்ளன.கடந்த, 2008 தேர்தலில், பா.ஜ.,வுக்கு 110 இடங்களே கிடைத்தன. அதனால், 'ஆப்பரேஷன் தாமரை' என்ற திட்டத்தின் மூலம், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சில, எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதன் பின், அந்தத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • Raj - Chennai,இந்தியா

  Mandate is for BJP

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  பெரும்பான்மையினர் இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததால் சிறுபான்மையினர் உள்ளே நுழைகிறார்கள்

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  அடுத்த தேர்தல் வரை காங்கிரஸ் தாக்குப்பிடிக்குமா ..??

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  அவ்வளவு நம்பிக்கை இல்லாமலா கட்சியில் சீட் கொடுத்தார்கள் ???

 • பிரபு - மதுரை,இந்தியா

  ஆட்சி அமைக்க பா.ஜ., மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கிவிடுவார்கள். இது பா.ஜ., பொதுவாக கடைபிடித்துவரும் பார்முலா தான்.

 • murugu - paris,பிரான்ஸ்

  mla வுக்கு சிறை எதனால் ?பிள்ளை பிடிப்பவர்கள் நடமாட்டம் அதிகமாக ,அதிகாரத்துடன் அலைவதால் இப்படியும் சொல்லலாமா???

 • manivannan - chennai,இந்தியா

  அடடா சூப்பர் எல்லா முறைகேடு கேட்ட காரியங்களுக்கும் யார் மூலப்புள்ளி என்று நினைக்கும் போது புல்லரிக்கிறது .

 • sankaseshan - mumbai,இந்தியா

  1996 ல் தேவகவுடா பிரதமராக இருந்த போது குஜராத்தில் மெஜாரிட்டியுடன் இருந்த பிஜேபி அரசை வாகெலா உதவியுடன் உடைத்து காங்கிரஸ் பதவியை கைப்பற்றியது இன்று தேவகவுடா கவர்னரிடம் கெஞ்ச வேண்டிய நிலையில் உள்ளார் பிஜேபி அரசை கலைத்த சமயம் தித்தித்தது இன்று கவர்நரிடம் கையேந்தும்.நிலை இது தான் கால சக்கரம்.காங்கியும் தேவுடுவும் காவிரி தண்ணீர் தரமாட்டார்கள்

 • sam - Doha,கத்தார்

  யார் பின்புறம் மூலம் ஆட்சியை அமைக்க முயல்கிறார்கள் என்று நன்றாக தெரிகிறது. கிரிமினல் ரெகார்ட் உள்ளவர்கள், தன் கண்ணாடி வாங்க ஹெலிகாப்டர் மூலம் ஆட்களை அனுப்பியவர்கள் எல்லாம் ஊழல் இல்லாத அரசாங்கம் என்று மார் தட்டும் பிஜேபி இக்கு வெட்கக்கேடு. இது தான் ராமராஜ்யம்

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இதை அப்படியே அப்போசிட்டா திங்க் பண்ணி பாருங்க... சில எம்.எல். ஏக்களை காங்கிரஸ் இழுத்து விட்டால் பா.ஜெ.க வாலும் ஆட்சி மைக்க முடியாது........... இழுக்காவிட்டாலும் ஆட்சி அமைக்க முடியாது............. எப்படி இருந்தாலும் எடப்பாடி மாதிரி திக் திக் னு பயந்துகிட்டே தான் ஆட்சியில இருக்கணும்..........நிம்மதியா தூங்க முடியாது சாப்பிட முடியாது, எப்போ கவர்னர் கூப்பிடுவாரோன்னு பயந்துகிட்டே இருக்கணும்..........தமாசு போங்க...........

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  அடுத்த கூவத்தூரு ரெடி.............. எடப்பாடி மாதிரி குமாரசாமிக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்து இருக்கு போல.............

 • ஸாயிப்ரியா -

  Resort result ஆ இப்பதான் அரசியல் மாதிரி இருக்கு.

 • WE ARE INDIAN - Chennai,இந்தியா

  மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி வலுவாக இருந்தால் தான் நினைக்கும் நல்ல சீர்திருத்தங்களை தடை இல்லாமல் நிறைவேற்ற முடியும்.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  ஆப்பரேஷன் தாமரையா ....பணம் பத்தும் செய்யும்னு சொல்வாங்க ....குண்டக்க மண்டக்கன்னு எழுதினா ..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ரிசார்த்துக்களுக்கு நல்ல பண வரவு...

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  கூவத்தூர் ரிசார்ட் வெற்றிவேந்தன் பழனிச்சாமியின் அனுபவம் பாரதீய ஜனதாவுக்கு பயன்படும்.

 • JIGMONEY - Chennai,இந்தியா

  கர்நாடகத்திலும் ஒரு கூவத்தூர் உருவாகிறது கூவத்தூர் ஸ்டென்டை உருவாக்கியவரும் கர்நாடகத்தில்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஆப்பரேஷன் தாமரை? பெங்களூரு கூவத்தூரில் காவி கூவம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement