''பதினைந்து ஆண்டுகள் நான் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்தது. ஒவ்வொரு பாதையும் ஒவ்வொரு ஆசானாக இருந்து எனக்கு அனுபவ பாடங்களை கற்றுக்கொடுத்தன. அதை வைத்தே பல படங்கள் எடுக்கலாம்'' என சிரிக்கிறார் சினிமா இயக்குனர் ரவிஅப்புலு. நடிகர் விஜய் நடித்த ஷாஜஹான் படத்தை இயக்கியவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது இரண்டாவது படமாக 'செயல்' படத்தை இயக்கி, தனது அடுத்த இன்னிங்சை தொடங்கி இருக்கிறார்.
''நான் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவன். சினிமா ஆர்வம் இருந்ததால், இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனரிடம் சேர்ந்தேன். அப்புறம் ஆந்திரா பக்கம் சென்று ராம்கோபால்வர்மாவிடம் இருந்தேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் 8 ஆண்டுகளாக உதவி இயக்குனராக இருந்தேன். நாமளும் ஒரு படம் இயக்க வேண்டும் என விஜய்யை மனதில் வைத்து ஷாஜஹான் திரைக்கதையை உருவாக்கி, பல கட்ட முயற்சிக்கு பிறகு தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியிடம் சொன்னேன். அவருக்கும், விஜய்க்கும் பிடித்து போக, படம் இயக்கினேன். அடுத்து பெரிய படம் பண்ண வேண்டும் என நினைத்து வந்த வாய்ப்புகளை ஏற்காமல் இருந்தேன். இது நான் செய்த பெரிய தவறு.
சினிமாவை பொறுத்த வரை நமது திறமையை காண்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கண்டுகொள்ளப்பட மாட்டோம் என்பதால் பெரிய பெரிய இயக்குனர்களின் கதை விவாதத்தில் பங்கேற்றேன். 'டாப்' ஹீரோக்களுக்கு கதை சொன்னேன். தமிழ் மட்டுமல்ல, பிற மொழி பட விவாதங்களிலும் பங்கேற்றேன்.
என்ன காரணத்தினாலோ படவாய்ப்பு கிடைக்கவில்லை. நானும் அதை பற்றி கவலைப்பட்டதில்லை. அடுத்த டைரக்டர், ஹீரோ, டிஸ்கஷன் என 15 ஆண்டுகளாக இப்படியே வாழ்க்கை நகர்ந்தது. ஆனாலும் நம்பிக்கையை விடவில்லை. அடுத்தது என்ன... என்று எனது முயற்சி தொடர்ந்தது. இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் எனக்கு தெரியாது என்பதால் ஓய்வு இல்லாத இத்தொழிலில் உண்மையாக உழைத்தேன். விஜய்யை வைத்து படம் எடுத்தவர் இப்படி இருக்கிறாரே என சிலர் என் காதுபட கிண்டலாக பேசினார்கள். யார் எது சொன்னாலும், என்னை திட்டினாலும் எதையும் பொருட்படுத்தாமல் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தேன்.
விஜய் நினைத்தால் உங்களுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுக்கலாமே என சிலர் சொன்னார்கள். அடுத்தடுத்து படங்கள் இயக்கினால்தானே நம்மை பற்றி அவர் யோசித்திருக்க முடியும் என்பதால் அதைபற்றியும் நான் கவலைப்படவில்லை. அதேநேரத்தில் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
நண்பர்கள் சிலர் உதவினார்கள். இனியும் பெரிய படம் பண்ண வேண்டும் என காத்திருக்கக்கூடாது. எந்த வாய்ப்பாக இருந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். இயக்குனர் பிரபுசாலமன் அறிமுகம் கிடைத்தது. அவரது மைனா, கும்கி படங்களில் பணியாற்றினேன். அங்கு புது நட்புகள் கிடைத்தன. நண்பர்கள் மூலமாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் அறிமுகமானார்.
அவரிடம் 'செயல்' படக்கதை சொன்னேன். பிடித்து போய்விட்டது. அவரது மகன் ராஜன் தேஜேஸ்வர், ஹீரோவாக நடித்தார். படப்பிடிப்பு நடந்தபோது பணமுடக்கம், வர்தா புயல் என பல சிரமங்களை சந்தித்தோம். அதையெல்லாம் சமாளித்து படப்பிடிப்பை முடித்தேன். இதோ மே 18 ல் ரிலீஸ் ஆக போகிறது,'' என நம்பிக்கையுடன் அடுத்த வெற்றிக்காக காத்திருக்கிறார் ரவிஅப்புலு.
இவரை வாழ்த்த 96294 43056
''நான் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவன். சினிமா ஆர்வம் இருந்ததால், இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனரிடம் சேர்ந்தேன். அப்புறம் ஆந்திரா பக்கம் சென்று ராம்கோபால்வர்மாவிடம் இருந்தேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் 8 ஆண்டுகளாக உதவி இயக்குனராக இருந்தேன். நாமளும் ஒரு படம் இயக்க வேண்டும் என விஜய்யை மனதில் வைத்து ஷாஜஹான் திரைக்கதையை உருவாக்கி, பல கட்ட முயற்சிக்கு பிறகு தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியிடம் சொன்னேன். அவருக்கும், விஜய்க்கும் பிடித்து போக, படம் இயக்கினேன். அடுத்து பெரிய படம் பண்ண வேண்டும் என நினைத்து வந்த வாய்ப்புகளை ஏற்காமல் இருந்தேன். இது நான் செய்த பெரிய தவறு.
என்ன காரணத்தினாலோ படவாய்ப்பு கிடைக்கவில்லை. நானும் அதை பற்றி கவலைப்பட்டதில்லை. அடுத்த டைரக்டர், ஹீரோ, டிஸ்கஷன் என 15 ஆண்டுகளாக இப்படியே வாழ்க்கை நகர்ந்தது. ஆனாலும் நம்பிக்கையை விடவில்லை. அடுத்தது என்ன... என்று எனது முயற்சி தொடர்ந்தது. இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் எனக்கு தெரியாது என்பதால் ஓய்வு இல்லாத இத்தொழிலில் உண்மையாக உழைத்தேன். விஜய்யை வைத்து படம் எடுத்தவர் இப்படி இருக்கிறாரே என சிலர் என் காதுபட கிண்டலாக பேசினார்கள். யார் எது சொன்னாலும், என்னை திட்டினாலும் எதையும் பொருட்படுத்தாமல் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தேன்.
விஜய் நினைத்தால் உங்களுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுக்கலாமே என சிலர் சொன்னார்கள். அடுத்தடுத்து படங்கள் இயக்கினால்தானே நம்மை பற்றி அவர் யோசித்திருக்க முடியும் என்பதால் அதைபற்றியும் நான் கவலைப்படவில்லை. அதேநேரத்தில் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
நண்பர்கள் சிலர் உதவினார்கள். இனியும் பெரிய படம் பண்ண வேண்டும் என காத்திருக்கக்கூடாது. எந்த வாய்ப்பாக இருந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். இயக்குனர் பிரபுசாலமன் அறிமுகம் கிடைத்தது. அவரது மைனா, கும்கி படங்களில் பணியாற்றினேன். அங்கு புது நட்புகள் கிடைத்தன. நண்பர்கள் மூலமாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் அறிமுகமானார்.
அவரிடம் 'செயல்' படக்கதை சொன்னேன். பிடித்து போய்விட்டது. அவரது மகன் ராஜன் தேஜேஸ்வர், ஹீரோவாக நடித்தார். படப்பிடிப்பு நடந்தபோது பணமுடக்கம், வர்தா புயல் என பல சிரமங்களை சந்தித்தோம். அதையெல்லாம் சமாளித்து படப்பிடிப்பை முடித்தேன். இதோ மே 18 ல் ரிலீஸ் ஆக போகிறது,'' என நம்பிக்கையுடன் அடுத்த வெற்றிக்காக காத்திருக்கிறார் ரவிஅப்புலு.
இவரை வாழ்த்த 96294 43056
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!