Advertisement

என் வழி தனி வழி : சூப்பர் சுபிக்ஷா

மான்விழியை கண்டால், வான் மின்னலுக்கும் காய்ச்சல் அடிக்கும். தென்றலில் அசைந்தாடும் கார் கூந்தல் கூட, காதல் மொழி பேசும். ரோஜா காட்டில் பூத்த இதழ்களால் செதுக்கியதோ இவரது செவ்விதழ்கள். வெண்ணிலவே இப்பூமியில் பெண்ணிலவாக தோன்றியதோ என வியக்கும் வண்ணம், இளசுகளை கிறங்கடிக்க மாடலிங் துறையில் தடம் பதித்து, சினிமாத்துறைக்குள் 'உறுதிகொள்' மூலம் நுழைந்துள்ள சுபிக்ஷா தினமலர் வாசகர்களுக்காக உதிர்த்த முத்துக்கள் இதோ...
* அறிமுகம்?சொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது சென்னையில். பி.எஸ்சி., (விஸ்காம்), எம்.எஸ்சி., (எலக்ட்ரானிக் மீடியா) முடிச்சிட்டு, தற்போது எம்.பில்., பண்ணிட்டு இருக்கேன். தந்தை தனியார் விளம்பர ஏஜன்சியில் காப்பி ரைட்டர். தாயார் எனக்கு எல்லாம். ஒரு தம்பி, ஒரு தங்கை. வீட்டில் மூத்த பெண் என்பதால் நம்ம பேச்சுக்கு எதிர்ப்பு கிடையாது.

* மாடலிங் துறையை தேர்வு செய்தது ஏன்?ஆசைப்பட்டது 'டிவி' வர்ணனையாளர் ஆக. ஆனால் படிக்கும் போதே என்னுடைய 'வாய்ஸ்' நன்றாக இருக்குன்னு எல்லோரும் சொல்ல, குறும்படங்கள், விளம்பர படங்களுக்கு 'டப்பிங்' பேசினேன். அப்படியே மாடலிங் துறையிலும் நுழைந்து விட்டேன்.

* மாடலிங் துறையில் கிளாமர் அதிகம் காட்ட வேண்டுமா?அது பண்றவங்கள பொறுத்து தான். எனக்கு காஸ்டியூம் பிடிச்சிருந்தால் மட்டும் தான் போடுவேன். இல்லையென்றால் முடியாது என கூறிவிடுவேன். சில மாடல்கள் என்ன டிரஸ் கொடுத்தாலும் போடுவாங்க. அதனால் தான் கிளாமர் அதிகம் தெரிகிறது.

* மாடலிங் துறை விருதுகள்?கடந்த ஆண்டு 'மிஸ் பியூட்டிபுல் கேர்'என்ற விருதும், இந்தாண்டு 'மிஸ் ஹாட் ராம்ப்' மற்றும் 'மிஸ் பேஷன் ஐகான்' என இரு டைட்டில் வாங்கியுள்ளேன். இந்த விருதுகள் இந்த துறையில் இன்னும் சாதிக்க உதவும். திறமை இருந்தால் ஜெயிக்கலாம். கிடைத்த வாய்ப்புகளில் நமது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள முடியும்.

* சினிமாத்துறையில் நுழைந்தது?இது எதிர்பாராத விதமா தான் நடந்தது. ஒரு விளம்பர படத்திற்கு 'டப்பிங்' பண்ணிட்டு இருக்கும் போது அந்த ஸ்டுடியோவிற்கு வந்த காஸ்டிங் டைரக்டர் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கூறினார். அப்படி கிடைத்த வாய்ப்பு தான் சினிமா துறையில் நுழைய காரணம்.

* முதல் படம்?'உறுதிகொள்' என்ற படத்தில் சின்ன ரோல் தான்.அது தான் என் முதல் படம். இப்போது பெயரிடப்படாத இரு படங்களில் மெயின் ரோலாக நடித்து வருகிறேன்.

* நடிப்பில் பிடித்தமானவர்கள்?ஹீரோ விஜய் தாங்க. ஹீரோயின் திரிஷா, நயன்தாரா. டைரக்டர் கவுதம் மேனன், அவரோட ஒரு படத்தில் நடித்தால் மட்டும் போதும். அந்தளவிற்கு அவரது படங்கள்னா அவ்வளவு இஷ்டம்.

* அரசியல் ஆர்வம்?ஐய்யோ ஆர்வமே இல்லீங்க. ஆனால் கமல் இப்ப பண்ற அரசியல் ரொம்ப பிடிக்கும்.

* காதல் அழைப்பு வந்ததா?நிறைய வந்திருக்கு. கல்லுாரியில் படிக்கும் போதும் சரி, இப்போ நடிக்கும் போதும் சரி. சிலர் ரொம்ப ஜொள்ளுவிடுவாங்க. நான் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ளதால், சிரிச்சிட்டே இதில் எனக்கு விருப்பம் இல்லன்னு டக்னு சொல்லிடுவேன்.

* இத்துறைக்கு வரும் பெண்களுக்கு டிப்ஸ்?நேர்வழியில் சென்றால் வெற்றி லேட்டாக கிடைக்கும்; ஆனால் நிலைத்திருக்கும். குறுக்கு வழியில் சென்றால் ஏமாற்றங்கள் கொண்ட வெற்றியே கிடைக்கும். என் வழி எப்பவுமே நேர் வழி தாங்க.

* நடிக்க வரவில்லை என்றால்?கண்டிப்பாக ஏதாவது ஒரு கல்லுாரியில் விரிவுரையாளராக மாணவர்களுக்கு பாடம் நடத்திட்டு இருந்திருப்பேன்.இவரை வாழ்த்த, subhikshalmgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement