Advertisement

வி.இ.டி., கல்லூரியில் விளையாட்டு விழா

விழுப்புரம்;காணை வி.இ.டி., கல்வியியல், கல்லுாரியில் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில், காணை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.பின்னர், நடந்த ஆண்டு விழாவில் பாரதி சிந்தனை புலம் நிறுவனர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். வி.இ.டி., கல்வியியல் கல்லுாரி செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் தனபால் மற்றும் பொருளாளர் கார்த்திக் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னதாக, கல்லுாரி முதல்வர் பழனி வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், கல்லுாரி உதவிப்பேராசிரியர்கள் துாயவன், ஆறுமுகம், விஜயகுமார், ஷியாமளாதேவி, ரஞ்சனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement