Advertisement

குழந்தைகள் பலாத்கார வழக்குகளை விரைவுபடுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: நாடு முழுவதும், குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்பான வழக்குகளை, சிறப்பு நீதிமன்றங்கள் மூலம், விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கும்படி, உயர் நீதிமன்றங்களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


@1br@@வழக்கறிஞர், அலோக் ஸ்ரீவஸ்தவா தாக்கல் செய்த பொதுநல மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர்,சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்௧கள் அதிகம் நடக்கின்றன; இது தொடர்பான வழக்குகளை, 'போக்ஸோ' எனப்படும், பாலியல் பலாத்காரத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் விரைவில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்.இந்த வழக்குகளை தேவையின்றி தள்ளி வைக்காமல், விரைவில் முடிக்கும்படி, விசாரணை நீதிமன்றங்களுக்கு, உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில், 8 வயது சிறுமி, கொடூர கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து, குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்க, மத்திய அரசு, ஏப்., 21ல், அவசர சட்டம் இயற்றியது.இந்த சட்டப்படி, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால், மரண தண்டனை விதிக்கப்படும். 12 - 16 வயதுக்கு உட்பட்டோரை பலாத்காரம் செய்தால், 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க, அவசர சட்டம் வகை செய்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • S.prakash - Palakkarai,இந்தியா

  கொடூர குற்றவாளிகளுக்கு சிறைச்சாலைகள் நரகமாக இருந்தால் மக்கள் சமுதாயம் மகிழ்ச்சியாகவும், அமைதி பூங்காவாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. கொடூர குற்றவாளிகளுக்கு சிறைச்சாலைகள் சொகுசு வாழ்க்கையாக இருப்பதால்தான் சமுதாயத்தில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கௌரவமாகவும், பாதுகாப்புடனும் வாழ முடியவில்லை.. காதல் என்கிற பெயரில் மாணவிகளின் கழுத்தை பொது இடங்களில் அறுப்பது, குழந்தை என்று கூட பாராமல் கொடூர காம செயல்களில் ஈடுபடுவது, தலையை துண்டித்து பொதுமக்கள் மத்தியில் காவல் நிலையம் எடுத்து செல்வது இப்படிப்பட்ட கொடூர குற்றவாளிகளை சட்டம் கையாளும் தவறான அணுகுமுறையே அதிக அளவில் கொடூர குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் ஆகிவருகிறது. சிறைச்சாலை என்பது எல்லா தரப்பு குற்றவாளிகளுக்கும் சீர் திருத்தும் இடமாக அமையாது, கண்டிப்பாக கொடூர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அனுபவிக்கும் இடமாகத்தான் இருக்க வேண்டும், குற்றத்தின் தன்மையை பொறுத்து சிறைச்சாலையில் குற்றவாளிகள் நடத்தப்படவேண்டும். எல்லாரையும் ஒன்றாக பார்க்க கூடாது. அதுதான் சமுதாயத்தில் மற்ற குற்றவாளிகள் கொடூர செயல்களில் ஈடுபட செய்யாமல் மனதளவில் எச்சரிக்கையாக இருக்க முடியும். அமெரிக்காவில் தீவிரவாதத் செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை அமெரிக்காவில் வைக்காமல் குவாண்டனாமோ தீவில் வைத்து விசாரணை செய்தார்கள், ஆனால் இந்தியாவில் தீவிரவாதத் செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை எல்லா உபசரிப்புடன் நன்கு கவனித்தது அரசின் அணுகுமுறை தவறு. அதேபோல் தான் தற்போது இந்திய சமுதாயம் கொடூர குற்றவாளிகளால் சீரழிந்து வருவதற்கு அரசின் தவறான அணுகுமுறையே காரணம். சிறைக்கு செல்லவே குற்றவாளிகள் பயப்படும் நிலை இருந்தாலே, சமுதாயத்தில் குற்றங்கள் வெகுவாக குறைந்து விடும்.

 • Kumar - Chennai,இந்தியா

  ஒரு வழக்கில் மூன்று மாதங்களில் நீதி வேண்டும் என்று ஒருவர் கருத்தை பதிவிட்டுள்ளார். இது குற்றவாளிகளுக்கு சாதகமானது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கும் தண்டனை என்று சட்டம் நிறுத்தப்பட்டால் சீக்கிரம் உண்மை வெளிவரும்.

 • suresh - chennai,இந்தியா

  குழந்தைகள் பலாத்கார குற்றங்களுக்கு சிறப்பு சட்டம் என்ற செய்தியில்,,, சிறப்பு சட்டங்களோடு தனி நீதிமன்றமே நிரந்தர தீர்வு என நான் முன்னர் குறிப்பிட்டு இருந்தேன்,,,தற்போது உச்சநீதிமன்றமும் அதையே சொல்லியுள்ளது,, இது வரவேற்கத்தக்க ஒன்று ,,வழக்கு விசாரணைக்கு குறிப்பிட்டு கால கெடு நிர்ணயம் செய்ய வேண்டும்., இல்லேயேல் குற்றம்சாட்டப்பட்டவரோ,,,காவல்துறையோ வழக்கை இழுத்தடித்து விடுவார்கள்..

 • ஆப்பு -

  எப்பவோ செஞ்சிருக்க வேண்டியது...நம்ம சுப்ரீம் கோர்ட் வாய்தா வழங்கியே பழக்கப் பட்டது...இதுலேயாவது சுறுசுறுப்பா வேலை செஞ்சு நாலு பேரத் தூக்குல போட்டா நாடு உருப்படும். இன்னும் அந்த தஸ்வந்தையே ஒண்ணும் பண்ணாம வெச்சிருக்காங்க.... உருப்படி எதுவும் செய்வாங்களா, இல்ல ஜனாதிபதிக்கு கருணை மனு போட்டு தப்பிக்க வுட்ருவாங்களா தெரியல.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  கோர்ட் தீர்ப்புகளை எல்லாம் மத்திய அரசு நடவடிக்கை போன்று பாவித்து மத்திய அரசை வசை பாடும் கூட்டம் இது போன்ற நல்ல தீர்ப்புக்கு மத்திய அரசை பாராட்ட வேண்டும் அல்லவா... ஹல்லோவ்வ் நீங்க எல்லாம் எங்க போனீங்க...

Advertisement