Advertisement

ரோஜா அழகிய பூஜா

கண் இமைகளில் தோகை விரித்தாடும் கன்னி மயில்... மயக்கும் மங்கையின் நிறம், மாலை நேரத்து மஞ்சள் வெயில்... இவள், தென்றல் தொட்டு விளையாடும் அசைந்தாடும் காற்றாலை. பேசும் வார்த்தைகளில் எல்லாம் வழிந்திடுமே இனிக்கும் கரும்பாலை. தேவலோக தோட்டத்து ரோஜாக்கள் தேடும் அழகிய பூஜா...

* தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியலயே...தமிழில் கடைசியாக நடிகர் லாரன்ஸின் 'காஞ்சனா 2'வில் டாப்ஸிக்கு தோழியா நடித்தேன். அப்புறம் 'அந்தகாரம்'ன்னு ஒரு திரில்லர் படம் பண்ணியிருக்கேன். அந்த படத்தின் ரிலீசுக்கு தான் வெயிட்டிங். ஆனால், தெலுங்கில் நிறைய படம் நடிச்சிட்டு இருக்கேன். அங்கே கொஞ்சம் 'பிசி' தான்...

* 'டிவி' நிகழ்ச்சிகளில்...டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் மீடியாவுக்கு வந்தேன். சினிமா வாய்ப்புகள் வந்ததால் 'டிவி' பக்கம் வருவதை குறைச்சுகிட்டேன். ஏதாவது ஒரு மீடியாவில் இருந்தால் தான் நினைச்சதை சாதிக்க முடியும். இப்போ எனக்கு சினிமா மேல தான் முழு கவனமும் இருக்கும்.

* தெலுங்கு - தமிழ் எது ஈசி?தமிழ் தான் எனக்கு ஈஸி, நமக்கு தெரிஞ்ச மொழி படங்களில் நடிப்பதில் எந்த கஷ்டமும் இருப்பது இல்லை. ஏதோ தாய் வீட்டில் இருப்பது போல தான் தோன்றும். இப்போ தெலுங்கு கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.

* தெலுங்கில் ஸ்ரீ ரெட்டியின் 'ஸ்ரீ லீக்ஸ்' ?ஸ்ரீ ரெட்டி போராட்டத்தில் கண்டிப்பா ஒரு உண்மை இருக்கு. சினிமா உலகம் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் வித்தியாசமான அனுபவங்களை தருகிறது. அதில் ஒரு சிக்கலான அனுபவம் ஸ்ரீக்கு கிடைச்சிருக்கு. இந்த மாதிரி விஷயங்களில் நான் தெளிவாக இருக்கிறேன். அதனால் தான் இதுபோன்ற சிக்கல் எனக்கு வருவது இல்லை.

* பூஜா, போல்ட் உமன் ?ஆமா, அப்பா கர்னல் ராமச்சந்திரன், என் தாத்தாவும் ஒரு ஆர்மி ஆபிசர்... இந்த குடும்பத்தில் பிறந்த நான் 'போல்ட் உமன்'னா இருந்தால் தானே பொருத்தமா இருக்கும்.

* நீங்கள் நடித்ததில் பிடித்தது ?இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'பீட்சா' எனக்கு ரொம்ப பிடிக்கும். 'அந்தகாரம்' படத்தில் எனக்கு மெயின் கேரக்டர். அந்த படம் வந்தால், எனக்கு மட்டுமல்ல தமிழ் ரசிகர்கள் எல்லோருக்கும் பிடிச்ச படமாக இருக்கும்.

* பசுமை நினைவுகள் ?ஒரு படப்பிடிப்பிற்காக ஐரோப்பாவில் உள்ள 'பிராக்' என்ற இடத்திற்கு சென்றேன். அன்று தான் மனசெல்லாம் பசுமை படர்ந்த இனிமையான ஒரு உணர்வை பெற்றேன். இனி சுற்றுலா என்றால் பிராக் தான்னு முடிவு பண்ணிட்டேன்.

* எதிர்கால திட்டம் ?நான் எதையும் பிளான் பண்ணி பண்றது இல்லை. அப்படி பண்ணினால் அந்த விஷயம் நடக்காது. கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதும். கவலையே இல்லாம வாழ்க்கை போற போக்கில் போய்கிட்டே இருக்கலாம்.

* பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் சினிமாவா ?இல்லை. ஒருவித மயக்க மனநிலையில் இருப்பவர்கள் தான் இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். நம் நாட்டில் 'சிஸ்டம்' சரியில்லாம இருப்பதால் தான் சிலர், பிஞ்சு குழந்தைகளை கூட பாலியல் பலாத்காரம் பண்ணிட்டு பயமே இல்லாம வெளியே நடமாடுறாங்க. முதல் நாள் ஜெயில், மறுநாள் பெயில்; இது தான் இவங்களுக்கு கிடைக்குற அதிகபட்ச தண்டனை. இந்த நிலை மாறணும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
poojaramachandranofficial gmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement