Advertisement

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் கிராம சபை கூட்டம்மண்ணாடிப்பட்டு கொம்யூனில் கிராம சபை கூட்டம்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கிராம சபை கூட்டம் செல்லிப்பட்டில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு, கோபிகா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன் முன்னிலை வகித்தார். வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி செலினா மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கலந்து கொண்டு, கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். கூட்டத்தில், செல்லிப்பட்டு கிராமத்தில் பொது சேவை மையம், ஐயனாரப்பன் கோவிலுக்கு சாலை வசதி, சங்கராபரணி ஆற்று தடுப்பணையை உயர்த்தி அதிக தண்ணீரை சேமித்தல், கிராம சுடுகாட்டிற்கு சாலை வசதி, தெருமின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.இதேபோல், சோரப்பட்டு, சன்னியாசிக்குப்பம், கூனிச்சம்பட்டு, செட் டிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, வாதானுார் கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில், கிராம மக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ஆணையர் சீத்தாராமன், பொதுமக்கள் கூறிய குறைகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement