Advertisement

உ.பி.,யில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

லக்னோ: உ.பி., மாநிலம், எடா பகுதியில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில், மணமகளின் உறவினர் ஒருவர், தனது 8 வயது மகளுடன் பங்கேற்றார். நள்ளிரவு 1.30 மணியளவில் அதிக சத்தத்துடன் ரேடியோவில் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. குடும்பத்தினரும் திருமண சடங்கில் தீவிரமாக இருந்தனர். இதனை பயன்படுத்தி கொண்டு, திருமணத்தில் பணி செய்ய வந்த சோனு(18) என்பவன், 8 வயது சிறுமியை அருகில் இருந்த கட்டடத்திற்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தான். சிறுமியை காணாமல், தேடி அங்கு வந்த குடும்பத்தினர், சிறுமி இறந்த நிலையிலும், அருகில் சோனு மது போதையில் மயங்கிய நிலையிலும் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீர் மற்றும் குஜராத்தின் சூரத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த பலாத்கார சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (126)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உண்மையிலேயே காவி வேலையா அல்லது ஓரிடத்தில் காவிக்கட்சி செய்ததனால் எல்லாப்பழிகளும் காவிகள் மேல் விழட்டும் என்று சமூகவிரோத சக்திகளின் வேலையா காவிகளின் வேலையென்றால் அவர்களை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து விரட்டியடிக்க மக்கள் முயலவேண்டும் சமூகவிரோதிகள் செயலென்றால் மத்திய அரசு நேரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் யோகி அரசை சஸ்பெண்ட் செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டும்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @kumaraswamy - Chennai,:: உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தால் பொங்கி எழக்கூடாதா? உங்களின் / உங்கள் உறவுகளில் நடந்தால் பொங்கமாட்டீர்களா? பிஜேபி ஆதரவு தவறல்ல, ஆனால் அதுக்காக இப்படியா? ரொம்ப அநியாயம் சார்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கொடூர குற்றவாளிகள் ஒரு நாலஞ்சு பேரையாவது தூக்கில் போட்டாலாவது கொஞ்சம் பயம் வரும்.

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  இதெல்லாம் அங்கொன்று இங்கொன்று மாக ஏதோ ஆக்ஸிடென்ட் போல நடக்கிறது இதற்கே பொங்குகிறீர்கள்.... இதையே சிறு சிறு குழந்தைகளை கடத்தி அல்லது ஏழ்மையை பயன்படுத்தி தாய் தந்தையருக்கு பணம் கொடுத்து கிழடுகளுக்கு வெளிநாட்டிற்கு விற்கும் வியாபாரங்களை ஒரு இழிவு இனமே வழக்கமாக நடத்தி வருகிறது.. அதற்கு எவ்வளவு பொங்க வேண்டும்...அதுகூட இந்த அரசாங்கம் வந்தவுடன் கட்டுபடுத்தி ஆப்பு வைத்ததால் தான் அத்தனை அயோக்கியர்களும் இந்த அரசுக்கு எதிராக கிளம்புகிறார்கள்...

 • christ - chennai,இந்தியா

  சினிமா ,சாராயம் இந்த இரண்டையும் ஒழித்தாலே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது

Advertisement